Author Topic: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்  (Read 2288 times)

Offline SweeTie



             அன்று நானும்  எனது தோழி  வனஜாவும்   ஒரு  ஓவிய கண்காட்சிக்கு செல்வதாக தீர்மானித்தோம்.   வனஜாவும் நானும்  ஒரே  இடத்தில் வேலை செய்வதால்   ஒரு  அபார்ட்மெண்ட் இல்  ஒன்றாகவே இருந்தோம்.   நல்ல வசதியான இடம்.   எங்கள்  ஆபிசுக்கு ம்   அருகில் அமைந்திருந்தது.   அவசரசமாக  விடிய முன்னர் எழுந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.   இந்த அபார்ட்மெண்டில்   சேர்ந்து  இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.     அன்று சனிக்கிழமை என்பதால்  வேலைக்கு போகவேண்டிய தேவை இருக்கவில்லை.   எனவேதான்   எப்படியாவது இன்று அந்த   ஓவிய கண்காட்சிக்கு  சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களை  விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.     
“ஸ்வீட்டி   ரெடியா ? “வனஜாவின் குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டதும். 
“எஸ்  எஸ்   நான் ரெடி:  என்று சொல்லிக்கொண்டே  என் அறையை விட்டு வெளியே வரவும்  வனஜாவும் அவள் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.  வனஜா  ஒரு ஊதா கலர்  ட்ரெஸ்ஸில்  ரொம்ப அழகாக இருந்தாள் :
" வனஜா    உன்னோட டிரஸ் ரொம்ப அழகா இருக்கு.  ரொம்ப   விலைபோல இருக்கு"
"அப்படிலாம்  ஒன்னும் இல்ல ஸ்வீட்டி  ஒரு ஐந்தாயிரம்   தான் "
"என்னது    ஐந்தாயிரம்   ரொம்ப விலை இல்லையா?"  என்றேன்  ஒரு பெருமூச்சுடன்
“:ஸ்வீட்டி  உன்னோட  டிரஸ்  கூட  ரொம்ப அழகுடி"
‘சரி சரி    சீக்ரம் போகலாம்’   சொல்லிக்கொண்டே   டாக்ஸி  ஸ்டாண்ட்  நோக்கி  நடக்கலானோம்.   இருவரும்    டாக்சி  ஸ்டாண்ட் இல்  நின்ற ஒரு   டாக்சியில்   ஏறிக்கொண்டோம்.
   
         நாங்கள்    செல்லும் அந்த ஓவிய கண்காட்சி   சாலை   அதிக தூரம் இல்லை.    அரை மணித்தியாலத்தில் போய்விடலாம்.  7 மணிக்கு மூடி விடுவார்கள்.    ஆகவே  சீக்கிரம் சென்றால்தான்   நன்றாக    பார்க்க முடியும்   .    நாங்கள்  அந்த இடத்தை அடையும்போது  மணி 6 ஆகிவிட்டது.    சீக்கிரம்    பாஸ்  வாங்கிக்கொண்டு  உள்ளே நுழைந்தோம். அன்று  சனிக்கிழமையாதலால்   கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.    எல்லோரும் எங்களை  போல   சீக்கிரம்  எல்லாவற்றையும்   பார்த்துவிடவேண்டும்  என்ற நோக்கத்துடன்  பரபரப்பாக
 இருந்தார்கள்.

      நாங்களும்   அந்த  வரிசையில்  சேர்ந்துகொண்டோம்.    வரிசை  நத்தை போல் ஊர்ந்துகொண்டிருந்தது.   திரும்பி பார்க்கும்போது எங்களுக்கு   பின்னால்  ஏறக்குறைய  இருபது  முப்பது   பேர் நிற்பது தெரிந்தது.    அதுவே மனசுக்கு சந்தோசமாக இருந்தது.   .  நத்தை போல் ஊர்ந்த   வரிசை   இப்பொது  கூடத்தினுள்  நுழைய ஆரம்பமாகியது.     

         அந்த   காட்சி கூடம்  அழகாக  சோடனை  செய்யப்பட்டு  ஸ்பாட் லைட்கள்  போடப்பட்டு  இருந்தது..   அதனால்   ஓவியங்கள்  மிக அழகாக காட்சியளித்தன.   நாங்களும்  ஒவொன்றாக  பார்த்தபடியே   நகர்ந்துகொண்டிருந்தோம்.    ஒவொரு ஓவியத்தின் கீழும்   ஓவியத்தை பற்றிய  விவரம்  ஓவியர் பெயர்  விலை  என்பன பொறிக்கப்பட்டு  தொங்கவிடப்பட்டிருந்தன.    இயற்கை காட்சிகள்,   அப்ஸ்ட்ரக்ட்   ஓவியங்கள்,   ஸ்டில் லைப்      என்று பலதரப்பட்ட ஓவியங்கள்   தொங்கவிடப்பட்டிருந்தன.    கையால் வரையப்பட்ட  அசல்  ஓவியங்கள் என்பதால்  விலை  அதிகமாக காணப்பட்டது.     
”வனஜா   ஓவியங்கள்  ரொம்ப விலை  போல் தெரியுது”    என்றேன்
“ஸ்வீட்டி    ஆமா  எல்லாம்  கையால் வரைந்த அசல்  ஓவியங்கள்.  அப்படித்தான் இருக்கும்”    என்றாள் வனஜா
பரவாயில்லை    இந்த அழகான ஓவியங்களை  பார்ப்பது மனசுக்கு எவ்வளவு   ரம்மியமாக இருக்கிறது.    எங்கள்  ரசனை   தொடர  வரிசை   ஊர்ந்து கொண்டு சென்றது.

       அந்த சாலையில்   கடைசியில்   அமைந்திருந்தது   உருவப்பட( போர்ட்ரைட்) ஓவியங்கள் பகுதி .  அதில்  பலவிதமான   உருவ ஓவியங்கள்  காணப்பட்டன.    அதை தொடர்ந்து  ஒரு பெண்ணின்  உருவப்படம்  .  அசல் என்னை போலவே  இருந்தது.  \பார்த்ததும்  திகைத்து போனோம்.   பல பல போஸ்களில்  அந்த  பெண்ணின்   உருவம்    காணப்பட்டது.    அதில் சில   பென்சில்களாலும் சில வர்ணங்களாலும்  தீட்டப்படிருந்தன.   

            வனஜா என்னையும்  அந்த  போர்ட்ரைட் ஓவியங்களையும் மாறி மாறி  பார்த்தாள் .   
”ஸ்வீட்டி   என்னடி  இதெல்லாம்”    என்றாள்
“ஆமாடி   என் கண்களையே  நம்பமுடியவில்லை “   என்றேன் 
“நீ  முகப்புத்தகத்தில் உன்  படத்தை  போட்டியா    என்றாள் வனஜா
“அய்யோ   நான் போடவே இல்லையே “    என்றேன்
“அப்படியானால்   எப்படி  உன் படத்தை வரைந்தார்கள்”   என்றாள்
“அதான்  வனஜா  எனக்கும் புரியாத புதிராக இருக்கு”   என்றேன் 

:            அந்த  ஓவியங்களை  வரைந்த ஓவிய பெயர்  என்னவென்று பார்த்தோம்.   அடியில் கையெழுத்து போட்டிருந்தார்.   அவர் பெயர்     விஜயபாரதி என்று போடப்பட்டிருந்தது. .    எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  ,மனதில்  ஒரு பீதி   உண்டாயிற்று   

             சீக்கிரம்  வீட்டுக்கு போய்விடலாம்   என்றிருந்தது.     அவசர அவசரமாக    மீதியிருந்த  ஓவியங்களையும்  பட்டும் படாமலும் பார்த்துவிட்டு  சீக்கிரமே வீடு திரும்பாலானோம்.    போகும் வழியெல்லாம்   இருவரும்  இதையே பேசிக்கொண்டும்  சென்றோம்.  பயம் ஒரு புறம் இருந்தாலும்   ஆர்வம் இன்னொருபுறம் இருந்தது.   

    வீட்டுக்கு சென்றதும்   இருவரும்  கணினியில்  உட்கார்ந்து   விஜய பாரதி  யாரென்ற   ஆராய்ச்சியில் ஈடுபடலானோம்.   அவரது   வலைப்பக்கத்தை தேடினோம்.  .   எத்தனையோ  விஜய பாரதிகள்  அங்கே காணப்பட்டார்கள்

       ஓவியர் விஜயபாரதி  என்று தேடினோம்.   அப்போதும் சிலர் வந்து  போனார்கள்.   அவர்களது  சுயவிவர படத்தை பார்க்கும்போது  அதிகமாக எல்லாரும் வயதானவர்களாகவே   இருந்தார்கள்.   
" கண்டிப்பா   இவர்கள் யாருமே இருக்கமுடியாது " என்றாள். வனஜா 
"எப்படி  சொல்கிறாய்  வனஜா"
"விஜய பாரதி  ரொம்ப  லேட்டஸ்ட் பேரா  இருக்கு:,  ஆகவே ஒரு யூத் ஆகத்தான் இருக்கும்"
" எங்க   பக்கத்து வீட்டு   ஆண்டி  பேரு  கூட   ரொம்ப லேட்டஸ்ட் "   எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. 
ஹாஹாஹா....ஹாஹாஹா.   இருவரும் சிரித்துக்கொண்டே    தேடலில் முனைந்தோம்.

        " ஸ்வீட்டி   எனக்கு  ஒரு ஐடியா  தோணுது.   நாளைக்கு  அந்த கண்காட்சி  அரங்கத்துக்குபோய் அமைப்பாளரிடம்  விசாரிப்போம் "    " எனக்கும்  அதுவே  நல்லதா  தோணுது"     இருவரும்  கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு  வனஜா அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.    நானும்  எனது  இரவு  சாப்பாட்டை முடித்துக்கொண்டு  தூங்க சென்றுவிட்டேன்.       இரவு கனவு முழுவதும்   அந்த  ஓவியங்கள்  வந்துகொண்டே இருந்தன. 

           அடுத்த நாள்    வழக்கம்போல  இருவரும்    பொடிநடையில்     ஆபிஸ்  சென்றுகொண்டிருந்தோம்.  எங்களது பேச்சில்  விஜய பாரதி  அடிக்கடி   உலவி கொண்டிருந்தார்.   எதற்காக எனது படத்தை  வரைந்து  கொண்டிருக்கிறான்    என்ற கேள்வி  என்னை உலுப்பிக்கொண்டே இருந்தது.  ஆபிஸ்  முடிந்ததும்     கூறியது போலவே   அந்த   அரங்கத்தில் நுழைந்து   அமைப்பாளரை சந்தித்தோம்.  அவரிடம்   விஜய பாரதி பற்றி விசாரணை செய்தோம்.      அவர் முதலில் தயங்கினார்.  :ஓவியர்களின்    அனுமதி  இல்லாமல்  நாங்கள்  அவர் பற்றிய தகவல் தர முடியாது என்று மறுத்துவிட்டார்.    வனஜா  அவரிடம்  மிகவும் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தாள்.   
"சார்   நான் அவரிடம்   ஓவியம்  கற்றுக்கொள்ளலாம்  என்று  இருக்கிறேன்.  அதற்காகத்தான் கேட்கிறேன் "  என்று  கூசாமல் ஒரு பொய்யை  கூறினாள்
அவர் முகத்தில்   இப்பொது கொஞ்சம்  பரிதாபம் தெரிந்தது.   கொடுக்கலாமா வேண்டாமா  என்று யோசிப்பது போல் இருந்தது.      கடைசியில்    வனஜாவின் தந்திரம் வெற்றி கண்டுவிடவே விஜயபாரதியின்   போன் நம்பரை  வாங்கிவிட்டாள்   என்னை பார்த்து  ஒரு சிறிய  நக்கல்  சிரிப்பு சிரித்தாள்.    இருவரும்   நன்றி  சார்   என்று சொல்லிக்கொண்டு  புறப்பட்டோம்.     

                    வீட்டுக்கு சென்றபோது  நேரம் 7 மணியாகிவிட்டது.   இந்த நேரம்  போன் பண்ணுவது சரியா தப்பா   என்று யோசிக்கலானோம்.   
" எதற்கும்  ஒரு தரம் அடிச்சு பாப்போம்.  பேசுனா பேசுவோம்.  இல்லன்னா நாளைக்கு பேசுவோம்"  என்றாள்   வனஜா
 கடவுளை வேண்டிக்கொண்டு    அந்த நம்பரை  டயல் செய்தோம்.   ஆனால்   அவர் எடுக்கவில்லை.  சரி நாளைக்கு பார்ப்போம் என்று வைத்துவிட்டு   எங்களை  ஆசுவாசப் படுத்திகொண்டு  தூங்க  சென்றுவிட்டோம்.

                 காலை  ஆபிஸ்   செல்வதற்கு  ஆயத்தமாகி கொண்டிருந்தேன்.   அப்போது எனது கைத்தொலைபேசி  கிணுகிணுத்தது.  யாரென்று    பார்க்கையில்  அது விஜய பாரதி நம்பர் .   எனக்கு மனம்  திக் திக்  என்று  அடிக்க  .  ஓடிச்சென்று  வனஜாவின்  அறையை தட்டினேன்.
" நீ பேசு "  என்று என் கைத்தொலைபேசியை  கொடுத்தேன்.    அவள் கைகள் நடுங்கி கொண்டிருந்தன.
குட் மோர்னிங் சார்"  என்றால்   
அவரும் குட் மோர்னிங் சொல்லிருக்கலாம் போலும் 
" நேற்று உங்கள்  நம்பரில் இருந்து  எனக்கு ஒரு  அழைப்பு வந்திருந்தது: என்றார்
“ஆமாம் சார்.  நாங்கள்தான் அழைத்தோம்.   உங்கள்  ஓவி:ய கண்காட்சியை  பார்க்க சென்றிருந்தோம்   மிகவும் அழகான ஓவியங்கள்”  :  என்று   தட்டுத்தடுமாறி. கொண்டிருந்தாள் வனஜா
“தங்க்  யு”   என்றார் .
அடுத்து என்ன பேசுவாளோ    என்று  நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 
" சார் உங்கள் அடுத்த  கண்காட்சி  எப்போது எங்கே நடக்கும்"  என்றாள் படீரென்று
“:இப்பொது  எதுவும்  என் அட்டவணையில் இல்லை.   வரும்போது சொல்கிறேன்”:    என்றார் அவர்.   
வனஜாவின் முகத்தில் அசடு வழிந்தது.    கண்டிப்பாக   இதுக்கு மேல் அவளால் பேசமுடியாது   என் உள்மனம் சொல்லியது.   ஆனால்  வனஜா சளைத்துவிடவில்லை.    அடுத்த கேள்வியை கேட்க ஆயத்தமானாள். 
"சார்   உங்க    வலைப்பக்கம்   விலா சம் கொடுக்கமுடியுமா" என்றாள் 
"  விஜய பாரதி ஆர்ட்ஸ”   என்றார். மிகவம்  ஷோர்ட் அண்ட் ஸ்வீட் ஆகவே
"தங்க் யு சார்”    வனஜா   போனை திருப்பி என்னிடம்  கொடுத்தாள்.
 எதோ  சாதனை படைத்துவிட்டதுபோல்  அவள் முகத்தில் சந்தோசம்
பரவாயில்லை.   அவர்  வலைப்பக்கத்தில் தேடி பார்ப்போம் என்றேன்
அன்று முழுவதும்  அந்த பக்கத்தை புரட்டி எடுத்தோம்.   என்ன  ஆச்சர்யம்  அங்கேயும  பல  ஓவியங்கள்  என்னைப்போலவே  வரைந்திருந்தார்.    எங்களுக்கு   எதுவும்  புரியவில்லை.  வியப்பாகவே  இருந்தது
                       
                                                                                          (தொடரும்...)
 
« Last Edit: October 31, 2020, 05:01:23 AM by SweeTie »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #1 on: October 31, 2020, 08:26:06 PM »


ஸ்வீட்டி சிஸ் ! செம கதை களம்! ஆரம்பமே அசத்தல் !அடுத்து என்னனு ஆவலை தூண்டுகிறது கதை ! Best wishes Sis !      :D :-*

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #2 on: October 31, 2020, 08:52:03 PM »
so nice story.  starting ah semma intresting ah iruku . avalodaya mugathai   epadi varaithar entru

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #3 on: October 31, 2020, 10:13:30 PM »
முந்தய கதையை போன்றே இக்கதையின் அரம்பமும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. முன் பின் தெரியாத ஒருவர் நம்மை போன்றே ஒரு ஓவியத்தை வரைந்தால் நிச்சயம் யாராக இருந்தாலும் ஒருவகை பதட்டமும் ஆர்வமும் ஏற்படும். அதை அழகாக உங்கள் கதையில் விவரித்தது இன்னும் சிறப்பு. இக்கதையிலும் ஒரு படிப்பினையை வாசகர்களுக்கு தருவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். உங்கள் காதயின் பயணம் தொடர்ந்து பயணிக்க வாழ்துக்கள் ஜோ.

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #4 on: November 01, 2020, 09:45:21 AM »
Woow sema ya iruku story arambameey  asathalaa suvaarasiyama iruku sweetie romba intresting aaana idathula tv serial pola neengalum thodarumnu potu engaloda aarvatha athigapaduthitinga😂😂😁😁😁 vazhthukal  sweetie we are waiting for next episode.....
« Last Edit: November 01, 2020, 09:49:10 AM by Hari »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #5 on: November 01, 2020, 09:54:32 PM »
வாவ் வித்தியாசமான கதைகளம் ஜோ சிஸ். எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு அடுத்து என்னாகும் அப்படின்னு ஆவலை தூண்டுது சிஸ். All the best for ur story. Waiting for the next episode sis

Offline SweeTie

Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #6 on: November 02, 2020, 07:18:08 AM »


(தொடற்சி ....-)
   
                 ஆனால் அவரது  விவர புகைப்படம் எங்குமே இல்லை.   அது  எங்களுக்கு  மிக வருத்தத்தை   கொடுத்தது.  வனஜாவுக்கு கோவம் பொத்துக்கொண்டு வந்தது .
“ரொம்ப கர்வம்  பிடிச்சவரு  போல அவர் போட்டோ போட்டா  என்னவாம்   " 
"  பார்த்துக்கலாம்  வனஜா." என்றேன் எனது   ஏமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்.      ஏறக்குறைய   ஒரு மாதம்  ஓடிப்போயிற்று.  ஆனால்  அவருடைய  ஓவிய கண்காட்சி   எங்கும்  நடக்கவில்லை.
  "திரும்பவும்  போன் பண்ணி பார்க்கலாமா”: என்றேன்  நான்.    ஒரு அசட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு     போன்  பண்ணினோம்     என்ன  ஆச்சரியம்  .
"ஹல்லோ  விஜயபாரதி  ஸ்பீக்கிங்"  என்றார். 
எனக்கு  கையும்  ஓடல்ல காலும் ஓடல்ல.     தட்டு தடுமாறி   "ஹலோ  சார்"   என்றேன்
" ஒ.. அன்னிக்கு  என்  ஆர்ட்  ஷோ  பார்க்க வந்தவர்களா"  என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.  :   இவருக்கு   அவ்வளவு ஞாபகமா?   அடேங்கப்பா….. என்னுள்ளே  வியந்துகொண்டேன்
"ஆமா  சார் " என்றேன்
அவருக்கு என்  தடுமாற்றம்    தெரிந்திருக்கும் போல் தெரிந்தது.   அவரே  தொடர்ந்தார்.
" எப்படி  இருக்கிறீங்க ... உங்க நண்பி  எப்பிடி இருக்கிறாங்க ":
" எப்பிடி சார் கண்டு பிடிச்சீங்க: நாங்க தான்னு :"
" இதென்ன  ராணுவ ரகசியமா  "  என்று  சிரிப்பது கேட்டது.
:" நாங்க  எங்க  பேர் சொல்லவே இல்லையே  சார்"
" நீங்க  சொல்லல்ல   ஆனா  நானே  ஒரு பேர் கொடுத்துட்டேன்"
:" என்னனு  கொடுத்தீங்க சார்"
:" வேறென்ன கொடுக்க முடியும்.   வாயாடி னு    சேவ் பண்ணிக்கிட்டேன்" சிரித்தபடியே சொன்னார்
ரொம்ப வில்லங்கம் பிடிச்ச மனுஷனா   இருப்பரோ   என்று எண்ணத்தோன்றியது.                                         
                                                                                             
               என்கையிலிருந்த  போனை  வனஜா  பிடுங்கி  அவள் பேசத் தொடங்கினாள்
ஸ்பீக்கர் ல  போடு னு அவளுக்கு சைகை  காட்டினேன்.   அப்படியே  அவளும்  ஸ்பீக்கரில்  போட்டாள்
" சார்   உங்க அடுத்த கண்காட்சி பார்க்க  ஆவலாயிருக்கிறோம்   
" ம்ம்....."
" சார்  உங்கள்  உருவப்படங்கள்   ( போர்ட்ரைட்ஸ் )  ரொம்ப உயிர்பெற்றவை போலவே இருக்கு.
" தாங்க்  யூ "
" எப்பிடி சார்   எல்லா ஓவியங்களும்  ஒரே  மாதிரியாகவே  இருக்கு ."  எங்கள் ஆவல் எங்களையறியாமல் தலை தூக்கியது. 
" ஹாஹா ஹா ....."  அவர் சிரிப்பில்  ஒரு சோகமும்  நக்கலும் இழைந்தோடுவது தெரிந்தது.   நாங்கள் ஒன்னும் புரியாமல் ஆளை ஆள்  பார்த்துக்கொண்டோம். 
அவர்  மௌனமானார் .   
" கொஞ்சம் அவசரமாக வெளியே செல்லவேண்டும் .   பின்னர் பேசுகிறேன்.   பை"   என்று போனை வைப்பது  கேட்டது.     எங்களுக்கு  திக்  என்றிருந்தது.   கேட்க கூடாத எதையாவது  கேட்டுவிட்டோமோ  என்று  எங்களுக்குள்   ஒரு சந்தேகம் உண்டானது.    அடுத்த  தரம்  ரொம்ப கவனமாக பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம்.                                                                                           
                                                                                         
            இரண்டு   வாரங்கள்  கழிந்துவிட்டன;    அவர் பேசவில்லை.   நாம் ஏதும் தப்பாக  பேசிவிட்டோமோ என்ற பயம் ஒருபக்கம்  இருந்தாலும்   எப்படியும்   பேசி  உண்மையை அறியவேண்டும்    என்ற ஆர்வம் விடவில்லை. 
இன்று எப்படியும் பேசி   கண்டுபிடிக்கவேண்டும்   என்ற நோக்கத்துடன்   ஆபிஸ்  முடிந்து வீடு திரும்பியதும்  அவரை   போனில்  கூப்பிட்டோம். 
" ஹலோ  வாயாடி "  என்றார்   விஜய பாரதி.
" சார்   நான்  ஸ்வீட்டி ...  என்  தோழி  வனஜா "  என்றேன்   
"நீங்க ஸ்வீட்டா  பேசும்போதே  நான்  உங்க பேர்  ஸ்வீட்டியாகத்தான்  இருக்கணும்  னு நினைச்சேன்" சிரித்துக்கொண்டே சொன்னார்
 :" ஸ்வீட்டி  கண்டிப்பா  இது  ஒரு  ஜொள்ளு  பார்ட்டி  டி:"   என்று  என் காதில் ரகசியமாய்   சொன்னாள்   வனஜா.
இப்பொது  எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.     சிறிது நேரம்   சிரிப்பை தவிர   வேறு  எதுவும் பேசமுடியவில்லை ... அவரும் அடுத்த பக்கத்தில் சிரிப்பது கேட்டது  .   

             வனஜா எங்கள்   முக்கிய   கேள்வியில் கவனமாக  இருந்தாள்   கண்டிப்பாக அவருக்கு   ஒரு முப்பது  முப்பத்தைந்து  வயது இருக்கலாம்   என்பது எங்கள் கணிப்பு.    போக போக தெரிந்து கொள்ளலாம் என்று  நினைத்துக்கொண்டு   திரும்பவும்    எங்கள் ஆராய்ச்சியில்   ஈடுபட்டோம்.   
"சார்  திரும்ப திரும்ப   அதே   முகத்தை எப்படி  கொஞ்சமும் பிசகாமல்  வரைகிறீர்கள் :
" அதுதான் எனக்கும் புரியவில்லை "  என்று  திரும்பவும்  சிரிக்கிறார்.
அவர்  எங்கள் முன்னாள் இருந்திருந்தால்  நிட்சயமாக    அடித்து  கொலை பண்ணி இருப்போம்.  கொஞ்சம்கூட   கூச்சமில்லாமல்   இப்படி சொல்கிறார். எங்களுக்கு அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக  வந்தது.    இவரெல்லாம்   ஒரு  ஆர்ட்டிஸ்ட் ?     எங்களுக்குள் முனகிக்கொண்டோம்.   

                    இந்த ஆளிடம் பேசி   பிரயோஜனம் இல்லை என்றிருந்தது எனக்கு.  இருந்தாலும்   வனஜா  விட்டுவிட தயாரில்லை.    அவள் தொடர்ந்தாள். 
"சார்  உங்கள்   வலை பக்கத்திலும்  உங்கள்  ஓவியங்களை பார்த்தோம்.    அங்கும்    எல்லா  ஓவியங்களிலும்  இதே முகத்தைத்தான்  பார்க்க முடிந்தது..  " என்றாள்
" நீங்கள்   ஓவியம் கற்பவர்களா "  என்றார்
"இல்லை.   நாங்கள்   ரசிப்பவர்கள் மட்டுமே " என்றோம்
"ம்ம்ம்  ..." யாரையாவது  காதலிக்கிறீர்களா"   என்றார்
நாங்கள்  ஆளை ஆள் பார்த்து  பேய் அறைந்தது பொலானோம்.
 "  உன்னை  காதலிக்கப்போகிறாரா  இல்லை என்னயா  என்றாள்" சிரித்துக்கொண்டே    வனஜா.   
:" என்ன  மௌனமாகிவிட்டிர்கள்.?:   என்றார்
" சார்   அப்பிடி எதுவும்    இல்லை " என்றாள் வனஜா
" நல்லவேளை   ஆம்  என்று சொல்லிவிடுவீர்களோ என்று பயந்துவிட்டேன்" என்றார்
எங்களுக்கு தலையே சுற்றியது, .நாங்கள் காதலித்தால் இவர்  ஏன் பயப்படவேண்டும்       எதுவுமே புரியவில்லை.   எதுக்கு இந்த மனுஷன்  இப்பிடி மூக்கை சுத்தி தொடுகிறார்   என்று நினைத்துக்கொண்டோம்.   பின்னர் அவரே தொடர்ந்தார்.   
"அவள்  என் மானசீக காதலி என்றார்:
இதென்னடா    வம்பா போச்சு ...  எனக்கு இவர் யாரென்றுகூட தெரியாது.  அப்படி இருக்க இப்பிடி சொல்கிறாரே   என்று  எனக்கு    பைத்தியம் பிடித்தது  ஆயிற்று,     
:" என்னடி  நடக்குது  இங்கே"  என்றாள்  வனஜா
எனக்கு  அழுகை அழுகையாக வந்தது.   என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
                                                                   ( தொடரும்..._)

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #7 on: November 02, 2020, 10:27:00 AM »
எனக்கு அந்த ஓவியர் மர்மங்கள் நிறைந்த மனிதராக தோன்றுகிறார். ஒரே முகச்சாடையில் பல மனிதர்கள் இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அப்படி ஒரே முகச்சாடை கொண்ட மற்றும் ஒரு பெண்ணாகத்தான் அவரின் மானசீக காதலி இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இவை எல்லாம் என்னுடய அனுமானங்கள் தான். இப்படி இருக்கலாம் அல்லது அப்படி இருக்கலாம் என்ற எண்ணங்கள் எனக்குள் ஓடுகிறது. உண்மையில் இக்கதை எந்த கோணத்தில் செல்லப்போகிறது என்பது கதை எழுதும் உங்களுக்கு தான் தெரியும் ஜோ, வாழ்த்துக்கள்.
« Last Edit: November 02, 2020, 12:25:23 PM by Darth Vader »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #8 on: November 02, 2020, 09:12:00 PM »

ஜோ சிஸ் ! ஏன் இப்படிஎழுதி  எங்களின் இதய துடிப்புகளை ஏற்றி விடுகிறீர்கள்! உண்மையாக அடுத்து என்ன நடக்குமோ என்று சுவாரசியமா போகிறது கதை ! இதுதான் உங்கள் எழுத்துக்களின் வெற்றி! வாழ்த்துக்கள் சிஸ் !   :-*



Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #9 on: November 02, 2020, 11:01:01 PM »
Vera mari vera mari👌👌👏👏👏 next episode la pakalam ..kadhaikalam soodupidika aramikuthu..

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #10 on: November 03, 2020, 01:16:26 AM »
Nice story .semma intresting ah poguthu story. antha artist yaru avaru yen sweety ah potrait panni irukaru, enaku enamo sweety double action ah irukumo nu etho etho thonuthu. soon un next story ah relese pannu . i am waiting for ur next part .

Offline Stranger

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #11 on: November 03, 2020, 07:14:40 AM »
 nanraka irukinrathu. sweetie unkala pola

Offline JeGaTisH

Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #12 on: November 03, 2020, 06:03:41 PM »
அருமையாக இருக்கிறது SWEETIE MA  உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் .

Offline SweeTie

Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #13 on: November 03, 2020, 08:02:23 PM »
(தொடற்சி ....-)

'" சார்  உங்க மானசீக காதலி  பற்றி  கொஞ்சம் சொல்லுங்களேன்:  அவரை உஷார்படுத்தினோம்.

:மிகவும்   ஆர்வமாய்  இருக்கிறீர்கள்  போல தெரிகிறதே  என்று   சிரித்தார் 
" நான்  ஆர்ட் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த   சமயம்   அவள்    வேறு கல்லூரியில்    தொல்பொருள்  ஆராய்ச்சியில்  பணியாற்றி கொண்டிருந்தாள்.      நான் போர்ட்ரைட்  ஓவியம்  படித்துக்கொண்டிருந்தேன். 
சில தடவை எங்கள்  ஆர்ட் கல்லூரிக்கு  மாடல்  ஆகவும் வந்து   போய்க்  கொண்டிருந்தாள்;   அவளை  பார்த்து  நாங்கள்   ஓவியம் தீட்ட வேண்டும்.
சிறிதும்  பிசகாமல்   வரையப்படவேண்டும்.    போர்ட்ரைட்  ஓவியர்கள்   கண்ணாலேயே கணக்கு போடுபவர்கள்.   ஓவியத்தின் முக்கிய அம்சமே  கண்கள்தான்.      அவள் கண்களை  பார்க்கும்போது   அதில்  தெரிந்த காதல்  என்னை  எதோ  உலகத்துக்கு  அழைத்து செல்வதுபோல்   உணர்வேன்.   என் ஓவியங்களில் குடியேறியவள்  சீக்கிரமே என் மனதிலும் குடியேறிவிட்டாள்      ஆனால்   அவளிடம்  என் காதலைச்  சொல்ல  துணிவில்லாமல்      நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன்.    அவளும் நான் சொல்லட்டும் என்று காத்திருந்திருப்பாள்  போல் தெரிந்தது. பார்வைகளை  பரிமாறிக்கொண்டோம்.   அந்த நயனபாஷை ஆயிரம் அர்த்தங்கள் கொண்டவை.   கடைசியில்  எங்கள் காதல்   சொல்லாமலே    போய்விட்டது. பின்னர்  அவள்  தொல்பொருள் ஆராச்சியிலிருந்தும்  விலகிவிட்டதாக   அறிந்தேன் ."   அவர்   குரலில்   ஒரு சோகம்  தெரிந்தது.

                      எனக்கு இப்போதான் மூச்சு வந்தது.   அப்பாடா..... அப்போ என்னைப்போல்  யாரோ  இவர் படித்த காலத்தில்  இருந்திருக்கிறார்கள்   என்று    ஒரு பெருமூச்சு விட்டு   என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.    ஒருவரை போல்  ஏழுபேர்  உலககத்தில் இருப்பார்களாம்   என்று கேள்வி பட்டிருக்கிறேன்.    இப்போது  எங்களுக்கு அவர்மேல் ஒரு   ;;பச்சாத்தாபம்  ஏற்பட்டது.   பாவம்  இந்த மனுஷன் இத்தனை  சோகத்தை  வைத்துக்கொண்டுதான்   இந்த  ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறாரா?   ...
" சார்  உங்களை  ஒரு நாள்  நேரில் சந்திக்க  முடியுமா"   வனஜா  தொடர்ந்தாள்.   
                     '
                   " நான் ஒண்டி கட்டை.    சனிக்கிழமை என் வீட்டுக்கு வாருங்கள் சாவகாசமாக  பேசுவோம்" என்றார்    நாங்களும்  ஒத்துக்கொண்டு    அவரிடம்    அவர் விலாசத்தை வாங்கிக்கொண்டோம்.   நிம்மதியாக அன்று தூங்கினோம் என்றுதான் சொல்லவேண்டும்.   

                     சனிக்கிழமை  விடியல் எங்களுக்கு  என்றுமில்லாத ஒரு புது விடியல்போல் தெரிந்தது  புதியவர் ஒருவரை சந்திக்கப்போகிறோம்.   அவர் எப்படி இருப்பார் என்று தெரியாது   யாரென்று தெரியாது.   எல்லாம் ஒரு பூடகமாகவே   இருந்தது.   இருந்தாலும்  அதிலும்  ஒரு  மகிழ்ச்சி  தெரிந்தது.   அவர்  தனியாக  இருப்பதாக சொன்னதால்    கொஞ்சம் பயமும் இருக்கத்தான் செய்தது.    இரண்டு பேர் போகிறோம்  என்ற துணிவும்  கூடவே இருந்தது.    அவர் வீடு   எங்கள்  அபார்ட்மெண்ட்டில்  இருந்து    இருபத்தைந்து  மைல்  தூரத்தில் இருந்ததால்   ஒரு டாக்ஸியில்   செல்லவேண்டியதாயிற்று.     அன்று சனிக்கிழமை ஆகையால்   டிராபிக்  கூடுதலாகவே  இருந்தது.    எப்படியோ  அவர் சொன்ன நேரத்துக்கு  போய் சேர்ந்துவிட்டோம். 
                       
                     உள்ளே நுழைந்தோம்.   ஒருத்தர்  பூச்செடிகளுக்கு  தண்ணீர்  ஊற்றிக்கொண்டிருந்தார்.   அவரிடம்  விஜயபாராதி  சார் வரச்சொன்னார்  என்றோம்.     உள்ளே செல்லுங்கள்  என்று அவர் சைகை காட்டிவிட்டு   தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.    நாங்கள் உள்ளே சென்றோம்.   உள்ளே சென்ற எங்களுக்கு   மிகப் பெரிய  அதிசயம்  காத்திருந்தது.   எங்கள் கண்களையே
நம்ப முடியவில்லை.     மண்டபத்தில் 84அங்குல  உயரமான  ஒரு ஓவியம் தொங்கவிடப்பட்டிருந்தது..    அதே முகம்   நாங்கள்   உறைந்துபோனோம் . ,   அவர் மானசீக   காதலி.     எனக்கோ என்னை பெரியதோர்   நிலைக்  கண்ணாடியில் பார்ப்பது போன்றிருந்தது.    சிறிது நேரத்தில் நாங்கள்  வெளியில் பார்த்த  தோட்டக்காரர்  சட்டை  கண்ணாடி  போட்டுகொண்டு  உள்ளே வந்தார்.   
“ நாங்க   விஜயபாரதி   சேர் ஐ   பார்க்கவேண்டும்”  என்றோம். 
அவர் சிரித்துக்கொண்டே     உக்காருங்கள்  என்றார்,  அவரும் உட்க்காந்தார்.    நான்தான்  அந்த  விஜயபாரதி     என்றார்.....   

                      எங்களுக்கு  தூக்கிவாரிப்போட்டது.   அறுபது  அறுபத்தைந்து  மதிக்கத்தக்க ஒரு உருவம்.  கண்ணாடி அணிந்திருந்தார்.   "பெப்பர்  அண்ட்  சோல்ட் "   தலைமுடி.  மிகவும் சாதாரணமாக இருந்தார்.  ஓவியர்கள்   இப்படிதான் இருப்பார்க;ளா ?  . என்னை பார்த்ததும் அவரும் திகைத்ததுபோல் தெரிந்தது.    வைத்த கண் வாங்காமல் என்னையே  பார்த்துக்கொண்டிருந்தார்.  சில நிமிடங்கள். எனக்கு   உடம்பெல்லாம்  வியர்க்க தொடங்கிவிட்டது.   மனம் திக் திக்  அன்று நூறு மைல்  வேகத்தில்  அடித்துக்கொண்டிருந்தது.   

.:" நீங்கள் தான் ஸ்வீட்டியா : என்றார்  என்னிடம்.
ஆம்  என்று  தலை அசைத்தேன். திகைப்பாய் இருந்தது எனக்கு   
அடுத்த கேள்வி  என்னை  மேலும் திகைப்பில் ஆழ்த்தியது. 
"நீங்கள் ஸ்டெல்லா வின்  மகளா"  என்றார். 
நான் பரக்க பரக்க  முழிப்பதை   பார்த்ததும்  அவருக்கு  எதோ  புரிந்ததுபோல் தெரிந்தது.
ஆம் என்று  தலை அசைத்தேன்
என் எண்ண  அலைகலின்  ஓட்டத்தை  நிறுத்த முடியவில்லை.  அப்படியானால்    என் அம்மாவின் ஓவியங்களா  இவை?.   என் அம்மா  என் வயதில் என்னை போலவே இருந்திருக்கிறாள்.      சிலர் சொல்வதுண்டு  நீ  உன் அம்மாவைப்போல் இருக்கிறாய் என்று.   ஆனால் அதை நான் நம்பவே இல்லை.   ஏனென்றால்  எனக்கு  ஒரு அக்காவும்  இரண்டு அண்ணாக்களும் இருக்கிறார்கள்.   நான்தான் வீட்டில் கடைக்குட்டி.  நான் பிறக்கும்  பொழுது  அம்மா நாற்பது களில் தான்  இருந்ததாக  அப்பா     சொல்லக் கேட்டிருக்கிறேன் . நான் அம்மாவின் சின்னவயது புகை படங்களை அதிகம் காணவில்லை.   அந்த காலத்தில்    இப்போதுபோல    வசதிகள்   அதிகம் இருக்கவில்லையாம்.   
அதனால்   புகைப்படங்கள்  எடுத்துக்கொள்ளவில்லையாம் .   இப்பொது அம்மாவின்  ஓவியங்களை பார்க்கும்போது  அம்மா உயிருடன் இருப்பது போல்  ஒரு உணர்வு  எனக்கு      ஒருவேளை  அம்மா இருந்திருந்தால்  இந்த ஓவியங்களை பார்த்து   ரசித்திருப்பாள்    என் மனதுக்குள் என் தாயின் நினைவுகள்    வந்து போய் க்கொண்டிருந்தன.    அதை என் கண்களில்   வழிந்த கண்ணீர்   காட்டிகொடுத்திருக்கவேண்டும்   
" ஸ்வீடி   என்ன  அமைதியாகிவிட்டீர்கள்"    என் சிந்தனையை   கலைத்தார்  விஜயபாரதி.
:" சார்  சுவீட்டி யின் அம்மா இப்பொது உயிரோடு இல்லை.   இந்த ஓவியங்களை பார்த்ததும்  அவள் நிலை குலைந்துவிட்டால் "  என்று  வனஜா  அவரிடம் கூறி கொண்டிருந்தாள்.   

சில நிமிடங்கள்அங்கே நிசப்தம்  நிலவியது 

                 விஜயபாரதி கண்ணாடியை கழற்றி   அவர் கண்களில்  கசியும்  கண்ணீரை   துடைத்துக்கொள்வதை  நாங்கள் அவதானித்தோம்.    அவரால்   பேசமுடியவில்லை.    அது அவர் காதலுக்காக கொடுக்கும் மரியாதை  என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்,   காதலை சொல்லாமல்    விட்டாலும்கூட  காதல்  மறக்கப்படுவதுமில்லை    மறைக்கப்படுவதுமில்லை     என்பதை  அவர்மூலம் உணர  முடிந்தது.    ஒருவர்  மனதில்  பதிந்துவிட்டால்   அவரை அகற்றுவது கடினம்.   மானசீகமாகப்   பதிந்த    அந்த காதல் உணர்வுகளுடன் வாழும்  இந்த  மனிதர் மரியாதைக்கு  உரியவராகவே இருந்தார்.
 
            உள்ளே  சென்று   எங்களுக்கு   தேநீர்  போட்டு கொண்டுவந்தார்.    நாங்கள் பருகிக் கொண்டிருக்கும்போது.  ஓவியங்கள் பற்றி  பல பல  விஷயங்களை எங்களுடன்  பகிர்ந்துகொண்டார்.    எங்களுக்கு அவை புதிய ஒரு பாடமாகவே  இருந்தது.    திரும்பவும்  உள்ளே சென்றார்.    சிறிது  நேரத்தில்  திரும்பி வந்தவர் கையில்  ஒரு அழகான ஓவியம் இருப்பது தெரிந்தது.
:" ஸ்வீட்டி  இது என்னுடைய  அன்பு பரிசு  உங்களுக்கு"  என் அம்மாவின்  ஓவியத்தை  கொடுத்தார்.  எதிர்பார்க்கவில்லை  நான்.    அழுகையை  அடக்கிக்கொண்டேன்.    வனஜா என்னை புன்முறுவலுடன் பார்த்தாள் .   

                     அவரிடம் விடை பெற்றுக்கொண்டு  புறப்படும்போது     
“அடிக்கடி  வாருங்கள்”. என்றார்    ஒரு   எதிர்பார்ப்புடன்.  அவர் பேச்சில்  ஒரு நெருடல் தெரிந்தது.    கண்களில்  ஒரு பாசம் தெரிந்தது.    நாங்கள்  புறப்பட்டோம்.    புதிய  உறவொன்று  உருவானது.  .
                           
                                                           
                                                   ( சுபம்  )
 

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: போர்ட்ரைட் ஆர்ட்டிஸ்ட்
« Reply #14 on: November 03, 2020, 08:49:02 PM »
So nice ending to a beautiful story. keep on posting gud stories like this