Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 240  (Read 1820 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 240
இந்த களத்தின்இந்த  நிழல் படம் HONEY அவர்களால்         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
ஏகாந்த இரவின்  அமைதியில் ஒரு பேதையின் பிதற்றல்கள்
இரவின் தனிமையில் கண்ணாடி முன் நின்று , என்னை பார்க்கிறேன் ....

என் கண்களுக்கு என் பிம்பம் அழகியாய் தெரிந்தாள் ....
என்னுள் பேசுகிறேன் ...

அனைவர் கண்களுக்கு அழகியாய் தெரிந்த நான் ....
உன்  விழிகளுக்கு மட்டும்,...அகோரமாய் தெரிந்ததேன் ?
என் மகிழ்ச்சியின் எதிரொலியாய்   புன்னகைகள் ..
 உனக்கு  மட்டும் தவறாய் பார்க்க தெரிந்ததேன் ?
அனைவருக்கும்  ஒலித்த  என் குரலின் இனிமை
உனக்கு மட்டும் விஷமாய் கசந்ததேன் ?

உன்னுடன் ஒரு வார்த்தை யேனும்  பேச வேண்டும் என்று ...
நான் ,உன்னுடன் போட்ட பொய் சண்டைகள் .....
உன்னால்  புரிந்து  கொள்ள முடியாமல், ..........
என்னை எதிரியாய் பார்க்க தூண்டியதேன் ?

 உன் அன்புக்காய் ஏங்கிய என்  இதயம்
ஒரு நண்பியாய் கூட என்னை நினைக்க , .........
உன் இதயம் இடம்தர  மறுத்தது ஏன் ?
 அறியாமல் நான் செய்த  சிறு தவறுகளையும்   மன்னிக்கும் ...
தாய்மை உணர்வு அற்றவனாய் நீ............

ஆண்டாண்டுகள் கடந்து ..நான்காண்டுகள் ஆன   பின்பும் .....
கரையவில்லை'' கல்லாய்  உன்மனம் ...........
ஆம் '' கல்லை  நீரில் கரைப்பார் யாருமில்லை....
அசத்திய உண்மைகள் ...அறைந்தன என்  மனதை ...
அன்பின் இனிமையை ,மனித நேயத்தை உணராத மனதில் 
அன்பை தேடுவதில் பயனில்லை ........
நிதர்சனமான உண்மைகள் பாறையாய் அழுத்தின என்  மனதை .....

கண்ணாடியில்  என் முகத்தை மீண்டும் பார்க்கிறேன் ..
நம்பிக்கை,புரிந்துணர்வு, மதிப்பு ,ஆளுமை, நேர்மை ... 
என்னும் அத்தனை அம்சங்களுடனும் ...
பேரழகியாய் ' நான்  என் கண்களுக்கு ......

நம்பிக்கையையும் ,மனதில் வேதனையையும் சுமந்தபடி
என் கால்கள் நடை போடுகின்றன ...
எனக்காக காத்து  கிடக்கும் ....
அழகிய விடியலை நோக்கி
« Last Edit: August 09, 2020, 08:10:27 PM by AksHi »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
அவள்
பரீட்சயமாணவளாக தெரிந்தாள்..

யாருமற்ற இரவுகளில்
அவளுக்கான தேடல்
அவளுக்கான தேவை
அவளுக்கான அன்பு
அவளுக்கான எல்லாமே
அவளருகில் ...

பகல்களின்
பல்லிளிப்பில்
அவளின்
ஆழுமை அன்பு
ஆதரவு பண்புகளென்று
நகரவிடாது
கட்டிப்போட்ட வண்ணம்...

நிச்சயமாக
அவள்
புன்னகையை சுமந்திருந்தாள்

பூட்டிக் கிடந்த
அவள் மனதின்
திரை அகற்றி
மனதோடு உறவாட
மனதொன்று வேண்டும்..

அவழுக்கு மட்டும்

தெரியும்
அவளணிந்த
புன்னகையெனும்
முகமூடியின் பின்னால்
இழந்தவைகளும்
இழக்கின்றவைகளும்..

அவளும் பெண்தான்..

Offline MoGiNi

நேசிக்கப்படுதல்
வரமென்பேன்...

என் நிர்வாணங்கள்
உனக்கு
பழக்கப் பட்டவை..

ஈரக் கூந்தலில்
தெளிக்கும்
ஒர் துளி நீரில்
உருகி வழிந்திருக்கிறாய்...

என்னை விட
என்னை அதிகமாக
நானறியாமல்
ரசித்தது நீ ...

உரோமக் கணுக்களை
உன்னிப்பாக கவனிக்கிறாய் நீ

உன்னோடுதான்
அதிகம் பேசி இருக்கிறேன்.

என் கண்ணீர்
புன்னகை
கோபம் தாபம்
இதையெல்லாம்
அதிகம் பார்த்திருக்கிறாய்..

அதிகமான
என் கோபங்களை
அடக்க சொல்லி கொடுத்திருக்கிறாய்..

என் புன்னகையின்
சொந்தம் நீ
என்னை அழகு படுத்துவதில்
அத்துனை இன்பம் உனக்கு..

அழுதால் அழுது
சிரித்தால் சிரித்து
என்னோடு இன்புற்று துன்புற்று
எத்தனை வயசானாலும்
உன்னால் மட்டும்தான்
என்னை
என் குணாதியங்களை
அப்படியே காதலிக்க முடியும்..

- என் வீட்டுக் கண்ணாடி

Offline thamilan

நான் ஒரு அழகிய மங்கை
பார்ப்பவரை திரும்பிப் பார்க்கவைக்கும்
என் கண்களை கண்டால்
கனவுகளில் தூக்கத்தை தொலைய வைக்கும்
நான் பேசினால்
கிறங்கி நிற்கும்
ஒரு பார்வை பார்க்க மாட்டேனா என
பல நாள் தவமிருக்கும்
மாடிக்கு நான் வர மாட்டேனா என
வீட்டுக்கு முன்னால்
பாதை ஓரத்தில்
குடியிருக்கும் இளைஞர்கள் என
பலரது எண்ணங்களில் குடியிருக்கும்
அழகுப் பதுமை நான்

ஐந்தரை அடி உயரம்
ஆறடி நீளக் கூந்தல்
வானவில் போலே புருவம்
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள்
எடுப்பான மூக்கு
இனிப்பான உதடுகள்
மொத்தத்தில் அழகுச் சிலை நான்

என்னை நான் கண்ணாடியில் பார்க்கையில்
எனக்கே என்னை காதலிக்க தோன்றும்
இயற்கையை வரைந்திட்ட பிரமன்
அதே தூரிகையால்
என்னையும் வரைந்திட்டானோ என
சந்தேகமும் எழும்

ஒரு சில வேளைகளில் மட்டும்
கண்ணாடி முன் நிற்கையில்
எனது மனசாட்சி
எனது அகஅழகை கண்ணாடியில் காட்டிடும்

அதை பார்த்து நானே அதிர்ந்து போயிருக்கிறேன்
அழகு புறத்தில்
அவலட்சணம் அகத்தில்
என் அகத்தே நான்
கர்வமானவள் கோபக்காரி
பொறாமை பிடித்தவள் பொல்லாது பேசுபவள்
அடக்கம் என்பது
அகராதியில் கூட இல்லாதவள்
ஆணவக்காரி அவசரக்காரி
ஆசைகளின் மொத்த உருவம்
வார்த்தைகளால் மற்றவரை தீண்டிடும் அருவம்

கண்ணாடியில்
அகம் தெரிகின்ற வேளைகளில்
பலமுறை என்னை நானே வெறுத்திருக்கிறேன்
பார்க்க முடியாமல்
கண்கள் கூச தலைகுனிந்திருக்கிறேன்
இந்த உருவத்தை எப்படி சலவை செய்தால்
தூய்மையாகும் என பல நாள் யோசித்திருக்கிறேன்
இந்த யோசனை எல்லாம்
விடியும் வரை தான்
அடுத்த நாள்
என் புறம் தான் கண்ணுக்குத் தெரியும்
ஆழகான அழகுப் பதுமையாக 

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
மெழுகின் ஒளியில்
உருவமொன்று...
சற்றேத் தள்ளி
ரசித்தேன் நானும்
நின்று..
வாடிய முகமும்..
கசக்கிய கண்களும்..
பார்க்கையில்
ஏனோ கூடுகிறது
நெஞ்சில் பரமும்...

உற்றுப் பார்த்தேன்..
மங்கிய ஒளியிலும்..
சற்றேப் பிரகாசமாக
ஒளிர்ந்தது
அவளது முகம்...
மைத்தீட்டா மய்யல்
விழிகளும்...
உதட்டோரம் மர்மப்
புன்னகையும்..
மறைத்திருக்கிறாளா..
அல்லது
மறந்திருக்கிறாளா..?

கேட்க்கிறேன் கேள்வி
அவளிடம்..
ஏ பெண்ணே..
விழிகளில் உயிரைத்
தேக்கி வைத்து
இதழோரம் சிறுப்
புன்னகை சிந்த
மறுக்கிறாய்.. ஏன்?
முறுவலுடன் இமைகளை
மூடித் திறந்தவள்..
எனை நொக்கி
புன்னகையைச் சிறு
முத்துக்களாகச் சிதறச்
செய்தாள்...

அடடே என்ன‌ அழகு..
சிதறிய புன்னகையில்
மய்யல் கொண்டேனோ..
புன்னகையோடு தொடர்ந்த
அவளின் கேள்வியில்
திகைத்து நின்றேனோ..
அவள் கேட்கிறாள்..
என்னை வர்ணிக்கிறாயா
அல்லது ரசிக்கிறாயா..?
உன்னை ரசிப்பதால்
வர்ணிக்கிறேன்
என்றுரைத்தேன்...

வில் போன்று புருவம்
தூக்கி ஏறிட்டவள்..
என் அருகில் வந்து
ரசிப்பாயாக
என்றுரைத்தாள்...
நெருங்கினேன் அவளை..
இவள் எனக்கு
பரிச்சியமானவள்..
விழிகள்  விரிய
அவளைப் பார்க்கிறேன்..
அதிர்ச்சியில் உரைகிறேன்.

துன்பம் நிறைந்த
முகமும்...
நம்பிக்கைற்ற
கண்களும்..
நடுங்கும் உதடு
பிரதிபலிக்கும் பயமும்...
மீண்டும் கேட்கிறாள்..
இப்போது சொல்
ரசிக்கிறாயா என்னை
என்று..!!
விழிகளில் நீர்
ததும்ப
இல்லையேன்றேன்..

இயற்கையை ரசித்தேன்..
செயற்கையை ரசித்தேன்..
ஆணை ரசித்தேன்..
பெண்ணை ரசித்தேன்..
இவளை ரசிக்கத்
தவறிவிட்டேன்...
இவள் ...ஆம்
இவள் நான் தான்...
நான் என்னை
ரசிக்கவில்லை..
என்னை நானே
நேசிக்கவில்லை...

கண்ணீரில் நான்
கரைய...
அவளோ ...
நீ ரசித்தவை உனை
ரசிக்கவில்லை...
நீ நேசித்தவை உனை
நேசிக்கவில்லை..
ஏனேனில்...நீ உன்னை
நேசிக்கவோ ரசிக்கவோ
செய்ததில்லை...

நேசிக்கப் பழகு..
ரசிக்கத் துவங்கு..
மற்றவையை அல்ல..
உன்னை நீயே...
துன்பம் அகலும்..
நம்பிக்கைப் பிறக்கும்..
பயம் மறையும்...
நீ காத்திருக்க வேண்டாம்...
இவ்வுலகம் தானே
உன்னிடம் தஞ்சம்
கொள்ளும்...

என்றுரைத்தாள்..
கண்ணாடியில் என்
பிம்பத்தைப்
பிரதிபலிக்கும்‌ அவள்....
உனை நீ ரசிக்காத வரையில்
உன்னை நேசிப்போருக்கு
நீ
ர‌சனையற்றவளாகிவிடுவாய்
பெண்ணே...

கற்றுக் கொள்...
மீண்டும் அறிவுறுத்த
வருவேன் என்று ‌அசால்ட்டாக
இருந்து விடாதே.. வரமாட்டேன்
என்று அச்சுறுத்தலோடு‌
என் உதட்டோரம் சிறுப்
புன்னகை மலரச் செய்து
மறைந்தாள் அவள்
என்‌ மன பிம்பம்...

உனை நீயே
நேசிக்க கற்காது
இருக்கையில்..
மற்றவர் உனை
நேசிக்க நீ
எதிர்ப்பார்ப்பது
அர்ததமற்றதாகும்...


~ரித்திகா
« Last Edit: August 09, 2020, 10:03:12 PM by ரித்திகா »


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 651
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்று வைகறை  பொழுது...
அறையினுள் யாரோ என்னுடன்
இருப்பது போல் ஓர் உள்ளுணர்வு
ஐயமுடன்  நோக்கினேன்..
அங்கே என்னுடன் நின்றதோ..
என் பிம்பம், நிலை கண்ணாடியில்..

ஒரு நிமிடம் திகைத்தேன்...
இது தான் என் நிஜ  தோற்றமா?
இது நாள் வரை  உணர்ந்திராத
என் பிம்பம் இதுவன்றோ!!!  ஆனால் சமூக பார்வையில்
என்னுள் எத்தனை தோற்ற மாற்றங்கள்?
மனதினுள் சிரித்தேன் கொண்டே நகர்ந்தேன்..

காலை  கடமைகள் அழைக்க நானும்
எழுந்திருக்க எத்தனிக்கையில்.. யாரோ எனை
பின்னிருந்து இழுக்க திரும்பினேன்..
என் புடவையின் தலைப்பு
பிஞ்சு கைகளுக்குள் சிக்கி சிரித்தது
நானும் தாயக நிற்கின்றேன் அவளுக்காக..

சின்ன முத்தமொன்று அவள் நெற்றியில் பதித்துவிட்டு
சமையல் அறை நோக்கி நடந்தேன்...
பிரியமானவர்களுக்கு  பிடித்த
உணவு சமைத்து புன்னகையோடு
பரிமாறி விட்டு அவர்கள் முன்
நானும் நிற்கின்றேன் நம்பிக்கை தேவதையாய்..

அரக்க பறக்க அலுவலகம் ஓடினேன்
அங்கும் காத்திருந்தன கடமைகள்..
தர்க்க சாஸ்த்திரம் (லாஜிக்) புரியாமல்
போராடிய சக பணியாளர்களுக்கு
புதிய வழிகள் காண்பித்து கொடுத்து..
நானும் நிற்கின்றேன் உண்மை சகவாக..(Colleague)

கடமைகள் தவறாது..
காலம் தாழ்த்தாது..
அலுவலக பணிகளை
செவ்வனே முடித்து..
முதலாளி முன்னே
நானும் நிற்கின்றேன் விசுவாச ஊழியராக..

மனை திரும்புகையில் வழிநெடுக...
தன் கவலைகளை தயக்கமின்றி
பகிரும் என் தோழிக்கு
ஆறுதலும் பிரச்சனைக்கு தீர்வு
கூறுகையில் அவள் முன்னே
நானும் நிற்கின்றேன் உண்மை தோழியாக..

வீடு வந்து வீட்டு  வேலைகள் முடித்து..
மன நிறைவுடனும் மகிழ்வுடனும்
படுக்கையறை சென்றேன்.
அங்கும் காத்திருந்தது ஓர் கடமை...
அவனின் உணர்ச்சியான உணர்வுகளுக்கு
நானும் நிற்கின்றேன் அவனின் உணவாக...

ஏதேச்சையாக நானும் 
புரண்டு படுக்கையில்
எனை  பார்த்து கண்சிமிட்டி சொல்லி
சிரித்தது நிலை கண்ணாடியும்
"என்னுள் பார்த்த நீயும்
என் அழகு தேவதையே!!!"....

Offline SweeTie

பொய் எது உண்மை எது
தெரியாத   போலி மனிதர்
வாழும்  உலகில் 
கூடவே நடமாடும்
அன்புத்  தேவதை நீ!
உள்ளதை  உள்ளபடி
உண்மையாய்  சொல்லிடும் 
உயிரற்ற  சடப்பொருள் நீ!

 மனக்  கண்ணாடியில்
உணர்ச்சிகளும்  உணர்வுகளும்
கொந்தளிக்கும்  பொழுதில்
அகத்தை   புறம்காட்டி
புரியவைக்கும்   அன்புத் தோழி
என் வீட்டு  நிலைக்கண்ணாடி

ஆணவத்தில்  அரும்பும்
அசட்டுப்  புன்னகை 
கோபத்தில்  சிதறும்
எக்காள  வெறித்தனம்
சாதிப்பில்  தெறிக்கும்
திமிரான  பூரிப்பு
அவற்றையெல்லாம்
அம்பலப்படுத்தும்   நீ!
அரியதோர்   உருவகம்

சோகக் குமுறலின் கீறல்கள் 
மகிழ்ச்சியின்  சிரிப்பொலிகள் 
காதலின்  உருகல்கள்
ஏக்கங்கள்  எதிர்பார்ப்புகள்
உள்ளே மறைந்திருக்கும்
வறட்டு கௌரவங்கள்
சுடர்விடும்  திறமைகள்
அத்தனையும்  வெளிக்காட்டும்
அன்புள்ளம் கொண்டவள்   நீ ! 

என் இதய சாளரங்கள்
திறந்துகொள்கின்றன
இன்பத்தை  தேடுகின்றன
இரு விழிகள்
தஞ்சமென  உன்னை   
சரணடைந்தேன்   
காண்கிறேன்  உன்னிடம்
நான் தேடும்  இன்பம்