Author Topic: கேலக்ஸி மியூசிக் மற்றும் எக்ஸ்பீரியா ஜே!  (Read 1553 times)

Offline Anu

புதிதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி மியூசிக் மற்றும் மக்களின் பார்வைக்கு வந்த சோனி எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்கள் பற்றி ஒரு சிறப்பு ஒப்பீடு. இந்த 2 ஸ்மார்ட்போன்களும் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும் என்றாலும், இங்கே ஒரு சிறிய ஒப்பீட்டு அலசல் தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.
பல வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் சிறந்த ஆடியோ வசதி வேண்டும் என்று விரும்புகின்றனர். கவர்ச்சிகரமான விலையில் துல்லியமான இசையை கேட்டு மகிழ கேலக்ஸி மியூசிக் மற்றும் எக்ஸ்பீரியா ஜே ஆகிய இந்த 2 ஸ்மார்ட்போன்களும் சிறந்ததாக இருக்கும்.
கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போன் 3 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் மூலம் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன், கேலக்ஸியை விட சற்று பெரிய திரையினை வழங்கும். ஆம்! இதில் 4 இஞ்ச் திரை வசதியினை பெறலாம். இந்த 4 இஞ்ச் அகன்ற திரையில் 480 X 852 பிக்ஸல் திரை துல்லியம் கிடைக்கும்.
கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போனின் பிராசஸர் பற்றிய விவரங்கள் இதில் சரிவர கொடுக்கப்படவில்லை. எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரை கொண்டதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை சலபமாக பெறலாம். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 விஜிஏ முகப்பு கேமராவினையும் பயன்படுத்தலாம். இதனால் சிறப்பான புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் ஆகிய வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. இதனால் இதில் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்த முடியாது. 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியனையும் பயன்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட்போன்கள் மெமரி வசதியில் மட்டும் ஒற்றுமை காட்டாமல், மற்ற தொழில் நுட்ப வசதியிலும் ஒற்றுமை காட்டுகிறது. ப்ளூடூத் முதல் கொண்ட வைபை நெட்வொர்க் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் சப்போர்ட் செய்கிறது.
கேலக்ஸி மியூசிக் ஸ்மார்ட்போனில் 1,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும், எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனிற்கு 1,750 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் பெறலாம். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனின் பேட்டரியின் மூலம் 7.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 25 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.