Special Category > ஆன்மீகம் - Spiritual

திருக்குர்ஆன் இறை வேதமே!!! தமிழ் மொழி பெயர்ப்பை பதிவிறக்கமும் செய்யுங்கள்...!!!

(1/1)

Yousuf:
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே பல இடங்களில் தெளிவாக விளக்கி கூறுகிறான். குர்ஆனில் 38 அத்தியாயத்தில் 41 தடவை குர்ஆனைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறான் இறைவன்.

மக்கள் அறிவு எழுச்சி பெறாத காலத்திலேயே பல அறிய தகவல்களை எளிய முறையிலும், புரியும் வகையிலும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருகின்றன என்றால், குர்ஆன் இறைவேதம் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆராய்ந்து பார்த்தாலே போதுமானது அதன் உன்மை நிலை புரியும். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நபர்கள் குர்ஆனின் உன்மை நிலையை அறிவதற்காகவே. திருமறையாம் அல்குர்ஆன் பல மொழிகளில் வெளிவந்துள்ளது அனைத்து சகோதர மக்களும், அவரவர்களுக்கு ஏற்ற மொழியில் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வேதமும் அனைத்து மொழிகளிலும் இதுவரை வெளிவந்ததே இல்லை, ஆனால் குர்ஆன் அந்த சிறப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதை பல வகைகளில் தெளிவாக்களாம். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் அன்றி வேறில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதை இவ்வளவு தெளிவாகவும், அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற வகையிலும் நயமாக யாருடைய மனதையும் புன்படுத்தாமல் தொகுக்க முடியாது, அதை தொகுக்க உலகைப்படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் 23 ஆண்டுகாலமாக குர்ஆன் சிறிது சிறிதாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதுமட்டுமல்லாது இறைவன் சில இடங்களில் நபியையே எச்சரிக்கை செய்திருக்கிறான். உதாரணத்திற்கு நபியே குர்ஆனை இயற்றிருந்தால் இது மாதிரியான எச்சரிக்கை அவசியமில்லாத ஒன்றாகிவிடுமே! பலரின் உள்ளங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் குர்ஆனை இயற்றியுள்ளார்கள் என்ற என்னமிருந்தால் அதை அடியோடு அழித்துவிட கீழே உள்ள குர்ஆன் வசனம் ஏதுவாக அமையும்.

இறைவனே தனது அருள்மறையில் பின்வருமாறு கூறுகிறான்.


இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து (படைத்தவனிடம்) என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)


(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக (இறை செய்தியாக) அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும். (6:19)

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் முன்னுக்கு முரனாக திரித்து கூறவில்லை, அது எப்பொழுது அருளப்பெற்றதோ! அன்றுமுதல் இன்றுவரை மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருப்பதை வைத்தே குர்ஆன் இறைவேதம் தான் என்பது புலனாகிறது. குர்ஆன் எந்த ஒரு முரன்பாடுக்கும் உட்படவில்லை என்பதை இறைவனே திருமறையில் விளக்கி கூறி இருக்கிறான்.


அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

நாம் எதை முன்னிருத்தி குர்ஆனில் தேடினாலும் அதற்கு ஏற்ற பதிலை நமக்கு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாக இறைமறை விளங்குகிறது. எந்த ஒரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஏராளம், அதை அனுபவிக்கும் மனமிருந்தால் குர்ஆன் தகவல்களை வெளிபடுத்தும் தாராளம்.

குர்ஆன் எல்லாவற்றிலோடும் ஒத்து போகக்கூடிய ஒன்றாகும். 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் பல அறிவியல் உன்மைகளை இவ்வுலகிற்கு இலை மறைக்காய் போல எடுத்து கூறியிருக்கின்றது. அப்பொழுதே அது கூறியதை, விஞ்ஞானிகள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துவிட்டு என்னவோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி மார்தட்டிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ...........

சமீப காலத்தில் விஞ்ஞானிகள் இரு கடல்களுக்கும் மத்தியில் தடுப்பு சுவர் இருப்பதாகவும், ஒரு கடல் நீர் மற்ற நீருடன் கலக்கவில்லை என்றும், ஒரு கடலின் நீர் இனிப்பாகவும், மற்றென்றின் நீன் உப்பாகவும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் இறைவனோ அருள் மறையாம் திருகுர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்னரே இச்செய்தியை விளக்கியுள்ளான்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

இது போல பல அறிய கருத்துக்களை குர்ஆன் தன்னுள் தாங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது உலகம் அழியும் வரை நடக்கும் பல அறிய செய்திகளை முன்கூட்டியே முன்னறிவிப்பாக குர்ஆன் கூறியிருக்கிறது. இறைவன் அருளால் நம் உயிருக்கு அவகாசம் இருந்தால் அப்படிப்பட்ட அரிய செயல்களை கான நம்மால் முடியும்.

எவர் ஒருவர் (முஸ்லீமாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் சரி) முழு மனதுடனும், ஓர்மையுடனும் குர்ஆனை அனுகினால் அவர்களுக்கு குர்ஆன் நல்வழியைக்காட்டி சிறப்பான வழியில் வாழ்வை செலுத்த வழிவகை செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே உள்ள இறைவசனம் இவற்றை தெளிவுப்படுத்துகிறது.

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)


--- Quote ---திருக்குர்'ஆணின் தமிழ் மொழி பெயர்ப்பு தேவை என்றால் கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இறைவனின் கடைசி வேதத்தை படித்து அதன் படி வாழ்கையை நடத்த இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
--- End quote ---


--- Quote ---
--- End quote ---

Faizal:
Tamil Translation of Quran really  needed one . Thank for your link yousuf. Let almighty bless you.

Yousuf:
Jazakallahu Hairan! (Allah Nar kooli Valanguvaanaaga) Faizal!

Dot:
I've been looking for this !

Yousuf:
Iraivan Namakku NerVali Kodukattum Dot!

Navigation

[0] Message Index

Go to full version