தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

மே 18

(1/1)

NiYa:
மே 18
2009 மே 18 ஏனைய நாட்களை போன்று ஒரு சாதாரண நாளாக அமையவில்லை. இந்நாள் இலங்கை தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்றிலும் ஒரு முக்கியமான நாள்.

முள்ளிவாய்க்கால் எனும் பகுதியை முழு உலகமும் உற்று நோக்கிய நாள்.
தமது மண்ணை தாமே ஆண்டு, சுதந்திரமாய் வாழவேண்டுமென எண்ணம் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களை உலக நாடுகளின் ஆயுத, இராணுவ தொழிநுட்ப உதவிகளோடு இலங்கை அரசாங்கம் தமிழின அழிப்பை செய்து முடித்த வரலாற்று நாள்.

இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை கைதியாக்கி வன்புணர்வால் சிதைத்தழித்து எக்காளமிட்ட நாள்.

தமிழ் இனத்தின் விடியலுக்கு ஈழத்தமிழர் மட்டும் போராடினால் போதாது, மொத்த தமிழ் உலகமும் போராட வேண்டுமென உணர்த்திய நாள்.

சுதந்திரமாக வாழ நினைத்த மக்கள் தாமாகவே முள் வேலிகளு'க்குள் சிக்கிக்கொண்ட நாள்,
தமிழர் கலை கலாச்சாரம், பண்பாட்டை அழிப்பதற்கு வித்திட்ட நாள்.

தமிழீழ விடுதலை புலிகளை எப்படியாவது அழித்துவிட வேண்டுதென நினைத்த இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுடன் கைகோர்த்து வெற்றிக் களிப்பில் மிதந்த நாள்.

சர்வ தேசம் தலையிட்டு ஈழத்தமிழருக்கு விடுதலையை பெற்றுத்தரும், உயிரிழப்புக்கள் நிறுத்தப்படும் என்று நினைத்தவர்களின் கனவு முழுமையாக சிதைக்கப்பட்ட நாள்.

இலங்கை முழுவதும் பரந்திருந்த தமிழ் மக்களிடம் இனி உங்களை காக்க யாருமில்லை, உங்களுக்காக போராடவும் யாருமில்லை என சிங்கள பேரினவாதம் சொல்லிச் சொல்லி கேலி செய்த நாள்.

இலங்கையின் தென் பகுதிகளில் தமிழின அழிவு கண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய நாள்.

இந்த கொடூர போரை நிறுத்து என ஒரு சிங்கள சகோதரர் கூட குரல் கொடுக்கவில்லை என்பதை தெரியப்படுத்திய நாள்.

ஈழமண்ணில் விதைக்கப்பட்ட ஒவ்வொரு மாவீரரும் மரமாகவென இரத்த நீர் பாய்ச்சப்பட்ட நாள்.

மொத்த தமிழீழமும் முள்வேலிகளுக்கு பின்னால் கதறி அழக்கூட கதியற்று நின்ற நாள்.

தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை மறுத்து அதில் சிங்கள முத்திரையை பொறித்து இலங்கை தீவு தனி சிங்கள பௌத்த நாடு என எக்காளமிட்ட படி இலங்கை அரசு தமிழின அழிப்பின் உச்சத்தை தொட்ட நாள்.

மொத்த உலகையும் கட்டி ஆழும் பலம் படைத்த தமிழ் வீரம் முதுகில் குத்தப்பட்டு, துரோகத்தினால் தோற்கடிக்கப்பட்டு மண்ணில் சரிந்த நாளே இந்த மே 18

joker:
இதுவும் கடந்துபோகும் என போய்க்கொண்டிருக்கும் நாம்
ஒரு படித்த அறிவிலிகள்

தமிழன் தமிழன்  என மார்தட்டி கொள்ளும் நாம்
இலங்கை தமிழர் உயிருக்கு ஓங்கி ஓர் குரல் கொடுத்திருந்தால்

போர் என்று கேட்டாலே பதறும் மனம் , போர் நடந்த இடத்தில்
வாழ்வோரின் மனம் படும் பாடு அறிவோமா

தமிழனை அழிக்க முடியாது அவன் விதைக்க பட்டவன்
வருவான் உலகை ஆள

அந்த நாளுக்காக பிரார்த்திப்போம்  காத்திருப்போம்


SiVa000000:
 :'(

Navigation

[0] Message Index

Go to full version