FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 11:36:55 PM

Title: ~ வெங்காய குழம்பு செய்வது எப்படி..? ~
Post by: MysteRy on March 30, 2016, 11:36:55 PM
வெங்காய குழம்பு செய்வது எப்படி..?

(http://1.bp.blogspot.com/-rKLTKXy6miE/TcfA8calJcI/AAAAAAAABF4/rDPvjwHxJuM/s640/IMG_0259.JPG)

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
கடுகு, உளுந்து, கருவேப்பில்லை – கொஞ்சம்
வெந்தயம் – கால் ஸ்பூன் (optional)
பெரிய வெங்காயம் – 2  பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
உப்பு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.
ஒரு டவுட்:  இந்த குழம்பை ரசம் மாதிரி தண்ணியா வெச்சு, வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்-ஆ யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கும்? சமீபத்தில், டிவியில் ஒரு பிரபல சமையல் நிபுணர் இந்த டிப்ஸ் கொடுத்தாங்க.