Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73689 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #405 on: January 29, 2018, 11:41:05 AM »
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்

குறள்  விளக்கம்  :
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்..


ஒலித்தக்கால் ............. ................... ..............
நாகம் ................ ....................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #406 on: January 29, 2018, 04:23:31 PM »
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் விளக்கம்.
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

[highlight-text]அடுத்து [/highlight-text]>............. ஒட்ட ............ ............ .
............. அறிவிலா ........... .
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #407 on: February 02, 2018, 03:31:35 PM »
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்:
அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.


................ .................. ............... பார்ப்பான்
பிறப்பொழுக்கங் ................... ...........


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #408 on: February 02, 2018, 03:48:08 PM »
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பொருள்>  கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.




[highlight-text]அடுத்து > ...............  .................. வெஃகின் ............. .
............... ................ தரும்.[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #409 on: February 02, 2018, 03:51:49 PM »
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
 குற்றமும் ஆங்கே தரும்.

விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல், பிறந்து நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்

அருள்வெஃகி ............ ................ பொருள்வெஃகிப்
 .......................... ............... .....................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #410 on: February 02, 2018, 05:21:51 PM »
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

பொழிப்பு: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.


[highlight-text]அடுத்து >......... உண்டோ ............ ............ .
புன்கணீர்....... ............ .[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #411 on: February 03, 2018, 05:41:17 AM »
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம்:
அன்புடையாரின் துன்பத்தைக் கண்டபோது ஒருவர் கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரே உள்ளத்தின் அன்பை எல்லோரும் அறிய வெளிப்படுத்தும். ஆகையால், அன்பிற்கு அதைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள்

............... ................. ................ அறிவறிந்த
மக்கட்பேறு ................. ..............
[/i]

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #412 on: February 03, 2018, 03:49:47 PM »
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

பொழிப்பு: பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதன்றி, எமக்குத் தெரிந்தவரை, வேறில்லை.

[highlight-text]அடுத்து >............... ஆற்ற .......... ............ .
.............. .............. கூழ்.[/highlight-text]
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #413 on: February 09, 2018, 08:53:55 AM »
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்


விளக்கம் :

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்


................. ................... கொளல்தீது .............
 இல்லெனினும் ................ .......................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #414 on: February 09, 2018, 06:37:36 PM »
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

பொழிப்பு : பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.


[highlight-text]அடுத்து >.............. ................. .............. எனைத்தொன்றும்
................ ................ நெஞ்சு [/highlight-text].
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #415 on: February 10, 2018, 05:43:14 AM »
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
 கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விளக்கம்  :
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.


................. .................... ..................... மாட்டும்
 அழுக்காற்றின் ..................... ................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #416 on: February 19, 2018, 06:58:34 PM »
   
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
[highlight-text]
குறள் விளக்கம்[/highlight-text]
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.


[highlight-text]அடுத்து >[/highlight-text]................ .......... பாவி................ .
தீயுழி ..............  ............ .


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #417 on: February 20, 2018, 01:18:57 PM »
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

பொருள் :
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

.................. ................... .................. அருங்கேட்டால்
ஆற்ற ................... .....................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #418 on: February 20, 2018, 04:18:38 PM »
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

[highlight-text]விளக்கம் :[/highlight-text]
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.


[highlight-text]அடுத்து >[/highlight-text]................. ................. .இயல்புடைய ............... .
............... நின்ற ..... .

Offline யாழிசை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #419 on: March 14, 2018, 10:21:47 AM »
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.



விளக்கம்:
இல்லறத்தில் வாழ்கின்றவன் என்னும் சிறப்புடையவன் மற்ற (கல்வி, மனைத்துறவு, துறவு) அறநிலைகளில் உள்ள மூவர்க்கும் நல்ல ஒழுக்க நெறியில் உறுதியான துணையாவான்.



அடுத்து > ..............  .............. .......... பெருஞ்சிறப்புப்
......... வாழும் ............