Author Topic: அன்பென்றாலே அம்மா  (Read 705 times)

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
அன்பென்றாலே அம்மா
« on: April 15, 2018, 02:47:56 AM »
அன்பென்றாலே அம்மா






அண்டவெளியை கடந்தும்
   ஓர் எல்லையை காண முடியா
தூய அன்பின் ஒட்டுமொத்த
   ஆனந்த சொரூபம் அம்மா...

அம்மா என்ற மூன்றெழுத்து
   தாரக மந்திரமாய் ஒலிப்பதாலோ
விண்ணும் மண்ணும்
   தாய்மையை பாராட்டி
வையகத்தை வாழ வைக்கின்றன...!

தாயின் மலர்ப்பாதம் பணிந்து
   அவர் கனிந்த பூமுகம் பார்த்து
ஒரு நொடி நம்மை மறந்தால் போதும்!
   அதுபோல் வசந்தம் வேறொன்று
காண எள்ளளவும் வாய்ப்புகளில்லை...

சோதனைகளின் போது தைரியம் தந்து
   ஏற்றிவிடும் ஏணியும் அம்மா
கண்ணில் வடியும் சோகத் துளிகளை
   இன்பத்துளிகளாய் மாற்றி
ஏந்தும் கன்னங்களும் அம்மா...

காரிருள் உனை மூடினால்
   பேரொளியாய் சூழ்வதும் அம்மா
பாலைவனத்தில் நீ தவித்தால்
  பாரிய மழையாய்
உனை குளிரச் செய்வதும் அம்மா...

கவிகளுக்குள் தாய்மையின்
   தாற்பரியம் அடக்க முடியாது
மகா புலவருக்கும் தாயன்பை
   சிறப்பிக்க சொற்கள் தேட முடியாது...
 
அம்மாவின் பாச சாகரத்தில்
   மூழ்கியவள் நான்
கரைக் காண விரும்பவில்லை
   இதுபோ‌ல் சொர்க்கம்
   இனியொன்றுமில்லை...!
« Last Edit: June 30, 2018, 09:19:59 PM by AshiNi »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பென்றாலே அம்மா
« Reply #1 on: April 16, 2018, 11:32:35 AM »
சோதனைகளின் போது தைரியம் தந்து
   ஏற்றிவிடும் ஏணியும் அம்மா
கண்ணில் வடியும் சோகத் துளிகளை
   இன்பத்துளிகளாய் மாற்றி
ஏந்தும் கன்னங்களும் அம்மா...

மகா புலவருக்கும் தாயன்பை
   சிறப்பிக்க சொற்கள் தேட முடியாது...

அருமையான வரிகள்
தாயினன்பிற்கு ஈடும் உண்டோ ?

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் சகோ

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: அன்பென்றாலே அம்மா
« Reply #2 on: April 16, 2018, 04:09:36 PM »
mikka nanri joker bro
« Last Edit: June 29, 2018, 03:00:55 PM by AshiNi »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அன்பென்றாலே அம்மா
« Reply #3 on: April 23, 2018, 01:33:13 PM »

'' காரிருள் உனை மூடினால்
   பேரொளியாய் சூழ்வதும் அம்மா
பாலைவனத்தில் நீ தவித்தால்
  பாரிய மழையாய்
உனை குளிரச் செய்வதும் அம்மா...

கவிகளுக்குள் தாய்மையின்
   தாற்பரியம் அடக்க முடியாது
மகா புலவருக்கும் தாயன்பை
   சிறப்பிக்க சொற்கள் தேட முடியாது''

ஆனால் இந்த கவிதாயினி
இவ்வளவு அழகாக தாயின்
பெருமைகளை வர்ணித்து
அன்னையைக்குப் பெருமைச்
சேர்த்துவிட்டேரே அஷுமா!!!

நிஜமாக அன்னையை
வர்ணிக்க இருக்கும் வார்த்தைகள்
 போதவில்லை ...
புதிதாக வார்த்தைகள் கண்டறிவது
அவ்வளவு எளிதில்லை !!!

அன்னையைப் போற்றி தாங்கள்
எழுதிய கவி மிக சிறப்பு !!!!
கவிதாயினியின் படைப்பு
மென்மேலும் சிறப்பாகத் தொடர
வாழ்த்துக்கள் !!!

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: அன்பென்றாலே அம்மா
« Reply #4 on: April 23, 2018, 02:33:34 PM »
Mikka nanri Rithika
« Last Edit: June 29, 2018, 03:02:25 PM by AshiNi »