Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 241  (Read 2166 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 241
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 856
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
பத்து மாதம் கருவில் சுமந்து
உயிரை ஊணாக வடித்து
உடலின் உள்ளிருந்தாலும்
உயிரின் உள்ளே இருப்பதுபோல்
உயிரோடு உயிராய் கலந்து
புதுமொட்டவிழ்தல் போலே
பூமியில் தவழ்ந்தது உன் பொற்பாதங்கள்

பிஞ்சு பாதங்களே,
அன்னம் போல நீ
மெல்ல நடையிடப் போகும் நாட்களை
எண்ணி எண்ணி உவகையுறுகிறேன்.
மயில் போல அசைந்தாடுமோ இந்த தங்கப்பாதங்கள்
சுவற்றை பிடித்து நீ நடக்கையில்?
தத்தி தத்தி நடந்திடுந்தடும்
உன்
முதல் தளிர் நடையினையும்,
தாவி ஓடும் உன் மான் துள்ளலையும்
நான் மெச்சிக்கொள்வது எப்பொழுது?

தவழ்ந்திடும் தங்க நிலவே
நீ நடந்திடும் பாதையில்
நான் மலர் கம்பளம் விரித்திடுவேன்.
தடுமாறி நீ விழுந்து,
உனை பார்த்து
நான் பதறி
எனை பார்த்து நீ சிரித்திடும்
கணங்களை காணும் வரை
இந்த அனிச்ச மலர் பாதங்களை
கொஞ்சி கொஞ்சி ரசித்திடுவேன்.
சின்ன கண்ணை செல்லமாய் உருட்டி,
பொற்பாத கொலுசொலி
அம்மாவையும், அம்மம்மாவையும்
நினைவுபடுத்த
பூமியில் உன் பொற்பாதங்களை
எப்பொழுது பதித்திடுவாய்.

இலவம் பஞ்சு பொதிபோல் இருக்கும்
வெண்பஞ்சு மேகங்களோ
உன் பாதங்கள்?
இல்லை
இறைவன் வரைந்திட்ட
வண்ணத்தப்பூச்சியின் இறகுகளோ
உன் பாதங்கள்?
ஒரு மலரின் இதழ் வந்து வீழ்ந்து
சொல்கிறது
இந்த பாதங்கள் தன்னில் பாதியென!
ஒரு பனித்துளி இலைநுனி வீழ்ந்து
சொல்கிறது
இந்த பாதங்களும் ஒரு பனித்துளியென!

மழலையின் பிஞ்சு பாதங்களை
கைதனில் ஏந்திடும் தருணத்தில்
உயிர்நாடியும் கூட உன்னதம்
அடைகிறது.
பூமி தொடாத உன் ரோஜாப்பூ பாதமே
புது கவிதைதான்
இதற்கு ஈடாய்
எவ்வித கவிதையை நான் புதிதாய்
எழுதிட முடியும்?
« Last Edit: August 17, 2020, 11:26:29 AM by Ninja »

Offline thamilan

மகளே
தனியாக நின்றிருந்தேன் நான்
துணையாக வந்தாள் உன்தாய்
எங்கள்  வாழ்க்கைக்கு முகவரியாய்
வந்தாய் நீ

பத்து மாதம் வயிற்றுக்குள் நீ
உன் பஞ்சு பாதங்களால்
எட்டி உதைக்கும் போதெல்லாம்
அந்த பாதத்தை எப்போது பார்ப்போம்
ஏங்கித் தவித்த காலமது

பத்துமாதங்கள் நீ கொடுத்த
இனிமையான இம்சைகள்
தினமும் உன் அம்மா
சொல்லச் சொல்ல திகட்டாமல்
கேட்டிருக்கிறேன் நான்
எப்போது நீ வெளியே வருவாய்
எப்போது உன்னை என் கைகளால்
தூக்கி அணைப்பேன்
எப்போது நீ உன்
பிஞ்சிகால்களால் என்னை உதைப்பாய்
தினமும் நான் காணும் கனவுகள் இவை

ஒரு சுபதினத்தில்
உலகை காண வெளியில் வந்தாய் நீ
பிரசவ அறையில் இருந்து உன்னை
வெளியே கொண்டுவந்து என்கைகளில்
உனைத்தந்தாள் தாதி
அன்று தான்
பிறந்த பலனை அனுபவித்தேன் நான்
ஒரு பொற்குவியலை
கையில் தந்தது போலிருந்தது எனக்கு
நீ முடிய கண்களை திறந்து
மெதுவாய் என்னை பார்த்தாய்
உன் உதற்றோரம் மெல்லிய புன்னகை
உன் அம்மா புன்னகைத்து கூட
நான் மயங்கினது இல்லை
உன் புன்னகையில் நான் மயங்கிபோனேன்

என் கண்கள் உன் பாதங்களை பார்த்தது
சின்ன வெண்மையான பாதங்கள்
அதில் சின்னச் சின்ன விரல்கள்
வெண்மேகத்தை போல
பஞ்சு போலே அழகிய மென்மையான பாதங்கள்
மெதுவாக பாதங்களை தடவினேன்
நீ மெதுவாக சிலிர்த்தாய்
நான் பரவசத்தில்
என்னையே நான் இழந்தேன்

இனி வாழ்நாள் எல்லாம்
இந்த பாதங்கள் அடிக்கடி என்னை உதைக்கும்
அந்த பாதங்கள்
பூமில் படாமல் தாங்கிப் பிடிப்பேன் நான்

Offline MoGiNi

அவள் கருவுற்றிருந்தாள்
கல்யாணமாகி கால் மாதத்தில்
அவள் கருக்கொண்டு விட்டாளாம் .
கணவன் முகத்தில் சாதித்துவிட்ட பெருமை
அவள் முகத்தில் எதோ ஒரு நின்மதி .

முதல் கரு
அவள் முகமெல்லாம் பூரிக்க வேண்டுமே
ஒரு பூவின் கட்டவிழ்தல் போன்ற புன்னகை மட்டுமே ,
ஒரு மலரின் மலர்ச்சியை மறந்தும் காணவில்லை .

முகமறியா கணவன் தொடுகையில்
அவள் முழுவதும் மலராத பொழுது
சூல் கொண்ட கரு
சுகத்தை அளிக்குமா ...?
அடுத்த பத்து மாதத்தில்
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி
அறியாமலே அச்சுறுத்தும்
அத்தையம்மாள் பேரில்
அரண்டு உருவான கரு
ஆத்மார்த்தமாய் இருக்குமா ?

பெண்மையின் முழுமையையும்
ஆண்மையின் முழுமையும்
ஆதாரப்படுத்த அகல் கொண்ட கரு தீபம்
அகத்தில் ஒளி வீசுமா ?

அவனையும் புரியவில்லை
அவர்களையும் புரியவில்லை
அதற்குள் அவள் கொண்ட சூல்
ஆறுதலை கொடுக்குமா ?
இயற்கையின் தேடுதலில்
இணைந்துவிட்ட இருடலின்
கலவி கடலில் தவறி விழுந்த துளி ஒன்று
முத்தான அதிசயம்
ஆவலைத்தான் தூண்டுமா ?

முதல் கரு ஒன்று
அதை சுமப்பவளை சுமை தாங்கியாகும்
ஆண் பிள்ளை பெறவேண்டும்
அது அவன் , அவர்களைபோல் வேண்டும்
தன் பிள்ளை என்று சொல்ல
தக தகவென மின்னவேண்டும் ..
கூன் குருடு செவிடு நீங்கி
குறையற்று பெறவேண்டும்
குலப்பெருமை காக்க
குறுகிய காலத்தில் குட்டிதனை ஈண வேண்டும் .

அவள் ஆசையாய் கருக் கொள்வதில்லை
அவசியத்தில் கருக் கொள்கிறாள்
ஆண்மையின் பரீட்சார்த்தமும்
பரம்பரையின் பீற்றல்களும்
அவளை அவசியத்துக்கு சூல் கொள்ள வைக்கிறது .
இருந்தும் அவள்
அடுத்த நிமிசத்தில் இருந்தே அன்னையாகிறாள் .

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


வான் உலக தேவதை நான்…
ஊண் உலகை ஆள வந்தேன் !

மாசறு பொன்னை போல …
பாசமுடன் வளர்க்கப்பட்டேன் !
நேசங்களை கடந்த உறவுகளால்
திருமண பந்தம் சேர்ந்தேன் !
விதிகளை தாண்டிய வினைகளால்
மதிக்கப்பட்ட தாய்மை அடைந்தேன்!

அன்பில் விளைந்த தளிரே…
உன் பூம்பாதம் தழுவ காத்திருந்தேன் !
வயிற்றுக்குள் உலா வந்த நீ …
பூரிப்பில் என்னை பூக்க வைத்தாய் !
கருவில் உருவான உனக்கு ..
கதைகள் பல சொல்லி தந்தேன் ..
வாழ்வை ரசிக்கவும் ...பழகவும் ..
பலநூறு ரகசியம் பகிர்ந்து கொண்டேன் ..
எனக்கே தெறியா விட்டாலும் ..
என் ஆசைகளை உனக்குள் விதைக்க விட்டேன் ..
உன் ஆசைகளை நிறைவேற வகுத்திட்டேன் ..
அன்பின் அத்தனை பரிணாமத்தில்..
ஆளம்வேறாய் ஊன்றி விட்டேன் ..

உன் பூந்தளிர் தேகத்தை நான்…
கண் கொண்டு களிக்க காத்து இருந்த
என்னை ஏமாற்றியது ஏனோ ?
உன் வருகையை எதிர் நோக்கிய எனக்கு
ஏமாற்றத்தை தந்தது ஏனோ ?
வசந்த காலமாய் உன்னை வரவேற்க
நான் காத்துஇருந்த போது…நீயோ ..
வானவில்லில் ஏறி வானம் அடைந்து விட்டாயே ..?

இந்த தாயை காண மனம் இல்லையா ?
உன்னை பெற்று வளர்க்க
எனக்கு தகுதி இல்லையா ?
பாசத்திற்கு எங்கும் என்னை ..
ஒரு தாயாய்  ஏற்று இருக்கலாம் ..
ஒரு பிள்ளையாய் என்னிடம்
வளர்ந்து இருக்கலாம் ..

ஒரு எதிர் கால தெரேசாவாகவோ ..
அன்னை இந்திரவாகவோ .
PT  உஷா போலவோ ..
லதா மங்கேஷ்கர் ஆகவோ ...
கல்பனா சாவலோவோ ..
இந்திரா  நூயி .ஆகவோ ..
மேரி கொம்  ஆகவோ ..
சாய்னா நேவால் ஆகவோ …
யாராகிலும் ஆகி இருப்பாய்!

ஆனாலும் என் கண்ணே …
இன்னேரம் யார் வயிற்றிலும் ..
பிறந்து சிறந்து மழலையாய்..
மகிழ்வித்து கொண்டு இருப்பாய் ..
எனும் நம்பிக்கையில் ….
அனைத்து தளிர்களையும் …
என் குழந்தையாய் நேசிக்கிறேன் …!
பெற்றால் தான் பிள்ளையை என்ன ?
« Last Edit: August 17, 2020, 06:49:08 PM by AgNi »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
தேவதையே நான்
என் கால்பாதங்களால்
உன்னுடன் உறவாடினேன்
விளையாடினேன் மகிழ்ந்தேன்
கருவறையில்
அது என் முதல் மொழி

ஒவ்வொரு பட்டாம்பூச்சியின்
நடனம் போன்ற என் அசைவுகளில்
உங்களுடன் இருப்பதாய்
தெரியப்படுத்தினேன்

ஏனோ நம் வாழ்க்கையில்
விதி விளையாடியது
என் ஆசைகளை வேட்டையாடியது

யாருமற்ற தொட்டிலில்
என்னை கிடத்தி நெற்றியில்
முத்தமிடுகையில்
தேவதையின் கண்ணீர் போன்ற
மென்மையான சொட்டுக்கள்
உன் கண்ணம்பட்டு தெறிக்க
மன்னித்து விடு என்று சொல்லி
சென்றிருக்க கூடும்

உன் மேல் கோவம் இல்லை
எனக்கு
வரம் கேட்கிறேன் தாயே
மீண்டும் என் கால்பாதங்கள்
கருவறையில் மட்டுமல்ல
உங்கள் கைகளிலும்  மார்பிலும்
தினம் தினம்
மென்மையை உணர்ந்திட வேண்டும்
« Last Edit: August 20, 2020, 09:21:56 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
வான் பிளந்த
வர்ண நிலவொன்று
உன் வடிவு கொண்டு
வாஞ்சை கொள்ளுதடி...

சின்ன சின்ன
குறும்புகளில்
சிரித்துப் பூக்கும்
புன்னகைப் பூக்களில்
தடுமாறிச் சிதறும்
முத்துக்களை
ஒவ்வொன்றாய்
கோர்த்தெடுத்து
கொள்ளை கொண்ட மனதில்
கொலுவிருக்கும் உனக்கு
அலங்கரித்து
மகிழ்கிறது மனது..

இறக்கை இல்லாத தேவதை
என் இயல்போடு கலந்திட்ட
பூவை நீ
வளைந்தாடும் சரிந்தாடும்
நுளைந்தாடும் வண்ண நிலவு..

யார் சொன்னது ?
தேவதைகள்
மண்ணில் பிறப்பதில்லையென்று..?
தேன் மதுர தமிழ் குழைந்து
ஊனுருகும் வார்த்தைகளாய்
நீ பேசும் அனைத்தும்
தேவ மொழியாம்..

என் தேன்வதை தந்த
தேவதையே...

Offline AksHi

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
ஒரு தலையான என் காதலுக்கும் ,எனக்கும்,
கற்பனை வடிவில்
என் கருவில் ஜனித்த  என் மகனே....

 புரண்டு படுத்தால் உனக்கு வலித்து விடுமே என்றுணர்ந்து ....
தூக்கத்தை  தொலைத்த இரவுகளில் -கண்மணியே
உன் தந்தையின் மடியே...
 என் தலையணையாய் போனதடா .......

உன் தந்தை குரல் கேட்டு என் வயிற்றில் நீயும் உதைக்க .....
உன் நுனி விரல்  ஸ்பரிசத்திட்காக 
நூறு ஒருமுறை நான்  பிறந்திடுவேன் ....
என் மகனே ....

என் பல நாள் கனவே ...
உன் ஆசை முகம் நான்   இன்னும் பார்க்க வில்லை ..
உன்  பிஞ்சு குரல் இன்னும் கேட்க வில்லை ....
மேடிட்ட என் வயிற்றை உன்  பிஞ்சு கால்கள்  உதைகயில்...
சுவர்க்கத்தை நானும் கண்டேனடா ...

பல அணுக்களை வெற்றி கொண்டு...
பல தேசங்கள்  நீயும்  ஆள ..
அமைதியை உறங்கும் என் மகனே ...
உன் தந்தை  குணம் கொண்டும் ,......
உன் தாயின்  எழில் கொண்டும்,......
ஈரேழு உலகம் ஆள  பிறந்திடுவாய் .....
என் மகனே....

தரணியில்  நீ வந்து உதித்த பின்பு நானும்...
என் உதிரத்தை பாலாக ஊட்டி
என் தமிழ் மொழி தனை உன் செவி வழி  ஊற்றி ....
உன்  மழலை மொழி கேட்டு......
மகிழ்ந்திடுவேன்  நொடிதோறும் ......
.

பூக்களின் வர்ணம்  கொண்டு பிறந்தவனே........
உன்னிடத்தில் நான் சொல்ல
ஆயிரம் கதைகள் இருந்தும் ...,,
அத்தனை  கதையிலும் ..
மன்னனாய்  தேவதையாய்  நீயானாய் ....


 வானம் தாலாட்ட ,மேகம் சீராட்ட ..
வளர்வாய் என் தங்க நிலவே.....
பட்டினியாய்  நான் கிடந்த போதும் ..
உறக்கமின்றி தவித்த போதும ...
வலி மிகுந்த  வாழ்க்கையையும் உனக்காக கடப்பேனடா.....


Offline JKJ

என் பாதங்கள் என் அம்மாவின் கைகளில்

என் பாதங்களை வருடி முத்தம்  குடுத்த அம்மா

ஒவ்வொரு விரல்களை  தொட்டு பார்த்து ரசித்த அம்மா
 
இந்த கால்களால் எப்படி நடை போடுவாள் என்று

கற்பனையில் மகிழ்ந்த அம்மா

பாதங்களில் கிச்சு கிச்சு காட்டி மகிழ்ந்த அம்மா
 
இதயத்தின் காயங்களுடன் என்னை பார்த்து சிரித்த அம்மா


அம்மா நான் அறியேன் உங்கள் முகம்

உங்களின் வருடல் மட்டும் என் உணர்வில்

அம்மா நீங்கள் இல்லை என்று ஆனதும்

பல அம்மாக்களின் கைகளில் என் பாதங்கள்
 
பல கைகளின் வருடல்கள்

யாவரும் என் அம்மா உருவில்


முதல் முறை என் பாதம்

ஏந்திய என் அம்மாவுக்கு

நான் எழுதும் கவிதை இது

இன்று பல வருடங்கள் போயின

அதே பாதங்களுடன் தனி நடை போடுகிறேன்

இல்லை இல்லை ftc நண்பர்கள் கை பிடித்து
 
வீறு நடை போடுகிறேன்...