Author Topic: தாத்தா செடி.மற்ற பெயர்கள் அதன் பயன்கள்  (Read 1148 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
இந்த செடி தாத்தா செடி. இன்னும் பல பெயர் இதற்க்கு உண்டு ஆனால் இது இல்லாத இடம் இல்லை
இந்த பூவை 5,6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி் சொத்தை,
பல் பூச்சிகள் வெளியேறி விடும் பார்க்கும் போது சாப்பிடுங்கள் இலையை அரைத்து பத்து போட்டால் ஆறாத சர்க்கரை ரணம் ஆறும்...

இந்த மூலிகையின் பெயர்கள்..

1. கைமூக்குத்திப்பூ,
2. காயப்பச்சிலை,
3. கிணற்றடிப் பூண்டு,
4. தலைவெட்டியான்,
5. கிணற்றுப்பாசான்,
6. தாத்தா செடி,
7. வெட்டுக்காய பூண்டு,
8. கரும்பூடு,
9. சாணிப்பூடு,
10. மிருகம்பச்சிலை,
11. முறியம் பச்சிலை,
12. அரிவாள்மனைப்பூண்டு,
13. ஒரம்புபூடு,
14. வெட்டி முறித்தான்,
15. ஒடியன் பச்சிலை,
16. ஆணா பெண்ணா செடி,
17. வெட்டுக்காயப் பச்சிலை,
18. கள்ளிப்பூட்டான்,
19. முருகன் பச்சிலை,
20. பொடுதலைப் பூண்டு,
21. பொற்றலை கையான்,
22. விரிய கடி பூண்டு,
23. வெட்டுவாங்கண்ணி,
24. இரண பூண்டு,
25. கோணேசர் மூலி,
26. உறம்பு பூடு,
27. தஞ்சாவூரான் பூண்டு,
28. வெட்டு கத்தாழை,
29. ஒரங்க பூடு,
30. தண்ணீர் பூண்டு

என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. காயங்களை ஆற்றுவதில் வல்லமை பெற்றது.! மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை.

இது நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தனாகவே வளரும் செடி. இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம். இலையை பரிக்கும் முன் கையை சுத்தமாக கழுவவும்.
விவசாயம் செய்பவர்கள் ம்ற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை அருமருந்தாக பயன் படுத்துகின்றனர்.
கிணற்று பாசான் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

குடற்புண் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையெடுத்து இரண்டு முறை மென்று துப்பிவிட வேண்டும் பல்லின் விஷம் வெளி வந்து விடும். முன்றாம் முறை மென்று விழுங்க வேண்டும் குடற்புண் ஆற்றும் குடல் புற்று நோயை தடு்க்கும்....





« Last Edit: January 13, 2019, 01:20:18 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால