Author Topic: உன்னை நினைத்து 2002  (Read 2504 times)

Offline நிலவன்

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 31
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்
உன்னை நினைத்து 2002
« on: June 10, 2018, 05:41:53 AM »




திரைப்படம்     : Unnai Ninaithu ( உன்னை நினைத்து ) 2002
இயக்குனர்      : விக்ரமன்
நடிப்பு             : சூர்யா, லைலா, சினேகா
இசையமைப்பு  : சிற்பி


பாடல் தலைப்பு  : என்னை தாலாட்டும் சங்கீதம்
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : உன்னி மேனன், சுஜாதா


பெண் : ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ...   ம்... ம்... ம்... ம்...

இசை                            பல்லவி

ஆண் :
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

பெண் :
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா

இசை                               சரணம் - 1

ஆண் :
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீ இருக்கும் தூரம் வரை கரை ஆகிறேன்

பெண் :
இரவாக நீயும் நிலவாக நானும்
நீ இருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

ஆண் :
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்
நாடித் துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

பெண் :
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா

இசை                                   சரணம் - 2

பெண் :
பூலோகம் ஓர் நாள் காற்றின்றிப் போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சுக் காற்றாகுமே

ஆண் :
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

பெண் :
அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீ என்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரி ஆகிறேன்

ஆண் :
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

பெண் :
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா

—————————————————————————

பாடல் தலைப்பு  : சில் சில் சில் சில்லல்லா
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : உன்னி கிருஷ்ணன், சுஜாதா


குழு : சில் சில் சில் சில்லல்லா சில் சில் சில் சில்லல்லா

இசை                                     பல்லவி

ஆண் :
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசைத் தூரலா பூஞ்சோலை ஆனவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

இசை                                    சரணம் - 1

ஆண் :
நீ இருக்கும் நாளில் எல்லாம்
இமயத்தின் மேலே இருப்பேன்
நீயும் இங்கு இல்லா நாளில்
என் மீது இமயம் இருக்கும்

பெண் :
அஹிம்சையாய் அருகில் வந்து
வன்முறையில் இறங்குகிறாய்

ஆண் :
சிற்பமே என்னடி மாயம்
சிற்பியை செதுக்குகிறாய்

பெண் : ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

பெண் :
சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா ( இசை )

குழு :
யய்யய் யாஹியாஹி யாஹியா
யய்யய் யாஹியாஹி யாஹியா
யாஹியாஹி யாஹியாஹி
யாஹியாஹி யாஹியாஹி
யாஹியாஹி யாஹியாஹி யாஹியா

இசை                                சரணம் - 2

பெண் :
காதல் ஒரு ஞாபக மறதி
என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய்
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

ஆண் :
உன்னைப் போல் கவிதை சொன்னால்
உலகமே தலை ஆட்டும்

பெண் :
நம்மைப் போல் காதலர் பார்த்தால்
தாஜ்மகால் கை தட்டும்

ஆண் : காதல் என்னும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

ஆண் :
நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசைத் தூரலா பூஞ்சோலை ஆனவளா

பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
 

——————————————————————



பாடல் தலைப்பு  : யார் இந்த தேவதை
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : ஹரிஹரன்


பெண் குழு : ஹே ஹேய்... ஏஹியே ஏஹியே ...

இசை                              பல்லவி

ஆண் : யார் இந்த தேவதை யார் இந்த தேவதை ( இசை )

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்தப் பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

இசை                             சரணம் - 1

ஆண் :
பனி கூட உன் மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர் கூட உன்னை தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால்
அமுதம் தேவை இல்லை
உன்னைத் தேடும் போது இதயம் இங்கு
சுகமாக தொலைந்ததே

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை ( இசை )

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

இசை                              சரணம் - 2

பெண் குழு : ஓ... ஓ...   ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ...

ஆண் :
அன்பே உன் கண்கள் சுழர் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கிப் போகிறேன்
அன்பே உன் பெயரே படகென்கிறேன்
அதைச் சொல்லித் தானே கரையைச் சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க
தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால்
கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிற்க
கடலாக மாறுவேன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை ( இசை )

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்தப் பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை


--------------------------------------------------


பாடல் தலைப்பு  : ஹேப்பி நியூ இயர்
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : உன்னி கிருஷ்ணன், சுஜாதா


( இசை )

பெண் : ஆ... ஆ...  ஆ... ஆ...

இசை                           பல்லவி

ஆண் :
ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
சூரியகாந்தி பூப் போல முகம் மாறுதே
சுகம் சேருதே

பெண் :
லல லால லால லால  லல லால லால லா
லல லா லால லாலா  லல லால லால லா

ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே ( இசை )

பெண் குழு :
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றார் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனா கண்டேன் தோழி

இசை                                   சரணம் - 1

பெண் :
எங்கள் வாழ்வை கவிதை தொகுப்பாய் ஆக்கலாம்
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்

ஆண் :
வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்
பூங்கொத்தைப் போலவே முகம் வைத்து வாழலாம்

பெண் : நம் சிரிப்பை படம் பிடித்து வாழ்த்து மடல் வழங்கிடலாம்

ஆண் :
நூற்றாண்டைத் தாண்டியும்
நம் பெயர் நாளை நிலைத்திடலாமே

பெண் : லல லால லால லால  லல லால லால லா

ஆண் :
ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே

பெண் குழு : ஆ... ஆ...   ஆ... ஆ...   ஆ... ஆ...   ஆ... ஆ...

இசை                                     சரணம் - 2

பெண் குழு : ம்... ம்...  ம்... ம்...

ஆண் :
துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே

பெண் :
பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்
பால் சோறை போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்

ஆண் :
குடை பிடிக்கும் தென்னை மரம்
நமது குணம் சொல்லியதே

பெண் :
வரும் நாட்கள் யாவுமே
வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே

ஆண் : லல லால லால லால  லல லால லால லா

பெண் : ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே

ஆண் :
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
சூரியகாந்தி பூப் போல முகம் மாறுதே
சுகம் சேருதே

லல லால லால லால  லல லால லால லா
லல லா லால லாலா  லல லால லால லா


————————————————————


பாடல் தலைப்பு  : பொம்பளைங்க காதல தான்
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : மாணிக்க விநாயகம்


ஆண் : ஏ... ஏ... ஏ...   ஏ... ஏ...   ஏ... ஏ...

இசை                               பல்லவி

ஆண் :
பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே ( இசை )

நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே வெம்பி விடாதே ( இசை )

அத்தான்னு சொல்லி இருப்பா ஆசையக் காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளை எல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளை எல்லாம் தீவிரவாதி

பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே ( இசை )

நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே வெம்பி விடாதே

இசை                             சரணம் - 1

ஆண் :
பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வெச்சாங்க
அவ பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லி வெச்சாங்க
அவ சாமி போல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வெச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

குழு : நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

ஆண் :
பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே ( இசை )

நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே வெம்பி விடாதே

இசை                                 சரணம் - 2

ஆண் :
பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு
இங்கே ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா
பெண்ணாலே காவி கட்டி நடந்தவன் உண்டு
இங்கே ஆண்களாலே காவி கட்டி நடந்தவள் உண்டா
பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சான் டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வெச்சாளா
நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

குழு : நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

ஆண் :
பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே ( இசை )

நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே வெம்பி விடாதே

இசை                               சரணம் - 2

ஆண் :
பெண்ணெல்லாம் பரீட்சையிலே
முதல் இடம் தாங்க
நம்ம பசங்களத் தான்
எங்கே அவங்க படிக்க விட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல்
ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் மொகத்தில்
தாடியத் தான் மொளைக்க வெச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க
ஆணெல்லாம் காதலிச்சே தல நரச்சாங்க
நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

குழு : நம்பி விடாதே பொண்ண நம்பி விடாதே

ஆண் :
பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே ( இசை )

பொம்பளைங்க காதலத் தான்
நம்பி விடாதே நம்பி விடாதே
நம்பியதால் நொந்து மனம்
வெம்பி விடாதே வெம்பி விடாதே
அத்தான்னு சொல்லி இருப்பா ஆசையக் காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளை எல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளை எல்லாம் தீவிரவாதி


—————————————————————


பாடல் தலைப்பு  : சாக்லேட் சாக்லேட் போலவே
பாடலாசிரியர்    : யுகபாரதி
பாடகர்கள்        : திப்பு


இசை                                 பல்லவி

ஆண் :
சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்ட் எல் போர்ட் எதுக்கு டா

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
பூக்களின் சிரிப்புக்கெல்லாம்
மேக் அப் தேவை இல்லை
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜுக்கு

சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

இசை                                சரணம் - 1

ஆண் :
சேட்டுக் கடையில் வட்டி இல்லையா
தேங்ஸ் சொல்லுவோம்
சாதா ஃபிகரு அண்ணான்னு சொன்னா
தேங்ஸ் சொல்லுவோம்
தோட்டா இல்லாமல் தோசை சுடும்
மம்மிக்கு தேங்ஸ் சொல்லுவோம்
பாட்டா கடையில் அஞ்சு பைசா
பேலன்ஸ் தந்தா தேங்ஸ் சொல்லுவோம்
ஒன் வேல போகச் சொன்னா தாங்க் யூ
சண்டேல தூங்கச் சொன்னா தாங்க் யூ

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்ட் எல் போர்ட் எதுக்கு டா

இசை                               சரணம் - 2

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
குவாட்டர் வாங்கையில் கொசுறும் தந்தால்
தேங்ஸ் சொல்லுவோம்
பேட்சுலருக்கு வீடு கொடுத்தா
தேங்ஸ் சொல்லுவோம்
தினத் தந்தி கன்னித் தீவு எப்போ முடியும்
தெரிஞ்சிட்டா தேங்ஸ் சொல்லுவோம்
பீட்டரு சீட்டு மேல காலு வெச்சா
கிண்டலுன்னா தேங்ஸ் சொல்லுவோம்
தினம் லைஃபுல சொல்லிப் பாரு தேங்க் யூ
உன் எனிமியும் சொல்லுவான் தேங்க் யூ

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்ட் எல் போர்ட் எதுக்கு டா

குழு : பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...

ஆண் :
பூக்களின் சிரிப்புக்கெல்லாம்
மேக் அப் தேவை இல்லை
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜுக்கு

சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா

குழு :
பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...
பாபப் பாபப் பா... பாபப் பாபப் பா...
« Last Edit: June 29, 2018, 03:31:32 AM by நிலவன் »