Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 288  (Read 2074 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 288

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

தைத்திருநாளின் முதல் நாள்
உழவர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும் நாள்
அறுவடை பண்டிகை நாளாம்
சூரியனுக்கு படையலிடும் நாளாம்
கால்நடைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாம்

ஆடி யில் தேடி விதைத்து
தை யில் அறுவடை செய்து
புது நெல்லாம் புத்தரிசி பானையில் இட்டு
பொங்கல் பொங்கி வரும் வேளையில்  அனைவரின் மனதிலும்மகிழ்ச்சி பொங்கும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து
பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ச்சி தவழும் நாளாம்


தமிழர் மரபின் பெருமையையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் திருவிழா
எம் பொங்கல் திருவிழா

முதல் நாள் பழையன கழிதலும் புதியன புகுதலும்
இரண்டாம் நாள் பொங்கல் படையலிடும்  நாள்
மூன்றாம் நாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்
நான்காம் நாள் உற்றார் உறவினர் காணும் நாள்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் மகத்துவத்தை
இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்து சொல்வோம்!
அறுவடை பண்டிகையின் மகத்துவம் காப்போம்!!
« Last Edit: January 09, 2022, 09:51:54 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
புதுப் பானையில்  புத்தரிசி இட்டு
புதுக்கரும்பினை சுற்றி நட்டு
புதுக்கோலம் சுற்றி போட்டு
பொங்கலோ பொங்கல் என குழவை இட்டு வரவேற்போம் தைமகளை...

தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற
பழமொழியை, எந்நாளும் புதுமொழியாய் வைத்திருக்கும் தைத்திங்களை
வரவேற்போம் பொங்கலிட்டு...

பழைய பொருட்களை வெளியேற்றி வெள்ளையடித்து புதுப்பொழிவுடன் வைத்திருப்பது வீடுகளை மட்டுமல்ல
மனங்களையும் தான் என்பதை
உள்ளத்தில் பதித்திட போகிப்பண்டிகை..

மாடுகள் யாவும் அஃறிணையல்ல
மனைகளில் வாழும் பிள்ளைகள்
என்ற உண்மையை
மாட்சியுடனே எடுத்தியம்பிட மாட்டுப்பொங்கல்...

இரக்கத்தில் மட்டுமல்ல வீரத்திலும் சளைக்காதவர்கள் தமிழர்கள் என்பதை உலகிற்கு உணர்த்திட மஞ்சுவிரட்டு,
விவசாயத்தின் மேன்மையை
வீதியெங்கும் பறைசாற்றிட,
உழவனின் சிறப்பினை
ஊருக்கு உரைத்திட,வந்துவிட்ட தைமகளை வரவேற்போம் இரு கைகூப்பி..

மகிழ்வென்பது இங்கு தனி ஒருவருக்கு அல்ல ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் என்பதை வையகத்திற்கு பறைசாற்றும்
தமிழர்களின் உண்மையான
திருவிழாவான தைத்திருநாளை வரவேற்போம் நம் சிரம் தாழ்த்தி...

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
கல் தோன்றா
மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்த தமிழ்
சங்ககாலத்து பைந்தமிழ்
சான்றோர் உரைத்த செந்தமிழ்
மாவீரத்தமிழின் மகத்தான
நாள் இது... தமிழ் வருட
முத்தான முதல் நாள் இது....

பழையன கழிதலும்
புதியன புகுதலும் என
தேங்கிய துன்பம் தீயில் எரிந்திட
புதுவசந்தங்கள் பூவாய் மலர்ந்திட
போகிப் பண்டிகை முன் நாள்....

உலகிற்கு உணவிட்ட
உழவர் திருநாளாம் -ஆதவன்
உள்ளம் நிறைந்திட
நன்றி பயக்கும் நன்நாளாம்...
ஆடி மாதம் தேடி விதைத்து
ஓடிப்போகும் ஆறு மாதம் கழித்து
கைகூடி வரும் விளைச்சலை
ஆனந்தக் கண்ணீர் மல்க
அறுவடை செய்த புத்தரிசி
புதுப்பாணையிலே பொங்கிவர
மாவிலை தோரணங்கள்
வாசலிலே ஊஞ்சலாட - வரைந்த
கோலத்தோடு பிடித்து வைத்த
மஞ்சள் பிள்ளையாரும் - நட்டு வைத்த
கரும்பு கற்றைகள் சகிதம்
உதயசூரியன் எழும் சமயம்
ஏற்றிய கற்பூரத் தட்டேந்தி
ஆரத்தி எடுக்கும் - பொங்கல்
திருநாள் அல்லோ இப்பொன் நாள்...

ஈசனை ஏந்தும் இடபவாகனமாய்
கேட்பன தரும் காமதேனுவாய்
ஆலயம் உள் அமரும் நந்தியாய்
வாடிவாசலின் சிங்கக் காளையாய்
உழவர் நிலம் உழும் எந்திரனாய்
ஒவ்வோர் வீட்டின் செல்லப்பிள்ளையாய்
உறவாடும் ஆநிரைக்கும்
நன்றி நல்குதலாய் பொங்கிப்
புகழ் பாடும் மறுநாள்
இந்த பட்டிப் பொங்கல் அல்லோ....

உற்றார் உறவினர் மனை நாடி
உள்ளத்தில் அன்பு ஒன்று கூடி
சந்தோசங்கள் சங்கமிக்கும்
சலிக்காத இன்பங்கள் சூழும்
தித்திக்கும் தேன் அமுதாய்
காணும் பொங்கல் அடுத்தல்லோ....

உழவர் தம் தொழில் செழித்திட
வயலும் வளமும் பெருகிட
பொல்லாப் பிணிகளும் நீங்கிட
அன்பு தளைத்திட ஆனந்தம் பொங்கிட
வையத்து மானிடர் வாழ்வும் வளம் பெற
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்....

Offline Tee_Jy

  • Jr. Member
  • *
  • Posts: 89
  • Total likes: 226
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
மார்கழி ஓடி விட
தையும் வந்து சேர
போகம் விளைச்ச
மண்ணுக்கும்,
கூட உழைச்ச
மாடுகளுக்கும்,வானம் பார்த்து
சூரியனுக்கும்
நன்றி சொல்ல
வந்து விடும்
மகத்தான பண்டிகை!!

உழைச்சவன் அலுப்புபோக
உறவோடு கொண்டாடும்
தமிழரின் திருநாள் !!

விடிய விடிய கோலமிட்டு
தோட்டம்ஓடி வேப்பமரத்தை தேடி
பூளைப்பூவும்,
மஞ்சக்கொத்தும் கட்டாக
கலந்து வைத்து காப்புகட்டி
அழகு பார்ப்போம்..
சோப்பு கட்டியில்
எங்க அழக
சேர்ப்போம் !!!

இருளும் பிரியாது
தூக்கமும் கலையாது
நாலு மணிக்கே
மாட்டை பிடித்து  -
அதுக்கும் ஒரு
பொட்டை போட்டு
செங்களிலே அடுப்பு செய்து
விறகுகளை ஒடித்து வைத்து
சூடம் இட்டு எரிய வைத்து
தோகை கரும்பை கட்டி வைத்து
அடுப்பெரியத்
தொடங்குமுன்னே
தொடங்கிவிடும்
எங்கள் போட்டி
“எந்தப் பக்கம்
பொங்கல் விழும் ?”

பொங்கி வந்த
பொங்கலை
படையல் வைத்து
கண்மூடி நிக்க !!!

கண்ணு முன்னே
வந்து வந்து
போகும்
பொங்கலும் , கரும்பும் !

தட்டு நிறைய
பொங்கல் வைத்தும்
சில நொடியில்
தீர்ந்து போக
கரும்பை- கடித்தபடி
சுற்றி வருவோம்
ஊர் முழுதும்!!


பொங்கி வழியும்
எங்கள் வீட்டுப் பானையிலோ
ஆழாக்கு பாலும்
புதிதாக வெளியாகும்
எங்கள்  தலைவரின்போ
ஸ்டரில் ஊற்றுவோம்
ஐம்பது லிட்டர் பால்....

பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!
FTC நண்பர்கள் அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
ஊரெங்கும் தோரணம் கட்டி
வீட்டிற்கு வண்ணம் அடித்து
வாசலில் தித்திக்கும் கரும்பு கட்டி
உறவுகளெல்லாம் ஒன்று கூடி,
இருப்பவன் முதல் இல்லாதவன் வரை
அனைவரும் கொண்டாடி மகிழும்
ஓர் ஒப்பற்ற நாள்...

பழைய துன்பங்கள் தீயோடு எரிந்திட..
புதிய இன்பங்கள் மங்களமாய் பெருகிட ..
பானையிலிட்ட புத்தரிசி போல் புதுவாழ்வு பொங்கிட..
செங்கரும்பை போல் மக்கள் மனம் மகிழ்ந்திட..
மங்காத நல்வாழ்வு அனைவருக்கும் கிடைத்திட..
அனைவரும் கொண்டாடி மகிழும்
ஓர் அற்புத தமிழர்பெருநாள்...

உழவனுக்கு உறுதுணையாய் விளங்கும்
காளைகளை கொண்டாடிட...
வண்ணங்கள் வீட்டின் சுவர்களுக்கு மட்டுமல்ல காளைகளின் கொம்புகளுக்கும் எனும்படியாய் அலங்கரித்து பூரித்திட..
வீரம் காளைகளுக்கு மட்டுமல்ல
வாலிப காளைகளுக்கும் என்பதை பறைசாற்றிட...
அனைவரும் கொண்டாடி மகிழும்
ஓர் ஆர்ப்பாட்டமான வீரத் திருநாள் ...

பெரியோர்களின் வரம் பெற்றிட...
உறவினர்களுடன் கைகோர்த்திட..
தலைநிறைய பூவைத்து கை நிறைய வளையல் அணிந்த அத்தை மகளை
கண்டு களித்திட..
சொந்தங்கள் யாவும் ஒன்றுகூடி
ஒற்றுமையாய் வாழ்ந்திட...
அனைவரும் கொண்டாடி மகிழும்
தமிழர் திருநாள்...
உலகில் வேறெங்கும் இல்லாத
ஒப்பற்ற தைத்திருநாள்...

ftc நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
« Last Edit: January 13, 2022, 02:43:59 PM by AK Prakash »

Offline Mirror

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 46
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மதம் தாண்டி மனிதனை நேசிக்கும்
மகிழ்ச்சியான நாளில் ,
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் !
உடமையுடன் சேர்த்து உக்கிரத்தையும் அழித்து ,
புதியவையுடன் இணைத்து புன்னகையும் பொங்கும்
போகி பொங்கல்..

இறைவனின் பெயறால் விழாவை வைத்து
இனத்திற்கு இடையே இடைவெளி அமைய..
அதற்குமுன்னே ..
இயற்கையை இறைவனாக்கி ..
தொழிலை தெய்வமாக்கி ..
இனத்தை இனக்கமாக்கி வழிபடும்
தமிழ் கலாச்சார அடையாளம்!
 பொங்கலோ பொங்கல்...

நீர் இன்றி அமையாது உலகு மட்டுமல்ல!!
ஒளியின்றி ஓர் உயிர் ஏது !!
என்ற உண்மையை, உலகிற்கு உணர்த்தும்
எம் இணத்தின் பெருமையாம் !!
பொங்கலோ பொங்கல்...

உழுது விளைத்த நெற்பயிரின் முதல் முடியை
உடையவனான உதயனுக்கு உச்சி பார்த்து
 உபசரிக்கும் உண்ணத திருநாள் பொங்கல்..

வருடத்தின் முதல் நாள் தை யின் திருநாள்
அறுவடையின் ஆணந்தத்தை ..
உற்றாறுடன் இணைந்து வீட்டிற்கு வெளியே
 வீதியை விழா கோலமாக்கி ,
கரும்பினை காவலாக்கி மஞ்சள் மணம் கமழ..
புதுப்பானை கோலமிட்டு புத்தரிசி பொங்கலிட.. ஆதவனுடன் ஏறுக்கும் எறுதுக்கும்,
படையலாக்கும் பொங்கலோ பொங்கல்..

உழவுக்கு உறுதுணையாம்!!
அஃறினையின் பெறுமையாம் !!
எம் குடும்பத்தின் ஒர் உறவு,
 காளைக்கும் கன்றுக்கும்..
 அதை ஈனும் பசுவுக்கும் மறியாதையை !!
செயலால் உணர்த்தும் எம் மூத்த குடியின்
முத்தாய்ப்பு மாட்டுப்பொங்கல்...

நெற்கரும்பு பந்தளில் ,
மஞ்சள் தழை காற்றுடன் பேச ..
கோலங்களின் காட்சியால் !!
கோசாலை கோவிலாக,
கொம்புகள் வண்ணங்களிள் வட்டமிட
இயற்கையின் பட்டாடை மறங்களின் போர்வை!! இலைகள் மாலையாக மாற!!
முப்பழங்கள்  படையலிட !!
காளையர்கள் புடை சூழ ,
கண்ணியர்கள் புலவை ஓத ,
புதுப்பானை புத்தரிசி மாட்டு பொங்கல்...

கல்தோன்றி முள்தோன்றா முதற் குடி
 மூத்த குடி எம் தமிழ் குடியின் பெருமையில் ஓன்று,
நம் பாட்டணாரின் பந்நூறாண்டு வழி வந்த
 பொங்கலோ பொங்கல்...

நண்பர்கள் அணைவருக்கம் பொங்கல் நல்வாழ்த்துகள்...
« Last Edit: January 14, 2022, 09:07:49 PM by Mirror »