Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 255  (Read 1835 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 255
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: January 26, 2021, 02:11:54 AM by Forum »

Offline thamilan

காதல் எனக்கு மட்டுமா சொந்தம்
அது அவனுக்கும் சொந்தமே
தடை சொல்லவில்லை நான்
விடை சொல்லவேண்டியவள் நீதானே
என் மனதை காணிக்கையாக உன்
காலடியில் வைத்து விட்டேன்
மலர் செண்டுடன் காத்திருக்கிறான் அவன்
இதயம் வேண்டுமா இல்லை
இதம் தரும்  மலர் வேண்டுமா
நீயே தீர்மானி

நீ கிடைக்கவில்லையென்றால்
எனது இதயம் துடிக்கும்
இரத்தக்கண்ணீர் வடிக்கும்
என் இதயத்தின் துடிப்பே நீதானடி
அது துடிக்கும் சத்தத்தில் கேட்பது
உன் பெயரே

அவனுக்கும் ஒரு இதயமுண்டு
அதில் ஆயிரம் ஆசைகள் உண்டு
பூவின் நறுமணம் என்னை மட்டுமா
தழுவிச் செல்கிறது
அவனையும் தழுவிச் செல்கிறதே
அந்த பூ தான் தீர்மானிக்க வேண்டும்
சாமியின் கழுத்தில்
மாலையாக விழுவதா - இல்லை
பிணத்தின் கையில் மலர்க்கொத்தாக
அமர்வதா என

யாருடைய காதல் நிஜமானது
யாரும் கேட்டால்
நிலத்தில் அடித்து சத்தியம் செய்வேனடி
என் காதல் தான்
நிஜமானது புனிதமானது என
உன்னைத்தவிர எல்லா பெண்களுமே எனக்கு
சகோதரிகள் தானடி
உன் உருவத்தை தவிர
வேறு எதுவுமே எனது மனதில் இல்லை

அவனோ
எனது நண்பன்
நான் உயிருக்கு உயிராய்
உன்னை காதலிப்பது தெரிந்தும்
கையில் மலர்கொத்துடன்
காதலை சொல்லி காத்திருக்கிறானே
இது நட்புக்கு செய்யும் துரோகம் இல்லையா

உனது மனதில்
நானிருப்பது எனக்குத் தெரியும்
அவனுக்கும் தெரியும் தெரிந்தும்
தூண்டிலும் கையுமாக நிற்கிறான்
நீ அகப்படுவாயா என

நீயே சொல்லி விடு
நானா அவனா என
நீ படித்தவள் பண்புள்ளவள்
எதையும் பகுத்தறிந்து பக்குவப்பட்டவள்
காத்திருக்கிறேன் நீ சொல்லப்போகும் பதிலை
காதலன் நானா அவனா என
« Last Edit: January 17, 2021, 09:35:15 PM by thamilan »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
எனக்கு  பிடிக்கும்... அவளை மிக மிக பிடிக்கும்..
நெடுங்காலமாய்...  அவளின் குரல் மட்டுமே  என் உயிர்..   
அந்த தேனொழுகும் குரல்... என் செவியினில் நுழைந்து..     
என் மனதை கவர்ந்து, என்னை அடிமை ஆக்கி விட்டதே..

என் மனதை நான் தொலைத்து விட்டேன் என்னை அறியாமலே...
என் மனதை அவள் திருடியும் விட்டாள்  எனக்கு தெரியாமலே...
நானோ...அவளின் அன்பை பெறவே ஏங்குகிறேன்...
என் எண்ணங்களை அவளிடம் சேர்க்க நித்தமும் போராடினேன்..

அவளின் மீதான காதலை, அவளிடம் சொல்ல சிறு தயக்கம் என்னுள்ளே...
அவள் குரல் கேட்கும் வாய்ப்பு இழந்து விடுவேனோ என..

என்னுள் பந்தைய குதிரை என  ஓடின பல எண்ணங்கள்   
என்னைப் பற்றி.... அவள் என்ன நினைப்பாளோ...
என் மனதின் காதலை... புரிந்து கொள்வாளோ...
என்னிடம் பேசவே வேண்டாம் என நினைத்திடுவாளோ...
என ஆயிரம்...ஆயிரம் எண்ணங்கள் எனக்குள்ளே ஓடின...
இருந்தாலும்.. என்னையும் சிலையாக்கியது
எனக்குள்ளே ஒலிக்கும் அவளின் குரல்...
"வா வா அன்பே! வந்துவிடு என் அன்பே!!"...

போர்முனையில் ஆயிரம் எதிரிகளை  கூட வென்றிடலாம்
ஆனால் ஓர் பெண்ணின் மனதை வெல்ல.. அவளிடம்
தன் காதலை எடுத்து சொல்ல தயங்குதே என் மனம்....

என்ன செய்வது... என்ன செய்வது...  ஆயிரம் வீரர்களை....
எதிர்த்து வீழ்த்திடும் தைரியம் என்னுள் உண்டு..
ஆனால் இவளின் அன்பின் முன்னே...  கரைந்து விட்டன...
என் தைரியமும் கம்பீரமும்....  மழையில் நனைத்த உப்பாக

நான் அவளிடம் என் மனதை கூறிவிட புறப்பட்டேன்
சற்றே சிந்தித்தேன்..... அவளிடம் என் காதல் சொல்லிட...
வரைந்தேன் மடல் ஒன்றை... என் எண்ணங்களை
எல்லாம் கவிதையாய் உருமாற்றியே...

ஆனால் ...என் கவிதைகளும் சொல்ல தயங்கிடுமோ என் காதலை....
ஓர் ஐயம் மனதினில் எழ.. நானே முடிவெடுத்தேன்..
அவளின் முகம் பார்த்து என் காதலை அவளிடம் நானே சொல்ல...

அவள் அருகில் நானும் செல்ல... என் முன்னே நின்ற காட்சி...
அதிர்ந்தன என் மனம்... நொறுங்க தொடங்கின... என் இதயம்...

என் கண்முன்னே ஒருவர் அவர் தன் காதலை அவளிடம் கூற
அவளோ...அதை ஏற்றிடுவாளோ...என என் மனம் பதற...
ஒரு நிமிடம் இருண்டன... என் உலகமுமே...
ஆனால் என் கவிதைகள்... அவளிடம் சொல்லி இருந்தது என் காதலை...

வந்து விட்டாள்..  என்னிடம் அவள் வந்துவிட்டாள்
தந்து விட்டாள்...  என்னிடமே தந்து விட்டாள் அவளின் மனதை   
சொர்க்கம் எங்கென கேட்டால்   சொல்லிடுவேன்....
அவளின் சொற்களில்... அவள்  பேசும் வார்த்தைகளில்
மற்றும் அல்ல அவளின் அன்பிலும் தான் உண்டென்று...

என்றும் அவளின் நினைவில் வாழும் ஓர் ஜீவனாக நான் மாறினேன்
அவளும் அப்படித்தான் இருக்கிறாள் என் நினைவாகவே..
என்றும் அவள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த....
நான் அதிஷ்டசாலிதானே நண்பர்களே...... 
« Last Edit: January 18, 2021, 02:53:49 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
என் இதயத்தில் வாழும்
என் கனவு காதலே....
என் முதல் காதலே....
என் முதல் கனவு நினைவாகும் நாட்களுக்காய்
காத்துக் கொண்டிருக்கிறேன்....

என் இதயத்தில் மின்னல் வேகத்தில் நுழைந்து....
என்னுயிரில் கலந்த பாதியே....
காதலிப்பவர்கள் யாவருமே
கடைசி வரை இணைவோமா?...பிரிவோமா?...
என்று நினைத்து காதல் செய்வதில்லையே....

எந்த எதிர்பார்ப்புமின்றி....சாதி, மத பேதங்களைக் கடந்து....
பேசும் மொழிகளுக்குக் கூட அப்பாற்பட்டு....
இதயத்தால் மட்டுமே ஒன்று சேரும் உண்மையான காதலுக்கு
விலை எது?...என்று சொல்லும் காதலர்கள் வாழும் உலகத்தின்
உறவுக்காரியான என்னை....உன் இதயம் ஏற்றுக் கொள்ளுமோ???

என்னை...நீ தோழியாக பார்த்தாயா? இல்லை காதலியாக பார்த்தாயா?
தெரியவில்லை....புரியவில்லை....எனக்கு இதுவரையிலும்....
என் இதயத்தைக் கொள்ளை கொண்ட திருடன் நீ....
இதயத்தை திருடி சென்றவனே....
இப்படி அமைதியாக....தூரத்திலிருந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பது ஏனோ?....

நான் நண்பனாக நினைப்பவன்
காதலனாய் மாறுவதும்....
என் காதலனாய் நினைப்பவன்
நண்பனாய் மாறுவது எதுவும்....
என் கையில் இல்லை என்று நினைக்கும் போது....
அதிகமாய் வலி கொடுத்து செல்கிறது....

நான் உன்னிடம் பேசி பழகாமலே இருந்திருக்கலாம்....
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது
உன் அழகிய நினைவுகள்....
உன்னை மறப்பதா....இல்ல இழப்பதா....
என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்....

உன் பதிலுக்காக...பல நாட்கள் காத்திருந்தேன்....
உன் வருகைக்காய் பல பொழுது காத்திருந்தேன்....
உன் அன்பிற்காய் பல மணி நேரம் காத்திருந்தேன்....
உன் அணைப்பிற்காய் பல இரவுகள்
தூங்க முடியாமல் விழித்திருந்தேன்....

உன்னுடன் அழகான வாழ்க்கையை
வாழ்வது வரமே...அதே உன் நினைவுகளுடன்
வாழ்ந்து மடிவது தவமே என நினைத்து
இன்னமும் உனக்காக மட்டுமே காத்திருக்கிறேன்...
சொல்லாத காதல் செல்லாத காசாய் மாறும் முன்னே
வந்து சொல்லி விடு...
உன் இதயத்தைக் கொள்ளைக் கொண்டவள் நான் என்று....

என்றும் உன் நினைவில்
பூத்துக் குலுங்கும்
உன் காதல் தேவதை
ஜெருஷா...

Offline இளஞ்செழியன்

காலம் மனிதனுக்கு
மிக நீளமாக காத்திருக்கச் சொல்கின்ற
எல்லாவற்றையுமே
அவனுக்காக அளிப்பதில்லை.
அவனுடைய வாழ்வில்,
அவன் பொத்திப் பிடித்துக் கொண்டு
வாழ்ந்த எத்தனை எத்தனையோ
பிடிமானங்களை, அவனின் கரங்களில் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துக் கொள்கிறது.

காலம் இரக்கமற்றது...!

அப்படியாய் கடைசி உரசலோடு
விலகிச் சென்ற எத்தனையோ
ஆதர்சக்காதல் விரல்கள்,
இன்னும் தன் கரங்களை
நீட்டியாவாறேதான்
நடுங்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் சேர்ந்து விடாதா?
என்ற ஏக்கப் பெருமூச்சோடு,
லட்சோப மனங்கள்
யாருக்கும் தொந்தரவின்றி,
தனித்தழுது கொண்டு
தன் துயர் துடைக்க,
காலத்தின் மடியில் சதாவும்
விழுந்து கிடக்கத்தான் செய்கின்றன.

தீராத ஆதங்கங்களோடு,
ஆறாத வடுக்களோடு,
கனவாய் கலைந்த வாழ்வொன்றை எண்ணி
அம்மனங்கள் தனக்குள்
விம்மத்தான் செய்கின்றன.
நெஞ்சம் நிரப்பி,
உடல் முழுவதும் ஆழமாய்
வியாபித்துப் போன ஓர் காதலின் விலகலை
அத்துனை எளிதாய்,
சகித்துக் கொள்ள முடிவதேயில்லை.
உன்னதம் ததும்பிய அந்த முகத்தின்
கடைசி பிரிவுச் சிரிப்பு
கண்ணீரால்தான் ஆசீர்வதிக்கப்படுகின்றன.

மீண்டும் வருவாயா?
எங்கேயாவது தற்செயலாக காண்போமா?
ஓர் அழைப்புக்கான காத்திருத்தல் நியாயப்படுமா?
அதே பழைய கொஞ்சல்களும், சிணுங்கள்களும்,
ரசித்தும் தீராது நிற்கும்
பழைய நம் உரையாடல்களும்,
இனி கைகூடுமா?
பேச்சின் நடுவே மேலெழுந்த
உல்லாசத்தன்மையும், அதீத ஆசைகளும்
இனியும் நீங்காது நம்மில் துளிர்க்குமா?
என்ற கேள்விகளோடு
தூரப்படும் நேரங்களை கடப்பது,
அவ்வளவு சாதாரணமானதல்ல.

பிறகேற்படும் ரணங்களை,
வலிகளை,
நினைவுகளை,
சோகங்களை,
விழுங்கிக் கொள்வது
எத்துனை கணம் மிக்கதென்று
எந்தக் காதலினாலும் எழுதிவிட முடியாது...

சில ஆழ்ந்த
மெளனங்களில் வாழும் துயரங்களை,
வார்த்தையில் வர்ணிக்க இயலாது...

அந்தச் சோகமும், துன்பமும்,
மெளனத்தில் வாழ்வதைத்தான்
காலம் சரியென்கிறது...
வாட்டி எடுக்குமே?
பரவாயில்லை என்று நகர்கிறது
பழைய காதல்...

பாவம் மனிதன்!
அவனால் காலத்தை மீறி
எதையும் செய்ய துணிவென்பதே கிடையாது....!
உதிர்ந்த பூக்களை எல்லாம்
பொறுக்கி எடுத்து,
தன் காதலை
அதில் மலர வைக்க
காதலர்களால்தான் முடிகிறது போல.

கடைசியாய் பார்த்த அந்தக் கண்கள்,
கடைசியாய் கேட்ட அந்தக் குரல்,
கடைசியாய் தவித்த அந்த முகம்,
கடைசியாய் உஷ்ணமாய் வழிந்த கண்ணீர்,
 எல்லாமுமே அதன் பிறகுள்ள
ஒட்டுமொத்த காலத்திற்குமான
பரிபூரணத் துயரமல்லவா?
அந்த நொடிகள் தந்த தாக்கம்
வாழ்வின் அந்திமம் வரை,
கண்ணீரை துளிர்க்கச் செய்து கொண்டேதான் இருக்கும்.
அதே அழுத கண்ணில்,
அந்த ஆன்மக் காதலும் நீந்தித் தவிக்கும்.... என்றென்றும்❤
பிழைகளோடு ஆனவன்...

Offline இணையத்தமிழன்

சொல்லத்தான் எத்தனித்தேன்
சொல்லிவிட முடிவெடுத்தேன்
உரையாடவந்தவளை உறவாகஎண்ணிவிட்டு
உரைக்கத்தான் சொல்லிடவே
உரிமையோடு நானும்வந்தேன்
உறைந்தும்தான் நிற்கின்றேன்

உன்னைக்கண்டுஅல்ல
என்னுறவைக்கண்டு
சகோதரனோ தமிழன் பூங்கொத்தோடு நின்றிட
நண்பனோ ஈவில் பூவோடு நிற்க
சொல்லவந்தகாதலை  சொல்லாமல்தவிக்கிறேன்
சொல்லத்துணிவு இல்லாமல் அல்ல
பிரியமனமில்லாமல்

சொல்லாமல் தான் போகிறேன்
சொல்லிவிட்ட சந்தோஷத்தில்
வார்த்தைகளால் அல்ல விழிகளினால்


சொன்னால்தான் காதலா
சொல்லாமலும் வாழும்  என் காதல்
உன்னோடு அல்ல  உன் நினைவுகளோடு
அருகே இருந்தும் தொலைத்துவிட்டேன்
காதலை அல்ல காதலியை
                                              -இணையத்தமிழன்
« Last Edit: January 19, 2021, 09:20:57 AM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
நிராகரித்தலை சுமத்தல்
அத்தனை இலகுவானதல்ல
அதன் ஒவ்வொரு நிமிடமும்
ஊசிமுனைக்கொப்பானது

கண்வழிப் புகுந்த காதல் ஒன்று
பார்வை இழந்து தவிக்கிறது
என் வலி சுமக்கும் இதயம் ஒன்று
இருப்பினை யாசகம் கேட்கின்றது..

உன்னிடம் பகிரா
உறவொன்றை சுமந்தேன்
உனக்கென துடித்த
இதயத்தை பழித்தேன்..
சொல்லிடமுடியா காதலடி
அதை சொப்பனமாக்கி
நீ போனதேனடி ...

காதல் காதல் என்றிருந்தேன்
இசைக் காதலோடு
உன் அருகிருந்தேன்
உரைக்காத என்
காதல் உணர்ந்திடாது
நீ எனைத்தாண்டி
எங்கோ சென்றதுயேன்..

வாழாவிருந்த காதல்
வாழத்தான் தகுதியற்றதா..
பாழாய்ப்போன மனசு
பரிதவிக்க பிறவியுற்றதா..

காணாது போய்விடினும்
கண்மணியே
நீ எந்தன்
காதலடி கண்ணம்மா..
« Last Edit: January 18, 2021, 10:58:33 PM by Raju »

Offline MoGiNi

உறக்கமற்ற
இரவுகள் பல கடந்தாலும்
உதிரம் உறைந்த
இரவுகள் அணைக்கிறது
விடியல் காணாத
விட்டில் இவள் ..

முடியாத நினைவுகளுடன்
போராடும்
முகவரி தொலைத்த
குறை நிலவு..

உன் சிதறிய புன்னகையில்
உதறிய
என் காதலை தேடுகிறேன் ..
உன் காலடியில்
காய்ந்து கிடப்பதை
அறியாமல் ......

வற்றாத ஜீவ நதியில்
வழிந்தோடும்
நீர்  அலையில்
நினைவுச் சுழல் உந்த
நீர்ந்து தீர்கிறது ஆத்மா ..

எரிந்து கழிந்த
எதிர்பார்ப்புகள் எலாம்
ஏலம் கேட்கிறது
எதிர்கால ஆசைகளை
வருந்தி அழைக்க
வாய்பிளந்து கிடக்கிறது
வாழ்க்கையின்
பாதைகள் ..

உன்னை
கடந்துவிட முடியாத
நானும்
உன்னை இழந்து விட
விரும்பாத  இருதயமும்
சிலதை
என்றும் நிராகரிக்குமென்பதை
நீ அறிய வாய்ப்பில்லை ..

இருந்தும்
ஏதோ ஒன்று
எஞ்சியிருக்கிறது .
உனக்கான நேசம்
உனக்கான அன்பு
உனக்கான காதல்
உனக்கான ஸ்பரிசம்
உனக்கனா முத்தம்
இப்படி ...

எனக்காக..
« Last Edit: January 18, 2021, 09:37:02 PM by MoGiNi »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
என்னவென்று சொல்வேன் இறைவா..
வேண்டாம் வேண்டாமென விலகினாலும்
வேண்டுமென நெருங்கும் உறவுகள்...

அறிமுகம் இல்லா இதயங்கள்... 
நட்பாக பழகி.... காதலில் முடியும்
இம்மரபை...  நாம் மாற்றலாம் நட்பே...

காதலால் விளையும் ஆழமான அன்பும்..
நட்பில் மிளிரும் அற்புத அன்பும்....
ஒன்றெனவே உணர்த்துவோம் நட்பே..

நாம் மூவரும் எங்கு எங்கோ பிறந்து...
இணைந்தோம் பாடசாலையிலே..
நம்முள் பிரிவுயேன் காதலின் பெயராலே...

கண்களில் வழிந்தோடும் கண்ணீராலோ..
இதயங்கள் நொறுங்கும் ஓசையினாலோ - அல்லது
நட்பின் பிளவில் பிறப்பதோ  காதலல்ல...

காதல் காயமின்றி மலரட்டுமே...
மனங்களின் மகிழ்ச்சியில் மிதக்கட்டுமே...
காதலில்லா நட்பே.. காயமின்றி வாழும்! 
« Last Edit: January 18, 2021, 11:07:29 PM by TiNu »

Offline SweeTie

காதல் என்ன சந்தை பொருளா
கை மாறி  விலைபோவதற்கு 
வேண்டாம் என்றபோது  விட்டெறிவதற்கும் 
தேவை என்றபோது  சூடிப் பார்ப்பதற்கும்
கண்ணோடு  கண்ணோக்கி   
இதயத்துள்  பாயும்  மின்னலை  அல்லவா 

காலங்கள்  என்னும்  வேலிக்குள் 
அறுவடைக்கு காத்திருக்கும்     நெற்  பயிர்போல் 
ஓடுமீன் ஓடி  உறுமீன் வரும்வரையும்
கல்மேல்  காத்திருக்கும்    நாரைபோல் 
காத்திருக்கிறாள்    அவள் 
தனக்காக பிறந்தவன்  வரும்வரை .

மலர்ச்செண்டுகளின்  சரணடைதலில்   
,மனதை   பறிகொடுத்து   மயங்கவும் 
காதல்  என்ற  புனிதத்தை  கொச்சை படுத்தவும்
இணைதலும்  பின்னர் பிரிதலும்   என்ற
இங்கிதமற்ற   செயற்பாட்டில்    நாட்டமுமின்றி
உண்மைக்காதலுக்காக   காத்திருக்கிறாள் அவள்.

 மலர் மாலைகளும்   அர்ச்சதைகளும்     
வாழ்க்கையின்   ஆரம்பமில்லை   
மனமொத்த காதலின்  இறுகிய  சங்கிலிகள் 
இறுதிவரை   இருந்தாலே போதும்   
என்றும்  நீ வேண்டும்  என் காதலியே  என்னும் 
 அவனுக்காக  காத்திருக்கிறாள்  அவள்

பிணி போக்கும் மருந்தென அவனும் 
பசி போக்கும்   விருந்தென  நானும் 
இசை பாடும் குயிலென  அவனும் 
மயிலாக அசைத்தாட  நானும்   
இணையாக    பிரியாத   வரம் வேண்டி
புரிதலுடனான அவனுக்காக காத்திருக்கிறாள் அவள்