FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 04, 2017, 11:20:57 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: Forum on November 04, 2017, 11:20:57 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 163
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ftc Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/163.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: thamilan on November 05, 2017, 04:13:42 PM
எல்லாம் இருக்கும் மனிதனிடம்
இன்று இல்லாமல் போனது
இரக்கம் கருணை பச்சாதாபம்
என்பன தான்

மனிதன் வளர வளர
தேடல்களும் அதிகமானது
தேடல்கள் கூடக் கூட
மனிதநேயம் தேயத் தொடங்கியது

ஆறறிவு உள்ள மனிதன் என்று
நம்மை நாமே  பெருமைபடுதிதிகொள்கிறோம்
ஐந்தறிவு உள்ள மிருகங்களும் பறவைகளும்
நம்மை விட உயர்ந்தவையே

நன்றிக்கு உதாரணம் நாய்
ஒற்றுமைக்கு உதாரணம் காக்கைகள்
சுறுசுறுப்புக்கு எறும்புகள்
இப்படி ஒவ்வொன்றும்
நமக்கு போதிக்கும் பாடங்கள் பலப்பல

அன்பு நட்பு இரக்கம் இவை அனைத்தும்
இன்னும் மரணிக்காமல் இருப்பது
குழந்தைகளிடம் மட்டுமே
மனிதர்கள் வளராமல்
குழந்தைகளாய் இருந்திருந்தால்
உலகில் குழப்பம் ஏதும் இல்லை

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: VipurThi on November 07, 2017, 06:55:18 AM
இயந்திர வாழ்வில் இதயம்
இரும்பாய் இறுகிவிட்டது
மனம் செல்லும் போக்கை
ஏற்க மூளையோ மறுத்துவிட்டது

சேவைகளில் எல்லாம்
இலாபநட்ட பார்வை
பணமிருந்தாலும் இவர்களெல்லாம்
மனதளவில் ஏழை

மனித வாழ்வின் மகத்துவம்
அறியா மடமைகள் நாம்
மகத்துவம் அறிந்தவர்களோ
உலகின் சூதறியா
சிறுவர்களாம்

மனிதம்  மரிக்கவில்லை மாறாக
மனிதனால் புதைக்கப்படுகின்றது
ஆனால் என்றோ ஒருநாள்
மனிதம் விழிக்கின்றது

விழிக்கும் போது அதனை மழலைகள் மனதில் விதையுங்கள்
அதுவே அன்பெனும் விருட்சமாய்
உயிர் காக்கும்

                            **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: JeGaTisH on November 07, 2017, 02:22:13 PM
மழைக்கு புரியும் மண்ணின் கவலை
மனிதருக்கோ  புரிவதில்லை இன்னோர் மனிதன் கவலை  .
காலங்கள் உருண்டோட  மனிதநேயம் மாயமாகி மறைந்தே போனதுவே
மானிடன்  மனம்  மாயங்களின் வசமானதுவே

மழைச்  சாரல் வீசும் நேரத்தில்   
பிஞ்சுப்  பிள்ளைகளின் மனதில் கொஞ்சும்  ஆசைகள்
மழையில் நனையும் பிள்ளையின்  தாய்   மனமோ அச்சத்தில்
பிள்ளைகளின் மனமோ விளையாட்டின் உச்சத்தில்
 
கொட்டித்  தீர்க்கும் மழையின்  கொடூரத்தில்
 பிராணிகளின்  நிலையோ  பரிதாபத்தில்
பிஞ்சு  நெஞ்சில் மட்டுமே இறைவன் குடிகொண்டிருப்பார்
பிராணிகளின் நிலைகண்டு  பிள்ளைகள் குடைகொண்டு காத்தனரே

ஆறு அறிவு படைத்தும்  மனிதன்  ஆசையின் பின்னே ஓடுகிறான் 
அரைமணி நேரம் கூட மற்றவர்களை  சிந்திக்காமல்
ஐந்தறிவு  பிராணியோ  அன்பை சொரிகிறது
மனிதநேயம்   மறந்த மனிதனிடம்.

மறைந்துபோன மனிதநேயம்   மீண்டும் பெறுவோம்
உயிர்களிடத்தில் அன்பாயிருப்போம்


                                                                        நன்றி 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: joker on November 08, 2017, 12:32:37 PM
செல்ல பிராணி ஒன்று வளர்த்தேன் -அதை
செல்லம் கொடுத்து வளர்த்தேன்

செல்லும் இடமெல்லாம் அழைத்தேன் -அதை
செல்ல பெயரிட்டு அழைத்தேன்

உண்ண உணவும் கொடுத்தேன் வளர வளர
உள்ளத்தில் அன்பும் கொடுத்தேன்

தனிமையின் தோழன் என நினைத்தேன்
உன்னை கண்டபின் என் எண்ணத்தை மறந்தேன்

உன்னுடன் விளையாடிய நாட்கள் நினைத்தேன்
என்றும் எண்ணத்தில் நினைத்து  மகிழ்ந்தேன்

விடுமுறையில் உன்னை பிரிந்தேன்  பாட்டி வீட்டில்  உன்னை
நினைத்து என்  கன்னத்தின் ஓரத்தில் அழுதேன்

மீண்டும் வீடு திரும்பியதும் உன்னை தேடினேன் -உன்னை
காணாமல் என் மனம் வாடினேன்

நீ தொலைந்ததாய் பெற்றோர் சொல்ல கேட்டேன்
சொன்னேன்
உனை காணாமல் இனி உணவு உன்ன மாட்டேன்

உனை தேடுவதாய் வாக்கு ஒன்று தந்தார்கள்
என்னுடன் வீதிக்கு தேடவும் வந்தார்கள்

என் மனம் போல் கதிரவனும் மறைந்தான்
வருண பகவானும் எனோ தேட உடன் வந்தான்

நினைத்தேன்  வருந்தினேன் குடை பிடித்து
விதியை நினைத்து வீதியின் ஓரத்தில் அமர்தேன்

தீடிர் என என் கையில் பழகிய முத்தம் , பழகிய ஸ்பரிசம்
உள்ளம் மகிழ்ந்தது உணர்வு புரிந்தது குடைக்குள் வந்தது

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !


*****ஜோக்கர் *****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: பவித்ரா on November 14, 2017, 11:49:24 PM
காசிநகர் புலவர்
பேசும் உறைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவிசெய்வோம்
கனவு கண்டான்
என் முண்டாசு கவி
நடந்தாகிவிட்டது ....!

தினம் செய்தித்தாள்
போட்டவன் பெயர்
வராத செய்தித்தாளே
இல்லாத நாளுமில்லையென
வாழ்ந்த கலாமின்
கனவு நோக்கியே
பயணப்படுகிறோம்
நிறைவேறுமா .....?

அறம்மறந்து
ஆட்சி செய்வோன் 
சூழ்ச்சியில்
சுற்றிவளைக்குமோர் அரசு ....!

மெத்த கற்றவன்
தொழில் நுட்ப வளர்ச்சி
பெருமை பேசி
சுத்தம் கண்டு
தனித்து சுக வாழ்வு தேடும்  சிலர் ....!

அதே மண்ணில்
இன்னலிடர்பட்டு
உழைத்து களைத்து
தெருவிலுறங்கி
வாழ்வை தேடும்
விட்டில் பூச்சிகளாய் பலர் ...! 

கால மாற்றம் கானும்நேரம்
பகலவன் கண்டாலும் பகையே
வர்ணனை கண்டாலும் பயமே 
அள்ளி கொடுக்கிறாள் இயற்கையன்னை
ஏற்க முடியா சிந்தனையற்ற சீர்கேடு....!

வினையை விதைத்தவனே
அறுக்க திண்டாட
மற்ற ஜீவராசிகளின் நிலை
சொல்லித்தான் தெரியனுமா...,

அடித்த கொட்டம் போதும்
அடுத்த தலைமுறைக்கு வழிவிடு
அறம்கற்று அவ்ர்கள் காப்பார்கள்
இயற்கையையும் 
இதர ஜீவராசிகளையும்
கலாமின் கனவு மெய்படுமொருநாள் ....!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 163
Post by: SweeTie on November 15, 2017, 06:55:07 AM
  அர்த்தராத்திரி
இடியோடு கூடிய  மின்னல்
கிழித்துக்கொண்டு
பொழிகிறது வானம்
போக்கிடமின்றி
தத்தளித்து நிற்கும் ஜீவன்நான் 

படைத்தவன் நானிருக்க
பயமேன் உனக்கு
அசரீரி வார்த்தை
பிள்ளைகளின் திடீர்ப் பிரவேசம்
கோடி நன்றிகள் இறைவா
நா துடிக்கிறது
வாயில்லா ஜீவன் நான்
குளறல் மட்டுமே முடிந்தது

எளியவன் இரத்தம்
குடிக்கும்  சுயநலவாதிகள்
பாமரனை  பங்குபோடும்
பச்சோந்திகள்
நல்லவன் வேஷத்தில்
நடமாடும் 
மனிதம் இல்லா  மனிதர்கள்
எங்கு ஜீவகாருண்யம்
எதிர் பார்க்க முடியும் ???

அன்பும் அறமும் 
தமிழனின் பண்பு
சொல்லிவைத்தான்  அன்று
அன்பான  தாய் தந்தையரை
முதுமையில்  தவிக்கவிட்டு
வேடிக்கை பார்க்கும்
சமுதாயம்  இன்று

மனிதா
வாய் இல்லா ஜீவன்கள்
எம்மை
வாட்டி வதைக்காதீர்கள்
உங்கள் உறவுகளாக
இல்லாவிடினும்   
ஒரு உயிராக நினையுங்கள்
அன்பு காட்டுங்கள்
நன்றியுடைவர்களாய் இருப்போம்.