Author Topic: கறுப்பு நாள்  (Read 495 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
கறுப்பு நாள்
« on: May 18, 2018, 01:28:18 PM »
எப்படி மறப்பது இந்த நாளை
நாடி நரம்பு எல்லாவற்றையும்
ஈர குலையை நடுங்க வைத்த
கறுப்பு நாள் தான்

உரிமை இழந்தோம்
உடமை இழந்தோம்
கடைசியில் பல்லாயிரக்கணக்கான
எம் உறவுகளையும் இழந்து நிற்கின்றோம் 

பச்சிளம் குழந்தையில் இருந்து
ஆண்டு அனுபவித்த பாட்டி வரை
யாரையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை
எல்லோரையும் மண்ணோடு புதைத்து விட்டார்கள்

ஒன்பது நாடு சேர்ந்து
எம் தமிழ் இனத்தை சின்ன பின்னமாக
பதம் பார்த்த கொடூரமான
நாள் இது

விஷ வாயு குண்டுகள்
எரிகை வீச்சு தாக்குதல்
பாயும் தோட்டாக்கள்
எல்லாம் பதம் பார்த்தது எம் உறவுகளை

எனக்காக போராடிய எம் போராளிகளைக்கூட
நாம் தொலைத்து விட்டு நிர்கதியாக நிற்கிறோம்
எம் குறைகளை கேட்க யாரும் இல்லை
கொலைகளை எல்லாம் சிங்கள பேரினவாதம்
மூடிமறைக்க அதற்கு  சர்வதேச அரசியலும்
அதை நம்பி எம்மை கைவிட்டு விட்டது

இரண்டரை சகாப்த கனவை தொலைத்து
எம் தலைமுறையை ஈழத்துக்காக
இழந்து நிற்கிறோம் ...

விதைக்கப்பட்ட எம் மக்களின்
ஒவ்வரு இரத்த துளிக்கும்
பதில் சொல்லும் காலம் வரும்
காத்திருக்கிறோம் எம் ஈழத்துக்காக



உயிர் துறந்த அணைத்து உறவுகளுக்கும் சமர்ப்பணம்
« Last Edit: May 18, 2018, 01:30:54 PM by NiYa »