Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 218  (Read 2118 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 218
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline JeGaTisH

நீரின்றி அல்லாடுது உலகு
நிலத்தடி நீர் கூட உரிஞ்ஜிகின்றது மரம் .

மரம் வைத்து மழை பெரு என்பர்
இன்று மேகம் கூட  இல்லை வானில் .

மழைக்காக காத்திருக்கான் விவசாயி
அவன் கழுத்தை பிடிக்க காத்திருக்கும் கந்துவட்டி .
காட்டு மரங்களை அளித்துவிட்டான்
விலங்கு நீர் தேடி வருகுது ஊருக்குள்ளே !

நீர் சேமித்து நெடும் கோல் ஆட்சிகள் அங்கே
தினமும் நீருக்க அடித்துக்கொள்ளும் காட்சிகளும் இங்கே !

இன்று ஆற்று மணலை திருடி பணம் பார்ப்பவன்
நாளை அவன் மகன் நீருக்காக
பிச்சை எடுப்பான் என்பதை பார்க்கவில்லை !

ஒவ்வொருவரின் அன்றாட தேவை நீர்
அதை நிலவிலும் தேடுகின்றனர் விஞ்ஞானிகள் !

மேகம் கருத்து மின்னல் இடித்து
எல்லோர் தாகம் தீர்க்கும் மழையே !
நீரின்றி அமையாது உலகு
நீர் சேமித்து நன்மை பெரு .



ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்


Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..

ஓ என்  தமிழகமே !
தண்ணீர் தேசம் இன்று
கண்ணீர் தேசம் ஆனது என்ன?
வேர்வையில் விதை வளர்க்கும்
எம் விவசாயி ...பாலைவன காட்டில் ..!

பூமி தாயின் கர்ப்ப பையை சுரண்டி ...
அதை வெற்றிடம் ஆக்கிவிட்டு ...
நீர் குழந்தையை எதிர் பார்த்தால் ?
வாழ்வுக்கு ஆதாரமும் ...
நாட்டின் பொருளாதாரமும் ..
நீர் வளத்தை கொண்டல்லவா உயிர் வாழும் !
   
காவிரியும் வைகையும் பாலாறும் ..
தாமிரபரணியும் பொருனையும் ...
வட பெண்ணையும் தென் பெண்ணையும் ...
இன்று தடம் தெறியாமல் போனதென்ன ..?

மக்களும் மாக்களும்  மடிவது ....
மழைக்கும் தெரியவில்லை ....
மகேசனுக்கும் புரியவில்லை ...
கொடுத்த வரத்தை தன்  தலைமேல் வைத்து
அழித்து கொண்டு இருக்கும்....
அரசியல்வாதிகளுக்கும்  உணரவில்லை !

வறட்சி பூமியில் வானத்தை எதிர்நோக்கும் ...
என் தமிழகமே !
இன்னொரு மழை பெய்தால் ...
வளத்தை காப்பாற்றி ...
தண்ணீரை சேமியுங்கள் !
இல்லை என்றால் ...
நாளைய உலகில் ..

வீசுகின்ற காற்றும் ..
அனல்காற்றாய் மாறும் !
விழுகின்ற மழையும் ..
வென்னீராய் தெறிக்கும் !
இரவின் நிலவும் எரிக்கும் !
பொங்கும் கடலும் ..
துளி நீரின்றி வற்றும் !

பூமியின் ஈரத்தை உறிஞ்சிய ...
புல்லுருவிகலே !...
உம் வாரிசுகளுக்கு ...
தாகம் தணிக்க ...
இரக்கத்துடன் கொஞ்சம்
தண்ணீரை விட்டு விட்டுவையுங்கள் !

Poocha

  • Guest
பள்ளி விடுமுறையில்
கிராமத்திற்கு செல்கயில்
தோட்டத்துக்கும் வயலுக்கும்
மாடு பூட்டி நீர் இறைப்பதை
காண்பேன்

இன்று மாடு மட்டும் தொழுவத்தில்
குடிக்க நீரின்றி வாடும் அவலம்
காண்கிறேன்

இயந்தரமாக்களில்
நவீன கருவிகள் கொண்டு
நீர் இருக்கும் ஆழம் வரை
தோண்டினர்

வரும்வழியில்
இடையூறாய்
இருந்த மரத்தை வெட்டி

ஏர்கலப்பை
வீட்டு மூலையில்
இளைப்பாறி கொண்டிருக்கிறது
ஏன் பிறந்தோம் என
அறியா மனிதனை போல

மாலை வேளையில்
கொஞ்சும் கிளிகளின்
ரீங்காரம் மறந்து

தொலைபேசியின்
ரீங்காரம் கேட்காமல்
பதறி தேடி
மின் இணைப்பின்
துணையால்
உயிரூட்டி கொண்டிருக்கிறோம்

சுய லாபத்துக்காக
இயற்கையை அழித்து

சுயம் மறந்து
மழை பொய்த்து போய்
நா வறண்டு  நிற்கையில்
சொல்லிக்கொண்டு திரிகிறோம்

இயற்கை மாறிவிட்டது என



Offline Thalapathi

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தண்ணீர் எங்கே என்று ஏங்குகிறோம்
தண்ணீருக்கு வழியில்லாமல் தவிக்கிறோம்
நீர் நிரம்பிய ஆற்றைக் கண்டில்லோம்
கேணிகள் இன்று எங்கும் அறியோம்.


கிராமத்துக்கு மூன்று கண்மாய்
வீதிக்கு ஒரு நல்ல தண்ணீர் கிணறு
ஊரைச் சுற்றி ஒரு வற்றாத ஆறு
யாவையும் ததும்பும் நீர் வளத்தோடு..
கண்டோம் அன்று.

வீட்டிற்கு நான்கு ஆழ்கிணறு
வீதிக்கு ஓர் அடி குழாய்
ஊரைச் சுற்றும் ஒரு வறண்ட ஆறு
யாவற்றிலும் வற்றிய ஊத்து
காண்கிறோம் இன்று.


தண்ணீர்ப பந்தல் அமைத்து
வரு வோருக்கெல்லாம் தாகம் தீர் த்து
மகிழ்ந்த தமிழர்களை இன்று கண்டில்லோம்
குடத்துனும் பானைகளுடனும் அலையும்
பெண்டிரைக் காணும் போதில் துணுக்க்குற்றோம்.

ஏன் இந்த நிலை ? என்று எண்ணும் போது
நம்முடைய அளவில்லா ஆசையும்
வளமான நிலத்தை பாழாக்கும் நோக்கும்
எதிலும் பணத்தைக் கருதும் உணர்ச்சியைக் கண்டு
வகையறி யாத வேதனையுடன் கலங்குகிறோம்

Offline Guest 2k

தண்ணீர் அகதிகள்

வறட்சி பாளங்களாய்
புரண்டு படுக்கும்
பூமிதாயின் முதுகில் ஊன்றி நிற்கிறது
தண்ணீர் உறிஞ்சும்
முதாலாளித்துவம்
மணலை விற்று
மக்களை விற்று
மழையையும் விற்கும் நாள் எதுவோ?
நீரை உறிஞ்சி பானமாக்கி
கழிவை வெளியேற்றி
நீர்நிலையை அசுத்தபடுத்தி
தண்ணீருக்கு கெஞ்சி
கடல் நீரை குடி நீராக்கி
குவாரி நீரை தூய்மைப்படுத்தி
கழிவு நீரை சுத்தப்படுத்தும் நாள் தான் வருமோ?


மலை தாண்டி, காடு தாண்டி
நீர் தேடி
ஊர் புகும் காட்டு விலங்கு
நீர்நிலை தாண்டி, நிலம் தாண்டி
நீர் தேடி
தெருவில் ஓடுகிறது மனித விலங்கு


மணல் அரித்த ஆற்றுபடுகைகள் மடியில்
நீறற்று கிடக்கிறது ஆற்றின் தடம்
கழிவுநீர் வாய்க்கால்களாய் ஓடுகிறது
ஏரிகளும் கால்வாய்களும்
வறண்டு கிடக்கும் நிலத்தின் கீழ்
அதலபாதாளம் தொடும் நிலத்தடிநீர்
சல்லடையாய் துளைக்கும்
ஆழ்துளை
மின்மோட்டர்களின் வழி
தளும்பி வெளியேறுகிறது பூமித்தாயின் உதிரம்


காவிரி தென்பெண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொருநைநதி
என திருமேனி செழித்ததொரு நாடு
இன்று நீரின்றி படும்பாடு.
மழைநீரை சேமிக்க மறந்தோம்
மடுக்களில் நாமே புதைந்து போனோம்
பேராசை எனும் தூண்டிலில்
சிக்கி தவித்தோம்
ஏரிகளையும் குளங்களையும் ஆக்ரமித்தோம்.
தண்ணீரற்று இருக்கும் தேசம்
கண்ணீரில் மிதக்கிறது
இத்
தண்ணீர் விற்கும் தேசமோ
பண மெத்தைகளில் புரள்கிறது.
காசை நீராய் செலவழித்த பழமொழி
வழக்கொழிந்து
நீருக்காய் காசை செலவழிக்கின்றோம்.


நினைவில் கொள்ளுங்கள்
காற்றும் வானும்
இம்மண்ணும்
நீரும்
நமக்கு மட்டும் சொந்தமில்லை!
வருங்கால சந்ததியினருக்கு
துரோகம் இழைக்காமல்
நீராதாரங்களை காத்திடுவோம்
மழைநீர்
கடலோடு கலந்திடாமல்
அதன் தாய்நிலத்தினோடு
சேர்த்திடுவோம்.
ஆற்றுப்படுகைகளை அரிக்கும் மணற்கொள்ளையை எதிர்த்து
ஆற்று நீரை நம்பியிருக்கும்
கால்வாய்களும்
ஏரிகளும், குளங்களும்
நிறைப்போம்.
நீரை சூரையாடும் தொழிற்சாலைகள்
ஒழித்து
பல்லுயிர் வளம் ஓம்புவோம்.
நீரெனும் ஆதாரத்தை ஆதாயமாக்காமல்
நீரின்றி அல்லாடும் இவ்வுலகை
நாளைய உலகிற்காக
மீட்டெடுப்போம்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline சிற்பி

தண்ணீர் தண்ணீர் என்று
தவிக்கும் தேசத்தில்
இன்று தான் புரிகிறது
வள்ளுவன் சொன்ன வாய்மொழி
நீரின்றி அமையாது உலகு

கார்த்திரள் மேகங்கள்
காணாமல் போனது
வெண்மேக கூட்டங்கள்
பொன்வானில் தவழ்கிறது

தாய்ப்பால் இல்லாமல்
தவிக்கும் குழந்தை போல்
தண்ணீர் இல்லாமல்
தவிக்கும் தேசமிது

ஏழு கடல் முழுதும்
தண்ணீர் இருக்கிறது
தாகம் வரும்பொழுதில்
குடிக்க முடிவதில்லை

மண்ணை அகழ்ந்தெடுத்து
உன்னை தேடுகிறோம்
மழையை எதிர்பார்த்து
நாங்கள் வாடுகிறோம்

இமயத்தில் பிறந்தவளாம்
வற்றாத ஜுவ நதி கங்கை
எங்கள் தாகம் தீர்ப்பதில்லை
அந்த மங்கை

பொண்ணியும் வைகையும்
தஞ்சையும் தாமிரபரணியும்
அவளை எதிர்பார்த்து
காத்து கிடக்கிறது
தமிழ் நாட்டின் தாயாம்
காவிரியும் வரவில்லை


« Last Edit: May 23, 2019, 09:54:44 PM by சிற்பி »
❤சிற்பி❤

Offline thamilan

அன்று
மழை அருவி குளங்கள் என
இறைவன் தண்ணீரை அள்ளி அள்ளி தந்திட்டான்
ஆறுகள் தளும்பி வழிந்தன
அணைகள் நிரம்பி வழிந்தன
வான் பொய்யால்
மும்மாரி மழை பொழிந்தன

இன்று
காடுகளை வெட்டினோம்
ஆறுகளை அழித்தது வீடுகளை கட்டினோம்
தொழில்சாலைகள் என்ற பெயரில்
காற்றை மாசுபடுத்தினோம் 
இன்று தண்ணீருக்காக
கண்ணீர் வடிக்கிறோம்
தாயின் தனங்களை அறுத்துவிட்டு
பாலுக்கு அலையும் பிறவிகள் நாங்கள்

தண்ணீர் ஆறுகளிலும் அருவிகளிலும்
கரைபுரண்டோடியது போய்
அணைகள் நிரம்பிவழிந்தது போய்
பாட்டில்களில் அடைபட்டுக் கிடக்கிறது

அருவி நீரை விட சுவையான நீர் உண்டா
மழைநீரை விட சுத்தமான நீர் உண்டா
இன்றோ பாட்டில்களில் விற்கும் நீரே சிறந்தது என
வாங்கி அருந்தும் காலமிது

தண்ணீரால் சூழ்ந்தது இந்த உலகம்
இன்றோ தண்ணீருக்காக தவிக்கிறது
தண்ணீரை சேமிப்போம்
தண்ணீரை வீண்விரயம் செய்வதை தவிர்ப்போம்

உன் உயிரை
சேமிக்கும் வழி தெரிந்தால்
என்செய்வாயோ அதையே
நீருக்கும் செய்
நீரே உலகம்

Offline kanmani

செம்பூத்து கூவி
மழை வரும் அறிகுறியை ஆரவாரிக்க
கருமேகம் சூழ்ந்து
வானருவி பெருக்கெடுத்து ஓட
நெல்லங்காட்டில்
சேற்றுவயலில் ஏற் ஓட்டிய கால்களோ
குந்தவச்சு அண்ணாந்து பார்த்து
கண்ணீர் ஆறாய் ஓட
ஒட்டிய வயிற்றில்
கடங்காரனின் சுடுசொல் வதைத்தெடுக்க
காய்ந்த பயிர்களின் நிவாரண நிதிக்கு
ஏங்கியிருக்க
திக்குத் தெரியாமல் மனமுடைந்து
தற்கொலையைத் தேட
தோளுயர்த்தி ஏற்றமிறைத்து
உழவோட்டியோர்
வாழ வழி தேட
எலிக்கறி தின்று
கோவணத்தில் ஊர்வலம் போயிருக்க
அரசியல் பெருச்சாளிகளோ
ஆற்றிநீரில் தெர்மகோல் மூடாக்காம்
நாடு வளம் பெற
ஹைட்ரோ-கார்பன் திட்டமாம்
சுயநலவாதி கூட்டத்தை வேறெடுக்க
இணைவோமே
ஜல்லிக்கட்டு காளைகளாய்
வீறுகொண்டு எழுவோமே
சொட்டு நீரையும் காப்பாற்றி
மரங்களை நடுவோமே
இயற்கையுடன் போராடி
பசுமைபுரட்சி மீட்டெடுப்போமே
கூட்டுப்புழு தான் பட்டாம்பூச்சியாய்
கோலம்கொள்ளும் என்பதை
உணர்வோமே....