Author Topic: நீ காதலால் சபிக்கப்பட்டவள்  (Read 401 times)

Offline Guest

எங்கோ எனை பார்த்தபோது ஞாபகம் வந்ததாய்
சொல்லி மின்னஞ்சல் செய்கிறாய்..

ஆர்வம் மேலிட தொலைபேசியில் அழைத்து
பார்த்தது நானாக இருக்க வாய்ப்பில்லை,
வேறு யாரோவாக இருந்திருக்கும் என்கிறேன்.

மனதுக்குள் பூட்டி வைத்து கொண்டலைந்த உன்னை
எனக்கு தெரியாதா என கேட்கிறாய்..

"எத்தனை கூட்டத்தில் நீ நின்றாலும்
அத்தனை தூரத்தில் இருந்து பார்க்கும் போதே
 கண்டுபிடித்து விடுவேன்" என்கிறாய்.

எனக்காக மாறிடும் உன் அமைவையும்,
தோரணையையும், நடைகளையும்
குறித்து கதைகள் சொல்கிறாய்..

புத்தகம் மாறி எழுதிய நம் பெயரை
 சொல்லி வெக்கம் கொள்கிறாய்..

விசும்பல் தெரியாதவாறு தளுதளுக்கும்
குரலை மறைக்க பெரும்ப்பிராயத்தனம் 
செய்து தொடருடைத்து பேசுகிறாய்

எப்போதோ ஏங்கிய தோளையும்,
துவங்காமல் முடிந்த போன அந்த
நீண்ட  அழுகையையும் சொல்லி
 அறியாமலே கண்ணீர் விட வைக்கிறாய்..

எல்லாம் முடித்து 'நேரமாச்சி கிளம்புறேன் 'என
சொல்லி ஒன்றும் ஆகாதது போல் நகர்ந்து போகிறாய..

உன் காதல் எப்போதைக்குமாய் ஆசிர்வதிக்கப்பட்டது..

நீ காதலால் சபிக்கப்பட்டவள்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ