தமிழ்ப் பூங்கா > கதைகள்

தவழ்ந்து வந்த தென்றல்

(1/6) > >>

thamilan:
          அன்று sunday .அன்று விடுமுறையானதால் நானும் எனது நண்பர்களும் தெருவில் கிரிக்கட் விளையாடி கொண்டிருந்தோம் . எங்கள் தெருவின் முடிவில் ஒரு அப்பார்ட்மெண்ட் இருந்தது . அதன் பெயர் கிரேஸ் கோர்ட் . அதன் முன்னே தான் நாங்கள விளையாடிக் கொண்டிருந்தோம் .
         அந்த அபார்ட்மெண்ட் முன்னாள் ஒரு வேன் வந்து நின்றது . அது விமானநிலைய வாடகை வண்டி. யாரோ விமான நிலையத்தில் இருந்து வந்திறங்கினார்கள்  போல .
           நாங்கள் விளையாடுவதை நிறுத்தி அந்த வேன் போகும் வரை காத்திருந்தோம் .
          அந்த வேனின் முன் கதவு திறந்தது . அதில் இருந்து ஒரு நடுத்தர வயதுடைய ஒருவர் இறங்கினார் . அவர் இறங்கி பின் கதவை திறக்க அதில் இருந்து ஒரு நடுத்தர பெண்மணி இறங்கினார் . அவரது மனைவியாக இருக்கும் என்று நினைத்தோம் .  நாங்கள் சுவாரசியம் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தோம் .
            திடீரென வானவில் தரைக்கு இறங்கியது போல ஒரு பிரகாசம் . வானில் இருந்து தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தது போல எங்கள் தெருவே பிரகாசத்திதது .
           காரணம் , வேனில் இருந்து இறங்கிய பெண் !
           அழகின் மறுஉருவம் அவள் . பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியம் .அவள் அங்கத்தில் எது அழகு . என்று ஆராய்ச்சி பண்ண  முடியாத படி ஒன்னுக்கொன்று அழகாகவே இருந்தது,
          மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களை சொல்வார்கள் . இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழி . அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி  அழகுக்கு அழகு சேர்த்தன .
முகத்தில் தவழும் தலை முடியால்  அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது . கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது . அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது . காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடும் . தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற  உதடுகள் அதன் ஓரங்களில் தவழும்  சிறுநகை , பார்ப்பவர் மனதை கிறங்கடிக்கும் என்பது நிச்சயமே .
                         நாங்கள் அனைவருமே வாயடைத்து மூச்சடைத்துப் போய் நின்றோம் . ஒருத்தன் கூட அசையவே இல்லை .எல்லோர் முகமும் தேன் குடித்த  நரி  போல தோன்றியது .
            பெரியவர் பின் கதவை திறந்து பெட்டிகளை கீழே எடுத்து வைத்தார் . டிரைவர் பணத்தை வாங்கி கொண்டு புறப்பட்டான் .
               மொத்தம் 5 பெட்டிகள் . அந்த மனிதர் சுற்றும் முற்றும் பார்த்தார் . பெட்டிகளை தூக்க ஆள் தேடுகிறார் என்று புரிந்தது. அவர் நேரம் பார்த்து வாட்ச் மேனையும் காணவில்லை .
               போய் உதவ துடித்தாலும் வழிய போய் கேட்டால் அந்த பெண் தவறாக நினைப்பாள் என ஆவலை அடக்கிக் கொண்டு அவரே கூப்பிடட்டும் என்று இருந்தோம் ,
             " தம்பிகளா கொஞ்ச இந்த பெட்டிகளை தூக்கி வந்து உதவி செய்வீர்களா "
பெரியவர் எங்களை பார்த்து கேட்டார் . இதற்காகத் தானே காத்திருந்தோம் .
             ஓடிப் போய் ஆளுக்கு ஒன்றாக தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட் லிப்ட் வரை சென்றோம் எங்கள் பின்னே அந்த தம்பதிகளும் அவர்களுக்குப் பின்னே அந்த பெண்ணும் நடந்து வந்தார்கள் . அந்த பெட்டிகள் உண்மையில் கனமாகவே இருந்தது . மனதில் அந்த பெண்ணையே தூக்கி நடப்பது போல நினைத்ததும் பாரம் தெரியவில்லை .
             லிப்ட்டில்  பெட்டிகளை வைத்தோம். "ரொம்ப நன்றி தம்பிகளா . இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" கூறிவிட்டு அந்த குடும்பமும் லிப்ட்டில் ஏறி சென்றார்கள் .
               நாங்கள் திரும்பி மறுபடியும் தெருவுக்கே வந்தோம் . மறுபடி விளையாட மனம் வரவில்லை . மழை பெய்த  பிறகும் வருமே மண்வாசனை , அது போல அவள் போன  பிறகும் அவள் நினைவுகள் மனமெங்கும் .
              இரவு முழுவதும் அவள் நினைவு தான் . யார் அவள் ? எங்கிருந்து வந்தாள்? என்ன பெயர் ? இப்படியே இரவு முழுவதும் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணமே இருந்தன . அடிக்கடி அவள் கண்கள் கனவில் வந்து தட்டி எழுப்பின .
                            இரண்டு நாட்கள் சென்றன . அவள் நினைவு குறைந்து விட்டது. அன்று நான் ஒரு வேலையாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் . அந்த அப்பார்ட்மென்டுக்கு முன்னால் அவள் நின்றிருந்தாள் . அவள் அருகில் ஒரு ஆட்டோ நின்றது. அந்த ஆட்டோ  .  டிரைவருடன்    எதோ வாக்குவாதத்தில் அவள் ஈடுபட்டுளளதாக எனக்கு புரிந்தது . 
           நான் அவர்களை அவதானித்தபடி அவர்கள் அருகே சென்றேன் . அவள் என்னை தெரியும்  என்பதற்கு அடையாளமாக மெலிதாக புன்னகைத்தாள் . நான் அருகில் சென்று ஏதும் பிரச்சனையா என்று கேட்டேன் . அதற்கு அவள் " ஆமாம் இந்த ஆட்டோவில் நான் வந்தேன் . ஏறும் போது எவ்வளவு என்று கேட்டு தான் ஏறினேன் . இங்கு வந்ததும் இரண்டு மடங்கு கேட்கிறார் " என்றாள்.
        அதற்கு அந்த டிரைவர் " எல்லா வீதிகளிலும் டிராபிக் . நான் நிறைய வீதிகளை சுற்றி சுற்றி வந்தேன் . எனது பெட்ரோல் தான் வீணானது . அது தான் கூட கேட்கிறேன்" என்றான் .
          " நீ வீதி வீதியாக சுற்றி வந்ததுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க ? கொழும்புல எந்த தெருவுல ட்ராபிக் இல்லாம இருக்கு ? ஆட்டோ ஓட்டும் உனக்குத் தெரியாதா ? நீ ஏறும் போதே எவ்வளவு வேணும் என்று சொல்லி இருக்கலாம் தானே . இப்போ வந்து கூட கேட்டால் கொடுப்பாங்களா?”
 நான் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசினேன் .
                       ஆட்டோகாரன் கேட்ட பணம் வேணும் என்று பிடிவாதமா இருந்தான் . இவனிடம் பேசி சரி வராது என்று எனக்கு தெரியும். எங்கள் தெருவில் இருக்கும் எனது நண்பர்களை போன்செய்து வர சொன்னேன் . அவர்களும் வந்தார்கள் . கூட்டம் கூடுவதை கண்டதும் ஆட்டோகாரன் சிறிது பயந்தான் . பசங்களும் அவனை திட்ட தொடங்கினார்கள் . அவன் சரி தருவதை தாருங்கள் என்று சொல்லி கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு திட்டிய படி புறப்பட்டான்.
           அந்தப் பெண் முகம் முழுவதும் சந்தோசம் நிரம்பி வழிந்தது . நன்றி கலந்த புன்னகையுடன் என்னை பார்த்து தேங்க்ஸ் சொன்னாள்.
           அவள் சிரித்த போது நான் எதோ இமயமலையில் ஏறி சாதனை படைத்தது விட்டது போல பெருமை அடைந்தேன்.
          அவள் வருகிறேன் என்று சொல்லி விட்டு அப்பார்ட்மென்டுக்கு  உள்ளேயே சென்றாள் . என் நினைவுகளும் நிழல் போல அவள் பின்னல் சென்றது .
             வீட்டுக்கு வந்து சோபாவில் சாய்ந்தேன் . மணலில்  புதைந்த விதை மழைத்துளி பட்டதும் துளிர் விடுமே , அப்படி அமிழ்ந்து கிடந்த அவள் நினைவுகள் மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தன .
           அந்த சிரிப்பு அவள் பேசும் போது அவள் கூடவே தலையாட்டும் காது வளையங்கள் ,  அடிக்கடி கூந்தலை பின்னால் தள்ளி விடும் அழகு , இவை அனைத்தும் கண்முன்னே வந்து வந்துது போனது .
           அவள் யார்? எப்படி அவளை பற்றி தெரிந்து கொள்வது ? நாள் முழுக்க யோசித்தேன் . அவள் இருந்த அப்பார்ட்மென்டில் எனது நண்பன் ஒருவன்  இருந்தான் . அவனைப் பிடித்தால் எல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று நினைவில் வந்தது . அடுத்த நாள் அவன் வீடு தேடித் சென்றேன் .
             எனது நல்ல நேரம் அவன் மட்டுமே வீட்டில் இருந்தான் . நான் அவனுடன் பேசிக்கொண்டு இருந்தேன் . மெதுவாக அவள் பேச்சை ஆரம்பித்தேன் . மச்சான் இங்க யாராவது புதுசா குடி வந்தார்களா?"
       " இல்லையே , ஏன் கேட்கிற ?" அவன் சிந்தனையுடன் கேட்டான் .
        "இல்லடா , ஒரு மூணு நாளைக்கு முன்னால ஒரு குடும்பம் ஏர்போர்ட்ல இருந்து வந்து இறங்கினார்கள் . அது தான் கேட்டேன் ." நான் அலட்சியமாக சொன்னேன் .
        " ஓ அவங்களா ? அது நாலாவது மாடியில ஜெகன் அங்கிள் இருக்கிறார் . அவர் வீட்டுக்கு தான் சுவிஸ்சல இருந்து அவர் அக்காவும் அவங்க கணவரும் மகளும் வந்தாங்க " அவன் பதில் கூறினான்.
       ஓ சுவிஸ்ஸா அது தான் அவள் அத்தனை செழிப்பா இருக்கிறாள் .  நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் .
          4ம் மாடியில அவங்க மாமாவும் பிள்ளைகளும் அவன் அவர்களை பற்றி சொன்னான்  தாத்தாவும் இருக்கிறாங்க . மாமா பிரஸ் வச்சிருக்கிறார்.     
                              அந்த பெண்ணை பத்தி பாதி விஷயங்கள் தெரிஞ்சாச்சு . பேர்  தெரியல அதைக் கேட்டா சந்தேகப்பட போறான் என்று நான் கேட்கல. எப்படியும் தெரிஞ்சிக்கலாம் என்று வந்துட்டேன்.
அன்றைய தினத்தில் இருந்து மலரை சுற்றும் தேனீ போல அந்த அப்பார்ட்மெண்ட சுத்தி சுத்தி வந்தேன் . ஆனால் அவ கண்ணுல தென்படல.
           பார்க்காம மனசும் பாரமா இருந்தது . அன்று நான் பாஸ்போர்ட் ஆபீஸ் போயிருந்தேன் எனது பாஸ்போர்ட் விஷயமா போய் இருந்தேன்.
நான் பாஸ்போர்ட் கவுண்டருக்கு போனேன் . அங்கே அந்த பொண்ணு ஒரு வயதானவருடன் சற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தாள் .
            எதையோ தேடுவது போல இருந்தது அவள் முகம் . நான் அவள் அருகில் சென்றேன். என்னை கவனிக்கவில்லை அவள் . நான் ஹலோ சொன்னதும் திரும்பிப் பார்த்தாள். அவள் முகம் பிரகாசம் அடைந்தது .
        'இங்க  என்ன பண்ணுறீங்க?' நான் அவளிடம் விசாரித்தேன்.  எனது தாத்தா பாஸ்போர்ட் விஷயமா வந்தேன். இங்க form எடுத்து fill பண்ணனும் . எங்க எடுக்கிறது என்று தெரியல. கேட்டாலும் ஒருத்தரும் ஒழுங்கா பதில் சொல்லுறாங்க இல்ல . அவள் பதில் சொன்னாள்.
           “இருங்க நான் போய் எடுத்து தாரேன். அதுக்கு கீழ போகணும்," நான் அவர்களை இருக்க சொல்லிவிட்டு கீழே போய் எடுத்து வந்தேன் . அதை அவர்களிடம் கொடுத்தேன் . இது எனது தாத்தா . அவருக்கு தான் பாஸ்போர்ட் எடுக்கணும் . நாங்க சுவிஸ் திரும்புறப்போ தாத்தாவையும் கூட்டிப் போக போறோம் ." அவள் குரல் இனிமையாக இருந்தது.
       ' ஓ நீங்க  ஸ்விஸ்ஸா'     நான் தெரியாதது போல கேட்டேன் .
        " ஆமா. அம்மா அப்பா இலங்கை . நான் பிறந்தது சுவிஸ்ல.
எனது பெயர் தென்றல் ." அவள் தன்னை அறிமுகப்படுத்தினாள்.
எனது பெயர் குமரன் ' நானும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் .
             "இந்த formஐ  fill பண்ணுங்க முதல்ல அப்புறம் அந்த கவுண்டர்ல கொடுக்கணும், fill பண்ணுற வரை      தாத்தாவை வரிசையில போய் நிற்க சொல்லுங்க. எனக்கு பாஸ்போர்ட்டை எடுக்கிறது மட்டும் தான்"
                     நான் வேற கவுண்டருக்கு போகணும் . நான் போய் எடுத்துட்டு வாரேன்." சொல்லி விட்டு நான் போனேன் . எனது வேலை 5 நிமிடத்தில் முடிந்தது . நான் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தேன் .  வரிசையில் தென்றலுக்கு முன் இன்னும் ஒருவர் இருந்தார் . நான் அங்கு இருந்த நாற்க்காலியில் அமர்ந்தேன். சில நிமிடங்களுக்குப் பின் அவளும்  அவள் தாத்தாவும் எல்லாம் பாரம் கொடுத்து விட்டு வந்தார்கள் .
            மறுபடியும் 2 மணிக்கு பாஸ்போர்ட்டை எடுக்க வர சொன்னார்கள்  ஒரு நாளில் எடுக்க பணம் கட்டினேன் . மறுபடியும் வரணும் அது தான் யோசனையை இருக்கு. உங்க வேலை முடிஞ்சிருச்சா " அவள் என்னிடம் கேட்டாள்.
          எனது வேலை முடிந்தும், நான் இல்லை மறுபடி ஈவினிங் வரணும் என்று சொன்னேன் . ஓ நீங்களும் வரணுமா ? ஈவினிங் தாத்தாவுக்கு ஒரு medical appointment  இருக்கு . ஈவினிங் எப்படி வரதுன்னு தான்  யோசனையை இருக்கு  அவ யோசனையுடன் சொன்னாள்.
          நான் ஈவினிங் வருவேன் தானே .  அந்த ரெசிப்ட் என்கிட்டே தாங்க. நான் எடுத்து வந்து தரேன்.
  அவள் யோசித்தாள். " நான் உங்க அப்பார்ட்மென்டுக்கு அருகில் இரண்டு வீடு தள்ளி தான் இருக்கிறேன். நீங்க அந்த அப்பார்மென்ட்ல நாலாவது மாடியில ஜெகன்  அங்கள்   வீட்டுல தானே இருக்கிறீங்க"
         அவள் என்னை பார்த்து குறும்பாக சிரித்தாள். "எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கிறேங்க போல "   அவள் அப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்லுறது என்று தெரியல . புதுசா எங்க தெருவுக்கு வந்தவங்கள பத்தி தெரிஞ்சிக்க ஆர்வம் வர தானே செயும். நான் அசட்டு சிரிப்புடன் சமாளித்தேன் .
              சரி சரி அசடு வழியுது. தொடச்சிக்கோங்க . அவள் கிண்டலாக சொன்னாள் .
            Reciptயை  தாங்க நான் எடுத்து வந்து உங்க வீட்டுல கொடுக்கிறேன் . அவள் சரி என்று தலையாட்டினாள். சரி நீங்க வீட்டுக்கு தானே போறீங்க நான் எனது நண்பன்  ஆட்டோல தான் வந்தேன் . வாங்க உங்களை drop  பண்ணுறேன். உங்களுக்கு தான் ஆட்டோவுல பிரச்னை வருமே . நான் கிண்டலாக சொன்னேன். நான் எதை சொல்லுகிறேன் என்று அவளுக்குப் புரிந்து சிரித்தாள் .
       சரி வாங்க போகலாம் . அவர்களையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டேன் . எனது நண்பனது ஆட்டோவில் மூன்று பேரும் ஏறிக்கொண்டோம்.
           அவள் reciptயை தந்தாள் . “உங்கள நம்பி தான் தரேன் . தூக்கிட்டு ஓடிட மாட்டீங்களே " அவள் கிண்டலாக கேட்டாள் .” இதை தூக்கிட்டு ஓடி என்ன பலன் ? உங்க handbagக  தூக்கிகிட்டு ஓடினாலும் நிறைய பணம் இருக்கும்”. அவள் கலகலவென்று சிரித்தாள்.
          நான் எனது நம்பர தாரேன் . ஒரு மிஸ் கால் அடிங்க.. நான் பாஸ்போர்ட்ட எடுத்ததும் உங்களுக்கு கால் பண்ணி சொல்லுறேன் ." அவள் சரி என தலையாட்டினாள் . நான் எனது நம்பரை சொல்ல அவள் அதை போனில் ஏற்றுக் கொண்டாள். அவள் போனில் இருந்து எனக்கு ஒரு மிஸ் கால் பண்ணினாள் .
               அவள் நம்பர் எனது போனுக்கு வந்து விட்டது. எதோ அவளே எனது மனதுக்குள்ள வந்தது போல மனது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது
              "ஏன் உங்கள் தாத்தா வாயையே திறக்கமாட்டேன் என்கிறார் ?
இது வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே "
               ‘ அதை ஏன் கேட்கிறீங்க ? எனக்கு முறுக்கென்றால் ரொம்பப் பிரியம். நேத்து மாமா முறுக்கு வாங்கி கொண்டுவந்து தந்தார் . நான் சாப்பிடறதுக்குள்ள தாத்தா எடுத்து முறுக்க கடிச்சிருக்கிறார் . பல்லு உடைஞ்சிருச்சி . இன்னும் வலி அவருக்கு . அது தான் வாயத் திறக்காம இருக்கிறார் .அந்த முறுக்கு அத்தனை கல்லு போல இருந்திருக்கிறது .நல்ல நேரம் தாத்தா புண்ணியத்துல நான் தப்பிச்சேன் ."
       . அவள் சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தாள் . அவள் சிரிப்பு சில்லறைகளை  சிதற  விட்டாற்ற போல் இருந்தது . “அது தான் தாத்தா வாயை திறக்க பயப்படுகிறார்” .
             எவ்வளவு ஆசையாய் இருந்தேன் முறுக்கு தின்ன . மாமா கொண்டுவந்த முறுக்க நான் தொடவே இல்ல . அவள் கவலையுடன் கூறினாள்.
           " எனக்கு தெரிந்த ஒரு வீட்டுல முறுக்கு செய்து விக்கிறாங்க . சுத்தமாவும் இருக்கும் . செம டேஸ்ட்டாகவும் இருக்கும். முறுமுறுவென இருக்கும் ஆனால் கடிக்கும் போது மெதுவாகவும் இருக்கும் ".
       நிஜமாவா ? எனக்கு அந்த வீட்டு விலாசத்தை தாங்களேன். எனக்கு முறுக்கென்றால் உசுரு". அவள் ஆவலுடன் கேட்டாள்.
          :அட்ரஸ் தந்தாலும் உங்களுக்கு தேடிப்போறது கஷ்டம். ஒரு நாளைக்கு முன்னமே சொல்லி வைக்கணும் . நான் வாங்கி வந்து தாரேன் "
             அவள் வேண்டாம் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் என்றாள்.
          இதுல என்ன சிரமம் இருக்கு . எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் இரண்டு நாளில் வாங்கி வந்து தாரேன்  .
          அவள் நன்றி கலந்த புன்னகையை சிந்தினாள். "எவ்வளவு வரும் சொல்லுங்க நான் பணம் தரேன் ."
        இப்போ இருக்கட்டும் வாங்கி வந்ததுக்கு அப்புறம் பார்க்கலாம் ."
    அவர்கள் அபார்ட்மெண்ட் வந்து விட்டது . அவளும் அவள் தாத்தாவும் இறங்கி நன்றி சொல்லி விட்டு உள்ளே போனார்கள் .
     
           மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது . அவள் போன் நம்பரும் கிடைத்து விட்டது . அவளை மறுபடி பார்க்கும் சந்தர்ப்பமும் அமைந்து விட்டது . என்னை நானே பாராட்டிக் கொண்டேன் .
                        ஒரு பொண்ணு கூட சிநேகம்  வைக்க எத்தனை பொய் சொல்ல வேண்டி இருக்கு எனது பாஸ்போர்ட் கிடைச்சும் இன்னும் கிடைக்கல சொன்னேன்.முறுக்கு நான் திங்கிறதே இல்ல . இதுல முறுக்கு செய்றவங்கள தெரியும்  என்று பொய் வேற.
இப்போ எங்க போய் முறுக்கு விக்கிறவன தேடுவேன்.
          பரவாயில்ல ஒரு அழகான பொண்ணுகூட சிநேகம் வைக்கணும் என்னா ஆயிரம் பொய் சொல்லலாம் . ஆயிரம் கடை கடையா ஏறி இறங்கலாம் . என்னை நானே சமாதனப்படுத்திக் கொண்டேன் .   
               அன்று மத்தியானம் பாஸ்போர்ட் ஆபீஸ் போய் தாத்தாவோட பாஸ்போர்ட்டை எடுத்து வந்தேன் . அங்கிருந்தே தென்றலுக்கு கால் பண்ணினேன். அவள் ஹாஸ்பிடல்ல இருக்கிறதா சொன்னா. பாஸ்போர்ட்டை அங்க கொண்டு வந்து தர முடியுமா என்று கேட்டாள். எனக்கும் இதை விட வேற வேலை என்ன இருக்கிறது ? சரி என்று அங்கு சென்றேன்.
        நான் போனபோது எல்லாம் முடிந்து இருவரும் வரவேற்ப்பறையில் அமர்ந்து இருந்தார்கள். என்னை கண்டதும் சிரிப்பால்அவள் முகம் மலர்ந்தது .
       பாஸ்போர்ட்டை அவள் கையில் கொடுத்தேன். அவள் நன்றி சொன்னாள்.
        "வேற எங்கையும் போறீங்களா இல்ல வீட்டுக்கு தானா" ?
        அவள் வீட்டுக்குத் தான் என சொன்னாள். "அப்போ சரி வாங்க என்னுடனேயே போகலாம்" அவர்கள் என்னுடன் புறப்பட்டு வந்தார்கள். அன்று தான் தாத்தா என்னுடன் பேசினார்.
          என்னைப் பற்றி விபரம் கேட்டார். நானும் கவனமாக பதில் சொன்னேன்.தாத்தாவுக்கும் என்னை பிடித்து போனது அவர் பேச்சில் தெரிந்தது . என்னுடன் சகஜமாக பேசினார்.
                தென்றல் நாங்கள் பேசுறதை கேட்டபடி வந்துகொண்டிருந்தாள் .
             குமரன் , நாளைக்கு நீங்க பிரீயா.தென்றல் என்னைக் கேட்டாள் ஏன் என்ன விஷயம் " நான் அவளை வினாவினேன்.
          " நாளைக்கு தாத்தா விசா விஷயமா சுவிஸ் எம்பசி போகணும் . தாத்தாவும் நானும் தனியா தான் போகணும் . இங்க   எனக்கு இடங்கள் சரியாய் தெரியாது , மாமா அவர் பிரஸ்ல ரொம்ப பிஸி . மாமா பையன் இருக்கிறான். அவனுக்கு காலேஜ் முடிஞ்சா டியூஷன் . மோர்னிங் போன நைட் தான் வீட்டுக்கு வருவான் ."
             நான் வாரேன். எனக்கு அங்க தெரிஞ்ச ஒரு பிரண்ட் இருக்கிறான். அவனை புடிச்ச சீக்கிரம் வேலைய முடிச்சிடலாம் . அவன் ஹெல்ப் பண்ணுவான் ."
          "உங்கள தொந்தரவு பண்ணுறேனா? உங்க கிட்ட வேலை வாங்குறேன்  என்று எனக்கு சங்கடமா இருக்கு." அவள் தயங்கித்  தயங்கி சொன்னாள்.
         சே சே இதுல என்ன தொந்தரவு. நானும் வீட்டுல சும்மா தானே  இருக்கிறேன். எனக்கும் பொழுது போகும்." நான் சந்தோசமா சொன்னேன்.
          " நான் நைட் எனது பிரண்ட பார்த்து விஷத்தை சொல்லுறேன் . அவன் எத்தனை மணிக்கு வர சொல்லுறான் என்று கேட்டுட்டு உங்களுக்கு கால் பண்றேன் , அந்த நேரம் போகலாம் "
         அவள் சரி என சந்தோசமாக  தலையாட்டினாள்.
      அவர்களை வீட்டில் விட்டு விட்டு நான் எனது அக்கா வீட்டுக்கு போனேன் . முறுக்கு ரெடி பண்ணனுமே. இல்லாட்டி சாயம் வெளுத்துடுமே . அக்காவை தான் பிடிக்கணும் . அவ எங்க வாங்குறது  என்று சொல்லுவா . இல்லாட்டி பண்ணியே  தருவா .
         அக்கா என் மேல ரொம்ப பிரியம் . எனக்கு எது வேணும் என்றாலும், எங்க போகணும் என்றாலும் அக்கா கிட்ட தான் சொல்லுவேன் . அக்கா அம்மாகிட்ட  பேசி சம்மதம் வாங்கித் தருவா . நான் நேர  கேட்டா அம்மாகிட்ட இருந்து திட்டு தான் கிடைக்கும்
           அக்கா வீட்டுல இல்ல .அவ கணவர் அம்மா வீட்டுக்கு போய் இருந்தா. நான் அவ வரும் வரை காத்திருக்க முடியாமல் அவங்க வீட்டுக்கு சென்றேன். அக்கா என்ன கண்டதும் ஆச்சரியப்பட்டாள்.
             “என்னடா விஷயம் ? என்னைக்கும் இல்லாம இங்க வந்திருக்கிற ?" அக்கா ஆச்சரியமா கேட்டா . "ஒன்னும் இல்ல . உங்கள வீட்டுல காணல. அம்மா மாமி வீட்டுக்குப் போனதா சொன்னாங்க. அது தான் வந்தேன் ." 
நான் சமாளித்தேன்.
         "செட்டி ஆதாயம் இல்லாம ஆத்தோட போக மாட்டானே " அக்கா கிண்டலாக பேசினாள். நான் பரிதாபமாக சிரித்தேன். இல்ல அக்கா ..... நான் என்ன சொல்லுறது என்று தெரியாமல் தடுமாறினேன்,
        இரு இன்னும் 5 நிமிடத்துல நாம வீட்டுக்கு போகலாம். அப்போ  சொல்லு. நீ எதோ காரியமா தான் வந்திருக்கிற. என் தம்பிய பத்தி எனக்குத் தெரியாதா? அக்கா குறும்பாக பேசினாள்.
         கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு அக்காவும் நானும் புறப்பட்டோம் . வழியில் அக்கா ஆரம்பித்தாள் . "என்ன விஷயம் சொல்லு " 
           " அக்கா ஒரு ஹெல்ப் . நீ தான் உதவனும்." நான் தயங்கித் தயங்கி பேசினேன். சரி என்ன ஹெல்ப் வேணும் ? அத சொல்லு முதலுல. "
             "அக்கா எனக்கு கொஞ்சம் முறுக்கு செய்து தாரிங்களா ?
            "முறுக்கா, யாருக்கு?" அக்கா ஆச்சரியமா கேட்டா.
      " எனது ஒரு பிரண்டுக்கு"
      "பிரண்டுக்கு முறுக்கா. அது தான் கடையில வாங்கலாமே ? எதுக்கு ஸ்பெசலா செய்து கொடுக்கணும் என்று கேட்கிற? . எங்கயோ இடிக்குதே" .அக்கா சந்தேகத்துடன் கேட்டாள்   "ஆமா யாரு அந்த பிரண்டு ?"
      "அக்கா அது வெளிநாட்டுல இருந்து வந்தவங்க."   
       " உனக்கு வெளிநாட்டுல பிரண்டா? எனக்கு தெரியாம . யாரு அது"?
         "ஒரு புது பிரண்டு அக்கா, வெளிநாட்டுல இருந்து வந்திருக்காங்க . நம்ப வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கிரேஸ் கோர்ட்டுக்கு வந்திருக்காங்க."
       "ஆமா அது பாய் பிரண்டா இல்ல கேர்ள் பிரண்டா " அக்கா சந்தேகத்துல கேட்டாள்.
         எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. நான் தலையை சொறிந்தேன். " உண்மையா சொல்லு . அது ஆணா இல்ல பொண்ணா"? அக்கா என்னை யூகித்தறிந்துக் கொண்டாள் என்று எனக்குப் புரிந்தது .
          " ஒரு பொண்ணு தான் அக்கா" அடிடா சக்க , நினைச்சேன் . யாரு அது ? எப்போ இருந்து பழக்கம்"? அக்கா கேள்விகளை அடுக்கினாள்.
          இனி அக்காவிடம் மறைத்து பிரயோசனம் இல்லை . உண்மையை சொல்லி விடுவோம் என்று நடந்ததை  சொன்னேன்.
        " அவளுக்கு முறுக்கு தின்ன ஆசையாம் . நான் எனக்கு தெரிந்த வீட்டுல விக்கிறதா சொன்னேன். வாங்கித் தாரதா சொல்லிட்டேன். இப்போ என்ன பன்னுறதுனு தெரியல . நீ தான் உதவனும். ப்ளீஸ் அக்கா" நான் அக்காவிடம் கெஞ்சினேன் .
         "சரி சரி , நான் செய்து தருகிறேன் .அம்மா யாருக்குனு கேட்ட என்ன சொல்லுவாய்"? அக்கா குறும்பாக கேட்டாள்.
         தெரியல என்று தலையாட்டினேன் . " சரி நான் எனது பிரண்டுக்கு செய்யிறதா சொல்லுறேன். செய்து உன்  மூலமா கொடுத்து அனுப்புவேன். நீ ஏதும் உளறிடாத. அப்புறம் கதை கந்தல் ஆகிடும் . அம்மா உன்னோட சேர்த்து என்னையும் உண்டு இல்லை என்று ஆக்கிடுவாங்க". அக்கா சொல்லி விட்டு சிரித்தாள் .
        அக்காவை அப்படியே கட்டிபிடித்துக் கொண்டு சுத்தணும் போல இருந்தது எனக்கு. அக்கா என் மேல கொள்ளைப் பிரியம் . நானும் தான் . எனக்கு அம்மாவும் அவள் தான் அக்காவும் அவள் தான்.
        சரி போறப்போவே முறுக்கு செய்ய வேண்டிய பொருட்களை வாங்கிகிட்டு போவோம் " நான் சரி என்ன உடற்சாகமாக தலையசைத்தேன்
                   நான் நைட் எனது நண்பனை சந்தித்து விஷயத்தை சொன்னேன் . அவன் அடுத்தநாள் காலை பத்து மணிக்கு வரச் சொன்னான்.
         நான் கால் பண்ணி பத்து மணிக்கு ரெடியாக சொன்னேன்  அக்கா அன்று இரவே முறுக்கு சுட ஆரம்பித்தாள்.
          அடுத்த நாள் மோர்னிங் தென்றலையும் தாத்தாவையும் கூட்டிக்கொண்டு சுவிஸ் எம்பசி சென்றேன். என் நண்பன் எல்லா வேலையும் நல்லபடி விரைவாக செய்து கொடுத்தான். ஒரு கிழமையில வீசா ரெடி ஆகிடும் . ரெடி ஆனதும் கால் பண்றேன்  என்று சொன்னான்.
        தென்றலுக்கு சரியான சந்தோசம். என்மேல் மதிப்பும் ரொம்ப கூடி இருந்தது . என்னோடு சகஜமாக பேசத் தொடங்கினாள்.
           அடுத்த நாள் அவளை மீட் பண்ணி முறுக்கையும் கொடுத்தேன் . முறுக்கை கண்டதும் ஏதோ தேவாமிர்தம் கையில் கிடைத்ததை போல முகம் பிரகாசமானது . ஆயிரம் தேங்க்ஸ் சொன்னாள்.
             நாங்கள் அடிக்கடி சந்தித்தோம். இருவரும் மனம் விட்டு பேசும் அளவுக்கு நெருக்கமானோம் . எனக்கும் அவள் மேல் இருந்த ஈடுபாடு அதிகமானது . அவள் எண்ணங்கள் மனமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது .
           அவளை பார்க்கும் போது மனமெல்லாம் பூ பூத்தது அவள் இல்லாத போது மனமெல்லாம் வெறுமையானது. எப்போது அவளை மறுபடி பார்ப்போம் என்று மனம் ஏங்கியது .
            தென்றலுடன் ஷாப்பிங் மால், பீச் . கடை என்று எல்லா இடமும் சுத்தினேன் . அவள் மேல எனக்கு உண்டான காதலை சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தைகள் வரவில்லை.
            சொல்ல நினைக்கும் போதெல்லாம்    வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளியே வர மறுத்தது . இது எனக்கு புது அனுபவம் . இது வரை நான் யாரையும் காதலித்ததும் இல்லை . யார் மேலும் காதல் வரவும் இல்லை .
          இது எனது முதல் காதல் . அதனால் தானோ என்னவோ , அந்த காதல் என்னை பாடாய் படுத்தியது .தூக்கம் வரவில்லை. பசியும் எடுப்பதில்லை . தனிமையானேன் . தனிமை எனக்கு பிடித்திருந்தது.
             இப்படியே ஒரு வாரம் போனது. சொன்னபடி அவள் தாத்தாவின் விசாவும் வந்து விட்டது .
           தென்றல் சுவிஸ் போக இன்னும் இரண்டு வாரங்கள்   இருந்தன. அன்று நானும் அவளும்  ஷாப்பிங் மால் போனோம். அவள் சுவிஸ் கொண்டு போக சாமான்கள் வாங்குவதற்காக என்னையும் கூட்டிக் கொண்டு போனாள்.
               இருவரும் வாங்க வேண்டியதில் பாதி பொருட்களை வாங்கி கொண்டு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று சென்றமர்ந்தோம்.
              ஆடர் பண்ணிவிட்டு இருவரும் ஒரு ஓரமாக அமர்ந்தோம் . நான் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
            "என்ன சார் ரொம்ப அமைதியா இருக்கிறீங்க யோசனை பலமா இருக்கே" அவள் பரிகாசமாகக் கேட்டாள்.
          நான் ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்தேன்.
        " முயல் புடிக்கிற நாயோட மூஞ்ச பார்த்தா தெரியாதா?  ஏதோ யோசனையில் இருக்கிறீங்க என்று எனக்கு தெரியும். என்னனு எனக்கு சொல்ல விருப்பம் இல்லாட்டி பரவாயில்லை." அவள் பேசிய விதம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.
      உங்களைக் காதலிக்கிறேன் என்று எப்படி சொல்லுவது? அதே வேளை சொல்லாமலும் இருக்க முடியாதே . நான் இருதலைக் கொள்ளி எறும்பானேன் .
           "இல்லப்பா   தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன் நான். மனதில் இருக்கிறதை சொல்லவும் வேணும் . சொல்லவும் முடியவில்லை . "
        "யார் கிட்ட சொல்ல முடியல? ஏதும் லவ் மேட்டர? உங்க தடுமாற்றத்தை பார்த்த எனக்கே சந்தேகமா இருக்கு என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்" ? அவள் என்னைத்  தூண்டினாள்.
          எனது மனதில் உள்ளதை சொன்னால் நீங்க என்னை என்ன நினைப்பீங்களோ? அது தான் தயக்கமா இருக்கு ." என் குரல் எனக்கே கேட்கல .
         என்னிடம் சொல்ல என்ன பயம் ? நான் ஒன்னும் உங்கள தப்பா நினைக்க மாட்டேன் . பயப்படாம சொல்லுங்க." அவள் என்னை உற்சாகப்படுத்தினாள்.
         எனக்கு பேச்சே வரல. தர்மசங்கடமான நிலைமை எனக்கு .
       "சரி நான் சொல்லுறேன். நான் சொல்லுறதை கேட்டு நீங்க கோபப்படவோ என்னை  வெறுக்கவோ கூடாது. சரியா."
          "நான் ஒன்னும் கோபப்பட மாட்டேன். என்னை என்ன லவ் பண்ண போறேன் என்றா சொல்ல போறீங்க"? சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தாள்.
            " அதை தான் சொல்ல போறேன். உண்மையும் அது தான்." நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.
           அவள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். இப்போது அவளுக்கு பேச்சு வரவில்லை.
          " என்ன சொல்கிறீர்கள் ? உண்மையாவா சொல்கிறீர்கள்? " அவள் தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
      உங்களை பார்த்த அன்றே உங்கள் மேல எனக்கு ஒரு ஆர்வம் தோன்றி விட்டது. நாளாக நாளாக உங்களோட பழகப் பழக உங்கள் மேல எனக்கு அன்பு அதிகமானது. உங்களிடம் எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியல . ஆனால் நான் உண்மையாவே காதலிக்கிறேன் . உங்களுக்கு விருப்பம் என்றால் நான் கொடுத்து வைத்தவன் . இல்லையென்றால் எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று நினைத்துக் கொள்வேன் . " நான் உருக்கமாக பேசினேன்.
          " நான் ஒன்று கேட்பேன். என்னை தவறாக நினைக்க கூடாது. உண்மையை சொல்ல வேண்டும்." அவள் நேரே ஏன் முகத்தைப் பார்த்துப் பேசினாள்.
              "நான் உண்மையை சொல்வேன் நீங்க கேளுங்க"
         " நீங்க  என்னை விரும்ப என்ன காரணம்? நான் சுவிஸ்ஸில் இருக்கிறதா ? இல்லை எனது அழகா? அவள் கேட்டதும் நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.
        எததற்கு சிரிக்கிறீர்கள்? சிரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நான் கேட்டு விட்டேன் ?  அவள் குழப்பத்தில் கேட்டாள் .
            சுவிஸ்ஸில் இருக்கிறவங்களுக்கு இரண்டு கொம்பா இருக்கு ? உங்கள அழகென்று யாரு சொன்னது"? நான் கிண்டலாகக் கேட்டேன்.
        "அடிங்க நான் அழகில்லையா ? அவள் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
       " நிறைய பசங்க வெளிநாட்டில் உள்ள பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினா வெளிநாட்டில் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிறாங்க"
         " நீங்க பேரழகி இல்லை . ஆனால் லட்சணமான, ஒரு தமிழ் பொண்ணுக்கு உரித்தான எல்லா குணமும் அமைந்த ஒரு பொண்ணு . வெளிநாட்டில் இருந்தாலும்   தமிழர் பண்பை மறக்காத பொண்ணு . உங்க கிட்ட என்னை ஈர்த்ததே இவைகள் தான். அது போக எனக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகணும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அப்படி எண்ணமிருந்தால் இதுக்குள்ள நான் வெளிநாடு போய் இருப்பேன். " நான் அவள் முகத்தைப் பார்த்து சொன்னேன்.
           காதல் வர அழகும் பணமும் தேவை இல்லை . அது எங்கு வரும் யார் மேல வரும் எப்படி வரும் என்று எவருக்கும் தெரியாது. ஒருவருடைய நல்ல  குணங்கள்,கலகலப்பான பேச்சுகள். இப்படி சில விஷயங்கள்    மனதைக்  கவரும் போது அந்த கவர்ச்சி, அந்த ஈர்ப்பு காதலாக மாறும் . நமக்குள்ளும் நடந்ததும் அது தான்." நான் அமைதியாக பேசினேன்.
             நான் உங்களை வற்புறுத்தவில்லை. அப்படி வரும் காதலில் எனக்கு  விருப்பமும் இல்லை . உங்கள் மனதுக்கு என்னைப் பிடித்திருந்தால்  , உங்களுக்கும் என் மேல்  காதல் இருந்தால் எனது காதலை ஏற்றுக் கொள்ளுங்கள். என்றும் உங்களுக்கு நான் உண்மையானவனாக  இருப்பேன். என்றும் உங்கள் மேல் மாறாத காதல் கொண்டிருப்பேன்.காலமெல்லாம் உங்களை என் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்." எனது குரல் உணர்ச்சியால் தழுதழுத்தறது.
                அவள் சிறிது நேரம் ஏதும் பேசவில்லை . " எனக்கும் உங்களை பிடிக்கும். உங்களிடம் குறை சொல்ல இதுவரை எந்தக் குறையும் நான் கண்டதில்லை .   எல்லோருக்கும்  உதவும் குணம் கொண்டவர் நீங்கள். இது வரை என்னிடம் நீங்கள் வரம்பு மீறி நடந்ததும் இல்லை , பேசியதும் இல்லை . உங்களை நல்ல நண்பனாக எனது மனம் ஏற்றுக் கொண்டது . காதலனாக நான் சிந்திக்கவில்லை. எனக்கு இரண்டு நாட்கள் சிந்திக்க டைம் தாங்க. நான்   நல்ல முடிவா சொல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் ."
          நானும் சரி என்று தலையசைத்தேன் .
            மறுபடியும் போய் வாங்க வேண்டிய மிகுதி பொருட்களையும் வாங்கி கொண்டு இருவரும் வீடு வந்தோம் . அவள் என்னுடன் வழமை போல சகஜமாகவே பேசினாள். என்னால் தான் அப்படி பேச முடியவில்லை.
                 இரண்டு நாளில் அவள் என்ன சொல்லுவாளோ என்ற பதற்றமும் பரிதவிப்பும் என்னை பேச விடாமல் பண்ணியது. அவளை அப்பார்ட்மெண்ட் வாசலில் விட்டு விட்டு நான் வீடு வந்தேன்.
            வீட்டில் எல்லோரும் பதற்றமாகவும் கவலையுடனும் இருந்தார்கள். என்னை கண்டதும் அம்மா " எங்கடா போன நீ ? கால் பண்ணினாஆன்சரும் பண்ணல? "  என்று சிறிது கோபத்துடன் கேட்டாள். நான் போனை எடுத்து பார்த்தேன். அது சைலன்ட்டில்   இருந்தது . தென்றலுடன் போகும் போது யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க நான் தான் போனை   சைலன்ட்டில் வைத்திருந்தேன். எனக்கு அது மறந்துவிட்டது.
           "என்ன விஷயம் அம்மா? ஏன் எல்லோரும் பதற்றத்துடன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?" நான் அம்மாவை வினவினேன்.
              “ ஊருல கவிதாவுக்கு ரொம்ப வருத்தமாம் . கேன்சர் என்று சொல்லுறாங்களாம் . ஹாஸ்பிடல்ல  அட்மிட் பண்ணி இருக்காங்களாம். துணைக்கு இருக்க யாரும் இல்லயாம். மாப்பிள்ளை கால் பண்ணினாரு. நான் உடனே இந்தியா போகணும். நீ என்ன அங்க கொண்டு போய் விட்டுட்டு வாரியா?" அம்மா   அழுத்துடுவாங்க போல இருந்தது .
         கவிதா எனது சின்ன அக்கா.  திருமணம் முடிந்து இந்தியாவில் இருக்கிறாள். அவங்களுக்கு இரண்டு குழந்தைகள் .. இருவரும் சிறுவர்கள் . மச்சானுக்கு அம்மா அப்பா இல்லை.
          நான் உடனே அம்மாவும் கூட்டிக்கொண்டு இந்தியன் எம்பசி சென்றேன். மச்சான் அக்காவின்  கேன்சர் என்ற மெடிக்கல் ரிபோர்டையும் ஹோஸ்பிடல அட்மிட் பண்ணி இருக்கிற லெட்டரையும் பாக்ஸ் பண்ணி அனுப்பி இருந்தார்.
        அதை எல்லாம் காட்டி உடனே எமெர்கெனசி விசா எனக்கும் அம்மாவுக்கும் எடுத்தேன் . அன்றே  இந்தியா போக டிக்கெட்டும் எடுத்தேன்.
          மாலை ஆறு மணிக்கு பிளைட் .
         வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக எல்லாம் பேக் பண்ணினேன். இந்த அவசரத்தில் தென்றலை மறந்து விட்டேன். எல்லாம் ரெடி . ஏர்போர்ட் போக இன்னும் ஒரு மணித்தியாலமே இருந்தது. அம்மா அதை எடுத்து வை, இதை எடுத்துவை என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். எனக்கு எங்கும் அசைய முடியவில்லை. தென்றலுக்கு கால் பண்ணலாம் என்றால் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள். என்னாலும் வெளியே போக முடியல. 
          ஏர்போர்ட் போனதும் டாய்லெட் போய் வருகிறேன் என்று சொல்லி அம்மாவை அங்கே இருக்க சொல்லிவிட்டு   நான் தனியாக போய் தென்றலுக்கு கால் பண்ணினேன் . அவள் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பல முறை ட்ரை பண்ணினேன். முடியல. என்ன செய்வது என்று தெரியாமல் தென்றலுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன், நான் அவசரமாக இந்தியா போகிறேன். விரைவில் திரும்பி விடுவேன் என்று.
            .ஏர்போர்ட்டில் எல்லாம் முடித்துக்கொண்டு பிளைட்டில் ஏறி அமர்ந்தோம் .
        மனமெல்லாம் அக்காவும் தென்றலும் மாறி மாறி வந்தார்கள். தென்றலுடன் பேச முடியாமல் போனது மனதுக்கு ஏமாற்றமாக இருந்தது.அக்காவின் உடல் நிலையை நினைக்கும் போது மிகவும் கவலையாகவே  இருந்தது.
        இந்தியா போனதும் டாக்ஸி பிடித்து அக்கா வீட்டுக்கு போனோம். வீட்டில்  மச்சான் இருந்தார். குழந்தைகள் எங்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்தட்டுக் கொண்டு அழுதார்கள். அம்மாவும் அழுது விட்டாள். பெட்டிகளை வீட்டில் வைத்துவிட்டு மச்சானுடன் நானும் அம்மாவும் ஹாஸ்பிடல் சென்றோம். குழந்தைகளை பக்கத்துக்கு வீட்டில் விட்டு விட்டு சென்றோம்.
            அக்காவை பார்க்கவே பரிதாபமாக இருந்தது, ஆளே தெரியாத அளவுக்கு மெலிந்து போய் இருந்தாள். அழக்கூட முடியவில்லை அவளால். எனது கைகளை பிடித்துக் கொண்டாள். கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது. என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை. அம்மா ஓவென அழத்தொடங்கி விட்டாள். நான் அம்மாவை சமாதனப்படுத்தினேன். அக்காவுக்கும் ஆறுதல் சொன்னேன்.
        "நீ எதுக்கும் கவலைப்படாதே. எல்லாம் நல்லபடி குணமாகும். பிள்ளைகளைப் பத்தியும் கவலைப்படாதே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ தைரியமாக இரு. கடவுள் இருக்கிறார் . அவர் உன்னை கைவிட மாட்டார்."
          நாங்கள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, நான் அம்மாவை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன். அவர்கள் பிள்ளைகளுடன் இருக்கட்டும். அம்மாவை விட்டு விட்டு நான் வருகிறேன்” என்று சொல்லி விட்டு, நான் அம்மாவை கூட்டிக் கொண்டு வீடு போனேன்.
          அம்மாவை வீட்டில் விட்டு விட்டு மறுபடி மருத்துவமனை சென்றேன் . மச்சானை வேலைக்கு போக சொல்லிவிட்டு நான் அக்கா பக்கத்தில இருந்தேன்.
                 அக்காவின் கணவர் தங்கமானவர். அக்கா மேலும் பிள்ளைகள் மேலும் உயிரையே வைத்திருந்தார். ஒரு கிழமையா வேலைக்கும் போய் இல்லை .
          அக்காவுக்கு மார்பக புற்று நோய். நான் அருகில் இருந்து அவளை பார்த்துக்கொண்டேன். மச்சான் மாலையில் வேலை முடிந்து நேரே மருத்துவமனைக்கு வந்தார் . நான் மச்சானை வைத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். இரவு மறுபடி அம்மாவை கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றேன். மருத்துவமனையில் அம்மாவை அக்காவின் பக்கத்தில் இருக்க வைத்து விட்டு நானும் மச்சானும் வீட்டுக்கு  வந்தோம்
         இரவு மறுபடி அம்மாவை கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றேன். மருத்துவமனையில் அம்மாவை அக்காவின் பக்கத்தில் இருக்க வைத்து விட்டு நானும் மச்சானும் வீட்டுக்கு வந்தேன். அம்மா இரவு முழுவதும் அக்கா பக்கத்தில் இருப்பதாக சொன்னாள். அம்மா இரவு முழுவதும் அக்கா பக்கத்தில் இருப்பதாக சொன்னாள்.
       இப்படியே பகல் முழுவதும் நானும் மாலையில் மச்சானும் இரவில் அம்மாவும் அக்காவை பார்த்துக் கொண்டோம்.
       அக்காவின் ஒரு பக்க மார்பகத்தை எடுத்து விட்டார்கள். இந்த அலைச்சலிலும் பரபரப்பிலும் எனக்கு தென்றலின் நினைவு வரவில்லை
மனமிருந்த நிலையில் ஏதும் தோன்றவும் இல்லை.
            நான் இந்தியா வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. அக்காவுக்கு கரண்ட் சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
          நானும் இலங்கை போக வேண்டும். மச்சான் தான் அக்காவை பார்த்துக் கொள்வதாகவும் குழந்தைகளை அம்மா பார்த்துக் கொள்வார்கள். நீ   ஊருக்குப்  போ என்று சொன்னார்.
     நானும் ஊருக்கு புறப்பட்டேன். ஒரு வழியாக இலங்கை வந்தேன். இலங்கையில் காலடி வைத்ததும் தென்றலின் நினைவு மறுபடி மனமெங்கும் பரவத்தொடங்கியது.
        இலங்கை ஏர்போர்ட்டில் காலடி வைத்ததும் தென்றலுக்கு கால் பண்ணினேன். அவள் நம்பர் அவுட் ஒப் சர்வீஸ் என்று வந்தது . எனக்கு ஒன்றும் புரியவில்லை . பலதடவை முயற்றச்சி செய்தேன். அதே மெசேஜ் தான் வந்தது .
            எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் முயற்சித்தேன். வேலை செய்யவில்லை. எனக்கு மூளை குழம்பிவிடும் போல இருந்தது. அவள் அப்பார்ட்மெண்ட்ல இருந்த எனது நண்பனுக்கு கால் பண்ணினேன் . அவன் போனும் வேலை செய்யவில்லை .
 என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை . தென்றலை எப்படி சந்திப்பது என்று புரியவில்லை.
            தினமும் அவள் அபார்ட்மெண்ட் முன்னே போய் நிற்பேன். அவள் வெளியே வரும் போது சந்திக்கலாம் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.
             ஆனால் அவளைக் காணவே இல்லை . அவள் போனும் வேலை செய்யவில்லை .
எனக்கு பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது. என்ன செய்வதென்றும் புரியவில்லை. அவள் தாத்தா வெளியில் வந்தால் சரி கேட்கலாம் என்று அவரை எதிர்பார்த்தேன். அவரையும் காணவில்லை.
            நான் வந்து நன்கு நாட்கள் கழிந்து விட்டது. எனக்கு சாப்பிடவும் பிடிக்கவில்லை. தூங்கவும் பிடிக்கவில்லை . நாள் முழுவதும் யோசனையில் இருந்தேன். இப்படியே பத்து நாட்கள் சென்றன. கடைசியாக அவள் அப்பார்ட்மென்டில்  இருக்கும் எனது நண்பனை சந்தித்தேன். அவன் வேலை விஷயமாக மலேஷியா சென்றிருந்ததாக சொன்னான்.
            அவனிடம் நான் நடந்தது அனைத்தையும் சொன்னேன். அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.எனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்து இருக்கிறதா என்று புதுமைப்பட்டான்.
             அவனிடம் தென்றல் பத்தி விசாரித்தேன். அவன் எனக்கும் தெரியல. நான் நேத்து தான் வந்தேன். ஒரு நாள் பொறு. நான் விசாரித்து சொல்கிறேன் என்று கூறினான்.
          ஒரு நாள் பொறு என்று எனது நண்பன் ஈஸியாக சொல்லி விட்டான் . எனக்கோ அந்த ஒரு நாள் ஒரு நூற்றாண்டு போல தோன்றியது.
           உலகமே சுழலுவதை மறந்து விட்டது போலவும், கடிகார முற்கள் சுற்றுவதை நிறுத்தி விட்டது போலவும் தோன்றியது எனக்கு. ஒவ்வொரு மணித்தியாலமும் மெயில் ட்ரெயின் போல மிகவும் மெதுவாக ஓடியது.
    எதுவுமே பிடிக்கவில்லை எனக்கு. பசி என்று ஒன்று இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தூக்கம் தென்றலைப் போல கண்களை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டது.
          பைத்தியம்  பிடிக்காத குறை தான் எனக்கு. காதலைப் பற்றி பலர் பலவிதமாக கூறுவதைக் கேட்டிருக்கிறேன், பலர் பாட கேட்டிருக்கிறேன். கவிதைகளில் கூட வாசித்திருக்கிறேன். ஏன் நானே கவிதைகளில் எழுதியும் இருக்கிறேன். ஆனால் அனுபவத்தில் காதல் எத்தனை வலியது, கொடியது என்று அன்று தான் உணர்ந்து கொண்டேன் .
          காதல் பண்ணும் மற்றவர்களை பார்த்து, அவர்கள் செய்கைகளை பார்த்து , அவர்கள் வெளிக்காட்டும் உணர்வுகளை பார்த்து சிரித்திருக்கிறேன் . பைத்தியக்காரர்கள் என்று எள்ளிநகையாடியிருக்கிறேன்.
         தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என்பார்கள் . அது உண்மை தான் என்று அன்று  உணர்ந்து கொண்டேன்.
       இனிப்பும் புளிப்பும் ஒன்றாய் அமைந்த பிளம்ஸ் பழம் போல இன்பமும் துன்பமும் ஒன்றாய் அமைந்ததே காதல் என்று அந்த நாள் எனக்கு உணர்த்தியது. அவள் பிரிவு எவ்வளவுக்கெவ்வளவு துன்பத்தை கொடுத்ததோ அதே அளவு அவள் நினைவுகள் இன்பத்தையும் கொடுத்தது. உணர்ச்சிக் கலவையின் பிழம்பானேன் நான் .
         விடியா இரவாக விடிந்தது மறுநாள் காலைப்பொழுது. சேவல் கூட கூவுவததற்கு   எழுந்தும் இருக்காது, அதற்குள் நான் எழுந்து விட்டேன்.                     
எப்படியோ காலை பத்து மணி வரை தாக்குப் பிடித்தேன். அதற்கு மேல் இருந்தால் தலை வெடித்து விடும் போலத் தோன்றியது. நேரே நண்பனை பார்க்கப் போனேன்.
          நல்ல நேரம் அவன் வீட்டில் இருந்தான். " மச்சி என்ன நடந்தது? தென்றலைப் பற்றி விசாரித்தாயா? அவள் எங்கே ? நான் பரிதவிப்பில் கேள்விகளை அடுக்கினேன்.
           "ஆமாண்டா நான் அவ மாமா மகன் கிட்ட விசாரிச்சேன் . அவ சுவிஸ் போய்ட்டா. அவ ஆபீஸ்ல இருந்து உடனே வர சொன்னார்களாம். அதால அவ அம்மா அப்பா . மூவரும் தாத்தாவையும் கூட்டிகிட்டு போய்ட்டாங்களாம்.  மச்சி . எனக்கே உன்ன நினைச்க பாவமா இருக்கு."
           அதற்கு மேல் அவன் சொன்னது ஏதும் என் காதில் விழவில்லை. அவள் போய் விட்டாள். தென்றல் சூறாவளியாக என்மனதை சூறையாடி விட்டு கரை கடந்து சென்று விட்டது.
          எனது கால்கள் சக்தியற்றது போல தோன்றியது. எனது பாதத்துக்கு கீழே பூமி நகர்வது போல இருந்தது. கீழே விழுந்து விடுவேன் என அச்சத்தில் அருகில் இருந்த சுவரை பிடித்துக் கொண்டேன்,
        டேய், என்னாச்சுடா உனக்கு ? உன்னைப்பார்க்க எனக்கே பயமா இருக்கு. யோசிக்காதே கவலைப் பட்டு ஏதும் பயன் இல்லை". நண்பன் எனது தோளை பிடித்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொன்னான்.
           என் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகள் கண்ணீராக கண்களில் வழிந்தது.
          மச்சி, நீ கவலைப்பட்டு ஏதும் ஆக போறதில்லை. இதை மனசில இருந்து எடுத்து போட்டுட்டு  வழமை  போல இரு. உன்னைப் பார்க்க எனக்கே கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் அக்கா பார்த்தா துடிச்சிட போற. இதை  உன்  வாழ்வில் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள். வாழ்க்கையில் எதுவும்  நம் விருப்பப்படி நடப்பதில்லை . அதன் வழியில்  தான் நாம் நடக்கிறோம் . அதனால் கவலைகளை மற. எது நமக்கென்று  எழுதப்பட்டதோ  அது கண்டிப்பாக நமக்கு  கிடைக்கும். ஆகவே கவலையை விடு" நண்பன் எனக்கு ஆறுதல் கூறினான் .
           
                           நான் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் . நேரே எனது படுக்கையில் சென்று விழுந்தேன். மனது பாராங்கல்லாக கனத்தது. மனமோ பிரித்தெடுத்து போல வலித்தது . உலகமே எனக்கு வெறுத்துப் போனது. என்னிடம் கேட்காமலேயே கண்ணீர் என்னையும்  அறியாமல் கண்களில் இருந்து வழிந்தது.
           தென்றலை என்மனம் எத்தனை தூரம் விரும்புகிறது என்று அன்று தான் எனக்கே புரிந்தது.மறுபடி எப்படி அவளை சந்திக்க போகிறேன், என்று அவள் குரலைக் கேட்க போகிறேன்? அவள் காந்த சிரிப்பை மறுபடி எப்போது ரசிக்கப் போகிறேன்? விடை தெரியாத கேள்விகள் எனது மனதை குத்திக் கிளறின.
            அன்றில் இருந்து எனக்கு எல்லாவற்றிலும் இருந்த பற்று குறைந்து விட்டது. என் நேரமும் ரூமுக்குள் அடைந்து கிடந்தேன். சாப்பாட்டைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது . தூங்க முடியாமல் தவித்தேன். எதிலும் விருப்பம் இல்லை . நன்றாக நீட்டாக உடுத்தும் நான். இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப் படுவதே இல்லை. கிடைத்ததை உடுத்தினேன். ஒரே உடுப்பை பல நாட்கள் உடுத்தினேன். கவலைக்கு அடையாளமாக தாடியும் வளராத தொடங்கியது.
பாதி தேவதாஸ் ஆகி விட்டேன்.
        அக்காவும் எனது மாற்றத்தை அவதானித்து விட்டாள். என்னை கூப்பிட்டு விசாரித்தாள்.
       " குமரன் உனக்கு என்ன நடந்தது. நான் உன்னை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீ முன்போல இல்லை. உனக்கு என்ன பிரச்சனை?  ஏதும் சுகமில்லையா? அக்கா வினவினாள்.
         நான் ஏதும் இல்லை என்று சமாளித்தேன். " அக்கா அருகில் வந்தாள். நீ எனது தம்பி உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா. நீ இப்போது கொஞ்ச நாட்களாக சரியாய் இல்லை. என்ன பிரச்சனை என்று என்னிடம் சொல்" அக்கா எனது தலையை தடவியபடி அன்பாக கேட்டாள்.
          என்னால் அதற்கு மேல் அடக்க முடியவில்லை. யாரிடமாவது என் மனதை திறந்து கண்ணீர் விட்டு கதறி அழணும் போல எனக்கு இருந்தது. அக்காவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதேன். அக்கா உண்மையில் பயந்து விட்டாள். தன் பயத்தை வெளிக் காட்டாமல்  குமரன் என்ன நடந்திச்சி?  ஏன் அழுகிறாய்? என்னிடம் சொல்லு. என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்" அக்கா அன்பாகக் கேட்டாள்.
      நான் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அக்காவிடம் சொன்னேன். "அக்கா நான் இந்தியா போகாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது . எனது கெட்ட நேரம் . அக்காவுக்கு இப்படி ஆகி நான் இந்தியா போக நேரிட்டது." நான் தேம்பினேன்.
        அக்காவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. எனக்கு என்ன சமாதானம் சொல்வதென்றும் தெரியவில்லை.
        "தம்பி அவள் இங்க  இருந்தால்  சரி ஏதும் பண்ணலாம் . அவள் இருப்பதோ தூர தேசம். நாம் நினைத்தாலும் ஒன்றும் பண்ண முடியாதே? நீ அவளையே நினைத்துக் கொண்டு உனது உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே.அதனால் ஆகப்போவது ஏதும் இல்லை " அக்கா எனக்கு ஆறுதல் சொன்னாள்.
                               "அக்கா நீ செல்வது எனக்கும் புரிகிறது,ஆனால் எனது மனதுக்கு புரியவில்லையே, அது பொம்மைக்காக ஆடம் பிடிக்கும் குழந்தையைப் போல ஆடம் பிடிக்கிறதே. நானும் மறக்கவே நினைக்கிறேன். நினைக்க நினைக்க அவள் நினைவு கூடுகிறதே தவிர குறையவே இல்லையே, நான் என்ன பண்ண?”
                 “குமரன் உனது தலையில் எது எழுதி  அதுவே நடக்கும் . அவள் உனக்கு கிடைக்கணும் என்று இருந்தால், எங்கு இருந்தாலும் அவள் உனக்கே கிடைப்பாள் . கவலைப்பட்டு ஆகப்போவது ஏதும் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே தம்பி நீ. அதுவும் எனது உயிருக்கும் மேலான தம்பி. எனது மகனுக்கு மேலே நீ . நீ இப்படி இருக்கும் போது எங்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? எங்களுக்காக சரி நீ உன்னை மாற்ற முயற்சி தம்பி”. அக்கா அன்புடனும் கவலையுடனும் பேசினாள்.
            நானும் என்னை மாற்றிக்கொள்ள  எத்தனையோ முயற்சித்தேன் .
முன்பை விட அதிகமாக நண்பர்களுடன் நேரத்தைக் கழித்தேன்.மச்சானோடு எங்கள் கடைக்குப் போனேன் .
       எத்தனை தான் என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தாலும்  சேற்றில் ஆழமாக பரவும் தாமரை கொடியின் வேர்போல அவள் நினைவு மனமெங்கும் ஆழமாக படரத் தொடங்கியது. நண்பர்களுடன் இருந்தாலும் மனம் என்னவோ அவளுடனே இருந்தது. நான் பிரமை பிடித்து போல இருப்பது நண்பர்களுக்கே சங்கடமாக இருந்தது. என்னால் அவர்கள் மகிழ்ச்சியும் கெடுவதை பார்த்து அவர்களுடன் பொழுது போக்குவதை நிறுத்தினேன். கடையிலும் அவள் நினைவால் என்னால் ஒழுங்காக வேலை பார்க்க  முடியவில்லை. அங்கு போவதையும் நிறுத்தி விட்டேன்.
           நாட்கள் நகர்ந்தன  நான் வீட்டை  விட்டு  வெளியே போவதையே நிறுத்தி விட்டேன் . யோசனையே எனக்கு நண்பன் ஆனது . கவலை என்னுடன் கை  கோர்த்துக் கொண்டது.
          "எனது நம்பர் தான் அவளிடம் இருக்கிறதே , அவள் சரி எனக்கு கால்  பண்ணி இருக்கலாமே அல்லது ஒரு மெசேஜ் சரி அனுப்பி இருக்கலாம். ஏன்  அனுப்பவில்லை? என் மேல் காதல் அவளுக்கு இல்லையா? இரண்டு நாளில் பதில் சொல்வதாக தானே சொன்னாள். ஒரு வேலை என்மேல காதல் வராததால தான் எனக்கு கால் பண்ணவில்லையோ?"
         மனது எதை எதையோ நினைத்து வேதனைப்பட்டது.  நாட்கள் நகர்ந்தன. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. நான் ஆளே தெரிய அளவுக்கு மாறி விட்டேன். வீட்டில் இருந்த சந்தோசமே என்னால் தொலைந்து விட்டது.
       ஒரு நாள் எனது நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அவன் வெளிநாட்டில் இருப்பவன். என்னோடு படித்தவன். எனது நல்ல நண்பன். அவன் ஊருக்கு வந்திருந்தான். வந்தவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். என்னை பார்த்ததும் அதிர்ந்து விட்டான்.
           "டேய் என்னடா  ஆச்சி  உனக்கு? ஏன் இப்படி மாறிட்ட? உன்னை பார்க்கவே அதிர்ச்சியா  இருக்கு எனக்கு". அவன்  மிகவும் கவலையுடன் கேட்டான். நான் பதில் சொல்லவில்லை . துயரத்துடன்  சிரித்தேன்.
         " அக்கா இவன் ஏன் இப்படி ஆனான்? என்ன நடந்தது இவனுக்கு? என்னாலேயே இவனை இப்படி பார்க்க முடியவில்லை. நீங்க எல்லோரும் எப்படி தான் இருக்கிறீங்க?” அவன் அக்காவிடம் கவலையுடன்  கேட்டான்.     
                என்ன ராஜன் பண்ண? நாங்களும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம். அவனால அவனை மாத்திக்க முடியல. வீட்டுல இருந்த சந்தோசமே மறஞ்சி போச்சி . இவனை பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டான்." அக்கா குரல் தழுதழுக்க கூறினாள்.
       சரி என்ன நடந்திச்சி? இவன் ஏன் இப்படி ஆனான்? அதை சொல்லுங்க முதலுல". ராஜன் வியப்புடன் கேட்டான்.
அக்கா நடந்ததெல்லாம் கூறினாள். ராஜனால் நம்ப முடியவில்லை. இவனா லவ் பண்ணினான்? நம்பவே முடியல அக்கா. காலேஜ்ல   படிக்கிறப்போ நாங்க பொண்ணுங்க பின்னால சுத்துவோம். இவன் பொண்ணுங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அதனால் தானோ என்னவோ பொண்ணுங்க இவனை சைட் அடிப்பாங்க. இவன் திரும்பியும் பார்க்க மாட்டான். எங்களுக்கே இவன் மேல பொறாமையா இருக்கும். இவன போயும் பொண்ணுங்க சைட் அடிக்கிறாங்களே என்று தலையில அடித்துக் கொள்ளுவோம் . இவனுக்கு காலேஜ்ல பெயரே விஸ்வாமித்திரர். இவனையும் ஒரு பொண்ணு மாத்திட்டா என்று நினைக்கிறப்போ வியர்ப்பா இருக்கு."  ராஜனால் நம்பவே முடியல.
           நல்ல நேரம் அம்மா வீட்டுல இல்ல. தங்கச்சிக்கு சுகமில்லை என்று இந்தியா போய் இருக்காங்க. அவங்க இருந்திருந்தா வீடு இரண்டாகி இருக்கும். இவன பார்த்தே அவங்க நோய்வாய்ப்பட்டிருப்பாங்க. அக்கா கவலையுடன்  கூறினாள்.
             "அக்கா நான் இவன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் நீங்க போய் சாப்பிட ஏதாவது பண்ணுங்க. உங்க கையால சாப்பிட்டு பலவருடம் ஆகுது."
          அக்கா உள்ளே சென்றாள். "குமரன் இப்போ சொல்லு. என்ன நடந்திச்சி? யாரு அவ?" ராஜன் ஏன் அருகே வந்து அமர்ந்தான்.
            நானும் எனது மனதில் உள்ள அனைத்தையும் எனது நண்பன் தோளில் இறக்கி வைத்தேன். அவ சொல்லாம கொள்ளாம போய்ட்டா. என்ன விரும்புகிறாளா இல்லையா என்று கூட எனக்கு தெரியல. நான் இந்தியா போய் இருக்காட்டி இப்படி எல்லாம்  நடந்து இருக்காது. நானும் அவளை பிரிந்திருக்க மாட்டேன்." ஏன் கண்களில் கண்ணீர் வடிந்தது.   
                 டேய் அழுது என்ன ஆகப்போகுது? நடக்கிறத பத்தி யோசி. நீ இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருந்த நடக்க போறது ஏதும் இல்ல. நீ தான் நாசமா போக போற. உன்னால உனது குடும்பமும் சீரழிய போகுது. பாரு அக்கா எவ்வளவு வேதனையில இருக்கா? அவ முகத்துல சந்தோஷத்தையே காணல. உன்னால அவங்களும் சந்தோசத்தை இழக்கணுமா? " ராஜன் எனக்கு புத்திமதிகள் சொன்னான்.
     " நான் என்ன பண்ணட்டும்   ராஜன்? நான் வேணும் என்று பண்ணலயே. நான் பெண்களுக்காக எனது சந்தோசத்தை தான் இழப்பேனா இல்லை எனது குடும்பத்தின் நிம்மதியைத் தான் குலைப்பேனா. நீயே சொல்லு . என்னைப் பற்றி உனக்கு தெரியாதா"?
           "உன்னைப்பற்றி தெரிந்ததால் தான் எனக்கே ஆச்சரியமாகவும் இருக்கு, பயமாகவும் இருக்கு. நீ இது வரை பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நீயே ஒரு பெண்ணிடம் உன்னை இழந்திருக்கிறாய் என்றால் அதன் சீரியஸ்னெஸ் எனக்கு புரிகிறது" ராஜன் குரலில் உண்மையான பயம் தெரிந்தது .
                  " சரி இப்போ என்கிட்டே சொல். உன் முடிவு தான் என்ன. என்ன பண்ணுறது உத்தேசம்? அவள் மறுபடி வரும் வரை இப்படியே கவலைப்பட்டுக்கிட்டு இருக்கப் போறியா? "
         " தெரியல ராஜன். என்ன பண்ணுறதுன்னு ஒன்னும் புரியல. கண்ண கட்டி காட்டுல விட்டது போல இருக்கு ." நான் கவலையுடன் கூறினேன்.
            "சரி நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு. எனக்கு 2 டேஸ் டைம் தா, நானும் யோசிக்கிறேன் என்ன பண்ணலாம் என்று. ஏதாவது பண்ணலாம். நீ உன்னையே குழப்பிக் கொள்ளுவதில்  எந்த லாபமும் இல்லை .  கவலை பிரச்சனைகளுக்கு தீர்வாகாது."  ராஜன் எனக்கு தைரியம் சொன்னான்.
           "அக்கா, நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க. இவன் பிரச்சனைக்கு ஏதாவது வழி  கண்டு பிடிப்போம். நான் இருக்கிறேன்". ராஜன் சாப்பிட்டு விட்டு அக்காவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு புறப்பட்டான்.
                            இரண்டு நாட்கள் கவலையிலும் கண்ணீரிலும் கழிந்தது.
           அன்று ராஜன் வந்தான். வீட்டில் அக்கா கணவரும் இருந்தார். மச்சானுக்கு என்மேல பிரியம் அதிகம்.எனது சகோதரிங்க இரண்டு பேருமே  கொடுத்து வச்சவங்க. அருமையான கணவன்மார்கள் அவர்களுக்கு அமைந்து இருந்தார்கள்.
           "ஏதாவது ஐடியா தோணிச்சா ராஜன். நீ வந்ததுக்கு அப்புறம் தான் மனதுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கு.இவன் போற போக்க பார்க்கிறப்போ எங்களுக்கே பயமா இருக்கு. இவனா இப்படி என்று எங்களுக்கே வியர்ப்பாய் இருக்கிறது." அக்கா ராஜனிடம் கவலையுடன் கூறினாள்.
          அக்கா நானும் எல்லா வழியிலும் விசாரிச்சிட்டேன். ஒன்னுல அவ இங்க வரணும் , அல்லது இவன் அங்க போகணும். இதை தவிர வேற வழியே இல்லை. அவ இப்போதைக்கு மறுபடி இங்க வர சான்ஸ்சே இல்ல. முதலுல அவ இவனை விரும்புறாளா தெரியாது. அவ போன் நம்பர் கூட இவன் கிட்ட இல்ல."
“இருக்கிறது ஒரே ஒரு வழி தான். அது இவன் அங்க போறது”.
         "எப்படி போறது? சுவிஸ் போறது ஈஸியா?" அக்கா சந்தேகத்துடன் கேட்டாள்.
          " ஈஸி இல்ல தான். அங்க போறதுன்னு யாராவது ஸ்பான்ஸர் பண்ணனும். நிறைய பணம் பேங்க்ல காட்டணும். அதுவும் ஈஸியா விசா கிடைக்காது. அங்க நமக்கு தெரிஞ்ச யாருமே இல்ல. ஆகவே அந்த வழி சரி வராது. இன்னும் ஒரு வழி தான் இருக்கு". ராஜன் மனதில் எதோ இருக்கிறது என்று எல்லோருக்கும் புரிந்தது.
        "என்ன வழி ராஜன் "? நான் ஆவலுடன் கேட்டேன்.
      "இரு சொல்லுறேன். இது கொஞ்சம் ரிஸ்க்கான வழி. கொஞ்சமில்ல நிறைய. இதை        விட்டா   வேற வழி இல்ல." ராஜன் தீர்மானமாக சொன்னான்.
          “ அது என்ன வழி தம்பி? நீ பீடிகை போடுறத பார்க்கிறப்போ பயமா இருக்கு." இது மச்சான்.
          “இல்ல மச்சான், நான் உங்கள பயமுறுத்த சொல்லல. இது கொஞ்சம் ரிஸ்க் தான். But  வேற வழி இல்ல நமக்கு. இவனும் மாற மாட்டான். இப்படியே விட்டா இவன் நிலைமையும் மோசமாகிடும். " ராஜன் கவலையுடன்  சொன்னான்.
"சரி என்ன வழி அதை சொல்லு முதலுல " பணம் எவ்வளவு போனாலும் பரவா இல்லை" அக்கா கேட்டாள்.
     அக்கா நான் இந்த இரண்டு நாளா நல்லா விசாரிச்சிட்டேன். ஒரே வழி தான் இருக்கு. அது அகதியா போறது"
  " என்னப்பா சொல்லுற? அகதியாவா ? அது ரொம்ப ரிஸ்க் ஆச்சே." அக்கா கலவரத்துடன் கேட்டாள்.
      உண்மை தான். ஆனால் , வேற வழி இல்ல. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அவங்க நிறைய பேர அனுப்பி இருக்காங்க. அவங்க  கிட்டயும்   விசாரிச்சிட்டேன். அவங்க கப்பல் மூலமா தான் அனுப்புறாங்களாம். இன்னும் சில வாரத்துல ஒரு பேட்ஜ் அனுப்புறாங்களாம். பணம் 15 லட்சம் கொடுக்கணும். இதை விட்ட வேற வழி எனக்கும் தெரியல  அக்கா." ராஜன் கவலையுடன் சொன்னான்.
       அக்காவின் முகத்திலும் மச்சானின் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. மச்சான்  பேசினார். " பணத்தை பத்தி கவலைப்படல. இவன் சந்தோஷத்துக்காக எதையும் செய்ய நாங்கள் தயார். ஆனால் இவனுக்கு இதால ஒரு பிரச்சனையும் வந்திடக் கூடாது. இவன் கஷ்டப்படக் கூடாது. அது தான் எங்களுக்கு வேணும்."
             மச்சான் இதுல என்னால ஒரு உத்தரவாதமும் தர முடியாது. எனக்கும் இவன் கஷ்டப்படக் கூடாது. ஆனால் இதை விட்ட வேற வழி இல்ல. ரெண்டே வழிகள் தான் இருக்கிறது. ஒன்று இவன் அவளை மறந்து பழையபடி முன்ன மாதிரி ஆகணும்.
இல்ல அவள் தான் வேணுமென்னா இந்த வழிய தான் தேர்ந்தெடுக்கணும்." ராஜன் உறுதியாக சொன்னான்.
      "குமரன் நீ என்ன சொல்லுற? உன் முடிவில் தான் இருக்கு எல்லாம். நீ என்ன சொல்லுற"? ராஜன் என்னிடம் கேட்டான்.
        " என்னால அவளை மறக்க முடியல. இங்க  இருந்து அவளை மறக்க முடியாம அணு அணுவாய் சித்திரவதை பட்டு சாகிறத விட அவளை தேடிப்போக எந்த கஸ்டத்தையும் அனுபவிக்க நான் தயார்"  என் குரலில் தெனித்த உறுதியைக் கண்டு மூவரும் மலைத்துப் போய் விட்டார்கள்.
           " அக்கா, மச்சான் நீங்க என்ன சொல்லுறீங்க? உங்கள் விருப்பம் என்ன? அது சரி அம்மாவுக்கு என்ன சொல்லப் போறீங்க? இவன் எதுக்காக போறான் என்று தெரிஞ்ச அம்மா விடுவார்களா? ராஜன் அவர்கள்      இருவரையும்   பார்த்துக் கேட்டான்.
            “அம்மாவிடம்   இதை கூறினால் அவ்வளவு தான். உயிரை விட்டிடுவாங்க. குமரனுக்கு சுவிஸ்ல வேலை கிடைத்து போறதா தான் சொல்லணும். பிறகு மெதுவா அம்மாவிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்." அக்கா தைரியம் சொன்னாள்.
            "சரி இவன் போற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அவளை பற்றி இவனுக்கு ஏதும் தெரியாது. சுவிஸ்ஸில் அவள் எங்க இருக்கிறாள்? என்ன பண்ணுகிறாள்? ஏதும் தெரியாமல் எப்படி அவளை அங்கு போய் தேடப்போகிறான்?" ராஜன் குரலில் கவலை தெரிந்தது .
      "ராஜன், நம்மோடு படித்த மாறன் அவங்க தாத்தா இருக்கிற அப்பாட்மெண்ட்ல தான் இருக்கிறான். அவன் மூலமா தான் நான் தென்றல் சுவிஸ் போனதை அறிந்து கொண்டேன்." 
       "நல்லதா போச்சி, அவனை பிடித்து அவள் விபரங்களை அறிந்து கொள்வோம். நாளை மோர்னிங் நீ ரெடியா இரு, நான் வருகிறேன். இருவரும் முதலில் அவனிடம் போவோம்."ராஜன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
                  குமரன் நீயும் நல்லா யோசி. யோசிச்சி முடிவு எடு. பணத்தைப்பத்தி கவலை இல்லை. அங்க போகும் பிரச்சனைகளுக்கு நீ முகம் கொடுப்பியா? எல்லாத்தையும் சமாளிக்க உன்னால முடியுமா என்றெல்லாம் நன்றாக யோசித்து ஒரு முடிவு எடு.  உன் எந்த முடிவுக்கும் நாங்கள் உனக்கு துணையா  இருப்போம்." அக்கா அன்புடன் எனது தலையை தடவிக் கொடுத்து விட்டு போனாள்.
          இரவு முழுவதும் யோசித்தேன். அவளை பார்க்க ஒரு சந்தர்ப்பம், அந்த நினைவே  எனக்கு ஒரு உத்வேகத்தை தந்தது. அவளை அடைவதற்காக எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க நான் தயார். அவள் இல்லாமல் நான் அனுபவிக்கும் துயரத்தை விடவா பெரிய துயரம் ஏற்றப்படப் போகிறது. கஷ்டமென்ன எனது உயிரே போனாலும் பரவாயில்லை. அவள்  நினைவு   எந்த ஒரு சோதனையில் இருந்தும் என்னை மீற்றெடுக்கும்.
           நான் எல்லாவற்றிக்கும் தயார் ஆனேன். அடுத்த நாள் காலை நானும் ராஜனும் தென்றலின் தாத்தா வசிக்கும் அப்பார்ட்மென்டுக்கு சென்றோம் எங்கள் நண்பனைக் காண.
         என்னை கண்டதும் அவனே அதிந்து விட்டான். “ஏண்டா என்ன ஆச்சி உனக்கு?. கடைசியா உன்ன பார்த்தபோ நல்லா தானே இருந்த? அதுக்குள்ள என்ன நடந்தது? பரதேசி போல ஆகிட்ட”.
           என்னால் பதில் சொல்ல முடியல. ராஜனை கண்டதும் மச்சான் எப்போ வந்த? உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி? என்று கட்டிப் பிடித்து சுகம் விசாரித்தான்.
             “மச்சான் இவன் விஷயமா தானடா உன்ன பார்க்க வந்தேன். பாரு இவன. பத்தியக்காரன் போல இருக்கிறான். எல்லாம் உங்க அப்பார்மென்டுக்கு வந்த ஒரு மோகினியால வந்த வினை."  ராஜன் அவனுக்கு பதில் சொன்னான் .
         ராஜன் நடந்ததை எல்லாம் அவனிடம் சொன்னான் ."மச்சி இவனை இப்படியே விட்டா அவள் நினைவிலே இவன் பைத்தியம் ஆகிடப்  போறான். நாம தான் எதாவது பண்ணனும் இப்போ"
   "ஓ அது தான் அவளை பத்தி வந்து என்கிட்டே விசாரிச்சானா? இவன முனிவன் என்று நினைச்சோமே, இந்த முனிவனையும் அந்த அகலிகை மயக்கிட்டாளா? மாறன் பரிகாசம் பண்ணினான்.
"சரி சொல்லு. நான் என்ன உதவி பண்ணனும்.? என்னால முடிஞ்சது நான் பண்றேன்" 
         மச்சி, இப்போ அவளை இவன் சந்திக்க இருக்கிற ஒரே வழி, இவன் சுவிஸ் போறது தான். அதுக்கு தான் நாங்க ஏற்பாடு பண்ண போறோம். அதுக்கு முன்ன, அவளை பற்றிய தகவல்கள் வேணும். அவ எங்க இருக்கிறா? அவள் அட்ரஸ், இப்படி அவ டீடெயில்ஸ் வேணும். அதை தெரிஞ்சிக்க நீ தான் உதவனும் . அவங்க தாத்தா வீட்டுல பேச்சு கொடுத்து இதை தெரிஞ்சிக்க முடியுமா" ராஜன் மாறனை கேட்டான்.
        மாறன் சிறிது யோசித்து விட்டு, "ஓகேடா மச்சி, நான்  ட்ரை பண்றேன். முடிஞ்சா வரை விசாரிக்கிறேன். ஒரு நாள் டைம் கொடு". என்றான். 
         நாங்கள் சிறிது நேரம் பேசிகிட்டு இருந்து விட்டு வீடு வந்தோம்.
      "சரி நான் போய் அந்த ஏஜென்ட் கிட்ட எல்லாம் விசாரிச்சிட்டு வாரேன். நாளைக்கு மாறனும் விசாரிச்சு சொல்லுறதா சொல்லி இருக்கிறான் தானே. எல்லாம் நல்லபடி நடக்கும். நீ மூளையை போட்டு குழப்பிக்காத சரியா" ராஜன் புறப்பட்டான்
                     
                     சந்திக்கப் போகிறேன் என்னவளை. அவளை மறுமுறை பார்த்ததும் உயிர் போனாலும் ஆனந்தமே. என் வாழ்வின் வசந்தம் அவள் தான். அவள் இன்றி வாழ்வதும் வீண். மனம் முழுக்க சாம்பிராணிப் புகையாக மனம் கவிழ்ந்தாள் .
           அவளை பற்றி கவிதை எழுதணும் போல இருந்தது . காகிதத்தை எடுத்தேன் . அவள் நினைவுகளை மையாக பேனைக்குள் அடைத்து  கவிதை எழுதத் தொடங்கினேன்

 உன்னை சந்தித்துவிட்டு
சம்மதமற்ற சமாதானத்தோடு
வாடுகிறேன் நான்
மறுபடியும் உன்னைக் காண்பேனே என

என் சிந்தனைகளின்
சந்து பொந்துக்களில் எல்லாம்
உனது சுகந்த வனம்
சுகமாய் அப்பிக் கிடக்கிறது

உதடுகள் அவ்வப்போது
ஓணம் பண்டிகை கொண்டாடுகிறது
ஒரு காரணமும் இன்றி

கீழே
நிலம் இருப்பதும்
நிலத்தின் மேல்
என் பாதங்கள் பதிவதும்
தெரியாத நிலையில் நான்
நடந்து கொண்டிருக்கிறேன்

எனது விழிகள்
மூடிக்கிடக்கின்றனவா இல்லை
திறந்துகிடக்கின்றனவா
எனக்கே தெரியவில்லை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எதிரே
நீண்டு விரிந்து படர்ந்து
நாணப் புன்னகை
பூசிக்கிடக்கும் உன்  முகத்தை

நானறியாமல்
உன்னிடமிருந்து தொற்றிக்கொண்டு வந்த
உன் அடையாளங்கள் எல்லாம்
ஒரு கூட்டமாய்க் கூடி
என்னை எழுதச் சொல்லி
வாஞ்சையுடன் வருடிக்கொடுக்கின்றன

இதோ
எழுதி கொண்டிருக்கிறேன்
உன்னை மனதில் சுமந்து 
உன் நினைவுகளை நெஞ்சினில் நிறுத்தி  ………


          .          கவிதையை படிக்கும் போது அவள் என்னுள்ளே எத்தனை ஆழமாக ஊடுருவி இருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது.
          அடுத்த நாள் ராஜனும் மாறனும் ஒன்றாக வந்தார்கள்.
        “என்ன ஆச்சி மாறன்? விசாரிச்சியா? ஏதும் தகவல்கள் கிடைத்ததா?" நான் ஆவலுடன் கேட்டேன்.
        “ அவ மாமா பையன் கிட்ட விசாரிச்சேன்டா. அவ சுவிஸ்சல சூரிச் என்கிற சிட்டில, போர்ட் சிட்டி என்கிற இடத்தில் இருக்கிறாள்.  அங்க Zurich university hospitalல நர்ஸாக வேலை பார்க்கிறாள். இவை எல்லாம் அறிந்து கொண்டேன். அவ விலாசம் தான் கிடைக்கல. அதை எப்படி கேட்கிறது என்றும் புரியல. கேட்டால் நிச்சயம் அவனுக்கு சந்தேகம் வரும்.அதால கேட்கல. இதெல்லாம் கேட்டதுக்கே என்ன சந்தேகமா பார்த்தான். நான் சமாளிச்சிகிட்டேன்." மாறன் பதில் சொன்னான்
           "நீ சொல்லுறதும் சரி தான். ஒரு பொண்ணோட விலாசத்தை அவங்க சொந்தக்காரங்க கிட்ட கேட்டால் யாருக்கும் சந்தேகம் வர தானே செய்யும்."ராஜன் சொன்னான்.
     " சரி விடு. இத்தனை விபரங்கள் கிடைத்ததே பெரிய விஷயம். இப்போ அவ இருக்கிற சிட்டி , இருக்கிற டவுன் எல்லாம் தெரிஞ்சிரிச்சி தானே. முக்கியமா அவ வேலை செய்யும் இடம் தெரிஞ்சி போச்சி. So, அவளை சீக்கிரமா கண்டு பிடிச்சிறலாம். அங்க சூரிச்ல எனக்கு ஜெகதீஷ் என்று ஒரு பிரண்ட் இருக்கான். அவனும் அகதியாய் போய் அங்க செட்டில்டு ஆனவன் தான். அவனோட நான் பேசுறேன். அவன் உனக்கு உதவி செய்வான். மத்தது, நான் அந்த ஏஜெண்ட்டோட பேசினேன், இன்னும் பத்து நாளுல அனுப்புவாங்கலாம், நீ யாழ்ப்பாணம் போக வேணும். அங்க இருந்து தான் கப்பல் புறப்படும். நீ ரெடியா இரு. நான் தேதி டைம் எல்லாம் கேட்டு சரியா சொல்லுறேன். யாழ்ப்பாணத்துக்கு நானும் உன்கூட வருகிறேன்." ராஜன் சொன்னான்.
11/1/2018
       
                      நான் போகும் நாளும் நெருங்கியது. அக்காவின் கண்ணீருக்கும் மச்சானின் கவலைக்குமிடையே விடை பெற்று நானும் ராஜனும் யாழ்ப்பாணம் புறப்பட்டோம்.
               ரயில் ஏறி அடுத்த நாள் காலை யாழ்ப்பாணம் சென்றடைந்தோம்.
அங்கே ஒரு லொட்ஜ்ல் தங்கினோம். எனது பயண நாளுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருந்தன. ரயில் பயண களைப்பில் மாலை  வரை தூங்கினோம்.
இரவு ஏஜென்டில் பயணம் பத்தி பேச வர சொல்லி இருந்தார்கள். நானும் ராஜனும் குளித்து உடை மாற்றிக்கொண்டு அங்கு சென்றோம்.
          எங்களை போல நிறைய பேர் அங்கு வந்திருந்தார்கள். அந்த ஏஜென்ட் பயணம் எப்படி, கடலில் ஏற்றப்படக்கூடிய ஆபத்துகள், அசவ்ரியங்கள் அதில் இருந்து எப்படி  பாதுகாத்து கொள்வது   என்பதை பற்றி விளக்கினார்.
                        “இது கொஞ்சம் ரிஸ்க் ஆன பயணம் தான். ஆனால் நாங்கள் எல்லா ஏற்ப்பாடுகளையும் செய்திருக்கிறோம். அதனால் பயப்படத் தேவை இல்லை. இது குறைந்தது ஐந்து நாட்கள் பயணமாக அமையலாம். கப்பல் இத்தாலிக்கு தான் செல்லும். அங்கே இருந்து தான் சுவிஸ்க்கு பயணம் மேற்க்கொள்ள வேண்டும். களவில் தான் பயணம் மேற்க்கொள்ள வேண்டும். அதற்கு இத்தாலியில் ஒரு கெண்டைனர் வாகனம் ஏற்ப்பாடு செய்திருக்கிறோம். அதில் நீங்கள் மறைவாக சுவிஸ்க்கு பயணம் செய்யலாம்.  எல்லா ஏற்ப்பாடுகளையும் ஒழுங்காக செய்திருக்கிறோம். அதையும் மீறி ஏதும் நடந்தால் கடவுள் கையில் தான் இருக்கிறது. அப்படி மனதில் பயம் இருந்தால், போக யோசித்தால், இப்போதே சொல்லி விடுங்கள். அப்புறம் எங்களை குற்றம் சொல்லக் கூடாது."  ஏஜென்ட் விளக்கமாக எல்லாம் கூறினார். யாரும்  எதுவும் பேசவில்லை 
           எப்படியும் பயணம் நாலு அல்லது ஐந்து நாட்கள் ஆகும். அதற்கு தேவையான உணவுப் பொருட்களையும் முடிந்த வரை உலர் உணவுவகைகளையும் எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். கடல் சுகவீனம் உண்டானால் அதற்கும் மருந்துகளை வாங்கி கொள்ளச் சொன்னார்.
         அன்று திங்கட்கிழமை .புதன் கிழமை அதிகாலையில் கப்பல் புறப்படும் எனவும், எல்லோரையும் அதிகாலை நன்கு மணிக்கு கடற்கரையில் நிற்க சொன்னார்.
           நாங்கள் விடை பெற்றுக்கொண்டு லொட்ஜ் வந்தோம்.
இன்னும் ஒரு நாள். அந்த ஒரு நாள் ஒரு யுகமாக தெரிந்தது. மனம் முழுக்க ஒரு வித படபடப்பு. ஒரு வித இன்பமும் துன்பமும் கலந்த நிலை. மனம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணம் அமைய வேண்டும் என்று இருக்கும்  கடவுள் அனைவரையும் வேண்டிக்கொண்டது .
           எனக்கு நல்ல துணையாக ராஜன் இருந்தான். எனக்கு தைரியம் சொல்லி என்னை தெம்பூட்டினான். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுக்கு சென்றோம். இப்படி ஒரு உற்ற நண்பன் கிடைத்தது, நான் போன ஜென்மத்தில் செய்த பலன் என்று மனம் நினைத்தது.
          அடுத்த நாள் பெரும் பரபரப்புடன் விடிந்தது. இரவு முழுக்க எனக்கு  தூக்கம்  இல்லை. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழும்பி தயார் ஆகி கடற்கரைக்கு சென்றோம்.
           " குமரன் நீ எதையும் யோசிக்காதே. எல்லாம் நல்லபடி உன் மனம் போல நடக்கும். எது நடந்தாலும் என்ன கஷ்டம் வந்தாலும் உன் மன உறுதியை விட்டு விடாதே. நீ அங்கு போனதும் ஜெகதீசுக்கு கால் பண்ணு. அவன் உன்னை வந்து பார்ப்பான். உனக்கு வேண்டிய எல்லா  ஏற்பாடுகளையும்  செய்து தருவான். உனக்கு தென்றலை தேட துணை இருப்பான் . நீ அவனது நம்பர், எனது நம்பர், அக்கா நம்பர் எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக் கொள். நீ அங்கு போனதும் மறக்காமல் முதல் வேலையாக எனக்கும் வீட்டுக்கும் பேசு. நாங்கள்   உனது போனை     எதிர்பார்த்திருப்போம்."  ராஜன் எனது கையை பிடித்த படி அன்பாகவும் துயரத்துடனும் பேசினான். எனக்கும் கண்கள் கலங்கி விட்டது. அவனை அன்புடன் ஆரத் தழுவிக் கொண்டேன்.
        அக்காவுக்கும் பேசினேன். அக்கா அழுகைனுடன் எனக்கு தைரியம் சொன்னாள்.
          எல்லோரும் வந்து விட்டார்கள். கப்பலும் வந்து விட்டது. அது கப்பல் அல்ல. ஒரு பெரிய போட் . மீன் பிடிக்கும் ட்ரோலர் போல பெரியது.
நாங்கள் கிட்டத்தட்ட 25 பேர் இருந்தோம். அதில் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள்.   
             ஒரு வழியாக கப்பல் புறப்பட்டது. கை அசைத்து ராஜன் விடை கொடுத்தான். நாட்டை விட்டு போகிறோம் என்ற நினைவில் அநேகம் பேரது கண்களில் கண்ணீர் வழிந்தது. சில பெண்கள் வாய் விட்டு அழுதார்கள்.
            கடல் பயணம் நினைத்தது போல இலகுவாக இருக்கவில்லை. கடல் சீற்றம் . அலைகளின் ஆட்டம் , கடல் காற்று என பல தொல்லைகள் உண்டாயின. நான்கு நாட்கள் முடிந்து விட்டது. எங்கள் கையில் இருந்த உணவுகளும் முடியும் நிலைக்கு வந்து விட்டது. இருந்த உணவுகளை சிறுவர்களுக்கு கொடுத்தது நாங்கள் பாதி பட்டினியில் இருந்தோம்.
        இறைவன் அருளால் கடல் ராணுவத்தால் எந்த தொல்லையும் நேரவில்லை. இரு முறை அவர்கள் ரோந்து கப்பல்கள் எங்களை தாண்டிச் சென்றன. ஏஜென்ட் அவர்களை முன்னமே கவனித்திருப்பார் போல. அவர்கள் எங்களை கண்டு கொள்ளவே இல்லை.
        ஐந்தாம் நாள் காலை நாங்கள் இத்தாலி கடல் எல்லையை அடைந்தோம். சில பெண்களும் சிறுவர்களும் சுகயீனமுற்றிருந்தார்கள். நாங்கள எல்லாம் பயணக் களைப்பிலும் பசிக்க களைப்பிலும் துவண்டிருந்தோம்.
                 இத்தாலி கடல் எல்லையை அடைந்தோம். கப்பலை ஒரு யாருமற்ற ஒரு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கடற்கரையில் நிறுத்தினார்கள்.
நாங்கள் எல்லோரும் இறங்கி அங்கே இருந்த புதர் அடர்ந்த பகுதில் மறைந்து அமர்ந்து கொண்டோம். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு அந்த கொண்டைனர் வாகனம் வந்து சேர்ந்தது. அதில் பெட்டி பெட்டியாக மருந்து பொருட்கள் நிறைந்திருந்தது. அதன் நடுவில் நடப்பதத்திற்கு போதுமான வலி இருந்தது. எங்கள் அனைவரையும் உள்ளே போய் பின்னால் அமர சொன்னார்கள். நாங்களும் அப்படியே செய்தோம்.நாங்கள் உள்ளே போனதும் , போக இருந்த வழியையும் பெட்டிகளை வைத்து அடைத்து, வாகனத்துக்குள் பெட்டிகள் மட்டும் இருப்பது போல மாற்றி விட்டார்கள்.
           வாகனம் புறப்பட்டது. இரண்டு இடங்களில் சோதனைக்காக வண்டி நின்றது எங்களுக்கு புரிந்தது. கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நெஞ்சு படபடக்க அமைதியாக இருந்தோம். இறைவன் அருளால் அவர்கள் உள்ளே ஏதும் சோதனை செய்யவில்லை.
            ஒரு வழியாக தப்பித் பிழைத்து சுவிஸ் வந்து சேர்ந்தோம். எங்களை இறக்கி விட்டுவிட்டு வாகனம் போய் விட்டது. நாங்கள் அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு வழி கேட்டுப் போய் சரணடைத்தோம்.
            சில மணித்தியாலங்களுக்கு பின்னர் எங்களை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே விசாரணைகள் நடந்தன. எங்களுக்கு சாப்பிட உணவும் தண்ணீரும் தந்தார்கள். சுகயீனமுற்றிருந்தவர்களை ஒரு டாக்டர் வந்து பரிசோதித்து மருந்து கொடுத்தார்.
       அன்று எங்கள் அனைவரையும் அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்தார்கள் . அடுத்த நாள் அனைவரையும் ஒரு பஸ்சில்  ஏற்றி இன்னொரு  இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
           அது ஒரு அகதிகள் முகாம். சூரிச் நகரத்துல இருக்கிறது  என்று அறிந்து கொண்டேன். அங்கே தான் எங்களை கொண்டு  போய் சேர்த்தார்கள். அங்கே நாங்கள் அகதிகளாக சேர்க்கப்பட்டோம்.
        அங்கே நிறைய பேர்கள் இருந்தார்கள். சிலர் வந்து பல மாதங்கள்  ஆகி விட்டன. சிலர் வந்து வருடங்கள் ஆனவர்களும் அங்கே இருந்தார்கள்.
  அங்கே எங்களுக்கு மூன்று வேளையும் உணவு, தண்ணீர் எல்லாம்  கிடைத்தன  எங்கும் வெளியே போக விடவில்லை. எப்படியோ அங்கே இருந்தவர்களிடம் phone கேட்டு ஜெகதீசுக்கு கால் பண்ணினேன்.
          அன்று மாலையே ஜெகா என்னைப் பார்க்க வந்தான். வரும் போது எனக்கு பாவிக்க போன் சிம் கார்ட் ஒன்றும் கொண்டு வந்து தந்தான்.
ஜெகாவுக்கு அத்தனை வயது இல்லை. கூடினால் 20 இருக்கும். என்னோடு அன்பாக பேசினான். ராஜன் அவனுக்கு கால் பண்ணி நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னதாக சொன்னான். தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதி அளித்தான்.
         " அண்ணா ஒரு வாரம் உங்கள வெளியில விட மாட்டாங்க. எல்லா நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு தான் வெளியில போக அனுமதிப்பாங்க . அது வரை பொறுத்திருங்க. அப்புறம் நாம தென்றலை தேடலாம். நான் நேரம் கிடைக்கிறப்போ உங்கள வந்து பார்க்கிறேன். ஏதும் அவசரம்னா எனக்கு கால் பண்ணுங்க" ஜெகா விடை பெற்று சென்றான்.
          நான் உடனே அந்த சிம்மை பாவித்து அக்காவுக்கு கால் பண்ணினேன். என் குரலை கேட்டு அக்கா சந்தோஷத்துல அழுவது எனக்கு கேட்டது. எனது பயணத்தை பற்றி எல்லாம் கேட்டாள். நானும் நடந்ததை எல்லாம் சொன்னேன்.
         அப்புறம் ராஜனுக்கு கால் பண்ணி நடந்ததெல்லாம் அவனுக்கு சொன்னேன். ராஜன் இன்னும் ஐந்து நாளில் ஊருக்கு போக போறதா  சொன்னான். அவன் இருப்பது பிரான்ஸ்.  அங்கு போனதும் கால் பண்ணுவதாக சொன்னான். எனக்கும்  ஆறுதல் சொன்னான். சீக்கிரம் தென்றலை சந்திக்க வேண்டும் என எனக்கு வாழ்த்துக்கள் சொன்னான்.
          16/1/2018
                   ஒரு வழியாக ஆறு நாட்கள் கழிந்தன. அந்த ஆறு நாளும் ஆறு யூகமாக தோன்றியது எனக்கு. ஊரில் இருந்த போது இவ்வளவுக்கு வருந்தியதில்லை நான். அங்கு அவள்  இல்லையே என்ற வருத்தம், அவளை பார்க்க  முடியவில்லையே என்ற வேதனை. இங்கோ, அருகில் இருந்தும் அவளை பார்க்க முடியாத ஒரு நிலை, அவள் இங்கு தான் இருக்கிறாள் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது.
         இலையில் விருந்து படைத்துவிட்டு சாப்பிட விடாமல் தடுத்தது போன்ற நிலையில் இருந்தேன் நான். டைமுக்கு டைம் சாப்பாடு, தூக்கம்  இதைத் தவிர வேறு ஏதும் இல்லை . முகாமை எத்தனை தடவை தான் சுற்றி வருவது?
முகாமுக்குள் இருந்து பார்க்கும் போது, கூண்டுக்குள் அடைபட்ட பறவை கூண்டின் வழியாக வெளி உலகத்தைப் பார்த்து ஏங்குவது போலவே நானும் எப்போது வெளியே போவேன் என்று ஏங்கினேன்.
          எனக்கு இருந்த ஒரே ஆறுதல் ஜெகா தான். அவன் எந்த நாளும் வருவான். வர முடியாவிட்டாலும் போன் செய்து பேசுவான். ஒரு தம்பி போல எனக்கு அவன் ஆகிவிட்டான்.
            ஒரு வழியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. எங்களை வெளியே போக அனுமதித்தார்கள். அடைபட்டுக் கிடந்த பறவையின் கூண்டை திறந்து பறக்க விட்டது போல சந்தோசம் அடைந்தேன் நான்.
           ஜெகாவுக்கு போன் பண்ணி சொன்னேன். அடுத்த நாள் ஜெகா வந்தான்.
      " ஜெகா இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. இதுக்கு மேலயும் நான் சும்மா இருந்தா  எனது நெஞ்சு வெடிச்சிடும். எனக்கு தென்றலை தேடணும். எனக்கு உதவி செய்யவாயா ?" நான் ஜெகாவிடம் கெஞ்சி கேட்டேன்.
       " அண்ணா உங்களுக்கு உதவத் தானே நான் இருக்கிறேன். ராஜன் அண்ணா எங்க குடும்ப நண்பர். அவர் சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா? கவலைப்படாதீங்க நாம தேடுவோம்." ஜெகா எனக்கு ஆறுதல் சொன்னான்.
            " ஜெகா நாளைக்கு நாம தென்றல் வேலை செய்யிற ஹாஸ்பிடல் போய் தேடுவோமா? எனக்கு அங்கு போக வழி தெரியாது. நீ தான் என் கூட வரணும்."   
         "நான் வரேன் அண்ணா. நாளைக்கு ஒரு பத்து மணி போல வரேன் . நாம  போகலாம். நீங்க ரெடியா இருங்க."  ஜெகா புறப்பட்டான்.
           நான் உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்வது போல உணர்ந்தேன். நாளைக்கு தென்றலை பரக்கத் போகிறேன் , அந்த நினைவே இனித்தது .
என்னைப்  பார்த்ததும் தென்றல்   அதிர்ச்சியில் உறைய போகிறாள் . என்னை இங்கே எதிர்பார்த்திருக்க மாட்டாள். என்னை கண்டதும் ஆனந்தப்படுவாளா இல்லை கலவரப்படுவாளா? இல்லை, இல்லை என்னை கண்டதும் மகிழ்ச்சி  அடைவாள்." என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
           அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. எப்போது விடியும் என விடிய விடிய கடிகாரத்தை பார்த்தபடி இருந்தேன்.
        அடுத்த நாள் விடிந்தது. நான் அதிகாலையிலே எழும்பி சவரம் செய்து குளித்து விட்டு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகி ஜெகா வரும் வரை காத்திருந்தேன்.
ஜெகா சொன்னது போல பத்து மணிக்கு வந்தான். ஜெகாவின் காரில் நாங்கள் புறப்பட்டோம்.
         ஜெகா தென்றல் வேலை செய்யும் சூரிச் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நோக்கி  காரை செலுத்தினான். சூரிச் ரொம்ப அழகா இருந்தது. வான் உயர்ந்த கட்டிடங்கள், வளைந்து நெளிந்து செல்லும் அழகான துப்பரவான சாலைகள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்ச்சியாக இருந்தது. 
         ஜெகா ஒவ்வொரு இடமாக விளங்கப்படுத்திக் கொண்டு காரை ஓட்டினான். ஹாஸ்பிடல் நெருங்க  நெருங்க    எனது இதய படபடப்பு அதிகமானது. உடம்பில் ஒரு வித நடுக்கம் தெரிந்தது.
       ஹாஸ்பிடல் முன்னாள் இருந்த பார்க்கிங்கில்  கரை நிறுத்தி விட்டு நானும் ஜெகாவும் ஹாஸ்பிடல் உள்ளே சென்றோம். அங்கே இருந்த receptionக்கு சென்று அங்கு இருந்த ஒருவரிடம் தென்றலைப் பற்றி விசாரித்தோம். அவர் அவளது விபரங்களைக் கேட்டார். எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் சொன்னோம்.
          அவர் அங்கிருந்த இன்னோரு பெண்மணியை அழைத்து நான் சொன்ன விபரங்களை சொல்லி தென்றலைப் பற்றி கேட்டார். அந்த பெண் அப்படி ஒருத்தரும் அங்கு வேலை செய்யவில்லை என்று சொன்னாள். எனக்கு அதிச்சியாக இருந்தது.
           ஜெகா "மேடம்  கொஞ்சம் நல்ல விசாரிச்சு பாருங்கள். உங்களுக்கு தெரியாட்டியும் வேற யாருக்காவது தெரிஞ்சிருக்கலாம். ப்ளீஸ் மேடம்." என கெஞ்சி கேட்டான்,
        அதற்கு அந்தப் பெண் " நான் தான் இங்க ஸ்டாப்'ஸ் ஹெட்  இங்க வேலை செய்யிறவங்க எல்லோரையும் எனக்குத் தெரியும், நீங்க சொல்லுற பெயரிலோ அல்லது, அடையாளத்திலோ இங்க யாரும் இல்ல." என்று சொன்னாள்.
              எனக்கு கண்கள் இரண்டும் இருண்டது. மயக்கம் வரும் போல தோன்றியது. நான் மிகவும் நம்பி வந்தேன் இங்கே தென்றலை சந்திக்கலாம் என்று. அவள் அங்கே இல்லை என்றதும் எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டன
 17/1/2018
          எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. என்னால் நடக்கக் கூட முடியவில்லை . ஜெகா என்னை கூட்டிக் கொண்டு காருக்கு வந்தான்.
       ஜெகாவுக்கே குழப்பமாக இருந்தது, அவன் முகத்தில் தெரிந்தது."அண்ணா இப்போ என்ன பண்றது? அவங்கள பத்தி தெரிஞ்ச ஒரு விஷயமும் இல்லன்னு ஆகிப் போச்சி. இனி எப்படி அவங்கள தேடுறது?" ஜெகா கவலையுடன் கேட்டான்.
           "எனக்கும்  புரியல ஜெகா  என்ன பண்ணுறதுன்னு தெரியல." நான் குரல் கம்ம பேசினேன். ஜெகா கொஞ்ச நேரம் யோசனை செய்தான்.
           " அண்ணா அவங்க இருக்கிற ஏரியா தெரியும் தானே. அங்க போய் தேடுவோமா ? அது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் எனக்கு தெரிஞ்சவங்களும் அங்க இருக்காங்க. முடிஞ்ச  வரை விசாரிச்சு பார்க்கலாம்." 
          ஜெகா சொன்னது எனக்கு நல்ல ஐடியாவா  பட்டது .
       அண்ணா உங்கள விட்டுட்டு நான் புறப்படுறேன். வேலைக்குப் போகணும். நாளைக்கு மோர்னிங் வந்து உங்கள கூட்டிகிட்டு போறேன், சரியா?" நானும் சரி என்றேன்.
         அங்கிருந்து புறப்பட்டு கேம்ப் வந்தோம். ஜெக என்னை விட்டு விட்டு போய் விட்டான்.
        ரூமுக்கு வந்த பிறகு எனக்கு எதுவுமே ஓடவில்லை. சந்தோசம் எல்லாம் கானல் நீர் போல ஆகிவிட்டது. தென்றலை பார்த்து விடலாம்  என்ற நம்பிக்கையும் பார்க்கப் போகிறேன் என்ற சந்தோஷமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.
                மனதெல்லாம் கவலைகளால் கனத்தது. தலை வெடித்து விடும் போல வலித்தது. இத்தனை தூரம் வந்தும் தென்றலை பார்க்க முடியவில்லையே என்று நினைக்கும் போது அழுகை வந்தது . என்னையும் அறியாமல் அழுதும் விட்டேன்.
        அன்று முழுவதும் படுக்கையை விட்டு எழும்பவே இல்லை.
எல்லாம் வெறுப்பாக இருந்தது. சாப்பிடக் கூட விரும்பவில்லை.
வந்தது தவறோ என்று கூட மனம் நினைத்தது.
         அடுத்த நாள் ஜெகா வந்தான். நானும் அவனும் தென்றல் வசிப்பதாக சொன்ன டவுனுக்குப் போனோம். ஜெகா அவனுக்கு  தெரிந்த வீடுகள் சிலவற்றில் என்னையும் கூட்டிக்கொண்டு போய் தென்றலைப் பற்றி விசாரித்தான். அவர்கள் தெரியாது என்று கூறினார்கள். சிலர் அவளது பெற்றோரைப் பற்றி கேட்டார்கள். எங்களுக்கு தெரிந்தால் தானே பதில் சொல்ல?
        அங்கிருந்த கடைகளிலும் விசாரித்துப் பார்த்தோம். வீதியில் சென்ற சிலரிடமும் விசாரித்தோம். பதில் பூச்சியமாகவே இருந்தது.
        எங்களுக்கும் தேடித் தேடி சலித்து விட்டது. என்ன பண்ணுறதென்றும் தெரியல. நானும் ஜெகாவும் புறப்பட்டோம். ஜெகா அங்கிருந்த முக்கியமான ஷாப்பிங் சென்டர், கோவில்கள் எல்லாம் கூட்டிப் போய் காண்பித்தான்.
        எனக்கு எல்லாமே வெறுத்துப் போய் விட்டது. தென்றலை தேட வேறு வழி ஏதும் தெரியவில்லை. எனக்கு அகதிகளுக்கு கொடுக்கும் பணம் என செலவுக்கென்று சிறு தொகையை சுவிஸ் அரசாங்கத்தால் தந்தார்கள்.
         அடுத்த நாள் தொடக்கம் நான் ஜெகாவை எதிர்பார்க்காமலே ஒவ்வொரு   இடமாக தென்றலை தேட ஆரம்பித்தேன்.
         பாவம் அவன், எனக்காக அவனது வேலைகளையும் போட்டு விட்டு என் பின்னால் சுற்றினான். அவனுக்கென்ன தலையெழுத்தா என் பின்னல் சுற்ற?
 இனி அவனாலும் தான் என்ன பண்ண முடியும்?
         ஆகவே நானே தென்றலை தேட தொடங்கினேன். காலை பகல் நேரங்களில் ஷாப்பிங் மால்கள்   போய் தேடினேன். மாலைகளில் கோவில்களுக்குச் செல்வேன். இப்படி எந்த நாளும் ஒவ்வொரு   இடமாக போய் தேடினேன். எனக்கு கண்ணில் மட்டும் அவள் தென்படவே இல்லை.
        நாட்கள் ஓடின. எனது தேடுதலும் நிற்கவில்லை. உறக்கம் மறந்தது, பசி பறந்தது. ஒவ்வொரு  இடமாக   சளைக்காமல் தேடினேன்.
       கொஞ்சம் கொஞ்சமாக நான் மெலிவுறத்  தொடங்கினேன். உண்ணாமல் உறங்காமல் தேடியதில் எனது உடலும் களைப்படைய தொடங்கியது. தென்றலை  பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நம்பிக்கை இருந்த இடத்தில் அவநம்பிக்கை இடம் பிடிக்க கூடவே கவலையும் மனதை அரித்தது.
        நான் அக்காவுடனும் பேசவில்லை, ராஜன் உடனும் பேசவில்லை. பேசினால் திரும்பி வா என்று சொல்லுவார்கள் என்ற பயம்
          நான் கோவில்களே கதி என்று  இருக்க ஆரம்பித்தேன், கோவிலுக்கு அவள் வருவாள் என்ற எதிர்பார்ப்பு ஒரு காரணம், அந்த இறைவன் சரி அவளை கண்ணில் காட்டமாட்டானா என்ற நப்பாசை இன்னோரு காரணம். கடவுளுக்கு கூட என் மேல் கருணை பிறக்கவில்லை.
       நாள் போகப்போக நான் மிகவும் நலிவுற்றேன். அடிக்கடி சுகமில்லாமல் போனது.என்னை பார்க்க எனக்கே பிச்சைக்காரன் போல தோன்றியது. ஜெகா அடிக்கடி கால் பண்ணுவான். சில நேரம் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு போவான்.
          இப்படியே கவலையிலும் கண்ணீரிலும் எனது நாட்கள் நகர்ந்தன.
        அன்று ஜெகா என்னை பார்க்க வந்திருந்தான்," அண்ணா நாளை நான் ஒரு விசயமா வேற ஒரு சிட்டிக்குப் போறேன். Aargau என்கிற சிட்டி. நீங்களும்  வாங்க. உங்களுக்கும் பொழுது போகும். சிறிது ஆறுதலாகவும் இருக்கும் . எனக்கும் துணையாக இருக்கும் " ஜெகா என்னை கூப்பிட்டான்.
         வேண்டாம் தம்பி, நான் இருக்கிற நிலையில எங்கும் போக ஆசைப்படல " நான் மறுத்தேன்.
      “அண்ணா எனது  சித்தி வீட்டில் ஒரு விசேஷம். வேறு யாரும் இல்லை. நாங்க மட்டும் தான். அம்மாவும் அப்பாவும் மோர்னிங் போய்டுவாங்க. எனக்கு இன்னிக்கு நைட் ஷிப்ட். வேலை முடிந்து வர காலை ஒன்பது மணியாகும். நாம பத்து மணி போல புறப்படலாம். நீங்க அருகில் இருந்தால் நான் தூங்காம வண்டியை ஓட்டுவேன். அம்மா அப்பா கிட்டயும் உங்கள கூட்டிகிட்டு வாறதா சொல்லிட்டேன். ப்ளீஸ் அண்ணா வாங்க." ஜெகா கெஞ்சினான்.
       நானும் அவனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று சொன்னேன். 
அடுத்த நாள் நானும் ஜெகாவும் புறப்பட்டோம்.     எனக்கு உடம்பு ரொம்ப களைப்பாக இருந்தது. இருந்தாலும் நான் ஜெகாவுடன் சென்றேன், வலி நெடுக்க ஜெகா தான் பேசினான். நான் ஒரு சில வார்த்தைகளுக்கு பதில் சொன்னேன்.
            சில மணி நேர பயணத்துக்குப் பின் அவன் சித்தி வீட்டை அடைந்தோம். காரில் இருந்து இறங்கும் போதே எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாக இருந்தது.ஜெகாவின் சித்தி வீடு இரண்டாம் மாடியில் இருந்தது.         லிப்ட் பிஸியாக இருந்தது. ஆகவே படிக்கட்டில் ஏற ஆரம்பித்தோம்.  ஜெகா முன்னால்  போக நான் பின்னால் படிக்கட்டுகளில் ஏறினேன். பாதி படிக்கட்டுகள் தான் ஏறி இருப்பேன். எனது தலை சுற்றியது. கண்கள் இருண்டன. கால்கள் தரையை விட்டு நழுவத் தொடங்கியது. நான் நிலை தடுமாறி விழுந்து படிகளில் உருள ஆரம்பித்தேன் . ஜெகா அண்ணா என்று அலறுவது கேட்டது. அவ்வளவு தான் எனக்குத் தெரியும் நான் மயக்கமுற்றேன்.         
         நான் கண் விழித்த போது ஒரு கட்டிலில் படுத்திருந்தேன். கண்களை திறக்கவே முடியவில்லை. தலை எல்லாம் விண்விண் என்று வலித்தது. உடம்பை அசைக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தேன். எனது கையில் ஊசி குத்தி செலென் ஏறிக்கொண்டிருந்தது . எனது உடம்பு முழுக்க வயர்கள். எனது இதயத் துடிப்பை காட்டிக்கொண்டிருந்தது அங்கிருந்த ஒரு இயந்திரம்.
       நான் இருப்பது ஹாஸ்பிடல் என்று புரிந்தது எனக்கு. அந்த அறையில் என்னை தவிர யாரும் இல்லை. நான் உடம்பை அசைத்து எழும்ப   முயன்றேன். என்னால் அசையவே முடியவில்லை.
        கண்ணை மூடிக்கொண்டு அப்படியே படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு பெண் நர்ஸ் வந்துகொண்டிருந்தது   தெளிவில்லாமல் தெரிந்தது. அவள் அருகில் வந்தாள். என் அருகில் வந்ததும்” குமரன் எப்படி இருக்கிறது. நான் பேசுவது கேட்கிறதா” என்று தமிழில் கேட்டாள்.  அவள் பேசியது விளங்கியது. அந்தக் குரலை கேட்டது போலவும் இருந்தது.  நான் கண்களை சுருக்கி கூர்ந்து நோக்கினேன்.
         நான் காண்பது கனவா? எனக்குப் புரியவில்லை. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை .
         என் எதிரில் நின்றது தென்றல். யாருக்காக இங்கு வந்தேனோ. யாருக்காக இதயம் துடித்ததோ அவளே தான். எனது தென்றல் தான். அதிர்ச்சியில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதில் கண்ணீரே வந்தது.
     " தென்றல் இது நீங்களா" அதற்க்கு மேல் பேசி வரவில்லை. நான் மயங்கி சாய்ந்தேன். b]
               

                            இனி தென்றலின் பகுதி ஆரம்பம் . தென்றல் தவழ போகிறாள்


                 நான் தென்றல். இது எனது வீட்டில் எனக்கு வைத்த செல்லப் பெயர். நான் பிறந்து வளர்ந்தது சுவிஸ்சில் . என்னுடன் கூடப்பிறந்தவர்கள் யாரும்  இல்லை. அதனால் தானோ என்னவோ  என் வீட்டில் நான் செல்லப்பிள்ளை. என் வீட்டின் இளவரசி நான். நான் வைத்ததே வீட்டில் சட்டம்.
             எனது பெற்றோர் இலங்கையர்கள். எங்கள் பூர்வீகம் இலங்கையில் யாழ்ப்பாணம். எங்கள் அனைத்து சொந்தங்களும் அங்கு தான் இருந்தார்கள். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, மாமி என ஒரு பெரிய பட்டாளமே அங்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு நங்கள் இலங்கை போவோம்.
             அப்படித்தான் இந்த வருடமும் நாங்கள் இலங்கை சென்றோம்.என் வாழ்வை திசை மாற்றிய பயணம் அது. இத்தனை நாளும் கவலை என்றால் என்ன என்று அறியாத என்னையும் கவலைப்பட வைத்த பயணமது.
         இலங்கையில் தான் நான் சந்தித்தேன் குமாரனை. இலங்கை சென்ற முதல் நாள் எங்களுக்கு உதவியத்தில் தொடங்கிய நட்பு அது.
        குமரன் பார்க்க களையாக, கம்பீரமாக இருப்பான். அமைதியான அவன் குணமும், அலட்டிக் கொள்ளாத அளவான அவன் பேச்சும் எந்த பெண்ணையும் அவனை மறுபடி ஏறெடுத்துப் பார்க்கத் தோன்றும் உருவம் அவனது. அவன் கண்கள் மனதை ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது.
          முதல் நாள் நாங்கள் ஏர்போர்ட்டில் இருந்து எங்கள் மாமா வீட்டுக்கு  போன போது, பெட்டிகளை இறக்கி லிப்ட்டில் ஏற்ற உதவியதில் தொடங்கிய பழக்கம். அதன் பிறகு பலமுறை எதிர்பாராமல் சந்தித்தோம், ஒவ்வொரு முறையும் அவன் எங்களுக்கு உதவினான்.
         உதவியில் தொடங்கிய நட்பு, போனில் அடிக்கடி பேசும் அளவுக்கு நீண்டது. அவனுடன் பேசும் போது மனதுக்கு ஒரு வித இனிமையான சுகம். என்றுமே வரம்பு மீறி பேசமாட்டான். பேச்சில் எப்போதும் மரியாதையை இருக்கும். கலகலப்பாக பேசுவான். அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருக்கணும் போலத் தோன்றும்.
             இப்படி பேசத் தொடங்கி நாங்கள் அடிக்கடி வெளியில் சந்திக்க ஆரம்பித்தோம். அவன் துணை எனக்கு தேவைப்பட்டது. இலங்கையில் எனக்கு இடங்கள் சரியாகத் தெரியாது. தனியாக போகவும் பயம். அதனால் குமாரனை அடிக்கடி கூட்டிக்கொண்டு, போக வேண்டிய இடத்துக்கெல்லாம் போனேன். நான் கூப்பிட்டு என்றும் அவன் வர மறுத்ததில்லை
           சில நேரம் மனது அவனை பார்க்கணும் என்று ஏங்கும். அவனை பார்ப்பதற்காகவே அடிக்கடி அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் என்று அவனை கூப்பிடுவேன். கூப்பிட குரலுக்கு ஓடிவருவான். என் மனதிலும் அவன் இடம் பிடிக்கத் தொடங்கினான். அடிக்கடி என் மனது அவனை நினைக்கும். அவனுடன் பேச மனம் ஏங்கும். அவனுடன் ஊர் சுற்ற ஆசையாக இருக்கும்.
      இவையெல்லாம் எனக்கு புதுவித அனுபவங்கள். சுவிஸ்ஸில் எத்தனையோ நவ நாகரீக வாலிபர்களை சந்தித்திருக்கிறேன். எவரிடமும் எனக்கு ஈடுபாடு வந்ததில்லை. இது வரை எந்த ஒரு ஆண்மகனிடனும் உண்டாகாத ஈடுபாடு குமரன் மேல் எனக்கு உண்டானது.
        அதன் பெயர் காதலா?, சொல்லத்தெரியவில்லை. இது எனக்கு புது அனுபவம். அதனால் இதற்கு என்ன பெயர் சொல்வதென்று தெரியவில்லை . காதலா நட்பா? எதுவாக இருந்தாலும், அவன் துணை எனக்கு தேவைப்பட்டது. அவன் நெருக்கத்தை எனது மனம் விரும்பியது .         
        அவனுடன் வெளியே போகும் போது கவனித்திருக்கிறேன், அவன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. எத்தனை அழகான பெண்ணாய் இருந்தாலும் அவன் சலனப்பட்டதில்லை. அவனது அந்த குணம் எனது மனதில் அவனை இன்னும் உயர்த்தியது.
            அன்று நானும் குமரனும் ஷாப்பிங் மால் போயிருந்தோம். வாங்க வேண்டியதில் பாதி  பொருட்களை வாங்கி கொண்டு கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதத்திற்காக ஒரு கடைக்குப் போனோம்.  ஆடர் பண்ணிவிட்டு இருவரும் ஒரு ஓரமாக அமர்ந்தோம்
              குமரன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் யோசனையில் இருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.
             "என்ன சார் ரொம்ப அமைதியா இருக்கிறீங்க யோசனை பலமா இருக்கே" நான் விளையாட்டாக கேட்டேன்.
        இல்லை, ஒன்றும் இல்லை என்று சொன்னான் .நான் வற்புறுத்திக் கேட்டேன்.
            "இல்லப்பா   தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன் நான். மனதில் இருக்கிறதை சொல்லவும் வேணும் . சொல்லவும் முடியவில்லை . " குமரன் மென்று விழுங்கினான். 
                    "யார் கிட்ட சொல்ல முடியல? ஏதும் லவ் மேட்டர? உங்க தடுமாற்றத்தை பார்த்த எனக்கே சந்தேகமா இருக்கு என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்" ? நான் அவனைத் தூண்டினேன்.
                "எனது மனதில் உள்ளதை சொன்னால் நீங்க என்னை என்ன நினைப்பீங்களோ? அது தான் தயக்கமா இருக்கு ." அவன் தயங்கித் தயங்கி பேசினான்.
           "என்னிடம் சொல்ல என்ன பயம் ? நான் ஒன்னும் உங்கள தப்பா நினைக்க மாட்டேன்". நான் ஆவலுடன் கேட்டேன்.
                  "சரி நான் சொல்லுறேன். நான் சொல்லுறதை கேட்டு நீங்க கோபப்படவோ என்னை  வெறுக்கவோ கூடாது. சரியா." குமரன் குரலில் பயம் தெரிந்தது.
                      "நான் ஒன்னும் கோபப்பட மாட்டேன். என்னை என்ன லவ் பண்ண போறேன் என்றா சொல்ல போறீங்க"? சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தேன்.
            " அதை தான் சொல்ல போறேன். உண்மையும் அது தான்." அவன் மெதுவாகக் கூறினான்.
          நான் அதிர்ச்சியில் உறைந்தேன். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எனது மனதில் அவன் மேல் கோபம் வரவில்லை. பதிலாக மனது சந்தோசத்தில் குதித்தது. எனது மனமும் இதை தான் எதிர்பார்த்திருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து கொண்டேன்.
                       " என்ன சொல்கிறீர்கள் ? உண்மையாவா சொல்கிறீர்கள்? "  நான் தயங்கித் தயங்கி கேட்டேன்.
        “ உங்களை பார்த்த அன்றே உங்கள் மேல எனக்கு ஒரு ஆர்வம் தோன்றி விட்டது. நாளாக நாளாக உங்களோட பழகப் பழக உங்கள் மேல எனக்கு அன்பு அதிகமானது. உங்களிடம் எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியல . ஆனால் நான் உண்மையாவே காதலிக்கிறேன் . உங்களுக்கு விருப்பம் என்றால் நான் கொடுத்து வைத்தவன் . இல்லையென்றால் எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று நினைத்துக் கொள்வேன் ." அவன் உருக்கமாக பேசினான்.
           எனது மனம் ரெக்கை கட்டிப் பறந்தது. குமரன் என்னைக் காதலிக்கிறான். இதுவே எனக்கு  இன்ப அதிச்சியாக இருந்தது.
         இருந்தாலும் நான் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
                 " நீங்க  என்னை விரும்ப என்ன காரணம்? நான் சுவிஸ்ஸில் இருக்கிறதா ? இல்லை எனது அழகா? " நான் குறும்பாக குமாரனிடம் கேட்டேன்.
            குமரன் வாய் விட்டு சிரித்தான்.
              "எதற்கு சிரிக்கிறீர்கள்? சிரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நான் கேட்டு விட்டேன்." நான் புரியாமல் கேட்டேன்.
                        சுவிஸ்ஸில் இருக்கிறவங்களுக்கு இரண்டு கொம்பா இருக்கு ? உங்கள அழகென்று யாரு சொன்னது"?  அவன் சிரித்தபடி குறும்பாகக் கேட்டான்.
           "அடிங்க, நான் அழகில்லையா?" நான் கோபத்துடன் கேட்டேன்.
                 " நீங்க பேரழகி இல்லை . ஆனால் லட்சணமான, ஒரு தமிழ் பொண்ணுக்கு உரித்தான எல்லா குணமும் அமைந்த ஒரு பொண்ணு . வெளிநாட்டில் இருந்தாலும்   தமிழர் பண்பை மறக்காத பொண்ணு . உங்க கிட்ட என்னை ஈர்த்ததே இவைகள் தான். அது போக எனக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகணும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அப்படி எண்ணமிருந்தால் இதுக்குள்ள நான் வெளிநாடு போய் இருப்பேன். "
          “ காதல் வர அழகும் பணமும் தேவை இல்லை . அது எங்கு வரும் யார் மேல வரும் எப்படி வரும் என்று எவருக்கும் தெரியாது. ஒருவருடைய நல்ல  குணங்கள்,கலகலப்பான பேச்சுகள். இப்படி சில விஷயங்கள்    மனதைக்  கவரும் போது அந்த கவர்ச்சி, அந்த ஈர்ப்பு காதலாக மாறும் . நமக்குள்ளும் நடந்ததும் அது தான்."
             
            குமரன் நிதானமாக உறுதியாகப் பேசினான். அவன் பேசிய விதம் எனக்குப் பிடித்திருந்தது           
           “ நான் உங்களை வற்புறுத்தவில்லை. அப்படி வரும் காதலில் எனக்கு  விருப்பமும் இல்லை . உங்கள் மனதுக்கு என்னைப் பிடித்திருந்தால்  , உங்களுக்கும் என் மேல்  காதல் இருந்தால் எனது காதலை ஏற்றுக் கொள்ளுங்கள். என்றும் உங்களுக்கு நான் உண்மையானவனாக  இருப்பேன். என்றும் உங்கள் மேல் மாறாத காதல் கொண்டிருப்பேன்.காலமெல்லாம் உங்களை என் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்." அவன் குரல் தழுதழுக்க பேசினான்.
        அவன் என்னை எத்தனை தூரம் விரும்புகிறான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். என் மனமெல்லாம் பனிமழை பெய்தது போல ஜில் என்று இருந்தது. என் மனம் அவனை விரும்புகிறது என்று அந்த நொடியில் உணர்ந்து கொண்டேன்.
          ஆனாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் அவனை நான் என்ன பதில் சொல்லுவேனோ என்று தவிக்க விட நினைத்தேன்.
            " எனக்கும் உங்களை பிடிக்கும். உங்களிடம் குறை சொல்ல இதுவரை எந்தக் குறையும் நான் கண்டதில்லை .   எல்லோருக்கும்  உதவும் குணம் கொண்டவர் நீங்கள். இது வரை என்னிடம் நீங்கள் வரம்பு மீறி நடந்ததும் இல்லை , பேசியதும் இல்லை . உங்களை நல்ல நண்பனாக எனது மனம் ஏற்றுக் கொண்டது . காதலனாக நான் சிந்திக்கவில்லை. எனக்கு இரண்டு நாட்கள் சிந்திக்க டைம் தாங்க. நான்   நல்ல முடிவா சொல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் ." நான் பதில் சொல்ல டைம் கேட்டேன்.
       அவனும் சரி என்றான்.நாங்கள் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு வீடு வந்தோம். அவன் என்னை எனது அபார்ட்மெண்ட் வாசலில் விட்டு விட்டு சென்றான்.
             அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. நடந்ததை மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது. அன்று நடந்ததை நினைக்கையில் இன்பமாக இருந்தது. அவன் நினைவில் இரவு தூக்கம் வரவில்லை. கனவிலும் அவனே வந்தான்.
         அடுத்த நாள் நான் குமரனுக்கு கால் பண்ணவில்லை. அவனை குழப்பத்தில் விடுவோம் என நான் போன் பண்ணவில்லை. போனையும் ஆப் செய்து வைத்தேன்.
          மாலையில் அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. ' , நான் அவசரமாக இந்தியா போகிறேன். விரைவில் திரும்பி விடுவேன்.'
       எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக அவசரமாக இந்தியா போகிறான்? நேற்று அது பற்றி அவன் ஏதும் கூறவில்லையே? என்ன அவசரமோ? புரியவில்லை எனக்கு.
          நான் கால் பண்ணினேன். அவன் போன் சுவிச் ஆப் என்று வந்தது. சரி, அவன் போனதும் கால் பண்ணுவான் என மனதை சமாதனப்படுத்திக்  கொண்டேன்.
        அவன் போய் இரண்டு  நாள் ஆகியும் அவனிடம் இருந்து எந்த காலும் வரவில்லை. எனக்கு காரணம் புரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. அவன் இலங்கை நம்பருக்கு கால் செய்து பார்த்தேன். அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்தது.
         எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுடன் பேசாமல் மனமெல்லாம் வெறிச்சோடிப் போனது.
          மூன்றாம் நாள், எனக்கு சுவிஸ்ஸில் இருந்து போன் கால் வந்தது. எனது ஆபீஸ்சில் இருந்து கூப்பிட்டார்கள். என்னை உடனே சுவிஸ் வரச் சொன்னார்கள். நான் சுவிஸ்ஸில் ஒரு மருத்துவமனையில்   நர்ஸ்சாக வேலை பார்த்தேன். என்னை வேறு ஒரு நகரத்துக்கு மாற்றி இருப்பதாகவும், அங்கே அவசரமாக வேலைக்கு ஆள் தேவையாய் இருப்பதால் என்னை உடனே வரச் சொல்லி சொன்னார்கள்,
                   எனக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை. நான் வீட்டில் நடந்ததை சொன்னேன், அம்மா அப்பா தாத்தா எல்லோரும் போக ரெடி ஆனோம்.
       எனது மனதில் குமரனின் எண்ணம் வேதனையைத் தந்தது. நான் போவதை எப்படி  அவனிடம் சொல்வது? அவன் திரும்பி வந்து என்னை தேடி நான் இல்லாமல் தவிப்பானே?" என் மனம் அவன் நினைவில் அழுதது.
      நானும் அவனை காதலிப்பதை சொல்லி சரி இருக்கலாம். பாவம் அவன்.என் நினைவில் அவன் உருகிப் போகப் போகிறான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது மனதை அவனிடம் தெரிவிக்காத குற்ற உணர்ச்சி என்னை கொன்றது.
       எப்படி அவனுடன் தொடர்பு கொள்வது? அவன் சரி எனக்கு கால் பண்ணி இருக்கலாமே? ஏன் பண்ணவில்லை? என்ன பிரச்சனையோ அவனுக்கு? புரியாமல் தவித்தேன் நான்.
         அடுத்த நாள் நாங்கள் சுவிஸ் புறப்பட்டோம் . எனது மனதை இலங்கையில் விட்டுவிட்டு எனது உடலை மட்டும் சுமந்து கொண்டு விமானத்தில் ஏறினேன். விமானம் புறப்பட்டதும் எனது கண்ணில் இருந்து கண்ணீர் என்னையும் அறியாமல் வழிந்தது. அம்மா அப்பா பார்க்காமல் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.
நாங்கள் சுவிஸ் வந்து சேர்ந்தோம். அன்று ரெஸ்ட் எடுத்து விட்டு அடுத்த நாள் மருத்துவமனை சென்றேன். அங்கே எனக்கு இடமாற்ற ஒப்பந்தத்தை தந்தார்கள் .சூரிச்க்கு  அடுத்த சிடியில் உள்ள மருத்துவமனைக்கு தான் என்னை மாற்றி இருந்தார்கள், இன்னும் ஒரு வாரத்தில் அங்கு வேலைக்கு இருக்க வேண்டும் என்றும் சொன்னர்கள். எனக்கு அங்கு தங்க மருத்துவமனை விடுதி இருந்தது. ஆனால் எனது பெற்றோருக்கு என்னை அங்கு தனியாக அனுப்ப விருப்பமில்லை. ஆகவே அங்கேயே அப்பாவின் நண்பர் மூலம் ஒரு வாடகை வீடு ஏற்ப்பாடு செய்து கொண்டு எல்லோரும் அங்கே புறப்பட்டோம்.
       அந்த மருத்துவமனையில் என்னை எமெர்ஜெண்சி யூனிட்டில்  போட்டிருந்தார்கள் .
       வீடு மாறுவது, வேறு இடத்தில் வேலை என்ற பரபரப்பில் குமரனின்  நினைவு குறைந்திருந்தது.என்றாலும் மனதின் ஒரு மூலையில் அவன் நினைவு  ஒட்டிக்கொண்டிருந்தது. தனிமையில் இருக்கும் போது மனம் அவனை தேடும் . என் நினைவுகள் அவனை தேடி ஓடும்.
          ஒரு நல்ல துணையை தவற விட்டு விட்டேன். கண்ணில் அகப்பட்டது  கையில் கிடைக்காமல் போய் விட்டது. இனி மறுபடி என்று அவனைப்  பார்க்கப்போகிறேன்? என்னை போல அவனும் என்னை நினைப்பானா? இல்லை  மறந்து விடுவானா? இப்படியே நாளெல்லாம் மனது அவனைப் பற்றி  சிந்திக்கும் .
          மனதில் இருந்த சந்தோசம் நிம்மதி எல்லாம் மறைந்து விட்டது . நானும் உயிர் இன்றி வாழும் உடல் போலானேன். வேலையில் எனது நேரம் போனது .
       அன்று வேலைக்கு போனேன். அங்கே இமெர்ஜெண்சி   புதிதாக யாரையோ சேர்த்திருப்பதாக சொன்னார்கள்.வார்ட்டுக்குப் போனேன். வாசலில் இருந்த இருக்கையில் ஒரு பையன்  சோகமாக அமர்ந்திருந்தான். அவனை பார்த்தபடி  நான் வார்ட் உள்ளேயே சென்றேன்.உள்ளே கட்டிலில் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் இருந்தார்.
அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது. இதயத் துடிப்பும் ஏறி இறங்கி காட்டிக் கொண்டிருந்தது. கையில் ஊசி குத்தி செலென் ஏறிக்கொண்டிருந்தது.
       நான் அவர் அருகில் சென்றேன். பலநாள் சவரம் செய்யாமல் முகமெல்லாம் தாடியும் மீசையும் வளர்ந்து அலங்கோலமாக இருந்தார். பல நாள் சாப்பிடாமல் இருந்தவர் போல தளர்ந்து போய் காணப்பட்டார்.
         நான் அவரது ரிப்போர்ட்டை எடுத்துக் பார்த்தேன். உயர்ந்த இரத்த அழுத்தமும், அதிக சிந்தனையும் தூக்கமின்மையையும் தான் இவரது வியாதி என்று புரிந்தது. ரிப்போர்ட்டில் அவரது பெயரை வாசித்தேன்
         குமரன் என்று இருந்தது. விலாசம் இலங்கை அகதி என்று இருந்தது. .எனக்குள்  பொறி தட்டியது. மறுபடியும் அந்த மனிதரை கூர்ந்து பார்த்தேன். அடையாளம் தெரியவில்லை.
          நான் வார்ட்  விட்டு வெளியே  வந்தேன். அந்த பையன் கன்னத்தில் கை  வைத்தபடி இன்னும் அங்கே தான் இருந்தான்.
          என்னைக் கண்டதும், சிஸ்டர் உள்ளே இருப்பவர் எப்படி இருக்கிறார் இப்போது கண் விழித்து விட்டாரா என்று கவலையுடன் கேட்டான்.
      "இன்னும் இல்லை . அவர் யார்? உனக்கு  என்ன சொந்தம்? யார் இவரை இங்கே கொண்டு வந்து சேர்த்தது?"   நான் கேள்விகளை அடுக்கினேன்.
         "எனக்கு அவர் எந்த சொந்தமும் இல்லை சிஸ்டர். அவர் எனது நண்பனின் நண்பர். காதலித்த ஒரு பெண்ணைத் தேடி இலங்கையில் இருந்து அகதியாக இங்கே வந்திருக்கிறார். அந்த பெண்ணை தேடித் தான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டார். நான் தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்"  அவன் வேதனையுடன் கூறினான்.
         எனது நெஞ்சு படபடவென்று அடித்தது. எனது மனதுக்கு எதோ புரிந்தது போல இருந்தது. என் உடல் லேசாக நடுங்கியது.
       "தம்பி, இவர் பெயர் என்ன? இவர் தேடி வந்த பெண்ணின் பெயர் உனக்கு தெரியுமா?" நான் ஆவலுடன் கேட்டேன்.
        "தெரியும் சிஸ்டர். இவர் பெயர் குமரன். இவர் தேடிவந்த பெண்ணின் பெயர் தென்றல்."
        அவன் சொன்னதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். இது குமரனா? என்னை தேடி இத்தனை தூரம் வந்திருக்கிறானா? என்னால் தான் இவனுக்கு இத்தனை கஷ்டமா? எனது மனம் துடித்தது. அவன் காதலை நினைத்து என் மனம் உருகி கண்ணீராய் வடிந்தது. என்னையும் அறியாமல் நான் தேம்பித் தேம்பி அழுதேன்.
         அந்தப் பையன் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான். சிஸ்டர் உங்களுக்கு இவரைத் தெரியுமா? அந்த பெண்ணையும் தெரியுமா? எதுக்கு அழுகிறீர்கள்?" அந்தப் பையன் பரபரப்புடன் கேட்டான்.
         "இவரை எனக்குத் தெரியும் . இவர் தேடி வந்த தென்றலும் நான் தான்." நான் அழுதபடி கூறினேன்.
       அவன் திகைத்து விட்டான். அவனால் நம்பக்கூட முடியவில்லை." சிஸ்டர் உண்மையாகவா. அந்தத் தென்றல் நீங்களா ?" அவனால் நம்பக்கூட முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் நிலை குலைந்து போனான்.
         " நானே தான் தம்பி அது . இவர் எப்போது வந்தார். இத்தனை நாளும் எங்கிருந்தார்? என்ன நடந்தது இவருக்கு? என் இப்படி ஆனார்"நான் கேள்விகளை அடுக்கினேன். உனது பெயர் என்ன என்று அவனிடம் கேட்டேன்.
        தன் பெயர் ஜெகதீஷ் என்று கூறினான். குமரன் சுவிஸ் வந்ததில் இருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் என்னிடம் கூறினான்.
       " சிஸ்டர். நாங்கள் உங்களை ஸுரிச்சில் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடலில் போய் தேடினோம். நீங்கள் அங்கே வேலை செய்வதாக இலங்கையில் யாரிடமோ குமரன் கேட்டறித்திருக்கிறார். அங்கே போய் விசாரித்தோம். அப்படி யாரும் அங்கு வேலை செய்யவில்லை என்று சொன்னர்கள். அப்புறம் நீங்க இருந்த போர்ட் சிட்டிலயும் போய் தேடினோம்" ஜெகா நடந்ததை சொன்னான்.
        "ஜெகா, எனது உண்மையான பெயர் ரஞ்சனி. எனது வீட்டில் என்னைக் கூப்பிடுவது தென்றல் என்று. அந்த பெயர் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் இலங்கையில் உள்ள எனது உறவினர்களுக்கும் மட்டுமே தெரியும். இங்கே ஒருவருக்கும் தென்றல் என்ற பெயர் தெரியாது. எனக்கு இலங்கையில் இருந்தபோது உடனே வரச்  சொல்லி கால் வந்தது. வந்தவுடன்  என்னை இங்கே மாற்றி விட்டார்கள்.எனது குடும்பத்துடன் நான் இங்கே வந்து விட்டேன். நான் இலங்கையில் இருந்து வரும் போது இவரும் ஊரில் இல்லை. என்னைப்பற்றி இவருக்கு ஏதும் தெரியாது. இவர் என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பது எனக்கே தெரியாது. என்னால் இவர் இப்படி ஆகிவிட்டார்" எனது வாய் பேசியது. கண்கள் அழுதன.
                    சிஸ்டர் பாவம் இந்த அண்ணா. உங்களுக்காக இவர் இத்தனை ரிஸ்க் எடுத்து போல யாரும் எடுக்க  மாட்டார்கள் உங்கள்  மேல்   அதிகம் அன்பில்லாமல் இத்தனையும் செய்திருக்க  மாட்டார். உங்களைத்  தேடி அவர் அழைந்த அலைச்சல் .தின்னாமல், தூங்காமல் அலைந்ததால் தான் இவருக்கு இந்த நிலை" ஜெகா கவலையுடன் கூறினான்.
           நான் ஜெகாவையும் அழைத்துக் கொண்டு மறுபடியும் வார்டின் உள்ளே சென்றேன். குமரனை பார்க்க எனக்கு  மிகவும் கவலையாக இருந்தது. எத்தனை களையான முகம். இப்போது அடையாளமே தெரியவில்லை. எல்லாம் என்னால் தானே. நினைக்கவே என்மேல் எனக்கே வெறுப்பாய் இருந்தது.
        அன்புடன் குமரனின் தலையை தடவினேன்.அவனை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது. எனது கண்கள் கலங்கி இரு சொட்டு கண்ணீர் அவன் கையில் விழுந்தது.
       ஜெகாவை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நான் குமரன் அருகிலேயே இருந்தேன். அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை ஊசி மூலம் அவனுக்கு ஏற்றினேன். சில மணித்தியாலங்களுக்கு பின்னர் நான் மற்ற வார்டுகளுக்கு போனேன். மற்றவர்களை கவனித்தது விட்டு மறுபடி குமரன் இருந்த வார்ட்டுக்கு சென்றேன். நான் உள்ளே போய் குமரன் கட்டிலுக்கருகில் சென்ற போது   அவன் அசைவது தெரிந்தது. நான் ஆவலுடன் அவன் அருகில் சென்றேன். அவன் கண்களை திறக்கமுடியாமல் திறந்து திறந்து மூடினான்.
          நான் அவனது தலையை தடவிய படி குமரன் என்று அவனது பெயரை சொல்லி கூப்பிட்டேன். எனது குரலை கேட்டதும் மெதுவாக கண்களைத் திறந்தான்.
         "குமரன் நான் தென்றல் என்னைத் தெரிகிறதா"  எனது குரலைக் கேட்டதும் அவன் உடம்பில் பரபரப்பு தெரிந்தது. கண்களை நன்றாகத் திறந்து என்னைப் பார்த்தான்.
       என்னை கண்டதும் அவன் முகம் ஆச்சரியத்தால் விரிந்தது. அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. பரபரப்புடன் எழும்ப முயற்சித்தான். தென்றல் நீங்களா? அவன் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.கண்களில் கண்ணீர் வடிந்தது.
        எழும்ப முயன்றவன் கண்கள் மறுபடி மூடின. அப்படியே கட்டிலில் சாய்ந்தான். அதன் பின் அவன் அசையவே இல்லை. மூச்சு மட்டும் வேலை செய்தது.
        நான் ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தேன். அவர் குமரனை பரிசோதித்தார். என்னிடம் ஏதும் நடந்தா என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன்.
           அவர் கொஞ்ச நேரம் ஏதும் பேசவில்லை. சிஸ்டர் , இவர் கோமா ஸ்டேஜ்க்கு போய் விட்டார்.  இரத்த அழுத்தம், மனஅழுத்தம், எதிர்பார்த்த அதிர்ச்சி இவை இவரை கோமா நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இனி இவர் கண்விழிப்பாரா கண்விழிக்க மாட்டாரா? இன்று நினைவு திரும்புமா நாளை திரும்புமா, இல்லை வருடங்கள் ஆகுமா? ஏதும் சொல்லும்  நிலையில் அவர் இல்லை.
இனி எல்லாம் கடவுள் கையில்."
        டாக்டர் சொன்னதை கேட்டு நான் கதறி அழுதேன்.தான் கொண்ட உண்மையான காதலுக்காக தன்னையே மறந்து  கிடக்கும் அந்த உன்னத ஆன்மாவை  கட்டிக்க கொண்டு கதறினேன்.
         ஜெகனும் உள்ளே வந்தான். குமரன் நிலை அறிந்து அவனும் கல்லானான்.
      நான் டாக்டரிடம் சொல்லி விட்டு நேரத்துடன் வீடு சென்றேன். எனக்கு ஏதும் ஓட வில்லை. வாழ்க்கையே வெறுத்துவிட்டது . குமரனின் நினைவு என்னை கொன்றது.
       வீட்டுக்கு வந்து நான் யாருடனும் பேசவில்லை. ரூமில் போய் கட்டிலில் அமர்ந்தேன். எனக்கு  வாய்விட்டு அழணும் போல இருந்தது.அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேனோ. அம்மா வந்து எனது தோளைத் தொட்டது கூட எனக்கு தெரியவில்லை.
       "தென்றல் என்ன நடந்தது? எதுக்கு நீ இப்படி அழுகிறாய்? உன்னை இப்படி என்றும் நான் பார்த்ததிலேயே?"  அம்மா குழப்பத்துடன் கேட்டாள்.அம்மாவை கண்டதும் எனது துயரம் அதிகமானது. அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
         தென்றல் என்ன நடந்தது அதை சொல். நீ அழுவதை பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. அம்மா நான் இருக்கிறேன் தானே என்னிடம் சொல்." அம்மா எனது தலையத் தடவியபடி அன்பாகக் கேட்டாள்.
           நான் இலங்கையில் குமாரனை சந்தித்தது முதல் இன்று வரை நடந்தது எல்லாம் சொன்னேன். அம்மா ஏதும் பேசவில்லை. அவளும் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்பதனை அவள் முகம் காட்டியது.     
     "நீ இப்போது என்ன செய்யப் போகிறாய் தென்றல்?"   அம்மா கவலையுடன் கேட்டாள்.
        " அம்மா நான் ஒரு முடிவுடன் இருக்கிறேன். எனக்கு உனதும் அப்பாவினதும் உதவி வேண்டும் ." நான் அம்மாவிடம் கேட்டேன்.
      " நீ எடுக்கும் முடிவு நல்லதாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை என்றும் எங்களுக்கு உண்டு. சொல் நாங்கள் என்ன செய்ய வேண்டும்." அம்மா அன்புடன் கேட்டாள்.
       "அம்மா குமரனின் இந்த நிலைக்கு நானே காரணம். அவர் என்னிடம் தன் காதலை சொன்ன நேரம், நான் இரண்டில் ஒன்று பதில் கூறியிருந்தால் இத்தனை தூரம் நடந்த்திருக்காது. என்னால் தன் வாழ்க்கையை தொலைத்து, தன் உறவுகளைத் தொலைத்து இப்போது தன் உணர்வுகளையும் தொலைத்து உருக்குலைந்து போய் இருக்கிறார். இதுஅனைத்துமே என்மேல் வைத்த உண்மையான அன்பில் தானே. அந்த அன்பை நான் மதிக்க வேண்டும். எனக்காக எல்லாம் தொலைத்தவனை இனி நான் என் அருகில் வைத்து பார்த்துக் கொள்ளப்  போகிறேன். அவருக்கு எப்போது நினைவு திரும்புமோ அது வரை அவருக்கு துணையாக நான் இருப்பேன். இனி அவருக்காகவே வாழப் போகிறேன். இறைவன் சீக்கிரம் அவரை குணப்படுத்துவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரது உண்மையான காதலுக்கு நான் செலுத்தும் காணிக்கை இது." நான் அழுத்த படி அம்மாவிடம் சொன்னேன். அம்மா ஏதும் பேச வில்லை .
   " அம்மா அவரை மருத்துவமனையில் வைத்திருப்பதில் பிரயோசனம் இல்லை. நான் அவரை நமது வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்துக் கொள்ளப் போகிறேன். இங்கே  இருந்தால்  எனது கவனிப்பாலும் அன்பாலும் சீக்கிரம் அவரை குணப்படுத்துவேன், இங்கே அவருக்கென்று யாரும்  இல்லை. தங்க இடமும் இல்லை. அவருக்கென்று இருப்பது நான் மட்டும் தான். ஆகவே நான் அவரை இங்கே கொண்டு வைத்து பார்த்துக்கொள்ளப்  போகிறேன்.அதற்கு எனக்கு உங்கள் அனுமதி தேவை. ப்ளீஸ் மா. என்னை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்." நான் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினேன்,
       அம்மா அன்பாக என்னை தட்டிக் கொடுத்தாள். "தென்றல் உனது உணர்வுகளை மதிக்கிறேன்.நீ எடுக்கும் எந்த முடிவும் சரியாகத் தான் இருக்கும். குமரனுக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை. உன்னை நம்பி வந்தவன் அவன். அவனை பார்த்துக் கொள்வது உனது கடமை. நீ எந்த தயக்கமும் இல்லாமல் குமாரனை இங்கே கூட்டி வா. உனக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்.
              உங்கள் காதல் உண்மையாக இருந்தால் குமரன் நிச்சயம் சுயநினைவு திரும்புவான். அந்த கடவுள் துணை இருப்பான். அப்பா ஏதும் சொல்ல மாட்டார். அவர் என்றும் உன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நீ ஆக வேண்டியதை பார்." அம்மாவின் பேச்சு எனக்கு பெரிய  தெம்பை கொடுத்தது.
         " குமரன் சீக்கிரம் குணமாவான். எனது காதல் அவனை குணமாக்கும். இறைவனை நம்புவதை விட நான் எங்கள் காதலை நம்புகிறேன். அந்தக் காதலே எங்களை ஒன்று சேர்க்கும்."

        தென்றலை போலவே நாமும் குமரன் குணமாவான், இருவரும் ஒன்று சேர்வார்கள் என நம்புவோம். அந்த உண்மை காதலர்களுக்காக இறைவனைப் பிராத்திப்போம்

                        முற்றும் 
 
   
   
   


MaSha:
Thamilaaaannnnnnnnn

hahahahaha arumai arumai, arumaiyoo arumai   ;D!! Intha kathai enga pooi mudiyum enru padikka, aavaloda Masha waiting!  :D
Thirumbavum antha kangal, antha mooku antha uthadugal? yaar antha thenral...  :P?

MaSha:
Thamilaaaannnnnnn  ;D ;D ;D ;D

Hahaha grace court varaikkum vanthuddeenga  :D next maama oda press aa  :-\ :P

Thodaratthum ungal kathai   ;)

MaSha:
Thamilaaaaaaaaaannnnnnnnnnn

Enna pa, athukulla number'um vaangitheenga, thaatavaiyum parthacha  :D
avavukku neenga than simcard vaangi koduppinga endu nineichan ??? :P :P :P

Thodaratthum ungal kathai  ;)

MaSha:
Thamilaaaannnnnnnnnnnnnnn

Hahaha Murukkum vanthuviddathu, aduththa santhippukum thayaar pannitheenga :D Thaathaa than paavam, avar enna paavam pannaro? Avarukku vantha nilamaiya paarunga…. Antha paiyyan kidde number kudukkaathe enru sollura alavukku thathaava vaai thurakka mudiyamal pannitheenga :D hahaha
ada paavi, ava kidde friendship vachukka poi vera sonningala, antha thenral romba appaavi pola:D thaathaavum valai'yila vilunthu viddaraaaa :D haha

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version