Author Topic: நாலடியார்  (Read 11283 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #30 on: July 07, 2012, 02:51:31 PM »
2.31 இரவச்சம்
 
301. நம்மாலே யாவா஢ந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
 தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
 மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்
 தெருண்ட அறிவி னவர்.
 
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
 பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
 விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
 அழித்துப் பிறக்கும் பிறப்பு.
 
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
 செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
 அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
 முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
 
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
 உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
 அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
 எருத்திறைஞ்சி நில்லாதாம் மேல்.
 
305. கரவாத திண்ணன்பின கண்ணன்னார் கண்ணும்
 இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை
 உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
 கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.
 
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று
 தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
 காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்டு
 ஏதி லவரை இரவு.
 
307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
 தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
 பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
 இரப்பாரை எள்ளா மகன்.
 
308. புறுத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
 நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
 ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
 மாயானோ மாற்றி விடின்.
 
309. ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
 வழிபடுதல் வல்லுத லல்லால் - பா஢சழிந்து
 செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
 பையத்தான் செல்லும் நெறி?
 
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே
 கிழமைதான் யாதானும் செய்க - கிழமை
 பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
 தறாஅச் சுடுவதோர் தீ.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #31 on: July 07, 2012, 02:53:05 PM »

 2.32 அவையறிதல்

 
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
 அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
 கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
 சொன்ஞானஞ் சோர விடல்.
 
312. நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்
 தீப்புலவர் சேரார் செறிவுடையார் - தீப்புலவன்
 கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லர்க்கால்
 தோட்புடைக் கொள்ளா எழும்.
 
313. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
 கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார் - கற்ற
 செலவுரைக்கும ஆறறியார் தோற்ப தறியார்
 பலவுரைக்கும் மாந்தர் பலர்.
 
314. கற்றது஡உ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
 பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
 நல்லா ஡஢டைப்புக்கு நாணாது சொல்லித்தன்
 புல்லறிவு காட்டி விடும்.
 
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
 கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ - டொன்றி
 உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
 சுரைவித்துப் போலுந்தம் பல்.
 
316. பாடமே ஓதிப் பயன்தொ஢தல் தேற்றாத
 முடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச்
 சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
 ஈன்றாட் கிறப்பப் பா஢ந்து.
 
317. பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
 கற்பவர்க் கெல்லாம் எளியநு஡ல் - மற்றம்
 முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
 அறிதற் கா஢ய பொருள்.
 
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடொ஢யார்
 உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
 போற்றும் புலவரும் வேறே பொருடொ஢ந்து
 தேற்றும் புலவரும் வேறு.
 
319. பொழிப்பகல நுட்பநு஡ லெச்சமிந் நான்கின்
 கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
 நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட
 உரையாமோ நு஡லிற்கு நன்கு?
 
320. இற்பிறப் பில்லா ரெனைத்துநு஡ல் கற்பினும்
 சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? - இற்பிறந்த
 நல்லறி வாளர் நவின்றநு஡ல் தேற்றாதார்
 புல்லறிவு தாமறிவ தில்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #32 on: July 07, 2012, 02:55:00 PM »
2.33 புல்லறிவாண்மை
 
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
 பொருளாகக் கொள்வர் புலவர் - பொருளல்லா
 ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
 முழை சுவையுணரா தாங்கு.
 
322. அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
 செவ்விய ரல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
 கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
 செவ்விய கொளல்தேற்றா தாங்கு.
 
323. இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
 எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
 நன்றி பு஡஢கல்லா நாணின் மடமாக்கள்
 பொன்றிலென் பொன்றாக்கா லென்?
 
324. உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
 பலர்மன்னுந் து஡ற்றும் பழியால், - பலருள்ளும்
 கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
 தண்டித் தனிப்பகை கோள்.
 
325. எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
 வைதான் ஒருவன் ஒருவனை - வைய
 வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
 வியத்தக்கான் வாழும் எனின்.
 
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
 ஊக்கி அதன்கண் முயலாதான் - நு஡க்கிப்
 புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
 தொழுத்தையால் கூறப் படும்.
 
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
 ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
 ஆக்கத்துள் து஡ங்கி அவத்தமே வாழ்நாளைப்
 போக்குவார் புல்லறிவி னார்.
 
328. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
 இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
 பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
 பொன்னும் புளிவிளிங்கா யாம்.
 
329. வெறுமை யிடத்தும் விழிப்பிணிப் போழ்தும்
 மறுமை மனத்தாரே யாகி - மறுமையை
 ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
 சிந்தியார் சிற்றறிவி னார்.
 
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
 கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
 அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
 கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #33 on: July 07, 2012, 02:56:09 PM »
2.34 பேதைமை
 
331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
 நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே
 கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
 வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
 
332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
 ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
 இற்செய் குறைவினை நீக்கி அறவினை
 மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
 
333. குலந்தவம் கல்வி குடிநம்முப் பைந்தும்
 விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
 மையறு தொல்சீர் உலகம் அறியாமை
 நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
 
334. கன்னனி நல்ல கடையாய மாக்களின்
 சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
 நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலேன்
 றுற்றவர்க்குத் தாமுதவ லான்.
 
335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
 கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
 கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
 நாத்தின்னும் நல்ல சுனைத்து.
 
336. தங்கள் மரபில்லார் பின்சென்று தாமவரை
 எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
 நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
 கற்கிள்ளிக் கையிழந் தற்று.
 
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
 போகா தெறும்பு புறஞ்சுற்றும் - யாதும்
 கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
 விடாஅர் உலகத் தவர்.
 
338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
 இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
 இனியார்தோள் சேரார் இசைபட வாழார்
 முனியார்கொல் தாம்வாழும் நாள்.
 
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
 விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
 பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
 ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
 
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
 பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
 மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
 பித்தனென் றெள்ளப் படும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #34 on: July 07, 2012, 02:56:42 PM »
2.35 கீழ்மை
 
341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
 குப்பை கிளைப்போவாக் கோழிபோல் - மிக்க
 கனம்பொதிந்த நு஡ல்வி஡஢த்துக் காட்டினும் கீழ்தன்
 மனம்பு஡஢ந்த வாறே மிகும்.
 
342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
 தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
 உறங்குவாம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
 மறங்குமாம் மற்றொன் றுரைத்து.
 
343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
 தொருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை
 பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட
 வற்றாம் ஒருநடை கீழ்.
 
344. தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
 பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பளையனைத்
 தென்றும் செயினும் இலங்கருவி நன்னாட
 நன்றில நன்றறியார் மாட்டு.
 
345. பொற்கலத் து஡ட்டிப் புறந்தா஢னும் நாய்பிறர்
 எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் - அச்சீர்
 பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
 கருமங்கள் வேறு படும்.
 
346. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
 எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும்
 முந்தி஡஢மேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
 இந்திரனா எண்ணி விடும்.
 
347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
 செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்
 எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
 செய்தொழிலால் காணப் படும்.
 
348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
 இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
 வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட
 ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
 
349. பழைய ஡஢வரென்று பன்னாட்பின் நிற்பின்
 உழையினிய ராகுவர் சான்றோர் - விழையாதே
 கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப
 எள்ளுவர் கீழா யவர்.
 
350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
 வையம்பூண் கல்லா சிறுகுண்டை - ஐயகேள்,
 எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
 செய்தொழிலாற் காணப் படும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #35 on: July 07, 2012, 02:57:07 PM »
2.36 கயமை
 
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினும்
 காத்தோம்பித் தம்மை அடக்குப - மூத்தொறு஡உம்
 தீத்தொழிலே கன்றித் தி஡஢தந் தெருவைபோல்
 போத்தறார் புல்லறிவி னார்.
 
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
 வழும்பறுக்க கில்லாவாம் தேரை - வழும்பில்சீர்
 நு஡ல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
 தேர்கிற்கும் பெற்றி அ஡஢து.
 
353. கணமலை நன்னாட. கண்ணின் றொருவர்
 குணனேயுங் கூற்ற கா஢தால், - குணனழுங்கக்
 குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு
 எற்றா லியன்றதோ நா.
 
354. கோடேந் தகலல்குல் பெண்டிர்தம் பெண்ணீர்மை
 சேடியர் போலச் செயல்தேற்றார் - கூடிப்
 புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
 மதித்திறப்பர் மற்றை யவர்.
 
355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
 உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க்
 கென்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
 இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
 
356. மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
 விளைநிலம் உள்ளும் உழவன் சிறந்தொருவர்
 செய்தநன் றுள்ளுவர் சான்றோர் கயந்தன்னை
 வைததை உள்ளி விடும்.
 
357. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
 பிழைநு஡றும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
 எழுநு஡று நன்றிசெய் தொன்றுதீ தாயின்
 எழுநு஡றும் தீதாய் விடும்.
 
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன்
 மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - கோட்டை
 வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
 செயிர்வேழ மாகுத லின்று.
 
359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
 நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
 உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
 மரையிலையின் மாய்ந்தார் பலர்.
 
360. நீருள் பிறந்து நிறம்பசிய தாயினும்
 ஈரங் கிடையகத் தில்லாகும் - ஓரும்
 நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
 அறைப்பெருங்கல் அன்னா ருடைத்து
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #36 on: July 07, 2012, 02:57:43 PM »
2.37 பன்னெறி
 
361. மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
 இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்? - விழைதக்க
 மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
 காண்டற் கா஢யதோர் காடு.
 
362. வழக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
 இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
 செய்குறாப் பாணி சிறிதே அச் சின்மொழியார்
 கையுறாப் பாணி பொ஢து.
 
363. எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
 அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
 உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
 கொண்டானைக் கொல்லும் படை.
 
364. கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
 ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான் - பேர்த்துமோர்
 இற்கொண் டினித஧ருஉம் ஏமுறுதல் என்பவே
 கற்கொண் டெறியுந் தவறு.
 
365. தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்
 கிடையே இனியார்கண் தங்கல் - கடையே
 புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
 உணரார்பின் சென்று நிலை.
 
366. கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
 துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
 இனிதுண்ணோம் ஆரப் பெறேமியாம் என்னும்
 முனிவினாற் கண்பா டிலர்.
 
367. செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
 செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
 வயனிறையக் காய்க்கும் வளவய லு஡ர
 மகனறிவு தந்தை யறிவு.
 
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
 புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
 கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போல்
 கீழ்மேலாய் நிற்கும் உலகு.
 
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
 தணியாத உள்ளம் உடையார் - மணிவரன்றி
 வீழும் அருவி விறன்மலை நன்னாட
 வாழ்வின் வரைபாய்தல் நன்று.
 
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
 விதுப்புற நாடின்வே றல்ல - புதுப்புனலும்
 மா஡஢ அறவே அறுமே, அவரன்பும்
 வா஡஢ அறவே அறும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #37 on: July 07, 2012, 02:58:16 PM »
3. காமத்துப்பால்
 
3.38 பொது மகளிர்
 
371. விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
 துளக்கற நாடின்வே றல்ல - விளக்கொளியும்
 நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
 கையற்ற கண்ணே அறும்.
 
372. அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு
 செங்கோடு பாய்துமே என்றாள்மன் - செங்கோட்டின்
 மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே
 காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
 
373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
 செங்கண்மா லாயினும் ஆகமன்- தங்கைக்
 கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
 விடுப்பர்தங் கையால் தொழுது.
 
374. ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
 காணமி லாதார் கடுவனையர் - காணவே
 செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
 அக்காரம் அன்னார் அவர்க்கு.
 
375. பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
 தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
 மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர்
 விலங்கன்ன வெள்ளறிவி னார்.
 
376. பொத்தநு஡ற் கல்லும் புணர்பி஡஢யா அன்றிலும்போல்
 நித்தலும் நம்மைப் பி஡஢யலம் என்றுரைத்த
 பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
 நிற்றியோ போதியோ நீ.
 
377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
 சேமாபோல் குப்புறு஡உஞ் சில்லைக்கண் அன்பினை
 ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
 தாமாம் பலரால் நகை.
 
378. ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த்
 தாமார்ந்த போதே தகர்கோடாம் - மானோக்கின்
 தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
 செந்நெறிச் சேர்துமென் பார்.
 
379. ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
 தேறா மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
 எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
 தமரல்லர் தம்உடம்பி னார்.
 
380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
 கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி
 அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
 செறிந்த உடம்பி னவர்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #38 on: July 07, 2012, 02:58:49 PM »
2.39 கற்புடை மகளிர்
 
381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
 பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
 பெறுநசையால் பின்னிற்பா ஡஢ன்மையே பேணும்
 நறுநுதலாள் நன்மைத் துணை.
 
382. குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
 கடனீ ரறவுண்ணும் கேளிர் வா஢னும்
 கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
 மாதர் மனைமாட்சி யாள்.
 
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
 மேலாறு மேலுறை சோ஡஢னும் - மேலாய
 வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
 இல்லாள் அமர்ந்ததே இல்.
 
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
 உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
 இடனறிந் து஡டி இனிதின் உணரும்
 மடமொழி மாதராள் பெண்.
 
385. எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
 அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
 என்னை கெழீஇயினர் கொல்லோ பெருள்நசையால்
 பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
 
386. உள்ளத் துணர்வுடையான் ஓதிய நு஡லற்றால்
 வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் - தெள்ளிய
 ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
 நாணுடையாள் பெற்ற நலம்.
 
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் து஡ணிப் பதக்கென்று
 ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
 நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
 என்னையும் தோய வரும்.
 
388. கொடியவை கூறாதி பாண. நீ கூறின்
 அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
 இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
 வலக்கண் அனையார்க் குரை.
 
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லு஡ரன்மீது
 ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
 தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
 நோக்கி யிருந்தேனும் யான்.
 
390. அரும்பவிழ் தா஡஢னான் எம்அருளும் என்று
 பெரும்பொய் உரையாதி, பாண - கரும்பின்
 கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
 இடைக்கண் அனையார்க் குரை.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #39 on: July 07, 2012, 02:59:51 PM »
3.40 காமநுதலியல்
 
391. முயங்காக்காற் பாயும் பசலைமற் று஡டி
 உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம்
 நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
 புல்லாப் புலப்பதோர் ஆறு.
 
392. தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
 விம்ம முயங்கும் துணையில்லார்க் - கிம்மெனப்
 பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
 நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
 
393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
 மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
 கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
 இம்மாலை என்செய்வ தென்று.
 
394. செல்சுடர் நோக்கிச் சிதரா஢க்கண் கொண்டநீர்
 மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
 நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
 தோள்வைத் தணைமேல் கிடந்து.
 
395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
 பின்சென்றது அம்ம சிறுசிரல் - பின்சென்றும்
 ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்
 கோட்டிய வில்வாக் கறிந்து.
 
396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
 பரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த
 பஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்று
 அஞ்சிப்பின் வாங்கும் அடி.
 
397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
 மாலைப் பொழுதில் மணந்தார் பி஡஢வுள்ளி
 மாலை பா஢ந்திட் டழுதாள் வனமுலைமேல்
 கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.
 
398. கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
 நடக்கவும் வல்லையோ என்றி - சுடர்த்தொடீஇ
 பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
 கற்றான் அஃது஡ரும் ஆறு.
 
399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
 இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
 வேங்கை ஦வ்ருஉம் நெறிசெலிய போலும்என்
 தீம்பாவை செய்த குறி.
 
400. கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
 என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
 கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயின்
 பாங்கனார் சென்ற நெறி.
 

********