Author Topic: நியதி  (Read 1254 times)

நியதி
« on: December 06, 2021, 09:53:55 PM »
ஆசை பட்டு,
மிக அதிகமாய் நேசித்தவை எல்லாம்
மிக இலகுவாய் நீங்கிச்செல்வது போன்ற உணர்வானது
இந்த வாழ்வின் மீதான மொத்த நம்பிக்கையையும்
பறித்துக்கொள்கின்றது!
அனைத்து பிடிமானங்களும்
பெருந்தலைவலியாய் அமைந்து
அனைத்தின் மீதும்
பெரும் விரக்தி சூழ்ந்துகொண்டிருக்கின்றது!
சேர்வதெல்லாம் பிரிவதற்காக என்றால்,
எதற்காக இந்த உறவுகள்!
கிடைப்பதெல்லாம் தொலைவதற்கென்றால்,
எதற்கு இவ்வளவு தேடல்கள்!
கடலின் இரைச்சலும்,
நிலவின் கலங்கமும்
தொலைவில் இருந்தால்
தெரிவதில்லை!
அதுவே நியதி,
அது அப்படியே இருந்துவிடட்டும்!
பிழைகளோடு ஆனவன்...