Author Topic: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?  (Read 27736 times)

Offline Yousuf

இன்றைய காலகட்டத்தில் சினிமா என்றால் அறியாத சின்ன குழந்தை கூட இல்லை அப்படி பட்ட மிக பெரிய ஊடகமாக விளங்க கூடிய இந்த சினிமாத்துறை இன்று சமுதாயத்தின் முதுகெலும்பாக திகழ கூடிய இளைஞர்களை நல்வழி படுத்த பயன் படுகிறதா அல்லது வழிகெடுக்க பயன் படுகிறதா என்ற உங்கள் கருத்துகளை விவாதங்களை வரவேற்கிறேன். மேலும் இதன் மூலமாக மக்கள் நல்வழி பெறக்கூடும் என்பதற்காகவே இந்த தலைப்பு.

உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விவாதம் உங்களுடன் தொடரும் நண்பர்களே.

Arya

  • Guest
கண்டிப்பா கெடுக்குதுன்னு தான் சொல்லுவேன்

Offline thamilan

ஆரியா மாம்ஸ்
ஒரு வார்த்தையில பதில் சொல்லுறதுக்கு பேரு இல்ல.
எப்படி கெடுக்குது, எந்த வகையில கெடுக்குது என்று கொஞ்சம் விரிவா தான் சொல்லுங்களேன். அப்போ தானே எப்படி கெடுறாங்க என்று மத்தவங்களும் புரிஞ்சிக் கொள்ளுவாங்க.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கண்டிப்பா கெடுக்குதுன்னு தான் சொல்லுவேன்


Yea arya ve oru example :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

இப்படி ஒரு வரியில் எல்லோரும் முடிக்காமல் ஏன் கெடுக்கிறது எப்படி கெடுக்கிறது என்று விளக்கமா சொன்ன நல்ல இருக்கும் நபர்களே. எல்லா திரைப்படங்களும் இப்படி கேடுப்பதில்லையே நண்பர்களே. ஆகையால் இன்னும் விளக்கமாக நமது விவாதத்தை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது
« Last Edit: November 19, 2011, 04:02:33 PM by ShRuThi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

கண்டிப்பாக சீர் கெடுக்கிறது.
நமது கலச்சாரம் அழிய சினிமாவும் ஒரு காரணம் தான்.
இந்நாளில் வன்முறை, ஆபாசம் இவற்றை அதிகம் ஊக்குவிப்பது சினிமா தான்.
பள்ளி பருவத்தில் காதலை புகுத்தியதில் அதிக பங்கு சினிமாவிற்குத்தானே உண்டு.
விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதுவிதமாக திருட ஆலோசனை தருவது திரைப்படங்கள் தான்.
இப்பொழுதெல்லாம் தவறு செய்பவர்களைத் தானே கதாநாயகனாக காட்டுகிறார்கள் அதை பார்த்து தவறு ஒன்றும் தப்பில்லை என்று எண்ணி பல பிஞ்சு உள்ளங்கள் சீர் கெட்டுகிடக்கிறது

சினிமா இன்றைய இளைஞர்களை மட்டுமல்ல நாளைய இளைஞர்களையும் சேர்ந்து கெடுக்கிறது

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Remo

cinema-vum oru Kaaranam endru than sollalam...

cinema matume kaaranam illai enbathu enoda karuthu


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                    

Offline RemO

ஸ்ருதி & ரோஸ் நீங்கள் கூறியது போல் சினிமா மட்டும் காரணம் அல்லாமல் இருக்கலாம் , ஆனால் சினிமா தான் முக்கிய காரணம் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் மற்ற காரணங்கள் என்னவென்று கூறினால் விவாதிக்கலாம்

Offline தாமரை

அட என்ன இப்படி சொல்லிட்டிங்கே  சினிமால உள்ள நல்ல விஷயங்கள ஏன் எடுக்க மாற்றிங்க சினிமால வார வில்லனையே ஏன் பார்க்கணும் ஹீரோ பாருங்க எவ்வளவு நல்லது பண்றார் ரோட்ல ஏதாவது தப்பு நடந்த தட்டிகேட்க்குரர்  அப்பா அம்மா மேல அளவு  கடந்த பாசம் தங்கை மேல அன்பு  இதெல்லாம் பின்பற்றுங்கோ  ;D ;D ;D

Offline RemO

தாமரை சினிமாவில் நல்ல விஷயங்கள விட கெட்டவை தானே அதிகம் இருக்கு
நல்ல ஹீரோ எங்க இருக்கார் இப்போதெல்லாம், அடிதடி பண்ணுறதும் ரவுடி மாதிரி நடக்குரவங்க தானே ஹீரோ இப்ப

சினிமா நல்ல கருத்துக்களை தருவதை விட தீயவற்றை கொடுக்கிறது என்பது என் கருத்து

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஸ்ருதி & ரோஸ் நீங்கள் கூறியது போல் சினிமா மட்டும் காரணம் அல்லாமல் இருக்கலாம் , ஆனால் சினிமா தான் முக்கிய காரணம் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் மற்ற காரணங்கள் என்னவென்று கூறினால் விவாதிக்கலாம்


கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

கேட்டுபோவதர்க்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் சுருதி. ஆனால் இன்று இளைஞர்கள் பெரும்பாலும் எதை மையமாக வைத்து கேட்டு போகிறார்கள் என்று தான் நாம் பார்க்க வேண்டும். இன்று அதிகமான இளைஞர்கள் கேட்டுப் போவதற்கு காரணம் இந்த சினிமா துறை தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

Quote
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே

நீங்கள் சொல்வது நியாயம் தானா சினிமா காரர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக சினிமா எடுக்கும்பொழுது எப்படி இந்த படத்தை பார்த்து கெட்டுபோ என்று கூறிவார்கள். அப்படி கூறினால் அவர்களுக்கு லாபம் கிடைக்காதே?

Quote
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..

நீங்கள் சொல்வதை என்றுகொண்டால் பொழுதுபோக்கு என்பதை எந்த அடிபடையில் நீங்கள் சொல்கிறீர்கள்.  அரை நிர்வனத்துடன் பாடல்கள் அமைப்பதும் அதை குடும்பத்தோடு கண்டுகளிப்பதும் தான் பொழுதுபோக்கா?

இப்படி மக்களை ஆபசதிர்ற்கு அடிமையாக்கி அவர்களை சிந்திக்க தூண்டாமல் முட்டாள்கள் ஆக்கும் சினிமாக்கள் தேவைதானா?

மக்களை நல்வழி படுத்த பெரிதும் பயன்படும் இந்த துறையை ஆபாசதிர்க்காக பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கு சினிமா காரர்களுக்கு நாம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்?

மது அருந்துவதும் புகை பிடிப்பதும் தான் கவ்ரவம் என்று நினைக்கும் அளவிற்கு இளைஞர்களை மயக்கி இருக்கும் சினிமா ஏன் அது தவறு என்று கூற முன் வர வில்லை? இப்படி பட்ட சுயநல வாதிகளை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

எப்படி எப்படி தவறு செய்யலாம்? எப்படி எப்படி திருடலாம்? பெற்றோர்கள் இல்லாத பெண் வீடிற்கு எப்படி போகலாம் என்று கற்றுக்கொடுக்கு கேவலமான இந்த சினிமா துறை தேவைதானா?

இதை விட கொடுமை கதாநாயகனாக இருந்து கொண்டு திருடுவாராம். இதை பார்க்கும் மக்கள் அதை ஆகா ஓகோ என்று பாரட்ட்வர்கலாம். என்ன ஒரு சிந்தனை வாய்ந்த மக்கள் நம் மக்கள். இவர்களின் சிந்தனையை மழுங்கடித்த இந்த சினிமா துறை தேவைதானா?

என்னுடைய கேள்விகளுக்கு பதிலை எதிர் பார்கிறேன் சுருதி உங்களிடம் மட்டும் அல்ல சினிமா பொழுது போக்கு என்று கூறுபவர்கள் அனைவரிடமும் இருந்து...!!!
« Last Edit: October 29, 2011, 11:26:38 AM by Yousuf »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்