Author Topic: நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வ  (Read 825 times)

Offline kanmani

வாஷிங்டன் : நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்க் போல சென்று வர வேண்டுமா? அதிகமில்லை ஜென்டில்மென்... கட்டணம் வெறும் 7500 கோடி ரூபாய்தான்.
நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கல இயக்குனராக இருந்த கேரி க்ரிபன், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆலன் ஸ்டெர்ன் ஆகியோர் இணைந்து இதற்காக புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கம்பெனி ஒரு முறை நிலவுக்கு சென்றுவிட்டு திரும்புவதற்காக ரூ.7,500 கோடி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.  இயந்திர மனிதன் ரோபாட்டை விண்வெளிக்கு அனுப்பி, திரும்ப வரவழைக்க ஆன செலவு இது என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளிக்கு முதன் முதலில் 1972ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்க், அப்பல்லோ,11 விண்வெளிக்கலத்தில் நிலவுக்கு சென்று திரும்பினார். நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர் தான்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள இந்த இரு விஞ்ஞானிகளின் நிறுவனத்துக்கு கோல்டன் ஸ்பைக் கம்பெனி விண்கலத்தை தயாரித்து, இயக்கி தரவும் ஒப்பந்தம் போட்டுள்ளது. அமெரிக்காவில் ரயில் பாதை போட்ட முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக அமெரிக்காவில் இருந்து நிலவுக்கு 1972,ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ராக்கெட் அனுப்பப்பட்டது. 12 நாட்களுக்கு பிறகு அந்த விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பியது. அப்போது விஞ்ஞானி ஈகேனி செர்னான் என்பவரின் காலடிதான் கடைசியாக தடம் பதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விண்வெளி விமானத்தை இயக்கும் முயற்சியில் தி கோல்டன் ஸ்பைக் கம்பெனி ஈடுபட்டுள்ளது.