Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 182  (Read 207 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 182
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: April 15, 2018, 06:27:22 PM by MysteRy »

Offline thamilan

இந்தியத் தாய் நாடே
அடிமை விலங்கினை உடைத்திட
அந்நியனை விரட்டிட
எத்தனை போராட்டங்கள்
எத்தனை உயிர் பலிகள்

சுதந்திரம் கிடைத்தது
நாட்டுக்கு மட்டுமே
பெண் விடுதலை வெறும் ஏட்டில் தான்
இந்திய தாய் நாட்டில் இல்லை
இந்த பாரத மாதா
துயில் உரியப்படுகிறாள் தினமும்

இந்தியாவை தாய் நாடு என்பர்
கடலை  கடல் அன்னை என்பர்
நிலத்தை பூமா தேவி என்பர்
அஃறிணையான பொருட்களுக்கெல்லாம்
அன்னையவள் பெயரை சூட்டிடும்
நம் மனிதகுலம்
உயர்திணையான மதிப்புமிக்க பெண்குலத்தை
அஃறிணையை விட கேவலமாக
நடத்துவதும் ஏனோ

பெண் என்பவள் இன்பம் கொடுத்திடும்
ஒரு கருவி
பிள்ளை பெற்றிடும்
ஒரு இயந்திரம்
காலை முதல் மாலை  வரை  பணிகள் செய்திடும்
ஒரு பணிப்பெண்
மொத்தத்தில் பெண் என்பவள் ஒரு அடிமை
இது தானே உலகம் பெண்களுக்கு கொடுத்திடும்
சான்றிதழ்

ரயிலில் கற்பழிப்பு
ஓடும் பேருந்தில் மானபங்கம்
காதலை மறுத்த பெண்
குத்திக் கொலை
தினமும் வரும்  செய்திகள் இவைதானே

வக்கிரமம் பிடித்த ஆணினம்
கையில் பெண்கள்
குரங்கு கையில் கிடைத்த பூமாலை
கடவுளுக்கு சாத்த வேண்டிய பூமாலையை
காலில் போட்டு மிதித்திடும் குலம்
இன்றய   மனித குலம்

இந்த நிலை மாறும் வரை
இந்திய வரைபடம் மட்டுமல்ல
உலகத்தின் வரைபடமே
அவலட்சணமாகத் தான் தோன்றும்
« Last Edit: April 16, 2018, 01:52:27 AM by thamilan »

Online SaMYuKTha

எத்தனை எத்தனை கனவுகளோடு
என்னை  கருவில் சுமந்து
பேறுகால கஷ்டங்களையும் சுகமாய் உணர்ந்து
என்னை  பெற்றுயிருப்பாய் அம்மா!!
நம் குலம் சிறக்கவந்த குலவிளக்காய்
பூரித்து பூஜித்திருப்பாயே!!!

ஈனசமூகத்தின் வன்மபார்வைக்கு நான்
தெருவிளக்காய் தெரிந்திடுவேனென முன்பே அறிந்திருந்தால்
உன்கையால் கள்ளிப்பாலை கொடுத்து
என்னுயிரின் மேலான மானத்தை காத்திருப்பாயோ!!!

போய் தொலைவோம் உலகை துறந்து
நம்மை வெறும்சதையாகவும் போகப்பொருளாகவும்
பார்த்துவதைக்கும் ஆண்வர்கத்தின் முன் சதைப்பிண்டமாய்
வாழ்வதை விட மரணம் கொடித்தல்ல

வாழவழியற்று ஓடத் துரத்தியடிக்கும்
ஆண்களோடு போராடும் பெண்களாக
நித்தம் பார்வைகளாலும் செய்கையினாலும்
துகிலுரிக்கப்பட்டு கேட்க நாதியற்று
அற்பபுழுக்களாக கூனிக்குறுகி வாழ்வதைவிட
மாசற்ற எம்தாயின் கருவிலே
காற்றோடு கவுரவமாக கரைந்துபோயிருப்போமே!!


நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதர்களை காண்கையிலே...

Offline AshiNi

  • Newbie
  • *
  • Posts: 17
  • Total likes: 127
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Let your smile change the world✌
பெண்மையின் மகத்துவம் அறியா
    மானிடமே விரைந்து வாரீர்
ஓவியமே ஓர் காவியமாகி
    கதை பேசுகிறதிங்கு...

சாதனைப் படைக்கும் சாம்ராஜ்யமே
    பெண்மைக்குள் அடக்கம்
இன்னும் மிகையாக வேறெப்படி
     நவில்வது விளக்கம்...

கன்னியவள் நினைப்பின்
     பாரதமாதாவாக மட்டுமல்ல
அண்ட சராசரமாய் மாறிடினும்
       அதிசயம் ஒன்றுமில்லை

பெண்ணின் எண்ணம்
       மண்ணையும் பொன்னாக்கும்
பெண்ணின் வன்மம்
       கடல்நீரையும் எரிமலையாக்கும்

பெண்மையின் அசைவுகள்
      சாதனைகள் படைக்கும்
புரிந்து உணரின்
       வையகம் சிறக்கும்

பெண்ணவள் பெருமை
     வரிகளில் மட்டும்தான்
உயிர் வாழ்கிறது
     இயல்பு நிலை சிந்திப்பின்
பேனையும் சீற்றம் கொள்கிறது...

தேசமே அவளுக்குள் அடக்கமாம்
     எனினும் அவள் கனவுகள்
என்றென்றும் முடக்கமே...

கண்களில் கண்ணீரும்
    இதயத்தில் ரணங்களும் தந்தே
சமுதாயம் விநோதம் கொள்கிறது

அவள் கால்கள் ஓடுகிறது
     கனவுகளை தேடியல்ல!
அராஜகமும் பலாத்காரமும்
     மரதன் களத்தில் துரத்துவதால்...

என்று தான் விடியும்
      என ஓடும் பெண்மைக்கு
காமக் கொடூரத்தையும்           
      அடிமைத்தனத்தையும் கைகழுவி
கரம் கொடுங்கள் சமுதாயமே!

அன்று ஒரு ஓவியன்
     நிச்சயம் வருவான் !
அன்பாலே உருவான
      தேசம் எப்படி வரைவது
 என விடை தேடி...

Offline JeGaTisH

பெண்னை ஒரு தெய்வமாக வணங்கும் நாடே
பெண்ணை ஓட ஓட துரத்துகிறதே

அன்று பெண்களை போற்றிய கைகள்
இன்று ஆனதேனோ அவளை சூறையாடும் கைதிகள்

உயிரை படைக்கும் சக்தி பெண்ணிடமே உள்ளது
அவளை அழித்தால் அழியும் உலகு முடிவு
உன்னிடமே உள்ளது

அன்புக்கு இலக்கணம் அம்மா
அவள் அன்பையே இழிவாக்குவது தகுமா

அச்சத்தின் விளிம்பில் இருக்கிறாள் பெண்
அவளை காப்பாற்ற வேண்டிய நாடோ சதியின் பின்

வீதியில் காலடி எடுத்துவைக்க தயங்குகிறாள்
அவள் வாழ்க்கையின் பயத்தை எண்ணி

சுதந்திரமான குடிமக்கள் இருக்கும் நாட்டிலே
சுதந்திரம் இல்லையே பெண்களுக்கே

பெண் என்பவள் நாட்டின் கண்
அவளை இழிவு படுத்தினால்
நம் வாழ்க்கை மண்

 அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
« Last Edit: April 18, 2018, 04:02:03 PM by JeGaTisH »

Tags: