Author Topic: செய்திச்சுடர்  (Read 6356 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #15 on: November 06, 2012, 02:26:46 AM »
இன்போசிஸ் அதிகாரிகளுக்கு இனி 'எக்கனாமிக் கிளாஸ்' தான்.. 'பிஸினஸ் கிளாசில்' பறக்க தடை!



பெங்களூர்: செலவுகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது மூத்த அதிகாரிகள் விமானங்களில் பிஸினஸ் கிளாசில் பறப்பதற்கு இன்போசிஸ் தடை விதித்துள்ளது. இனி இவர்கள் எக்கனாமிக் கிளாசில் தான் பறப்பார்களாம்.


கடந்த 3 மாதங்களில் மட்டும் பயணச் செலவுகளுக்காக என இன்போசிஸ் ரூ. 382 கோடி செலவிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் செலவான தொகை ரூ. 753 கோடியாகும்.


சமீபத்தில் ஊதிய உயர்வை அறிவித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையை சமாளிக்க இந்த பயணச் செலவு கட்டுப்பாட்டை அமலாக்குவதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவான விகிதத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சாப்ட்வேர் துறை 11 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என நாஸ்காம் தெரிவித்துள்ள நிலையில், தனது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும் என்று இன்போசிஸ் கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது.


மேலும் கடந்த ஏப்ரலில் தர வேண்டிய ஊதிய உயர்வை இன்போசிஸ் அக்டோபரில் தான் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #16 on: January 02, 2013, 04:19:06 AM »
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம்

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் அணுசக்தி நிலையங்கள் பற்றிய விவரங்களை மீண்டும் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இருதரப்பு ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அவ்வப்போது தாங்கள் அமைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றன.

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 21 முறை இப்படியான தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 22-வது முறையாக உரிய தொடர்புகள் மூலம் இருநாடுகளும் மீண்டும் அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #17 on: January 02, 2013, 04:21:22 AM »
டெல்லியில் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை- சிறுபான்மை பேரவை கண்டனம்

சென்னை: டெல்லி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்ததற்கு சிறுபான்மை பேரவைத் தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தமது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமலும், தேவையான நிதியை ஒதுக்காமலும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

 இந்த நிலையில், டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்ல முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை. மாறாக வெறும் 10 நிமிடம் மட்டும் ஒதுக்கி பேசுமாறு கூறி அவரை அவமதித்துள்ளனர். இந்த செயல் உலகத் தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய செயலாகும். சிறுபிள்ளைத்தனமாகும்.

 மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசவிடாமல் பாதியிலேயே நிறுத்தும்படி மணி அடித்ததால் கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது மிகச்சரியானதும், வரவேற்கத்தக்கதும் ஆகும். இந்த விஷயத்தில் அவர் காட்டியிருக்கும் துணிச்சலையும், தமிழக மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும், உணர்வையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.

மத்திய அரசின் செயலுக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு, இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றம், இந்திய பிஷப்புகள் கவுன்சில் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
« Last Edit: January 02, 2013, 04:24:53 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #18 on: January 02, 2013, 04:24:22 AM »
விஜயகாந்த் கூடத்தான் ஆசைப்பட்டார்,  ஆனால் 4 கேஸைக் கூட தாங்க முடியலையே..  அழகிரி
மதுரை: முதல்வர் பதவிக்கு என்னை உட்கார வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்டனர். ஏன் விஜயகாந்த் கூடத்தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரால் நான்கு வழக்குகளைக் கூடத் தாங்க முடியலையே. எதுவாக இருந்தாலும் மக்கள் ஆசைப்பட்டால்தான் நடக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று அழகிரி பேசுகையில்,

 தமிழகம் தற்போது இருண்டு கிடக்கிறது. இருண்ட ஆட்சிதான் நடக்கிறது. ஓராண்டுக்குள் மின்சாரம் வரும் என்று வழக்கம்போல சொல்லி வருகிறார் முதல்வர். மத்திய அரசு தமிழக அரசின் வளர்ச்சி உதவவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக கேட்கிறீர்கள். திமுக ஆட்சியில் மத்திய அரசு என்ன உதவிகள் செய்ததோ, அதேபோலதான் இந்த அரசுக்கும் மத்திய அரசு செய்கிறது. ஆனால் ஜெயலலிதா அரசு இதனை அரசியல் சாயம் பூசி மறைக்கிறது என்றார் அவர்.

லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து நிற்கும் என்றுஜெயலலிதா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது அவர்களது கட்சி விருப்பம் என்றார் அழகிரி.

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா ஆசைப்படுவதாக, முயற்சி செய்வதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது அவர்களுடைய விருப்பம். விஜயகாந்த் கூட முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இந்த அரசு போட்ட 4 வழக்குகளை கூட அவரால் தாங்க முடியவில்லை. அன்னா ஹசாரே ஆசைப்பட்டார் ஆக முடியவில்லை.

என்னைக் கூட தான் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். மக்கள் மனது வைத்தால்தான் எல்லாம் நடக்கும் என்றார் அழகிரி.

 
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #19 on: January 02, 2013, 04:28:13 AM »
டெல்லி பலாத்கார மாணவியின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது

 
  பலியா, உ.பி.: டெல்லியில் பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாகி பின்னர் மரணமடைந்த பிசியோதெரப்பி மாணவியின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது.

 உ.பி. மாநிலம் பஹரலி காட் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் இன்று அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் இருந்தனர். அனைவரும் கண்களில் நீர் ததும்ப அஸ்தி கரைப்பில் கலந்து கொண்டனர்.

 13 நாள் உயிர்ப் போராட்டத்தில் தோல்வியுற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி உயிரிழந்தார். முன்னதாக அவரது அஸ்தி நேற்று மாலை அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு இன்று கங்கையில் கரைக்கப்பட்டது.

 


 
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #20 on: January 02, 2013, 04:30:31 AM »
கலைஞர் டி.வி மீது வழக்கு தொடர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி!
 கரூர் : தம்மைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கலைஞர் டி.வி இயக்குநர் உட்பட 5 பேர் மீது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கரூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 கரூர் பெரியகுலத்துப்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கடந்த ஆண்டு தாம் கடத்திச் செல்லப்பட்டு சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கியது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே போல் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சேரன் என்பவர் கரூரில் தாம் நடத்திவந்த அரசு கேபிளை அபகரித்துக் கொண்டதாக செந்தில் பாலாஜி மற்றும் தம்பி மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால் தமது பெயருக்கு அவதூறு உண்டாக்கும் வகையில் வழக்கறிஞர் மணிராஜ், காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியர் வரதன், கரூர் கலைஞர் டி.வி. நிருபர் தண்டபாணி, கலைஞர் டி.வி. முதன்மை செய்தி ஆசிரியர் தயாள் மற்றும் கலைஞர் டி.வி மேலாண்மை இயக்குநர் அமிர்தம் ஆகிய 5 பேர் மீதும் அமைச்சரின் தம்பி அசோக்குமார் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு 6 பேரும் வரும் 28-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
அன்புடன் ஆதி