Author Topic: கணினியில் நுட்ப விளையாட்டுகள்...!  (Read 2121 times)

Offline kanmani

 கணினியில் நுட்ப விளையாட்டுகள்...!
 Technical funny games on the computer

வணக்கம் நண்பர்களே..! கணினியில் சில சித்து வேலைகள் செய்வதன் மூலம் உங்கள் நண்பர்களை ஆச்சர்யப்பட வைக்கலாம். சில சமயம் அவர்கள் குழப்பத்தில் ஆழ வைக்கலாம். அப்படி என்னென்ன சித்து விளையாட்டுகள் இருக்கிறது? என்கிறீர்களா? சித்து விளையாட்டெல்லாம் ஒன்றுமில்லை நண்பர்களே.. கணினியில் ஒரு சில மாற்றங்களை செய்யும்போது தோன்றும் விளைவுகளையே அவ்வாறு சொல்லயிருக்கிறேன்.

 டெஸ்க்டாப் வால்பேப்பர் குறும்பு (Desktop Wallpaper Prank)

 உங்கள் கணினி அல்லது உங்கள் நண்பர்களின் கணினியில் Desktop செல்லுங்கள்... இப்போது விசைப்பலகையில் உள்ள Print Screen அழுத்துங்கள். பிறகு மைக்ரோசாப்ட் பெயிண்ட் (MS paint)அல்லது போட்டோஷாப்(Photoshop)போன்றதொரு போட்டோ எடிட்டிங் மென்பொருளைத் திறந்து அதில் பேஸ்ட் செய்துகொண்டு அதை BMP அல்லது JPG கோப்பாக சேமித்துவிடுங்கள்.

இப்போது மீண்டும் கணினியில் Desktop செல்லுங்கள். அங்கு desktop -ல் உள்ள ஒரு சில ஐகான்களை டெலீட் செய்துவிடுங்கள். டெலீட் செய்துவிட்டு டெஸ்க்டாப்பில் வெற்று இடத்தில் மௌசை வைத்து ரைட்கிளிக் செய்யுங்கள். தோன்றும் மெனுவில் personalize தேர்ந்தெடுங்கள். இப்போது Screen Saver ஆக நீங்கள் ms paint -ல் சேமித்த படத்தை background Screen ஆக சேமித்துவிடுங்கள்.

உங்கள் நண்பர் கணனியைப் பயன்படுத்தும்போது உண்மையான டெஸ்க்டாப்பில் உள்ள ஐகானை கிளிக் செய்யும்போது அது வேலை செய்யும். பின்னணி படமாக இருக்கும் ஐகானை கிளிக் செய்யும் போது அது வேலை செய்யாமல் இருக்கும். இதனால் உங்கள் நண்பரும் குழம்பிபோய் திருதிருவென வடிவேல் மாதிரி முழித்துக்கொண்டிருப்பார்.

இது வேடிக்கையான விளையாட்டுதான். செய்து பாருங்கள். உங்கள் நண்பரோ அல்லது உங்கள் உறவினர்களையோ இவ்வாறு குழப்பிப் பாருங்கள்.

தவறான கோப்புறை (Invalid Folder)

உங்கள் விண்டோஸ் எக்ஸ் ப்ளோரரில் (Windows Explorer) எங்கேனும் புதிய போல்டரை உருவாக்குங்கள். போல்டருக்கு prn என பெயரிட்டுப் பாருங்கள் என்ன நடக்கிறது? The specified name is invalid என உங்களுக்கு ஒரு பிழைச் செய்தி கிடைக்கும்.

பெயரில்லா கோப்புறை அமைக்க (Create a Folder with out Name) பெயரிடாமல் போல்டர் அமைக்க முடியுமா? எங்கே நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

ஒரு கோப்புறையை உருவாக்கும்போது தானாகவே கணினியானது New Folder என தானாகவே பெயர் அமைத்துக்கொண்டு விடும். அல்லது ஏற்கனவே New Folder என்ற பெயர் இருந்தால் அடுத்து New Folder1, New Folder2 என தானாகவே பெயரை உருவாக்கிக்கொள்ளும். அல்லது நாமாக பெயர் கொடுத்து போல்டர் உருவாக்குவோம். பெயரை அழித்துவிட்டு கோப்புறையை உருவாக்க முயன்றால் அது முடியாது.

பெயரில்லாமல் கணினியில் போல்டர் உருவாக்க ஒரு வழிமுறை உண்டு. உங்கள் கணினியில் start button +R அழுத்துங்கள். விண்டோஸ் 7 எனில் search box-ல் RUN என தட்டச்சிட்டுகள். Run விண்டோ திறக்கும்.
அதில் charmap என தட்டச்சிட்டு என்டர் அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு Character Map என்ற விண்டோ திறக்கும்.
அதில் Font எனும் பெட்டியில் system என்ற எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறகு கீழிருக்கும் Character map-ல் 6வரிசையில் 9 வது நெடுக்கு வரிசையில் உள்ள காலியான பெட்டியை கிளிக் செய்யவும்.
இப்போது அந்த பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.
பிறகு characters to copy என்பதில் உள்ள பெட்டியில் அந்த வெற்று இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
அதை செலக்ட் செய்துகொள்ளுங்கள். அல்லது select என்ற பட்டனை அழுத்தி, பிறகு காப்பி என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்போது வெற்று இடம் காப்பி செய்யப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் பெயரில்லா போல்டர் உருவாக்க, ஏற்கனவே இருக்கும் ஒரு போல்டருக்கு ரீநேம் (rename) கொடுத்து நீங்கள் காப்பி செய்த வெற்றிடத்தை பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்கள் போல்டர் பெயரற்று இருக்கும்.

மற்றுமொரு நுட்ப விளையாட்டு:

நீங்கள் மைக்ரோசாப்ட் 2003, அல்லது 2007 உபயோகிப்பவராக இருந்தால் புதிய MS document கோப்பொன்றைத் திறந்துகொள்ளுங்கள். அதில், = rand.old() என தட்டச்சிடுங்கள்.. என்ன நடக்கிறது என்பதை உங்கள் நண்பருக்கு காட்டுங்கள்.. அதாவது இப்படி தோன்றும்.

 The quick brown fox jumps over the lazy dog. The quick brown fox jumps over the lazy dog. The quick brown fox jumps over the lazy dog. The quick brown fox jumps over the lazy dog.The quick brown fox jumps over the lazy dog.The quick brown fox jumps over the lazy dog. The quick brown fox jumps over the lazy dog.The quick brown fox jumps over the lazy dog.The quick brown fox jumps over the lazy dog.

அடுத்து Firefox Browser-ல் ஒரு நுட்பத்தைப் பார்ப்போம். உங்கள் Firefox Browser -ல் about:Robot என தட்டச்சிடுங்கள். தோன்றும் பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள்..