Author Topic: காதல்....!! ??  (Read 882 times)

Offline Guest

காதல்....!! ??
« on: December 03, 2018, 08:42:43 PM »

காதல்... இந்த வார்த்தையை விட இந்த வாழ்க்கையை கடந்து செல்லாதவர்கள் எத்தனைபேர் இருப்போம் நாம்...!!??
நான் அது பற்றி சிந்தித்துக்கூட பார்த்ததில்லை என்று யாரால் கூறவியலும்....!!??
இப்போதும் சிலரை பார்த்தால் இவரெல்லாம் எவ்வளவு நல்லவர், இவருக்கெல்லாம் அப்படியான ஒரு அனுபவம் இருக்க வாய்ப்பேயில்லை.....!!
ஆதலால் நாம் காதலித்தோம் என்பதையும் நம் காதல் பற்றியும் அறிந்துவிடக்கூடாதே என மரியாதை பயம் வந்த மனிதர்கள் நம் வாழ்நாளில் ஏராளம்...!!
ஆனால் அந்த மனிதர்களின் வாழ்நாளில் ஏற்பட்டிருந்த காதலை நாம் அறியாமல் இருந்தோம் என்பதே உண்மையாக இருக்கும்...!!
.
நம்மால் நினைத்துக்கூட பாற்கவியலா மனிதர்களின் வாழ்க்கையில் இருந்த காதலும் அதன் பின் ஏற்பட்ட அனுபவங்களும் அவர்களின் போராட்டங்களும், அவர்களின் அறியாமையும், அவர்கள் நடந்துகொண்ட விதங்களும் அவர்கள் சொல்லி நாம் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும்....அந்த அனுபவம் மிகப்பெரும் பயத்தை தரும்...தந்திருக்கும்...இதுதான் காதல்...!!
.
இன்று நாம் மிகுந்த அறிவோடும், அதாவது இறையியல் அறிவோடும், இறை அச்சத்தோடும், குடும்ப அச்சத்தோடும் இருக்கும்போது நம்மைப்பற்றி யாரும் தவறாக எண்ண வாய்ப்பல்லையாக இருக்கலாம், ஆனால் நம்மை நெருங்க நெருங்க பெரும்பாலும் நம்மவர்கள் நமது முந்தைய ஜாதகத்தையே கையில் வைத்துக்கொண்டுதான் பழகவும் செய்கிறார்கள் என்கின்ற எண்ணம் நம்மிடம் இல்லாமல் போனால், நெருப்புக்கோழியின் கதைதான் நம் கதை...!!
.
யாருக்கு வரவில்லை காதல், அது தவறு சரி கொடூரம், கொடூரத்தை உருவாக்கும் என்பதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு காதல் பற்றிய ஒரு பார்வையை உங்களை சுற்றி விட்டு சுளற்றிப்பாருங்கள்..எல்லா மீன்களின் செவிழ்களிலும் தூண்டில்கள் நங்கூரமிட்டிருக்கும்...!!
.
சாதாரண மனிதர்கள் முதல் துறவிகள், இறை மறுப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாடிகள், தாடி இல்லாதவர்கள், காதலை சாடுபவர்கள், சாடியவர்கள் படித்தவன் (ள்), பாமரன் (ள்), மொழியறியாதவன் (ள்), ஊமைகள், மாற்றுத்திறனாளிகள் என எல்லா தரப்பினரையும் ஒரு சுற்று சுற்றியே வந்துள்ளது காதல்...!!
.
.
இன்று காதலால் அழியும் ஒரு சமூகத்தை ஏற்கெனவே காதலித்த பல சமூகங்களான நாம்தான் மிகக்கடுமையாக சாடுகிறோம், அதிலும் மிகப்பெரிய அளவு கேவலமாக சாடும் பலரும் காதலை கண்டபடி திட்டி தீற்கின்றனர்...தவறில்லை, ஆனால் உங்களை ஒரு முறைக்கு இருமுறை சுய பரிசோதனை செய்து பாருங்கள்...!!
.
இந்த பதிவு காதலை புகழந்தோ, காதலித்தவர்களை புகழந்து நெகிழ்ந்து புழகாங்கிதம் அடைந்து பெரிய இலக்கியவாதியாகவோ, அல்லது வித்தியாசமான கருத்துள்ளவனாக காட்டிக்கொள்ளவல்ல...!!
.
.
நான் என் வாழ்க்கையின் வழியில் கடந்து வந்த நாட்களை நினைக்கிறேன்...90-களில் காதல் அமைதியாகத்தான் இருந்தது, அதற்கு முன்பு அதைவிட அமைதியாகவே இருந்திருக்கவேண்டும், அதுவும் இலக்கியநயம் மிக்க காதல்களாக இருந்திருக்கிறது, அதற்கும் முன் காவியங்களை உருவாக்கிய காதல்களாகவும் இருந்திருக்கிறது..!!
.
அதற்காக காதல் புனிதமானது வணங்கவேண்டியது என்றெல்லாம் சொல்லித்தொலைக்கவா முடியும்....
90-களில் திரைப்படங்கள் காதலை மட்டும் காட்டின, காதலுக்காக மிகப்பெரிய போராட்டங்களை காட்டின, அகிம்சை வழியாகத்தான் இருந்தது, ஆயுதம் தாங்கிய காதல்கள் இருந்ததாக தெரியவில்லை, அதே போன்று, இருப்பினும் பல திரைப்படங்கள் குடும்ப கதைகளை, மண் வாசனை சார்ந்த படங்களை தந்தன, காதல் ஒரு முக்கிய அம்சமாக இருப்பினும் அன்றைய திரைப்படங்கள் வெறும் திரைப்படங்கள் அல்லது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே கருதப்பட்டது...யாரும் எதையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, சில காலம் நட்பை சொல்லும் அதீத திரைப்படங்கள் அதிகம் வந்தன, அந்த காலத்தில்தான் ரஜினிகாந்தின் தளபதி ஆயுதம் கொண்டு தாதாயிசம் காட்டும் படமாக வந்ததில் மிகவும் அபாயகரமாக பேசப்பட்ட படம்...ஆயினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை...!!
.
அன்றைக்கும் காதலித்தவன் அதிகபட்ஷமாக தாடி வளர்த்தான், அதிகபட்ஷமாக ஊதாரியாக தெருவில் திரிந்திருப்பான்...அவ்வளவுதான்...!!
.
ஏமாற்றிச்சென்ற பெண்கள்..!!?? ٍஏமாந்த ஆண்களும், ஏமாற்றிய ஆண்களும், ஏமாறிய பெண்களும் என எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் தங்கள் புதிய வாழ்க்கையை அமைதியாக துவங்கி நடத்தியே உள்ளனர்..
.
அன்றைக்கெல்லாம் கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் திறந்த புத்தமாக இருந்தன, சுதந்திரமான பூமியாக இருந்தன..இன்றைக்கு சிறைகளை விட கொடூரமான கால்லூரி வழாகங்கள்... குவாண்டநாமோவை விட கேவலமான ஹிடலர் பள்ளிக்கூடங்கள்..இறுக்கமான சியோனிஸ்ட்டுகளாக கல்லூரி தாளாளர்களும், பள்ளிக்கூட நிர்வாகங்களும்...
.
உலகமயமாக்கலுக்குப்பின் திரைப்படத்துறையும், உலகமயமானது, காதல் உலகமயமானது, ஆயுதமயமானது, காதலுக்காக அதிகமும் ஆயுதங்கள் உபயோகித்து, உறவு முறைகளை கொச்சை படுத்தி, சமூகத்தை கொச்சை படுத்தி, சமுதாயங்களை கேவலப்படுத்தி, அமைதியான வாழ்க்கை சூழலை ரணகளமாக்கி, ஏதோ ஒரு புதிய புனிதமான வாழ்க்கை கொள்கையை அறிமுகப்படுத்தியதுபோன்று அலப்பரைக்கு திரைப்படத்துறையும், அதன் வழியே பாதிக்கப்பட்டு ஈற்கப்பட்டு அதுபோன்ற ஒரு செயற்கையான வாழ்க்கை முறையை யோசிக்க ஆரம்பித்தது, மாணவப்பருவம், இளைய தலைமுறை..!!
.
அன்றைக்கு இன்றுபோல் வசதி படைத்தவனுக்காகவும் காற்பரேட்டுகளுக்காகவும் கொக்கரிக்கும் பெண்ணீயவாதிகள் இல்லை..பெண்ணீயவாதம் அதிகம் இல்லை..இலக்கியவாதிகள் பெண்கள் உட்பட பெண்களை போகப்பொருளாகவே தங்கள் இலக்கியங்களில், நாவல்களில், கதைகளில் பயன்படுத்தினர்...இன்றைக்கு கூக்குரலிடுகின்றனர் அது வேறு...

.அன்றைய சூழ்நிலையிலிருந்து கொடூரமாக மாறிய காதலை கார்ப்பரேட்டுகள் ரசித்தன, அதனை விற்று பணம் பண்ணின, இதன் விளைவு, அடிக்கடி உறவுகளையும், பெற்றோரையும் மறந்து ஓடலாயின, குடும்பங்கள் சிதைந்தன, ஒரு ஏகாந்த உலகில் காதல் பயணித்தது..
.
சாதீய தீயை மூட்டும் பல காதல் கதைகள் புனையப்பட்டன, காதல் பல நேரங்களில் எதார்த்தமான மனித வாழ்க்கைக்குள் ஒரு மோசமான சூழலைத்தேடி திரைப்படங்களாக சென்றன..
ஏறத்தாள கடந்த பத்தாண்டுகளில் காதல் பயணித்த வழியில் கொஞ்சம் நடந்தால், அப்பப்பா மயக்கம் வந்துவிடும், அந்த அளவுக்கு மோசமான மிகப்பெரிய கொடூரமான உலகை எட்டியுள்ளது, நான் காதல் என்று சொன்னது திரைப்படக்காதலை மட்டுமல்ல, அதன் தாக்கம் ஏற்படுத்திய எழிய மக்களின் உலகம்...
.
பணக்கார காதல்கள், ஏதோ ஒரு வகையில் தன்னை வழிப்படுத்திக்கொள்கிறது, அதில் ஏதும் தவறுகள் இருப்பின் அதனை யாரும் சமூகஅமைப்புகளோடோ, சாதிகளோடோ சேர்த்து பேசுவதில்லை, எழிய மக்களின் வாழ்க்கையில் புகும்போது அதன் பின்னணியை வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்துகின்றனர்...இன்றைய அரசியல் பிரச்சினைகளை வைத்து காசு பார்க்கும், குரூரம் பேசும் அரசியல்...
.
அப்படியான இடங்களில்தான் எளிய மக்களின் உணற்சிகள்கூட உந்தப்பட்டு, அரசியலாக்கப்பட்டு, பெரும் கொடூரமான நிகழ்வுகளை ஏற்படுத்தும் அரசியல் கருவிகளாகவும் ஆக்கப்படுகிறது...
.
காதல் தவறானதா...சரியானதா...அது விபச்சாரமா...அது அபச்சாரமா..அது என்னது என்றெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்...நானும் உங்களைப்போன்றே...முந்தைய காலம் ஏதோ ஒரு உலகம்...அதன் வழியே பயணித்திருக்கலாம்...அல்லது தவறு என்றிருக்கலாம்...ஆனால் இன்றைய நிலை வேறாக இருக்கலாம்..நான் இங்கே சொல்வது காதல் பற்றியல்ல..காதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவுக்கு எத்தனை விதமான காரணங்கள் இங்கே இருக்கிறது என்பதை பற்றி சமூகம் சிந்திக்காமல் காதலை ஒழிக்கவேண்டும்..காதலை ஒழிக்கவேண்டும் என்கின்றன...
.
மனித உடலிலும், உணர்விலும் உணற்சிகள் இருக்கும்வரை இந்த காதல் உணர்வுகள் இருக்கத்தான் செய்யும்...அது இயற்கை, அதனை எந்விதமாக நாம் கேள்வி கேட்டு விவாதித்தாலும் அதற்கு அதுவேதான் பதில்...
.
பின் என்ன இங்கே பிரச்சனை, சமூகம் திருந்தவேண்டும், ஒருவனுக்கு காலில் ஏற்படும் காயத்திற்கு மற்றவனுக்கு வலிக்கவேண்டும், அவன் அப்போது அதற்காக துடிப்பான், உதவுவான்...காதல் என்பது என்ன என்பது பற்றியும், மனித உணற்சிகளும், எதார்த்தமான உணர்வுகளும் பற்றிய அறிவை சமூகம் உணரவேண்டும், இளைய சமுதாயமும், மாணவப்பருவமும், நிறைய பழைய வாழ்க்கைகளை கற்கவேண்டும், கற்பிக்கப்படவேண்டும்....அத்தோடு அது பற்றிய தவறுகளையும் ்தன் விளைவுகளையும் அவர்கள் அறியும் நிலை ஏற்படும்...அதை விடுத்து, ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகிவிட்டால் காதல் வந்துவிடவேண்டுமா...என்கின்ற புழித்த உணற்சியற்ற கேள்விகளை, அறிவியலுக்கும், ஆண்மீகத்திற்கும் சுத்தமாக எதிரான வாதத்தை வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை...
.
.வக்கிரம் பிடித்த காதல் ஏற்படக்காரணம் என்ன....இதன் பின்னால் என்ன உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு... நாம் எங்கே இது பற்றிய விஷயங்களை ஆரம்பிக்கவேண்டும்...என்ற ஆழமான சிந்தனைகளும் தியறிகளும் தேவைப்படுகின்றன...வாழ்வியல் கல்வியோ, இறையியல் கல்வியோ மட்டுமே இதனை தர இயலும்...மாறாக முற்போக்கு வாதங்கள் சரியான திசையை கொண்டு அடைவதில்லை...
.
இன்றைக்கும் திரைப்படங்களும், கவிஞர்களும், திரைக்கதைகளும், 95 சதவிகிதம் தமிழ்நாட்டிலும் இந்திய துணைக்கண்டத்திலும் காதலுக்காகவே இயங்குகின்றனர்...
.
அதில் பெரிய அளவு வக்கிரக்காதலுக்கான வெறி பிடித்த தியறிகள்தான் விளம்பப்படுகின்றன...அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே அவர்கள் பேசுகின்றனர்..அதனால் அதுதான் சரி என்கின்ற நிலைக்கு நாம் வந்துவிட முடியுமா என்ன..
.
ஆக, காதல் என்ற ஒற்றைச்சொல் எல்லாவற்றிற்கும் காரணமாக அமைகிறது என்பதை விட அது நிர்வகிக்கப்படும் நிலையும், விளம்பப்படும் நிலையும், அதன் கோரமான அணுகுமுறைகளுமே அப்படியான நிலைக்கு தள்ளுகிறது...
.
எனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அதில் ஒரு காதல் இருக்கவே செய்கிறது...அதனை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும், அது எப்படி முழுமையடைகிறது என்பதில்தான் இருக்கிறது எதார்த்த நிலை...

.
சமூகம் சீர்கெடாமல் பாற்கவேண்டிய கடமை சமூகத்தை கட்டமைக்கும் இன்றைய காற்பரேட் உலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதில்தான் இருக்கிறது...
.அதிலிருந்து சமூக அமைப்பும், சமூக சிந்தனைகளும் சித்தாந்தங்களும் மாறவேண்டும்...
.
அமைதியான, அழகான, எதார்த்தமான, நேரமையான, காதல் மலரும்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: காதல்....!! ??
« Reply #1 on: December 04, 2018, 08:36:34 AM »

அருமையான பதிவு டொக்கு நண்பா. ஆனால் காதல் இத்தகைய விமர்சனங்களுக்குள்ளோ அல்லது கட்டுப்பாடுகள்/விதிமுறைக்களுக்குள்ளோ அடங்கக் கூடியது அல்ல. Love is the purest form. அது உடலின் எதோ ஒரு இயக்கம் போல மனித மனதின் ஒரு இயக்கம். காலம் மாறிக்கொண்டே இருப்பதைப் போல காதலும் materializedஆக மாறிக்கொண்டு வருகிறது. இது காதலுடைய தவறல்ல, மனிதர்களின் தவறு. நல்லதொரு விவாதமாக அமையக் கூடிய வாய்ப்புள்ள பதிவு இது. தொடர்ந்து இந்த திரியில் பேசுவோம் நண்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: காதல்....!! ??
« Reply #2 on: December 04, 2018, 04:42:08 PM »
இவ்வளவு பெரிய பதிவை படித்து மறுமொழி இடுவதை தங்களிடம் எதிர்பார்த்த ஒன்று..
அதற்க்கு அன்பும் நன்றியும் சிக்கு...

பதிவின் நோக்கமே காதலின் side effect or what is love என்பதல்ல ..மாறாக காதல் என்றால் என்னவென்று இந்த சமூகம் இளைஞர்களுக்கு என்ன புரிய வைக்கிறது? அதில் திரை துறையின் பஙகு..  ?ஓரு பாடலின் வரியை தன் வாழ்க்கையில் பொருத்தி பார்க்கும் ஓரு இளைஞநின் மன நிலைமயை யார் கட்டுப்படுத்துவது???.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: காதல்....!! ??
« Reply #3 on: December 04, 2018, 04:53:59 PM »

ம்ம் சரிங்க நண்பா, புரிகிறது. தொடர்ந்து இது குறித்து பதிவிடுங்கள். பேரன்பும் நன்றியும் :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 499
  • Total likes: 1534
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: காதல்....!! ??
« Reply #4 on: December 04, 2018, 05:22:05 PM »
ரத்தத்துல கிட்னில நாடி நரம்புலலாம் ஊரு உலகத்துல எவனுமே காதலிச்சு நாசமா போயிடக்கூடாதுனு தீயா யோசிக்கிறவனால மட்டும் தான் இப்புடி ஒரு போஸ்ட போட முடியும்.. ஆனாலும் Dokku r u serious??

அமைதியான, அழகான, எதார்த்தமான, நேரமையான, காதல் மலரும்...

இதுலாம் Dinosaur காலத்துலயே அழிஞ்சி போய்ச்சு தானே???

Offline Guest 2k

Re: காதல்....!! ??
« Reply #5 on: December 04, 2018, 05:29:25 PM »

ஆஹா சம்யூ, இவர் நீங்க சொன்ன அர்த்தத்துல தான் சொல்லியிருக்காருன்னு இப்ப தான் புரியுது. இவரு காதலுக்கு எதிரானவர் இல்லன்னுல நான் நினச்சேன் :P

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: காதல்....!! ??
« Reply #6 on: December 04, 2018, 05:52:55 PM »
@சாமி   ... ரஜினி படம் பார்த்த இப்படி எல்லாம் பேச வருமாம்  😂   

 I am serious  நேர்மையான அழகான அமைதியான காதல் எல்லாம் இன்னும் இருக்கு உதாரணத்திற்க்கு என் அப்பாவும் அம்மாவும் ..

@  சிக்கு  ... இது காதலுக்கு எதிரான பதிவு இல்லைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்...


# எண்ணப்பிழைகள்
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: காதல்....!! ??
« Reply #7 on: December 04, 2018, 06:01:34 PM »
என்ன பண்றது நண்பா... எண்ணப்பிழை இல்லன்னா abnormalலா இருக்க மாதிரி இருக்கு :D அது இயல்பு தானே :)
« Last Edit: December 04, 2018, 06:49:41 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்