Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12675 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 76
« Reply #75 on: August 02, 2021, 03:21:43 AM »


ஏரிக்குள் மூழ்கிய காடு?


ஏரிகளைச் சுற்றி காடுகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஏரிக்குள் காடு இருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் கெண்டி(Kaindy Lake) ஏரியில் தான் இப்படி ஒரு அதிசயம் ஒளிந்திருக்கிறது. 300 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் உடைய இந்த ஏரியின் வெளியிலிருந்து பார்த்தால் ஏரிக்குள் பந்தல்கால் நட்டுவைத்ததைப் போல் ஆங்காங்கே குச்சிகள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்.  ஒவ்வொரு குச்சியும் ஒரு பெரிய மரமென்பது ஏரிக்குள் சென்று பார்க்கும்போது மட்டுமே புரியும்.


எப்படி நிகழ்ந்தது இது? 1911ஆம் ஆண்டு கெண்டி ஏரி இருக்கும் பகுதியில் வந்த பூகம்பம், 700க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்தது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக்கற்களினாலான ஒரு பெரிய மலை போன்ற தடுப்பை உருவாக்கியது. பெரும் பள்ளத்துடன் மரங்கள் நிறைந்த காடாக மாறிய இப்பகுதி, நாளடைவில் மழை நீரை உள்வாங்கி ஏரியாக மாறத் துவங்கியது. ஏரியின் வெப்பநிலை காரணமாகவும்(6 டிகிரி செல்ஷியஸ்), அங்கிருக்கும் மண்ணின் தன்மையாலும் நீரில் மூழ்கிய மரங்கள் அழுகிப்போகாமல், இன்றுவரை உயிர் வாழ்கின்றன. பல வருடங்களாக நீருக்குளிருப்பதால் மரங்கள் கொஞ்சம் அழுக்கேறியது போலிருக்கின்றன. அது மட்டுமில்லாமல், சுண்ணாம்புக்கற்களின் காரணமாக மற்ற ஏரிகளைப்போலல்லாமல் இந்த ஏரியிலிருக்கும் நீர், நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 77
« Reply #76 on: August 03, 2021, 07:31:19 PM »




ஐஸ்..ஐஸ்..ஐஸ்?


நார்வே நாட்டிலிருக்கும் Sorrisniva Igloo Hotel, ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கட்டப்படுகிறது. காரணம் வேறொன்றுமில்லை.. வெயில் காலம் தொடங்கும்போது ஹோட்டல் உருகிவிடுவதால் தான் இந்த ஏற்பாடு. குளிர்காலத்தில் பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் இந்த ஹோட்டலில், 30 அறைகள் இருக்கின்றன. நார்வே நாட்டின் கட்டிடக்கலையை முதன்மையாகக் கொண்டு அறைகள் வடிவமைக்கப்படுகின்றன.


20 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் அறைகளில் எக்கச்சக்கமான கம்பளிகளின் உதவிகளுடன் மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மக்களுக்காகத் திறக்கப்படும் இந்த ஹோட்டல், வெயில் காலம் வந்து பனிக்கட்டிகள் உருகும் வரை உயிருடன் இருக்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 78
« Reply #77 on: August 04, 2021, 04:34:19 PM »


ஜப்பானின் காதல் கதை?


1936ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஜப்பானில் காதலர் தினம் என்பதெதுவும் கிடையாது. 1936ஆம் ஆண்டில் தான் அந்த நாட்டு மிட்டாய் கம்பெனி ஒன்று ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்களைக் கவர்வதற்காக, பேப்பரில் காதலர் தின விளம்பரம் கொடுத்து சாக்லெட் விற்பனையையும், கொண்டாட்டங்களையும் ஜோராகத் தொடங்கி வைத்தது. 1970 வரை காதலர் தினத்தன்று, காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படியே சென்றுகொண்டிருந்தால் விற்பனையில் பெரிய மாற்றத்தைக்காண முடியாதென்று யோசித்த கடை முதலாளிகள் 1970 ஆண்டுக்குப் பின் ஒரு புதிய பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தினர். அதென்னவென்றால், பிப்ரவரி 14 அன்று பெண்கள் தன் மனதுக்குப் பிடித்த ஆண்களுக்கும், மற்றவர்களுக்கும் சாக்லெட் வாங்கித்தர வேண்டும். கண்ட சாக்லெட்டையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட முடியாது. பெண்கள் யார் யாருக்கு என்னென்ன சாக்லெட் கொடுக்க வேண்டுமென்பதற்கு ஒரு அட்டவணையே உள்ளது.

1. giri-choko (obligation chocolate) – காதல் கத்தரிக்காய் உணர்வெல்லாம் இல்லாமல், தன்னுடன் பழகும் ஆண்களுக்கு(பாஸ், உடன் வேலை செய்பவர்கள்) பெண்கள் கொடுக்க வேண்டிய சாக்லெட் இது.

2. Chō-giri choko (ultra-obligatory  chocolate) – இவரை எனக்குத் தெரியும்..ஆனால் பெரிதாக பழக்கமெல்லாம் இல்லை..இனிமேல் பழக்கப்படுத்திக்கொள்ளும் எண்ணமும் இல்லை என்ற லிஸ்டில் வரும் ஆண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சாக்லெட்.

3. honmei-choko (favorite or true feeling chocolate) – காதலனுக்கோ கணவணுக்கோ மட்டுமே தரப்படவேண்டிய சாக்லெட். இந்த சாக்லெட்டை வீட்டிலேயே தன் கைப்பட செய்துகொடுக்கும் பெண்களுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை மிகுந்த அதிர்ஷ்டசாலி(!) என்ற நம்பிக்கையும் அவ்வூரில் நிலவுகிறது.


எத்தனை வருடம் தான் பெண்கள் மட்டுமே ஆண்களுக்குச் சாக்லெட் கொடுத்துக்கொண்டிருப்பது? ஆண்களும் பெண்களுக்கு எதையாவது கொடுத்தால்தானே வியாபாரிகள் வாழ முடியும்? இதை மனதில் கொண்டு 1980களில் உருவாக்கப்பட்டதுதான் “White Day” அதாவது Answer Love on White Day. மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த White Dayவில் ஆண்கள் பெண்களின் காதலுக்கு பதில் சொல்லும் வகையில் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கவேண்டும். அதுவும் பிப்ரவரி 14 அன்று பெண்கள் கொடுத்த பரிசை விட இரண்டு மடங்கு அதிகமாக..



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 79
« Reply #78 on: August 05, 2021, 08:15:44 PM »


100 போட்டோ கேமரா?

பொதுமக்களுக்கு கேமராவையும் ஃபோட்டோவையும் அறிமுகப்படுத்திய கொடாக்(Kodak) கம்பெனி , 1888ஆம் ஆண்டு ராபர்ட் ஈஸ்ட்மென் என்பவரால் நிறுவப்பட்டது. Kodak No.1 என்ற பெயரில் அவர் வெளியிட்ட முதல் கேமராவின் விலை 25 டாலர்கள். இன்றைய கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 600 டாலர்கள். அந்த கேமராவைக்கொண்டு 100 ஃபோட்டோக்களை எடுக்க முடியும். 100 ஃபோட்டோக்கள் எடுத்து முடித்தவுடன் கேமராவை கொடாக் கம்பெனிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொடாக் அந்த ஃபோட்டோக்களை பிரிண்ட் செய்து, புது ரோல் நிரப்பிய கேமராவுடன் மீண்டும் கஸ்டமருக்கு அனுப்பி வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கேமராவால் எடுக்கப்பட்டது இந்த ஃபோட்டோ.




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 80
« Reply #79 on: August 06, 2021, 09:39:59 AM »


I am just going?


எங்கே தன்னை உயிருடன் வைத்து புதைத்துவிடுவார்களோ என்று ஒருவர் பயந்தால், அவருக்கு Taphephobia இருக்கிறது என்று அர்த்தம். அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களுக்கு இந்த ஃபோபியா இருந்திருக்கிறது. தன் இறுதி நாட்களில் உடனிருந்த செகரட்ரியை அழைத்து அவர் சொன்னது “I am just going. Have me decently buried, and do not let my body be put into the vault in less than three days after I am dead. Do you understand me?”.

பதினோரு வயது Grace Bedell என்ற சின்னப்பெண் ”நீங்கள் தாடி வைத்துக்கொண்டால் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் உங்களுக்கு ஓட்டுப்போட சொல்லுவேன். ஒல்லியாக இருக்கும் நீங்கள் தாடி வளர்த்தால் அழகாக இருக்கும்.” என்று கடிதம் எழுதியதால் தான் அபிரகாம் லிங்கன் தாடி வைத்துக்கொண்டார். அந்தக் கடிதத்தை எழுதிய குட்டிப்பெண்ணை சிலவாரங்களுக்குப் பின் சந்தித்த லிங்கன், “உனக்காகவே தாடி வைத்துக்கொண்டேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அப்பெண் லிங்கனைச் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும். இது தெரிந்த செய்தி. தெரியாத செய்தி என்ன தெரியுமா? அதிபராவதற்கு முன் லிங்கன் சிறிதுகாலம் ”Berry and Lincoln” என்ற சலூன் கடைக்கு பார்ட்னராக இருந்திருக்கிறார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 81
« Reply #80 on: August 07, 2021, 08:17:44 PM »


வானவில் வண்ணங்கள்?


இந்தப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்படாத ஒரிஜினல் ஃபோட்டோக்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சீனாவின் Danxia Landform Geological Parkஇல் இருக்கும் இந்த மலைகளுக்குப் பெயர் “Rainbow Mountains”. 24 மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் இந்த மலைகளுக்கு இப்படி வண்ணம் பூசி அழகு பார்க்கிறது இயற்கை.  பல்லாயிரம் ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து இருந்த மணற்கற்களும் தாதுப்பொருட்களும், அவ்வப்போது வந்து அரவணைத்த மழையும், எப்போதும் உடனிருந்த காற்றுமே இந்த வண்ணங்களுக்குக் காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.

அதுசரி, நம்மூர் டைரக்டர்கள் கண்களில் இன்னுமா இந்த மலைப்பகுதிகள் படாமல் இருக்கின்றன?
« Last Edit: August 07, 2021, 08:18:18 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 82
« Reply #81 on: August 08, 2021, 06:57:55 AM »


Bib-Label Lithiated Lemon-Lime Soda (AKA) 7-UP?


தற்போது பெப்ஸி குடும்பத்திலிருந்து வரும் 7-Up குளிர்பானம் 1929ஆம் ஆண்டு  Charles Leiper Grigg என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப்பெயர் ”Bib-Label Lithiated Lemon-Lime Soda”. அப்போது இதில் கலந்திருந்த lithium citrate என்ற வேதிப்பொருளே 7Up-க்கு இப்படி ஒரு பெயர் சூட்டப்படக் காரணமாக இருந்தது. இந்த Lithium Citrate வெறும் வேதிப்பொருள் மட்டுமல்ல, உளவியல் மருத்துவத்துறையில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் கூட இந்த மருந்து bipolar disorder இருக்கும் மக்களுக்கு சில சமயங்களில் கொடுக்கப்படுகிறது. 1950ஆம் ஆண்டு வரை  இந்த வேதிப்பொருள் 7-Upஇல் சேர்க்கப்பட்டது. 7-Up என்ற பெயர் மாற்றம் நிகழ்ந்தது 1936ஆம் ஆண்டில்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 83
« Reply #82 on: August 09, 2021, 08:27:27 AM »


நிறத்தில் என்ன இருக்கிறது?


சூப்பர் மார்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளுடன் இப்போதெல்லாம் அதிகம் பிரவுன் கலர் கோழி முட்டைகளும் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இரண்டு முட்டைகளுக்கும் என்ன வித்தியாசம்? கவனித்துப்பார்த்தால், பிரவுன் கலர் முட்டைகளின் விலை அதிகமாக இருக்கும். விலை அதிகமாக இருப்பதாலேயே, அந்த முட்டைகள் தான் சத்தானவை என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் இரண்டு நிற முட்டைகளுக்கும் சத்துகள் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் ஒரே அளவில் தான் எல்லா சத்துகளும் உள்ளன.


சில சமயங்களில் முட்டை ஓடுகளில் வித்தியாசம் தெரியலாம். இதற்குக் காரணம் கோழிகளின் வயது. சின்ன வயது கோழிகளின் முட்டை ஓடுகள் மொத்தமாகவும், வயதான கோழிகளின் முட்டை ஓடுகள் கொஞ்சம் ஒல்லியாகவும் இருக்கும். மற்றபடி பிரவுன் கலர் முட்டைக்கும் வொயிட் கலர் முட்டைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அப்புறம் என்ன விலை மட்டும் அதிகம் என்கின்றீர்களா? இந்த பிரவுன் கலர் முட்டைகளை இடும் கோழிகள் மற்ற கோழிகளை  விட அளவில் பெரியவை. அதே மாதிரி மற்ற கோழிகளை விட அதிக உணவு உட்கொள்ளக்கூடியவை. சுருக்கமாகச் சொன்னால், மெயிண்டனன்ஸ் செலவு இவற்றுக்கு அதிகம். அதனால் தான் முட்டைகளின் விலையும் அதிகம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 84
« Reply #83 on: August 10, 2021, 09:08:32 AM »


 இது நல்ல ஐடியாவா இருக்கே?


ரெண்டு பெரிய கம்பெனிகளுக்கு இடையில் பிரச்னை வந்தால் வழக்கமாக என்ன நடக்கும்? கோர்ட்டுக்குச் செல்வார்கள்.. ஒருவர் மேல் மற்றொருவர் குற்றம் சுமத்துவார்கள். சில பல வருடங்களுக்குப் பிறகு, யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ஜட்ஜ் தீர்ப்பு சொல்வார்..அதை எதிர்த்து நஷ்ட ஈடு தரவேண்டியவர் மற்றொரு வழக்கு தொடர்வார்.. இதைத்தானே மைக்ரோசாஃப்ட் முதல் ஆப்பிள் வரை பார்த்திருக்கிறோம். Arm Wrestling போட்டி வைத்து இந்த மாதிரி ஒரு பிரச்னையை தீர்த்துக்கொண்ட இரண்டு கம்பெனிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?


அமெரிக்காவில் இருக்கும் இரண்டு ஏர்லைன்ஸ் கம்பெனிகள் தான் இப்படி ஒரு வித்தியாசமான ஐடியாவுடன் களமிறங்கின. 1992ஆம் ஆண்டு உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டிருந்த Air Southwest மற்றும் Stevens Aviation இரண்டு கம்பெனிகளுக்கு இடையில் ஒரு பிரச்னை வந்தது. Air Southwest நிறுவனம்  1990ஆம் ஆண்டு “Just Plane Smart” என்ற ஸ்லோகனை அறிமுகப்படுத்தியிருந்தது. ”Plane Smart” என்ற அந்த ஸ்லோகன், மற்றொரு மாகாணத்தில் இயங்கிக்கொண்டிருந்த Stevens Aviation நிறுவனத்தால் 1990ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே உபயோகப்படுத்தப்பட்டது 15 மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது. ஸ்லோகனை யார் உபயோகிப்பது என்று முடிவு செய்ய “Arm Wrestling” போட்டி வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார் Stevens Aviation நிறுவனத்தின் சேர்மென் Kurt Herwald. இதனால் கிடைக்கப்போகும் விளம்பரத்தை மனதில் வைத்து, Air Southwest நிறுவன CEO Herb Kelleher போட்டிக்கு ஓக்கே சொல்ல, 1992ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, டாலஸ் நகரத்தில் இருவருக்குமிடையே Arm Wrestling போட்டி நடத்த முடிவு செய்யபட்டது. போட்டியில் வென்றது Stevens Aviation கம்பெனிதான் என்றாலும், இப்படி ஒரு போட்டிக்கு ஒத்துக்கொண்டதாலேயே, Air Southwest நிறுவனமும் அதே ஸ்லோகனை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்து பிரச்னையை முடித்து வைத்தார் Kurt Herwald.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 85
« Reply #84 on: August 11, 2021, 08:11:32 AM »


Sealand – உலகின் மிகச்சிறிய நாடு?


உலகத்திலேயே மிகச்சிறிய நாடு எது தெரியுமா? The Principality of Sealand (aka) Sealand. இங்கிலாந்து நாட்டின் Suffolk கடற்கரையிலிருந்து 7 நாட்டிகல் மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் அசைவுகளைக் கண்காணிக்க இங்கிலாந்து இந்த நாட்டை(அதாவது அங்கிருக்கும் சிறு கோட்டையை) கடலுக்கு நடுவில் உருவாக்கியது. 300 பேர்களைத் தாங்கக்கூடிய இக்கோட்டையை ஒரு பெரிய படகில் முதலில் உருவாக்கி, பின் அதை தண்ணீருக்குள் இடம்மாற்றினர்.


போர் நடந்துகொண்டிருந்தபோது, 100க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கி ஜெர்மனியை கண்காணித்தனர். 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து இந்தக்கோட்டையை பராமரிக்காமல் விட்டுவிட்டது. அதன் பின் 11 வருடங்கள் கழித்து இங்கிலாந்து ஆர்மியில் வேலை செய்திருந்த Roy Bates என்பவர், தன் மகனுடன் இந்தக் கோட்டைக்கு வந்து தங்கினார். அவர் வந்ததென்னவோ ஒரு ரேடியோ ஸ்டேஷன் தொடங்க என்றாலும், ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தைத் தனதாக்கிக்கொள்ள முடிவுசெய்தார். இங்கிலாந்து நாட்டின் சட்டத்திலிருந்த ஓட்டையைப்(!) பயன்படுத்தி அதை சக்சஸ்ஃபுல்லால நிறைவேற்றினார் Bates-இன் வழக்கறிஞர். Sealand என்று பெயர் மாற்றப்பட்ட அந்த இடத்தை மீண்டும் தங்களுடையதாக்கிக்கொள்ள பிரிட்டீஷ் அரசு ஒரு கட்டத்தில் முடிவு செய்தது. ஆனால் அப்படி ஏதாவது செய்யப்போய் Bates-இன் குடும்பம் இறந்துவிட்டால் மக்களிடையே தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அந்த ஐடியாவை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது.

அதற்குப் பின் தங்களுக்கென்று தனியாக அரசாங்கம், தேசியக்கொடி முதலியவற்றை தன் மனைவியின் விருப்பப்படி பேட்ஸ் வடிவமைத்தார். அவருடைய குடும்ப வாரிசுகள் Sealand-இன் இளவரசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
« Last Edit: August 11, 2021, 08:12:10 AM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 86
« Reply #85 on: August 12, 2021, 09:16:25 AM »


Make Me Happy Tiramisu?


Tiramisu என்றொரு கேக் வகை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கொஞ்சமாக ஒயினோ அல்லது வேறு ஏதாவது ஆல்கஹால் பானம் சேர்த்தோ சேர்க்காமலோ செய்யப்படும் இந்த கேக் இத்தாலி வகை உணவு வகையாகும். Tiramisu என்ற இத்தாலியன் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? pick me up (அல்லது) makes me happy.


சில வருடங்களுக்கு முன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்த புதிதில் ஆலிவ் கார்டன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று இந்த Tiramisu கேக் ரொம்ம்ம்ம்ம்ப நன்றாக இருக்கும் என்று சொல்லி சாப்பிட வைத்து பின் “போச்சா..போச்சா” என்று வெறுப்பேற்றிய அந்த நண்பர்கள் குழாமை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். 😉



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 87
« Reply #86 on: August 13, 2021, 08:21:50 AM »


ஹே ராம், எனக்கு ஒரு கதை சொல்லேன்!


ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே(!) தூங்கும் மக்களுக்கு, 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களை விட ஆயுள் அதிகமாம். கலர் டிவி கண்டுபிடிக்கப்படும் முன்பு வரை 75% மக்களின் கனவுகள் கருப்பு வெள்ளையில் இருந்திருக்கின்றன. கலர் டிவி வந்த பிறகு கருப்பு வெள்ளையில் கனவுகாணும் மக்களின் சதவீதம் 12ஆக குறைந்து விட்டதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் எதுவும் வருவதில்லை. சப்தங்களும் வாசனைகளுமே அவர்களது கனவுகளை அழகாக்குகின்றன.


ஒருவர் தொடர்ந்து 16 மணி நேரம் உறக்கமில்லாமல் இருந்தால், அவரின் செயல்திறன்(அதாங்க பர்ஃபார்மன்ஸ்) குறைகிறது..எந்த அளவுக்கு என்றால், ரத்தத்தில் .05% சதவீதம் ஆல்கஹால் இருந்தால் எவ்வளவு குறையுமோ அந்த அளவுக்கு. தூக்கத்தைக் கண்டு(!) பயப்படுவதற்கு என்ன ஃபோபியா தெரியுமா? Somniphobia. அதிக நாட்கள்(264 மணி நேரம் 12 வினாடிகள்) தொடர்ந்து தூங்காமலிருந்த கின்னஸ் சாதனையை 1964ஆம் ஆண்டு 17 வயது Randy Gardner என்பவர் நிகழ்த்தினார் 🤔



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 88
« Reply #87 on: August 14, 2021, 01:21:05 PM »


செய்திகள் வாசிப்பது?


North, East, West and South நான்கு திசைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து NEWS என்ற வார்த்தை உருவான கதையை நீங்களும் கேட்டிருப்பீர்கள் தானே? உண்மையில் NEWS என்ற வார்த்தையின் ஆதி, திசைகளின் முதலெழுத்தெல்லாம் கிடையாது. 14ஆம் நூற்றாண்டில் தான் NEWS என்ற வார்த்தை ஆங்கிலத்தில் முதன்முதலாக பழக்கத்தில் வரத்தொடங்கியது.  NEW என்பதன் பன்மை வடிவமான NEWS ஐ செய்திகளுக்காக உபயோகப்படுத்தத் துவங்கினார்கள்.


அதற்கு முன் வரை ஆங்கிலத்தில்  tidings என்ற வார்த்தை தான் NEWS என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. Tidings என்றால் Event, occurrence, or a piece of news என்று அர்த்தம். திசைகளிலிருந்து வரவில்லை என்றால் வேறு எங்கிருந்து வந்தது இந்த வார்த்தை? Nouveau என்ற (பழங்கால) ப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்து NEW என்ற ஆங்கில வார்த்தை உருவாகியிருக்கிறது. ப்ரெஞ்ச்சிலும் Nouveau  வார்த்தையின் பன்மை வடிவமான Nouvelles வார்த்தை ”செய்திகள்” என்ற அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தப்படுகிறது
.
« Last Edit: August 14, 2021, 01:21:32 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 89
« Reply #88 on: August 15, 2021, 03:40:08 PM »


தேன்கூடும் எரிமலையும்?


அயர்லாந்து நாட்டின் Antrim என்ற இடத்தில் இருக்கிறது Giant’s Causeway என்ற பகுதி. கிட்டத்தட்ட 40,000 கருங்கல் தூண்களால் ஆன இப்பகுதியின் சிறப்பு என்னவென்றால், நாற்பதாயிரம் தூண்களும் அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரி இருப்பதுதான். அறுங்கோண வடிவில் இருக்கும் இந்தத் தூண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த Bernard Fontanelle என்பவர் பல கணித கணக்கீடுகளுக்குப் பிறகு தேன் கூடு பெரிய சைசில் இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி தூண்கள் இருப்பதாகச் சொன்னார்.


உண்மையில் இந்தத் தூண்கள் ஒரே மாதிரி இருப்பதன் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வெடித்த எரிமலையே. எரிமலையின் சக்தியால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் நோக்கி நகர்த்தப்பட்ட பாறைகளும், எரிமலைக்குழம்பும் மெதுவாக பூமியின் வெப்பநிலைக்கு மாறத்துவங்கின. அப்போது ஏற்பட்ட வெடிப்புகளே காலப்போக்கில் பாறைகளை ஒரே வடிவமுடைய தூண்களாக மாற்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
« Last Edit: August 15, 2021, 03:40:42 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 90
« Reply #89 on: August 16, 2021, 07:41:25 AM »


சோயா பீன்ஸ் சீஸ்?


வெஜிடேரியன் என்ற பேச்சுக்கே இடமில்லாத சில ஜப்பான்/சீனா ஹோட்டல்களில் தப்பித்தவறி சாப்பிடச்செல்லும் அப்பாவிகளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது டோஃபு எனப்படும் ஒருவகை சீஸ். பார்ப்பதற்கு அசப்பில் நம்மூர் பன்னீர் மாதிரி இருக்கும் இந்த டோஃபு சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக இரும்புச்சத்தும் நிறைந்த டோஃபு, கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதலே சீனாவில் பழக்கத்தில் இருந்துவருகிறது. ஆரம்ப காலத்தில் dou fu (அல்லது) tou fu (அப்படியென்றால் Bean Curd என்று அர்த்தமாம்) என்று சீன மொழியில் அழைக்கப்பட்ட இந்த உணவு வகை சீன சமையல்காரர் ஒருவரால் எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்டது. சோயாபீன்ஸில் புதிய முறையில் சூப் தயாரிக்கும் முயற்சியில் இருந்தவருக்கு சூப்பிற்கு பதிலாகக் கிடைத்ததே டோஃபு. சீன மொழியின் dou fu வார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஜப்பானுக்கு வந்ததன் விளைவே இன்று வழக்கத்திலிருக்கும் Tofu என்ற வார்த்தை.


இப்படி உணவு இருப்பதே 18 & 19ஆம் நூற்றாண்டுகளில் தான் அமெரிக்கர்களுக்குத் தெரியும்..அதுவும் அந்த சமயத்தில் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறிய மக்கள் அறிமுகப்படுத்திய பின்புதான். ஆனால், 1950ஆம் ஆண்டுக்குப் பின் சோயாபீன்ஸ் பயிரிடத்துவங்கிய அமெரிக்கா, 20ஆம் நூற்றாண்டில் உலகின் அதிக சோயா பீன்ஸ் பயிரிடும் நாடாக மாறியிருக்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்