வணக்கம் RJ,
இன்று நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைபடம் 1996 வெளிவந்த
" இந்தியன்" . திரை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் .
இயக்குனர் சங்கரின் மற்றுமொரு மைல்கல் ஆன இப்படத்தில் ,
கமலஹாசன், மனிஷா கொய்ராலே, ஊர்மிளா மடோன்கர் , சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர் .
A.R. ரஹ்மானின் இசையில் பாடல்கள் எல்லா விதமான ரசிகர்களையும் ரசிக்கும் வகையில் அமைந்து இருக்கும்.
1. Akadanu Naanga - Swarnalatha
2. Maya Machindra -
S. P. Balasubrahmanyam, Swarnalatha
3. Pachai Kiligal -
A. R. Rahman
4.Telephone Manipol -
Hariharan, Harini
5. Kappaleri Poyaachu -
S. P. Balasubrahmanyam, P. Susheela
ஒவ்வொரு பாடலும் தனித்தன்மை கொண்ட இத்திரை படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் ....
A.R. ரஹ்மானின் உயிர்புடைய குரலில் வெளிவந்த
" பச்சை கிளிகள் தோளோடு ....
பாட்டு குயிலோ மடியோடு ....
என்னும் பாடல் .
எனக்கு பிடித்த வரிகள் ,
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
(மற்றும் )
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் ..
நன்றி .