Author Topic: பயத்தின் திறவுகோல்-1  (Read 769 times)

Offline Guest

பயத்தின் திறவுகோல்-1
« on: November 26, 2018, 06:56:50 PM »
நம்மை நாமே உணர்தலை பெரும்பேறு எனலாம்.
நம்மை உணர்தல் என்பது நாம் கொண்டிருக்கும்
குறை, நிறை, பலம், பலவீனங்களை குறித்து அறிதலே.

நம் பலம், பலவீனங்கள் குறித்த அறிவு 
பரந்த உலகில் நமக்கான பங்கு என்ன
என்பதை உணர்ந்துகொள்ள காரணமாகி,
நம் பயங்களை நாமே கையாள ஏதுவாகலாம்.

எப்போதாவது வாழ்க்கை துரத்துகிறது
என்பதை உணர்ந்து,எதற்காக துரத்துகிறது
என தெரியாமல் ஓடிய அனுபவம் உங்களுக்குண்டா?.

நம் பயங்களை நாம் சரிவர கையாளாமல்
போகுகையில்  வாழ்க்கை நம்மை துரத்த துவங்கும்.

பயங்களை கையாளுதல் குறித்து பல
வழிவகைகள் சொல்லப்பட்டிருந்தாலும்
முதல் படி என்பது நம் பயங்களோடு நாம் பேசத்துவங்குவதே.

பயமென்பதே எதோ ஒரு இயலாமை
குறித்துண்டாகும் மன ஆதங்கத்தின் அழுகுரல் தானே..

பயங்களோடு பேசத்துவங்குங்கள், 
பயம் என்பதே கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமலாகலாம்..

பயங்களோடு பேசுவது குறித்தே
பயம் கொண்டலைபவர்கள் என்ன செய்வது என்கிறீர்களா?.
 இருக்கட்டும் பேசலாம்..

அதற்க்கு முன்னராக நம்மை துரத்தி அடிக்கும்,
 நாம் கையாள வேண்டிய பயங்கள் என்னென்ன
 என்பதை பட்டியலிடலாம்.

#மீண்டும்_பேசலாம்
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ