Author Topic: கவிதை மொழி!  (Read 819 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
கவிதை மொழி!
« on: January 19, 2019, 11:38:17 PM »

காணும் காட்சி விளிம்புகளில் ...
காணாத முகம் தேடும்  போதிலே..
மனதை  மறைத்து வைத்து.....
நாணும் மொழி என்ன மொழியோ ?

நீள் பரப்பின் ஆகாயத்தில்...
விரியும் ஒளி ஜாலங்களில் ..
மனதை ஊஞ்சலாட  விட்ட....
கற்பனைக்கு என்ன மொழியோ ?

பனி காற்றின் வாசத்தில்..
படரும் நினைவுகளில்...
ஒரு கொடியாய் பின்னி ஊர்ந்திடும் ....
ஊர்வலம் என்ன மொழியோ?

ஆடலும் பாடலுமான உலகில் ..
தனிமையை இரவல் வாங்கி
மௌனத்தின் ராகங்களை ...
இசைப்பது என்ன மொழியோ ?

ஆரம்பத்தின் முடிவு ....
தேடலின் ஆரம்பம் ....
நிழல் தேடி இளைப்பாறும்..
நிஜங்கள் மொழி என்ன மொழியோ ?

Offline Guest 2k

Re: கவிதை மொழி!
« Reply #1 on: January 22, 2019, 12:18:14 AM »
அருமையான கவிதை ரிஷூ பேபி 💕

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்