Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73741 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #435 on: April 15, 2018, 06:13:58 AM »
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


விளக்கம்:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

உழுவார் ................. ............. ...........
எழுவாரை ............. ..............

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #436 on: April 15, 2018, 06:41:00 AM »
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.



விளக்கம் 1:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

விளக்கம் 2:

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்


அடுத்து


-------------  ----------- ------------ கல்லால்
------------ நீந்தல் அரிது.


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #437 on: April 15, 2018, 07:25:51 AM »
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

குறள் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

ஆற்று பவர்க்கும் ..................... ..................
..................... .................. .................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #438 on: April 18, 2018, 11:38:23 AM »
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

குறள் விளக்கம்:பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.


[highlight-text]அடுத்து>.......... திண்மை ........ ........... .
.................... ............... நூல்.[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #439 on: April 19, 2018, 06:10:45 AM »
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்

விளக்கம் :
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

உழுதுண்டு வாழ்வாரே ................. ......................
தொழுதுண்டு .............. ...................


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #440 on: June 18, 2020, 11:20:52 AM »
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

பொருள்  : உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

[highlight-text]காக்க பொருளா ............. ............
........... ........... உயிர்க்கு.[/highlight-text]
[/b][/color][/size]


Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #441 on: June 21, 2020, 09:35:42 PM »
காக்க பொருளா உயிர்க்கு அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கில்லை உயிர்க்கு

பொருள்
வாழ்வில் எவ்வளவு சிகரங்களுக்கு சென்றாலும் பணிவாக இருத்தல் வேண்டும். பணிவு தனை ஒரு செல்வமாக போற்றி காக்க வேண்டும். அப்படி காத்தால், அதுவே சிறந்த செல்வமாகும். பணிவை / அடக்கத்தை விட சிறந்த செல்வம் இவ்வுலகில் வேறு இல்லை மனிதருக்கு என்கிறார் திருவள்ளுவர்.

Next-
ஒருமைக்கண் ........ கல்வி..........
எழுமையும் ........ .............
« Last Edit: June 21, 2020, 10:02:06 PM by CheetaH AdhitYa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #442 on: June 22, 2020, 11:42:50 AM »
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


தென்புலத்தார் ............ .............. தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ............... ............

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #443 on: June 22, 2020, 02:45:09 PM »
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம்:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.


அழுக்காறு.........
ஒன்னார்
வழுக்காயும்....

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #444 on: June 22, 2020, 05:47:26 PM »
அழுக்காறு.........
ஒன்னார்
வழுக்காயும்....

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
--------------------------------
பொருள்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த
வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
------------------------------------------
புதிய குரள்-
அணங்குகொல் ......... கொல்லோ........
மாதர்கொல் ..............  ........................


« Last Edit: June 22, 2020, 05:59:48 PM by CheetaH AdhitYa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #445 on: June 24, 2020, 08:47:21 PM »
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

பொருள் : ஒரு  தலைவன் என்னும் ஆண்மகன் தன் தலைவியை கண்டபின் அவளைப்பற்றி அவன் கொள்ளும் மயக்கம் அச்சம் பற்றிய பாடல் இது.

இக்குறளில் கனங்குழை என்னும் சொல்லுக்கு சிலர் கனமான குண்டலம் அணிந்த பெண் என்ற பொருள் பல உரைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. ஏனெனில், அணங்கு என்ற தெய்வத்தையும், மயில் என்ற பறவையையும் குறிப்பிடும் இடத்தில் கனல்(நெருப்பு) போன்ற ஒளி கொண்ட இளந்தளிரையே இதுகுறிக்கும் என்று நான் நினைக்கிறேன். மூன்றும் மானுடத்தைத் தாண்டியது.

நான் பார்த்த பெண் பெண்ணா? ஏனெனில் இவளை நினைத்தால் இவள் தெய்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது. அல்லது இவள் கொஞ்சும் அழகு மயிலோ? அல்லது கனல் போன்ற பிரகாசம் (மற்றும் வெப்பம்) கொண்ட இளந்தளிரோ? இப்படிப்பட்ட அழகிய பெண்ணை நினைத்து என்னுடைய நெஞ்சம் மயக்கத்தில் (ஆசையில், காமத்தில்) உள்ளது.

இந்த ஆண் தான் பார்த்த பெண்களில் யாரையும் அழகு என்று நினைத்தது இல்லை என்று நாம் கருதலாம். அவனை பொருத்தவரையில் மானுட பெண்கள் எல்லோரும் ஒரு சராசரி முகத்தை உடையோர் என்று நினைத்து இருக்கலாம். அல்லது இயற்கையுடன் ஒப்பிடுகையில் மற்றமானுடரின் முகம் அழகற்றவையாக அவனுக்கு தெரிகிறது. ஆனால் காதல்வயப்பட்ட உடன் அவனுடைய காதலியின் முகம் அவ்வளவு அழகாக அவனுக்கு தோன்றுகிறது. ஆதலால் இது மானுட முகம் என்று அவனால் நம்பமுடியவில்லை.

மேலும், இயற்கையை ரசிக்கும் நுண்ணுணர்வை உடைய ஒரு ஆண்மகனால் தான் ஒரு பெண்ணை அழகுணர்ச்சியுடன் பார்க்கமுடியும் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.


புதிய திருக்குறள்:
நினைத்தொன்று சொல்லாயோ ..................... ................
............... ................மருந்து

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #446 on: June 26, 2020, 10:19:59 PM »

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து



முழுப்பொருள் :

நெஞ்சே உனக்கு தெரியும் என் தலைவன் என்னைவிட்டு பிரிந்து சென்று இருக்கிறான். இப்பிரிவால் நான் படும் பாடு சொல்லி மாலாது. இதனால் நான் கொண்டுள்ள கவலையான ஆசை நோயானது எத்தன்மைவாய்ந்தது எவ்வளவு கொடியது என்று நீ அறிவாய். (பிறருக்கு புரியாது இது எவ்வளவு கொடியது என்று). ஒருவிதத்தில் பார்த்தால் நான் (காதலால்) கொண்ட துன்பத்திற்கு நீயும் தான் காரணம்.

என்னால் முடிந்தவரையில் இந்த நோயினை தீர்க்கும் மருந்து பற்றி கேட்டுப்பார்த்தேன்.  எனக்கு ஒன்றும் கிட்டவில்லை. நெஞ்சே நன்றாக யோசித்துப்பார், என் தலைவன் உன்மூலமாக தான் எனக்கு இக்காதலை தந்தான். யோசித்துப்பார், நீ அறிந்தவரை இதற்கு இந்த நோயை தீர்க்கும் மருந்து இருந்தால் என்னிடம் கண்டிப்பாய் சொல்!

இங்கே நாம் காணவேண்டிய ஒன்று, தலைவி இந்த நோய்க்கு புறவயமான மருந்துகள் ஆன கஷாயம், இலை, தழை என்று நினைத்து இருந்தால் அதனை மருத்துவர்களிடம் கேட்டு இருப்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் இந்த நோய் மிகவும் அகவயமான ஒன்று என்று. அதனால் தான் அகவயமாக உரையாடி நெஞ்சத்திடம் கேட்கிறாள் மருந்தினை.

அவளுக்கு தெரியும் நெஞ்சிற்கு தெரியும் தலைவன் தான் இதற்கு மருந்து என்று. அதனால் தான் நெஞ்சத்திடம் அவனை கேட்காமல் கேட்கிறாள்.

அடுத்து:

பிணிக்கு ---- ------- அணியிழை
----------------- தானே மருந்து.





Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #447 on: June 27, 2020, 08:42:48 AM »

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1102)

விளக்கம்: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.


அடுத்து,

பிறன்பழி _______தன்பழி _______
______ கூறப் படும்

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #448 on: July 02, 2020, 07:11:22 PM »
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

விளக்கம்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ,
அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

அடுத்து,
யாதனின் --------   --------- நோதல்
--------- ------------ இலன்.

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #449 on: July 03, 2020, 02:29:14 PM »
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


அடுத்து,
--------  பொருளென்று கொண்டவன் கேடு
--------- ------------ தற்று