Author Topic: கண்ணாடி பிம்பங்கள்  (Read 543 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
கண்ணாடி பிம்பங்கள்
« on: March 21, 2019, 11:46:31 PM »

மௌனங்கள் சத்தமாய் பேசி கொள்கையில் ..
இதயத்தின் அழுகை ஓசை கேட்பதில்லை !
சூனியத்தின் வெறுமையில் ..
நிரந்தரங்கள் நிறம் இழந்தன !
தனிமைகள் என்றும் உறவு !
அவை என்றும் நிராகரிப்பதில்லை !
புவி நீரும் காய்ந்து விட்டது !
விழி நீர் இன்னும் வற்றவில்லை

மனதோடு ஒரு விளையாட்டு !
மழை வரும் அதை  கேட்டு !
நிலவை துரத்தும் மேகங்கள் ..
நீள் இரவின் விசும்பல்கள் !
கண்ணாடி இதயங்கள் உளி கொண்டு ..
சிதைக்க படும் ..அதில் ..
தெரிக்கும்  பிம்பங்கள் !
கனவுகளின் கல்லறைகள் !
யாசித்தும் யோசித்தும் வருவதில்லை!
அன்பின் தரிசனங்கள் !
உண்மைகளின் வார்ப்பில் ...
நிலைத்து வருவது !
நொறுங்கும் இதயத்தின் காயங்களை ..
கண்ணீர் ஆற்றி விடட்டும் !

« Last Edit: March 21, 2019, 11:57:59 PM by RishiKa »

Offline Guest 2k

Re: கண்ணாடி பிம்பங்கள்
« Reply #1 on: March 22, 2019, 08:08:56 AM »
 :(:(:(

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்