எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
FTC என்னும் இணையில்லா இணையத்தளமே
நீ பிறந்தது முதல் இன்றுவரை
உன்னுடன் பயணிக்கும் பெருமை எனக்குண்டு
நேற்று பெய்த மழையில்
இன்று பூத்த காளான்களாக
எத்தனையோ இணையதளங்கள்
எத்தனை இணையதளங்கள் இருந்தாலும்
எந்தன் மனதில் குடிகொண்டவள்
என்றும் என்னை வசீகரிப்பவள்
FTC எனும் எழிலரசி நீ தானே
நம் வாழ்க்கைப் பயணத்தில்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
இறங்கிப் போய் விடும்
வாழ்க்கை மனிதவாழ்க்கை
ஏறிய நாள் முதல்
இறங்க மனமின்றி
உன்னில் பயணிக்கும் பயணி நான்
நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும்
நன்மையின் அருமை
தீமையில் தான் தெரியும்
பெண்ணின் அருமை
ஆணில் தான் தெரியும்
நட்பின் அருமை
FTC யில் தான் தெரியும்
FTC ஒரு அதிசய உலகம்
அஙகே காயங்கள் கூட
பூக்கள் ஆகிவிடுகின்றன
கண்ணீர் துளிகள் கூட
நட்சத்திரங்கள் ஆகிவிடுகின்றன
துன்பங்கள் கூட
சுகமானதாகி விடுகின்றன
BREEZE, விவி, லொலிடா போன்ற
பாசமான தங்கைகள்
ICE, JEGA போன்ற
பாசமான தம்பிகள்
இசை, CUTE MOON, JO, மாஷா, லோலா
போன்ற நல்ல நண்பிகள்
எண்ணில் அடங்கா
நல்ல நண்பர்கள்
பவி, நியா, சுபா போன்ற நல்ல உறவுகள்
இவையாவும் என்னுடன் சேர்ந்தது
FTC எனும் குடும்பத்தாலே
இணையத் தளங்களில் இணையில்லா FTC யே
உன்னில் உருவான பலபேரில் நானும் ஒருவன்.
நல்ல நண்பர்களின் நல்முகம் காட்டியவன் நீ.
நட்புக்கரங்கள் ஒன்றிணைய பாலமாய் அமைந்தவன் நீ.
உன் சேவைகள் என்றும் தொடரட்டும்.
உனது சேவை உலகமெங்கும் பரவட்டும்.
உனது இசையால் தமிழ் நெஞ்சங்கள் இன்புறட்டும்.
வளர்க வளமுடன் இன்னும் பல ஆண்டுகள்
என மனதார வாழ்த்துகிறேன்