Author Topic: சமையலறை ஸ்பாஞ்சுகளை சுத்தமாக வைத்திருக்க சில டிப்ஸ்...  (Read 587 times)

Offline kanmani

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் சமையலறை ஸ்பாஞ்ச்களை உபயோகப்படுத்தி இருந்தால், கோடிக்கணக்கான பாக்டீரியாக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். ஒரு மேற்பரப்பை துடைக்க இவ்வித ஸ்பாஞ்சுகளை உபயோகப்படுத்தும் போது, கூடவே நோய்க் கிருமிகளையும் பரப்புகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பாஞ்ச், 10 மில்லியன் பாக்டீரியாக்களின் உறைவிடமாக உள்ளது.

  பொதுவாக சமையலறை ஸ்பாஞ்சுகள், சமையலறையை சுத்தப்படுத்த, சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்த, உணவுச் சிதறல்களை துடைக்க பயன்படுகிறது. வழக்கமாக இவற்றை சுத்தம் செய்யாது போனால், சால்மோனெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நோய்கள், உண்ணும் உணவுகள் மூலம் வரும். இப்பொழுது சமையலறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்சுகளை சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம். 

1. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஸ்பாஞ்சுகளை சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் ப்ளீச்சிங் பவுடரில் ஊற வைத்து பயன்படுத்தினால், கிருமிகள் அழிந்து விடும்.

2. இரண்டு நிமிடம் அவற்றை மைக்ரோவேவ்வில் அதிக சூட்டில் வைக்க, 90% பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

3. பாத்திரம் துலக்க பயன்படும் பொடி வகைகளிலோ அல்லது சோப்பு வகைகளிலோ ஸ்பாஞ்சுகளை ஊறவைக்க, அவற்றிலுள்ள கிருமிகள் அழியும்.

4. குளிர்ந்த நீரில் கழுவ அவற்றில் உள்ள அழுக்குகள் தளர்ந்து விடும். பின்னர் ஸ்பாஞ்சில் உள்ள மீதி தண்ணீரை பிழிந்து வெளியேற்றவும்.

5. எவ்வளவு முறை ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்றார் போல், அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். மிகவும் அழுக்காக இருப்பதை முடிந்த அளவு உபயோகிக்காமல் தூர எறிந்து விடவும்.

6. ஸ்பாஞ்சுகளை அதிக சூடான வெந்நீரில் ஊற வைக்க கிருமிகளை முற்றிலும் அழிக்கலாம்.

7. ஸ்பாஞ்சுகளை உபயோகப்படுத்தாத போது, அவற்றை உலர்வாக வைத்திருக்கவும். ஏனெனில் உலர்வாக வைத்திருப்பது பாதுகாப்பின் திறவுகோல் ஆகும்.