Author Topic: பூவரச மரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்  (Read 976 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
புயலைத் தாங்கும் பூவரச மரம்..!

"பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய இலவச மருத்துவமனை"

முன்னோர்கள் அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு, மாடுகளும் காணாமல் போயின..பூவரசு மரங்களும் அருகிவிட்டன. அற்புதமான மருத்துவகுணங்கள் நிறைந்த பூவரசு மரங்களின் அழிவும் புவிவெப்பமாதலுக்கு ஒரு முக்கியமான காரணம்.

பல்வேறு காரணிகளால் வளியெங்கும் விரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான மரம் என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்த மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது...அப்படியே சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது. பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர். தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாக தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும்.

நூறு ஆண்டுகள் ஆன முதிர்ந்த பூவரச மரத்தின் பட்டையை பொடிச்செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும். முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டையை இடித்து, அந்த சாறில் தினமும் வாய் கொப்பளித்தால் வெண்குஷ்டநோயால் வாயில் ஏற்பட்ட வெண்புள்ளிகள் மாறும். இந்த சாறை கொப்பளித்து துப்பி விடவேண்டும். விழுங்கி விடக்கூடாது. இத்தனை மகத்துவம் வாய்ந்த மரம் என்பதால் தான் இதை 'காயகல்ப மரம்' என அழைக்கிறார்கள்.

இதய வடிவ இலைகளையுடைய பூவரச மரம் தற்பொழுது அழிந்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான பலகைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன் என பன்முகம் கொண்டது. இந்த பூவரசு மரங்களை வீடுகள், சாலையோரங்கள், காலியிடங்களிலெல்லாம் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புயலைத்தாங்கி வளரும் தன்மையும் உடையதால் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பூவரச மரங்களை நடலாம். புவியெங்கும் பூவரசு வளர்ந்தால் காற்று மாசு ஓரளவுக்காவது குறைந்து, பூமி சூடாவதில் இருந்து ஓரளவுக்காவது காக்க முடியும்.



உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால