Author Topic: உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புதிய டெல் ஸ்மார்ட்போன்!  (Read 1537 times)

Offline Anu

புதிய படைப்புகளை கொடுப்பதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு இதுவரை சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து கொண்டு வருகிறது டெல் நிறுவனம். அதே வைராக்கியத்துடன் ஸ்ட்ரீக் ப்ரோ 101-டிஎல் என்ற புதிய ஸ்மார்ட்போனை கியூட்டாக கொடுக்க இருக்கிறது இந்நிறுவனம். இது முதல் பார்வையிலேயே அனைவரையும் தன்
பக்கம் ஈர்த்துவிடும் கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்கிறது.
வரும் ஜனவரியில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது டெல் நிறுவனம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த ஸ்மார்ட்போனில் அனைவரும் முக்கயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கூறலாம். கூகுள் ஆன்ட்ராய்டு வி-2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியையும் சேர்த்து இது 140 கிராம் எடையை கொண்டிருக்கிறது. சிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தால் மட்டும் போதாது அதை சரியானபடி இயங்க வைக்க சரியான பிராசஸரும் இருக்க வேண்டும்.
இது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் கியூவல்காம் ஸ்கார்பியன் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன். கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8260 சிப்செட் மற்றும் கியூவல்காம் அட்ரினோ 220 கிராஃபிக்ஸ் பிராசஸரையும் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் லெட் தொழில்நுட்பத்துடந் 4.3 இஞ்ச் மல்டி டச் ஸ்கிரீன் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும். ஜிபிஆர்எஸ்,
எட்ஜ் தொழில் நுட்பத்தின் மூலம் நொடிக்கும் நேரத்தில் இன்டர்நெட் வசதியினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 3ஜி தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.
மெமரி வசதி என்பது பெரிய பங்கு வகிக்கிறது. இதில் 32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி
கொள்ளலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.இந்த ஸ்மார்ட்போன் வைபை தொழில் நுட்பம் கொண்டது. இதனால் எளிய முறையில் பல அரிய வகை தொழில் நுட்பங்களை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.