Recent Posts

Pages: [1] 2 3 ... 10
7


#தலைக்கு ஷாம்பு வந்தப்புறம்தான் முடிய இழந்துகிட்டு இருக்கோம்...!!

#பல்லுக்கு பேஸ்ட் வந்தப்புறம்தான் பல்ல இழந்துகிட்டு இருக்கோம்...!!

#உடம்புக்கு சோப்பு வந்தப்புறம் அழகான தோல இழந்துகிட்டு இருக்கோம்..!!

#ஹைஜீனிக்ன்னு வந்தப்புறம்தான்
நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துகிட்டு
இருக்கோம்...!!


#மருத்துவமனைகள் வந்தப்புறம்தான்
ஆரோக்கியத்த இழந்துகிட்டு இருக்கோம்..!!

#ஆங்கிலப்பள்ளிகள் வந்தப்புறம்தான்
சிந்தனை திறனை இழந்துகிட்டு
இருக்கோம்..!!

#சுதந்திரம் வந்தப்புறம்தான்
சுதந்திரத்தையும் இழந்துகிட்டு இருக்கோம்..!!

#எதுனா புரியுதா?

இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு
தெரியுதா?

#வியாபாரம்! எல்லாம் கார்ப்பரேட் வியாபாரம்!

சிந்திப்போம்! மாறுவோம் மீண்டும் இயற்கைக்கே!
8
ஒரு_வரியில் #இயற்கை #மருத்துவம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23.பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
9
இன்றைய ராசிபலன்மேஷம்

மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும்.  உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும்.உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். 


மிதுனம்

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண் டாமே. போராடி வெல்லும் நாள்.


கடகம்

கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில்உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
   


சிம்மம்

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கன்னி

கன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டி
ருக்க வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாகவேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் திறமை களை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். தனுசு

தனுசு: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.


மகரம்

மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


கும்பம்

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும்.தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்
கள். வியாபாரத்தில் அதிரடியான செயல் களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


மீனம்

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள். 
10
கவிதைகள் / Re: கனவு
« Last post by SweeTie on Today at 09:32:44 AM »
உன் ரோஜா இதழ்கள் 
என்னை மெதுவாக வருடுகையில்
நான் மெய்சிலிர்த்துப்போகிறேன்
என் பெயரை நீ உச்சரிக்கையில்
நீ மயங்கி  போவதை ரசிக்கிறேனடி
என்மீது நீ கொண்ட காதல்
தீராதடி  கண்ணே  தீராதடி!
ஏனென்றால்  நான் உன் ஸ்வீட் சாக்லேட்
 
Pages: [1] 2 3 ... 10