Author Topic: வார்த்தை அம்புகள்  (Read 333 times)

Offline Guest

வார்த்தை அம்புகள்
« on: December 12, 2018, 12:36:39 AM »

.
வீசப்பட்ட அம்புகளில்
வெறுப்புகளில்லையெனினும்
அம்பு தைத்தலின் வலி
என்பது அகோரமானது.....

தைத்த அம்புகளை பிடுங்கி - எடுக்கையில்
வலித்ததா என்பது அம்பு
தைத்தலை விட வலி மிகுந்தது....

வீசப்பட்ட அம்புகள் தவறானவை
என இயம்புவோரிடம் - என்னிடம்
இருக்கின்ற அம்புகளே வெறுப்பில்லாமல்
வீசப்படுகிறது என்கிறார்கள்...

அம்புகளை வீசாமல் இருக்க
யாதொரு எத்தனிப்பும்
இல்லை...

வார்த்தைகளும் இங்கே சதா
எந்தவித நிபந்தனையும் இன்றி
வீசிக்கொண்டே இருக்கின்றனர்

வார்த்தைகளின் ஆழத்தை
வீசுபவரும்,வீசப்படுபவரும்
உணரவே இல்லை....

உணராமல் போன காலம் ஒன்றில்
இழந்தவையெண்ணி - இன்று
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்..




என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: வார்த்தை அம்புகள்
« Reply #1 on: December 12, 2018, 08:09:38 AM »
ஹ்ம்ம். உணராமல் போன காலம் எல்லாருக்கும் வாய்த்திருக்கிறது நண்பா

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்