Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 170  (Read 627 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 170
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Enigma அவர்களால்     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:14:39 AM by MysteRy »

Offline JeGaTisH

ஒருவரின் அன்பு புரியும் நேரத்தில் அவர் பக்கமில்லை
அவர் அன்பு காட்டும் நேரத்தில் அவரை புரிந்துகொள்வதில்லை.

பெரும்  கோபம் பிரிவை உள்ளாக்கும்
சிறு புன்னகை உன்னை உணரவைக்கும்.

விட்டுக்கொடுத்தால் நீ குறைவதும் இல்லை
தட்டிக்கொடுத்தால் நீ தாழ்வதும் இல்லை.

உடன் பிறந்தவர்களின் உணர்வை புரிந்துகொள்ளாத நீ
உன்னை நம்பி வந்தவளின் உணர்வை புரிந்துகொள்வாயா...

உன்னை இழந்து நடைப்பிணமாய்  வாழ்வதை விட
உன் உணர்விற்கு மதிப்பளித்து  கணவனாய் வாழலாம்.

இல்லாதவனுக்கு ஏன் இல்லை என்ற ஏக்கம்
இருப்பவனுக்கு ஏன் இருக்கிறது என தாக்கம்  ..

ஆண் பெண் என்ற பிரிவினையில் வாழாதே
அனைவருக்கும் உணர்வுகள் ஒன்றென  வாழ்..

ஒருவர் மனதை வஞ்சனையினால் புண்ணாக்க முடியாது
ஆனால் ஒரு வார்த்தையால்  புண்ணாக்கலாம்  .

இருவரிடையே வேற்றுமை  பார்க்காமல்
இருவர் இதயம் சேர்க்கப்  பாருங்கள்.

கோபமாய் பேசும்  வார்த்தையைவிட 
கொஞ்சிப்  பேசும் வார்த்தைக்கே மதிப்பு.

இழந்த பின் உணர்வதை விட
இருக்கும் போதே உணர முயற்சியுங்கள்..
« Last Edit: January 04, 2018, 02:06:36 AM by JeGaTisH »

Offline thamilan

திருமணம் எனும் பந்தத்தின் மூலம்
உனக்கு நான் கணவன்
எனக்கு நீ மனைவி என
வாழ்க்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு
ஈருயிர்கள் ஓருயிராகி
ஈருடல்கள் ஓருடலாகி 
வாழும்  தம்பதிகளிடையே
சண்டைகளும் சச்சரவுகளும் வருவதும் ஏன்

ஒப்பந்தங்கள் வெறும் சடங்குகள்
இரு மனங்களை ஒன்றிணைப்பதில்லை
புரிதலும் உண்மையான அன்புமே
இரு மனங்களை ஒன்றிணைகின்றன

ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமல்ல
காதலாலும் ஒன்றிணைந்த காதல் தம்பதிகளுக்கிடையே
காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள்
ஏற்படுவதும் ஏன்

ஆணாதிக்கமோ இல்லை பெண்ணாதிக்கமோ
மேலோங்கும் போது
விட்டுக் கொடுத்தல்  மற்றவர் பேச்சை
மதிக்கும் தன்மை  விட்டுப் போகிறது
அதுவே சண்டையும் சச்சரவுமாக உருமாறுகிறது

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
அன்பின் அருமை பிரிவில் தெரியும்
இருப்பதை விட்டு பறப்பதற்கு  ஆசைப்படும்
மனித குணம்
அருகில் இருக்கும் போது
தெரியாத அருமை - அது
நம்மை விட்டு தூர போனபின்பு
தவித்திடும் மடமை

உண்மையான அன்பிருக்கும் இடத்தில்
அதிகாரங்கள் இருக்காது
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால்
அங்கு பிரிவினை இருக்காது

கோபம் என்பது
சாத்தானின் சந்நிதி
அங்கே அமைதியும் நிம்மதியும்  இருக்காது
அன்பு என்பது இறைவனின் ஆலயம்
அன்பு கொண்ட இதயங்களில்
ஆண்டவன் குடியிருப்பான்

பிரிவின் துயரம் கொடுமையானது
ஒருவருக்கொருவர் பரிவோடு வாழ்ந்தால்
அங்கு பிரிவுக்கு ஏது இடம்
« Last Edit: January 02, 2018, 10:50:02 PM by thamilan »

Offline Ms.SaraN

வாழ்கை ஒரு கனவு மேடை 
இன்று நம்முடன் இருப்போர்
நாளை மண்ணுக்கு சொந்தம்
இருக்கும் வரை அருமை தெரிவதில்லை
சென்றபின் கதறி அழுகிறோம்
ஏனென்றும் தெரிவதில்லை
நான் மட்டும் இதில் விதிவிலக்கா
இருக்கும் வரை பிரிவின் வலி தெரியவில்லை
சென்ற பின் உயிர் போகும் வலி
அதை ஏற்றுக்கொள்ளவும் மனதில் வலுவில்லை

நீயும் நானும் சிரித்த நாட்கள் பல
கண்முன் வந்து செல்கிறது 
உன் புன்னகையில் என்னை இழந்த நாட்கள் கோடி 
இப்பொழுது நினைத்தாலும் அழகிய பூங்காவனம்
தந்தையின் அரவணைப்பின் பிறகு
உன் அரவணைப்பில்தான்
உண்மையான அன்பை அறிந்தேன்   
உன்னை விட்டு பிரிந்திருந்த  நாட்கள் மிக குறைவு
அன்னையை தேடி ஓடும் குழந்தை போல்
உன்னையே சுற்றி வந்தேன்
இப்போது அந்த நாட்கள் எங்கோ தூரத்தில்

தலை கவிழுந்து பூமி பார்த்து அமர்கிறேன்
என்னுள் வாழும் என் ஜீவன்
என்னை கேலி பேசுகிறான்
இருக்கும் வரை எட்டி உதைத்தாய்
இப்போது யாருக்காக அழுகிறாய் என்று
விடைத் தெரிந்தும் உன் அருகில்
வரமுடியாத தூரத்தில் நீ
அருகில் இருப்பதுபோல் ஓர் உணர்வு
தொடவும் முடியவில்லை அணைக்கவும் இயலவில்லை
பிரிவா வாழ்வா என்று புத்தி கேட்கிறது 
வாழ்ந்து விட்டு போ என்று உள்ளம் கெஞ்சுகின்றது

உன்னை விட்டு தரவும் மனமில்லை
விட்டு விலகவும் சக்தியில்லை
பிரிவு என்பது உன்னையும் என்னையும்
சேர்க்க வந்த வசந்த  பாலமே
இதையும் கடப்போம் கைகளைக்கோர்த்து
என்னுள் வாழும் நீ என்றும்
ஓர் நீங்கா  ஓவியமே
« Last Edit: January 02, 2018, 11:32:03 AM by Ms.SaraN »

Offline AnoTH

 • Sr. Member
 • *
 • Posts: 323
 • Total likes: 1591
 • Karma: +0/-0
 • Gender: Male
 • சோதனைகளை சாதனையாய் மாற்று
கொஞ்சிடும் உன் பேச்சை
கெஞ்சித்தான் பார்க்கிறேன் 
மிஞ்சிய கண்ணீர்த்  துளிகளில்
உன் நினைவுகளைச்   
சுமந்தே இருக்கிறேன்

மலர்ந்திடும் மொட்டினில்
உதிர்ந்திடும் இதழ்களாய்
மலர்ந்திட்ட காதலை
மணலினுள் தொலைத்திட்டேன்.


நீ சகித்த இடங்களை 
நான் உணராத நொடிகளால் 
வெடித்த சண்டையில்
உனைக் காக்க மறந்திட்டேன்
 
நீ கலங்கிய வேளையில்
நான் குழம்பிய தருணத்தால்
உடைந்த உன் மனதில்
ஒலித்த குரலினைக்
கேட்கத்தான் தவறிட்டேன்


நிலவின் வெளிச்சத்தில்
உலகினை மறந்து
உணர்வினைப் பகிர்ந்த  காதல்
இன்று எனைத்  தனிமையாக்கியதே

நித்தமும் எனை எழுப்பும்
உன் கனா,
இன்று அதைக்  காணா
நாட்களும்  முட்களானதே


மலைகளின் வான் தொடு உச்சத்திலும்
நதிகளின் ஓட்ட வெள்ளத்திலும்
மேகத்தின் அடர்ந்த பாதையிலும்
வீசியடிக்கும் காற்றிலும்

இடைவேளை இன்றி எனையழைத்த
குரலினைத்  தேடிப்  பார்க்கிறேன்
நித்தமும் எனை சொந்தம் கொண்டாடிய
உறவினை அலைந்து பார்க்கிறேன்


நான் நடக்கும்  பாதையில்
உன் காலடி சுவடு இல்லாத
நிஜத்தினை அறிந்த பின்பு தான்
தேகம் இருந்தும் உயிர் ஜீவன்- அவள்
நிழலினைத்  தேடுகிறேன்

பெண்ணாகப் பிறந்தவள்- நீ 
மென்மையாகிப் போனாய்
ஆணாக இருப்பதால்- நான்   
வன் சொல் பேசி
உனைக்  காக்க மறந்தேன்

« Last Edit: January 02, 2018, 02:29:12 PM by AnoTH »

Offline SaMYuKTha

அன்பு காட்டுவதில் அன்னையின் பிம்பமாய்
அரவணைத்து வழிநடத்துவதில் தந்தையின் சாயலாய்
கண்டித்து திருத்துவதில் தமையனின் ரூபமாய்
எனக்கு எல்லாமுமாய்   நீக்கமற நிறைந்தவனே!


உன் நேசத்தையும் அன்பையும் உணர்ந்திருந்த உள்ளம்
மதிகெட்ட தருணங்களில் அகங்காரியாய் எனை மாற்றிட
தொட்டதற்கெல்லாம் குறைகூறுகின்றாயே என்ற
சிறுபிள்ளைத்தனமாக கண்ணை மறைத்த கோபத்தில்
சிறு பிழையாக கூட பிறர்முன் நான் குறைந்திடக்கூடாதென்ற
உன் வாஞ்சையை உணர்ந்திராத  பேதையானேனே !

ஒருவேளை உன்முன் கோபக்குரலுயர்த்தி கேட்டதை
உன் தோள்சாய்ந்து கொஞ்சும் குரலில் கேட்டிருக்கலாமோ
என்ற காலம் கடந்த  உணர்வு  இன்று...   
கைநீட்டி யாவற்றிற்கும்  உன்னை சூத்திரதாரியாகியதற்கு பதில்
உன் கைகோர்த்த  நம் விரல்கள் பேசி தெளிவடைந்திருந்தால்
இன்று நான் உன் சுக துக்கங்களில் பங்கேற்று இருப்பேனோ?


எதிர்பாரா  விபத்தால் நான் காற்றோடு கலந்து விட்டேனென்று
இப்போதும்கூட புத்திக்கு புரிகிறது ..
காதல் கொண்ட மனமோ நீ இருக்கும் வரை
உன்னோடு வாழ்ந்து காவியம் பாட துடிக்கின்றதே..
காலம் கடந்த ஞானோதயம் தான்
உன்னருகில்  நான் இல்லை என்ற ஏக்கம்
நான் இறந்தும் எனைக் கொல்ல..

ஏங்குகிறேன்  நான் உன் பக்கம் இல்லையே!


Offline MaSha

 • FTC Team
 • *
 • Posts: 155
 • Total likes: 408
 • Karma: +0/-0
 • Gender: Female
 • *!_Do small things with great love_!*

அன்பால் நாம் கட்டிய அரண்மனை
இளவரசியாக நான்
இளவரசனாக அவர்
இன்பங்கள் தாலாட்டுப் பாட
இனிமைகள் சாமரம் வீச
இனிதாய் வாழ்ந்த தம்பதிகள் நாங்கள்
 
சந்தேகம் எனும் சாத்தான்
எங்கள் அன்பு சாம்பிராட்சியத்தைக் கவிழ்த்தது 
வயது போகப் போக
இளமை குறையாக குறைய
இன்னும் இளமையாக தோன்றும்
அவர் மேல் வீணான சந்தேகங்கள்
கொஞ்ச நேரம் பிந்தி வீடு வந்தாலும்
யோசனையில் இருந்தாலும்
என் மனதில் சந்தேகங்கள்
சந்தேகங்கள் என்னை அரக்கியாய் மாற்ற
என் சித்திரவதைகள் தாங்காமல்
அவரும் அரக்கனாய் மாற
நரகமானது எங்கள் வாழ்க்கை
 
சந்தேகம் என்ற கல் வீச
உடைந்தது எங்கள் அன்பான
கண்ணாடி மாளிகை
வாழ்ந்தது போதும்
இந்த வாழ்க்கையும் போதும் என
பிரிந்தோம் நாங்கள்
 
காலம் போன்றதொரு ஆசானும் இல்லை
பிரிவு போலவொரு படிப்பினையும் இல்லை
பிரிவு உணர்த்தியது
எங்கள் அன்பின் ஆழத்தை
தனிமை போதித்தது
துணைவனின் மேன்மையை
 
தூக்கத்திலும் அருகில் அவர்
இருப்பது போன்றதொரு உணர்வு
சாப்பிடும் போதும்
அவர் அன்பாக ஊட்டிவிட நினைவு
அவர் நினைவில் என் தலையணை
நனைந்த நாட்கள் பலப்பல
அவர் இல்லாமல்
கடிகார முட்கள் கூட
நகராமல் நகைத்தன எனைப் பார்த்து
 
போதும் இந்த நரகம் என
அவர் காலடியில் வீழ்ந்தேன் சரணம் என
என்னை வெறுக்கவில்லை
அவர் இன்னும்
மறுக்கவில்லை என் வேண்டுதலை
புரிந்து கொண்டேன்
நானில்லாமல் அவரும் பட்ட வேதனைகளை
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது 
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் நின்றால்
அது தான் தெய்வத்தின் சந்நிதி
« Last Edit: January 02, 2018, 08:44:03 PM by MaSha »

Offline VipurThi

 • Hero Member
 • *
 • Posts: 875
 • Total likes: 1578
 • Karma: +0/-0
 • Gender: Female
 • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என்றோ நான் பார்த்த
தேவதை அவள்
என் கனவுகளின்
வர்ணங்களானாள்

வார்த்தைகள் பேசவில்லை
மௌனமோ கலையவில்லை
உள்ளங்கள் இடம் மாறும் முன்பே
உணர்வுகள் இடம் மாறியதே

காதலை நானும் சொன்ன
நொடி தாண்டி
காதலும் வசந்தமானதே
உன் விரல் தீண்டி

காலமும் ஆமையாய்
விரைந்ததே நம்
கோபங்கள் தலை விரித்து
ஆடியதே

புரிந்துணர்வு புரியாமல்
போனதே
விட்டுகொடுத்தல் விடை பெற்று
சென்றதே

வாழ்கையெனும்
கேள்வியிடம் விடையாய் காரணங்களே
நீண்டு சென்றதே

பிரிவை நான் தேடும் முன்பே அவளும் தேடியதேனோ
உயிர் பிரியும் வலியை நான்
உணந்திடத் தானோ

ஏற்க முடியவில்லை அவள்
இழப்பை இதை
உணரவில்லை அன்று
நிஜத்தில்

வார்த்தையெனும் அம்பெய்தி
நான் கொன்றேன்
இன்று நிரந்தர அமைதி கொண்டு எனைக்  கொல்கிறாள்


மௌனத்தால் வாழும்
காதல் கூட ஒரு
வார்த்தையில் மரணிக்கலாம்
"வாழும் போது நேசி
துணையை வரமாய் சுவாசி"


                           **விபு**
« Last Edit: January 03, 2018, 12:45:37 PM by VipurThi »

Offline Mr.BeaN

 • Newbie
 • *
 • Posts: 22
 • Total likes: 150
 • Karma: +0/-0
 • Gender: Male
 • i just enter to devoloping my creativity......
உறவாக வந்தாய் நீ... பிரிவோடு சென்றதேனோ.....
நினைவோடு நின்றாய் நீ.... கனவாகி போனதேனோ...

என இன்பத்தில் இன்பம் கொண்டு...
துன்பத்தில் பங்கு கொண்டு...
என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு...
என் எண்ணத்தில் உனை மொத்தமிட்டு.....
உயிராய் எனதுருவாய்....
எனதாய் என்றும் எனக்காய்....
இருந்தாய் நீயே....

என் இன்பத்தை எடுத்துக்கொண்டு.....
பெரும் துன்பத்தை எனை சுமக்க வைத்து....
கன்னத்தில் துளி நீர் நிரைத்து....
என் எண்ணத்தில் உனை களைத்து...
விண்ணகத்தே தோன்றும் மின்னலென....
மறைந்தாய் நீயே....

உனை பிரியாத வரம் ஒன்றை கேட்டேன்...
கேள்வி குறியாகி இன்றேனோ நான் தனி யே நின்றேன்...

எல்லாமாய் எனக்காக வந்தாய்...
சொல்லாமல் எனை நீங்கி எங்கே நீ சென்றாய்...

என் தேவதையே!!!!  என்றும் என் தேவை நீயே!!!

            வலியுடன் பீன்
« Last Edit: January 03, 2018, 03:54:21 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Tags: