Author Topic: கரையேறா மீன்கள்  (Read 429 times)

Offline Guest 2k

கரையேறா மீன்கள்
« on: May 15, 2019, 11:47:41 PM »
கரையேறா மீன்கள்

நேர்த்தியாக பின்னப்பட்ட வலையின்
இழைகளினிடையே
வழுவியோடும் வாழ்விற்கு
நன்றியுரைக்க சொல்கிறது
நீரின் தாய் மடி
கரையேறத் துடிக்கும் மீன்களுக்கு
தெரிவதில்லை
கரையும் சாசுவதமில்லை என்பது.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்