Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 180  (Read 2517 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 180
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:20:50 AM by MysteRy »

Offline RyaN

என் தாயின் பாசம் தெரியாமல்
பிறக்கையில் அழுதேன்.

நான்
உதைத்ததை நினைத்திருப்பாளோ என்னமோ
அழுதுகொண்டே முத்தமிட்டாள்
புன்சிரிப்புடன்

அன்பு என்னும் அர்த்தத்தை
சிரிப்பின் முத்தத்தோடு
உணர்த்தியவள் என் தாய்

அழுதேன் ,
தவழ்ந்தேன் ,
நடந்தேன் ,
பாசம் குறையவில்லை
என் மீது என் தாயிக்கு

பொய்யான உலகத்தில்
கடவுளும் பொய் என்றேன்
என் தாயின்
மெய் உருவத்தை கண்ட பின்பு

அன்பின் உருவம்
அணைக்கும் போது
அகமும் முகமும்
அல்லியாய் மலர்கிறதே..!

எத்தனை யுகங்கள்
தவமிருந்தாலும்
இந்த சுகம்
இனி கிடைக்காதே..!

உலகில் அதிசயங்கள் எத்தனை
வேண்டும் என்றாலும் - தோன்றலாம்
என் முதல் அதிசயம் நீதான் அம்மா..

குழந்தை பருவம் முதல் குமரி பருவம் வரை -சற்றும்
மணம் கோணாமல் என்னை பார்த்ததால் -தான்

எனக்கு தெரியும் நான் -உனக்கு
இன்னும் செல்ல பிள்ளை என்று ..
எனக்கு உங்களின் மகளாய் இருப்பதை விட
உங்களின் மறு தாயாக மாற ஆசை அம்மா .


Offline யாழிசை

குழந்தையி்ல் தலை குனிந்து தவழ்ந்தவள்
கூன் விழுந்த பின்னும் தலை குனிகிறாள்...

மரியாதை இழந்து அல்ல
மங்கை எனும் நானம் கொண்டதால்தான்

அவள்  சிறுமி என்றாலும்
சினம் கொண்டெழும் சிறுத்தை என்றாலும் 
பெண் என்ற காரணத்தால்
மண் சேரும் வரை
பல் தெரியக் கூடாது சிரிக்கையில்
சொல் தெறிக்கக் கூடாது வார்த்தையில்
குனிந்து செய்ய வேண்டும் வேலைகளை
பணிந்து செல்ல வேண்டும் சேலைகளில்

நங்கை என்பர் அச்சமயமே பெண்ணை
நாகம் என்றும் அழைப்பர்.
மங்கை என்பர் மதியில்லா மந்தி என்றும் அழைப்பர்.

போகட்டும் விடுங்கள் என்றிருந்தால்
ஆகட்டும் என்று அணைத்து இன்புர பெண்ணை அழைப்பர்...

சொந்த வீட்டிலும் சொகுசாய் இல்லாமல்
நொந்த தாய்களும் எத்தனை எத்தனை.

இனிதாய் இணைந்த உறவும்
தானே ஈன்ற உறவும் தன்னை
உதரித் தள்ளுகையில்
உதிராதோ இவ்வுயிர் என
ஏங்கும் இதயங்கள்
எத்தனை எத்தனை...

 இன்னல்களைப் பட்டறிந்தாலும்
அம்மா என்றழைத்ததும்
மின்னல் வேகத்தில் ஓடிவருவாள்; பிறர்
வதைத்த தன்னுள் விதைத்த
துன்பங்களை மறந்து வருவாள்...

ஆணாதிக்கத்தில் இல்லை வெற்றி
ஆள்வாய் இவ்வுலகை ; நித்தம்
பெண்மையைப் போற்றி...
« Last Edit: April 03, 2018, 08:32:36 AM by யாழிசை »

Offline JeGaTisH

உயிரை குடிக்க  உருவாகின்றன  பல
தொழிற்சாலைகள் என்னும் அரக்கர்கள்.

நல்ல சுவாசத்தில் நஞ்சை கலந்து
தினம் தினம்  அழிவுப்பாதையில்  மக்கள்

சுத்தமான வாழ்வே சுகமான இன்பம்  என்பர்
சுத்தம் என்பது இங்கு வார்த்தையில் மட்டுமே.

மீதேன் எனும் வாயுக் கழிபொருளால்   
விவசாயம் செய்ய  தண்ணீர் கூட தத்தளிக்கிறது.

கழுவும் தண்ணீரைக் குடிக்கும் நிலைமை
மக்களும் மாக்களும்  நித்தமும் வேதனையில்.
 
கவலையால் கண்ணீர் கூட வற்றி பாலைவனமாய்
என்று மாறும் இந்த நிலைமை. .

கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கத்
தொழிற்சாலை கட்டி  சம்பாதிப்பான் ஒருவன்.
 
வரும் கழிவே மக்களின் குடிநீராகி 
செத்து மடிகிறான்  மனிதன்

வருங்காலத்தின் சங்கதியினரைக் காப்பாற்ற
என் அம்மா என்னைத் தாங்கிச்செல்கிறாள்.

என்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள்
இப்போது என்னை வளர்க்க கையில் சுமக்கிறாள்..



        அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்



« Last Edit: April 05, 2018, 12:09:20 PM by JeGaTisH »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
இயற்கை எனும் கருவிலே
ஜனித்தவர்கள் நாம்
மழலையாய் அவளை
அன்பு செய்கிறோம்

வளர்கையில் அவளை
சுற்றி வருகிறோம்
அவளின் வளங்களை சுரண்டி
வாழ்கிறோம்

ஆனால் அவளையே இன்று
வதைக்கிறோம்
அவள் ரத்த ஜலத்தில்
கழிவுகளை கலந்தோம்
அவள் மூச்சு காற்றில்
விஷத்தை தெளித்தோம்
அவள் மென் உடலினை
அகன்று சிதைத்தோம்

அன்று உனக்காய் எல்லாம்
பொறுத்தாள்
இன்று உன் சந்ததிக்காய்
பொறுக்கிறாள்

உன்னை ஈன்றெடுத்த அன்னைக்கு
சற்றும் குறையாதவள்- உன்னை
வாழவைக்கும் அன்னையிவள்

அவளின் பொறுமைக்கும்
எல்லையுண்டு -அதை பறித்து
உன் ஆறடி குழிக்கு
அத்திவாரம் போடதே...

                   **விபு**

Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
காற்றை சிதைத்து
நீரைக் கெடுத்து
நிலத்தை குலைத்து
முன்னேற்றப்  போர்வையில்
ஏழைகளின் உயிர்குடிக்கும்
இரத்தக் காட்டேரிகளே!!

மனமில்லா பேய்களாய்
பணமே குறிக்கோளாய்
பிணம் தின்னும் கழுகுகளாய்
சுற்றித் திரியும் நரியினமே
அழியப் போகிறீர் எங்களின் 
அக்கினிக் குஞ்சுகளால் !!

அநீதியெனும் தீப்பிழம்பால்
சுட்டெரிக்கும் அதிகார வர்க்கமே 
உழைப்பை உறிஞ்சும்
உயர்குடி விலங்குகளே
மன்னிப்பில்லை  உங்களுக்கு
மடியப்போகிறீர் மாயமாக !!

ஒரு சிலர் வாழ
பலரை கெடுக்கும் 
வஞ்சக கூட்டமே
உங்களின்  வருகைக்காக 
காத்திருக்கின்றன
எமது  கல்லறைகள் !!
« Last Edit: April 03, 2018, 04:35:05 AM by KoDi »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 846
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

வறுமை
கடன்சுமை
மனஅழுத்தம்
குடும்பத்தினர் எதிர்பார்ப்பு
குழந்தைகளின் எதிர்காலம்
போன்ற தீக்குழம்பை
முதுகில் சுமந்தபடி
தான் பெற்ற குழந்தை
விடுத்து வேலைக்கு செல்லும்
ஒவ்வொரு தாயின்
கதறல்களின் எதிரொலியே
இந்த கிறுக்கல்

ஆழ்கடலில்
உறைந்திருக்கும் முத்து போல்
என்னுள் கலந்து
என்னுள் உறைந்து
தாய்மையை உணரவைத்த
என் கருவறையில் இருந்த முத்தே
கருவில் சுமந்த உன்னை
இன்று கையில் சுமக்க நேரம் இல்லை

உன் மழலை மொழி
உன் பொன் சிரிப்பு
உன் பிடிவாத அழுகை
உன் கதை பேசும் கண்களை
ரசித்து மகிழ்ந்து
உன்னை கொஞ்சிட
ஆசையோடு வருவேன்
நீயோ ஆழந்த நித்திரையில்
உறங்கி இருப்பாய் ....
இரவுகள் என்னை கடந்து செல்லும்
 உன் முகத்தை  நான் பார்த்தபடி .....

உன் உடல் சோர்வை
போக்கி  தாலாட்டு பாடி
உன்னை உறங்க வைக்க
ஆசை எனக்கு
ஆனால் என்னவோ 
என் தாலாட்டு
மௌனராகமாய்
மாறிப்போனது
உனக்கு

கண்மணியே உன்னை என்
இடையில் ஏற்றி
நிலவை கட்டி
உன் பசி போக
ஆசை எனக்கு
ஆனால் என்னவோ
தாய்ப்பாலோ புட்டிப்பாலாய்
மாறிப்போனது உனக்கு

என் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீராய் இருப்பது நீ
என்னுள்
இன்னும் ஒரு உயிராய் இருப்பது நீ
விடியும் பொழுது நமக்கான
விடியலாய் இருக்கட்டும்
நம் ரணங்கள் தீரும் காலம் வரும்
உன்னை அள்ளிஅனைத்து
முத்தமிடும் காலம் வரும்
காத்திரு என் செல்வமே   !!

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
இறைவன் சிருஷ்டித்த பார்தனிலே
எல்லா பிறப்புகளும் உன்னதமானவையே
உன்னதமும் இன்று படிப்படியாய்
மண்ணில் புதைந்து போவதேனோ ?

வளரும் மானிடரின் மனங்களிலே
காருண்யம் என்பது மடிந்து போவதேனோ ?

நிறங்களில் பேதம் இருக்கலாம்
ஆனாலும் மனித மனங்களில் பேதங்கள் தோன்றி
அசாதாரண இதயங்களில் கூராயுதம்  பாய்ச்சும்
அவலத்தை தட்டிக்கேட்க
இன்னுமொரு விடிவு தோன்றவில்லையே!
 
ஓர் தாயின் கருவில் பிறந்து
அவளின் அமுதம் பருகி
உயிர் வளர்த்தவன்
அதிகாரம் எனும் அச்சாணி கையில் கிடைக்க
தாய்மையையே பொசுக்க விளையும்
கோர  உலகம் எழுந்ததேனடா ?

மனித நேயம் மறைந்து போவதாலும்
சில ஆண்மையின்  அறியாமையாலும்
தன் பிஞ்சுகளின் பசியாற்ற
கூலிக்காய் வலி சுமக்கும் பெண்மை,

அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கி
வெந்து கருகிப்போவதை ஒரு கணம்
சிந்திப்பாயோ மானிடா ?

சிந்தித்தால் நிச்சயம் வழி பிறக்கும்
பெண்மைக்கான கல்வியின் அவசியமும் புரியும்
பாடப் புத்தகம் தொடாத பெண்ணின்
வாழ்வின் பக்கங்கள்  கிழித்தெறியப்படலாம்
என எண்ணும் அகோர மனங்கள் தலை குனிய

இனி ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்
சுட்டெரிக்கப்படும் பெண்மையை
கல்வியறிவெனும் நீரூற்றி
மீட்டெடுப்போம்.