Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 05/04/2015 (April 05th)  (Read 1801 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மேஷம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 

ரிஷபம்

மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி திரும்பும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 

மிதுனம்

கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். கலைப் பொருட்கள் வாங்குகூர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 

கடகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில செலவுகள் பெருமையடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 

சிம்மம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாக தீர்வு காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 

கன்னி

மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளையும், பயணங்களையும் போராடி சமாளிப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 

துலாம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய சிக்கல்களுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அசதி, சோர்வு வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திட்டமிட்டு செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 

விருச்சிகம்

நீண்ட நாள் கனவுகளில் ஒன்று நனவாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 

தனுசு

மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெடுநாளாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 

மகரம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குணம் தளரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 

கும்பம்

மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மாலையிலிருந்து தடைகள் நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 

மீனம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் சகிப்புதன்மையுடன் நடந்துக் கொள்ளப்பாருங்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்