Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 269  (Read 1880 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 269

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: June 20, 2021, 03:41:19 PM by Forum »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
பவுர்ணமி நிலவொளியில் தனிமையில் நான்
இரவின் அழகை ரசிக்க தோன்றுகிறது...
தனிமையின் தீரா  தாகம் தீர்க்க
நிலவொளியின் ஒற்றை
பார்வை போதுமே!


வானில் நட்சத்திரங்கள் கோலமிட
ரீங்காரமிடும் இரவுப் பூச்சிகள்
இதமான இரவு தென்றல் காற்று
பூமியின் மீது படர்ந்த ரம்மிய நிலவொளி!!


சாந்தமான முகமோ அவளுக்கு
தீராக் காதல் அவள்மீது எனக்கு...

எத்தனை கோபம் ஆனாலும்
அவள் அழகு முகம் பார்த்தால்
பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுவேன் !!!


தனிமையின் பிரிவை மறக்க செய்யும்
சாந்தமான பார்வை அல்லவா அவளுக்கு...

அதனால் தான் என்னவோ சொக்கி போனேன்...
மீளாக் காதல் கொண்டேன் அவள் மீது
ஆதலால் ஆனேன் இரவுக் காதலனாக!!!!

                                                                                                 -   🌹 எஸ்கே
« Last Edit: June 13, 2021, 10:03:59 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


மேகத்தின் இருண்ட வீதிகளில்..
மெல்லிய   பனிதுகளின் பொழிவு
காற்றை  அளக்க  போதுமானதாயில்லை...

நிலவின் முகம் வெண்மையாயினும்
அதன் மறுபுற கறைகளோடு  அது
பிரகாசிப்பதை  மறைப்பதேயில்லை...

வெண்ணிற நிலா ,மரக்கிளை, குளிர் தென்றல்
எவையும் எரியும்நெஞ்ச தீயை
ஊழிமழையிலும் அணைக்கவிடுவதாயில்லை..

மறந்தும் மரணித்தும் போனவர்களை
வலிய நினைக்கும்  வலிநேரங்கள் 
ஒருபோதும் தீர்வதாயில்லை...

கூண்டு பறவைகளின் கூடாரத்தில்
பறக்க மறந்த சிறகுகளுக்கு
பரிதவிக்கும் வேலையில்லை...

ஊதிபறக்கும் நீர்குமிழ்களுக்கு..
உயர்ந்த மரம் உச்சி தொட
ஆசையாயினும் முடிவதில்லை..

இமயசிகரங்கள் அதன் முழுநிழல் காண 
எப்போது முயன்றாலும் , தவித்தாலும்
எவ்வளவு வளைந்தாலும் முடிவதில்லை...

இதய‌வெளிகளின் இணையா சிந்துசமவெளிகள் ..
இசைக்கும் திசைகளாய் உருகி உருகி
என்றைக்கும்உறைந்தே போவதில்வலை..

உயிர்ஒளியை தேடித்தவிக்கும் விசைப்படகுகள்
மாய தருணங்களில் மயங்கினாலும் 
காற்றை தூது விடவும் தயங்குவதில்லை...

தன் இருப்பை கூவிசொல்லும் குயில்களின்
மென்சோக கீதங்கள்  ஒலிகளின் ஆரவாரங்களில்   
சிலசமயம் கேட்பதேயில்லை..

காலம் உணர்த்தும் தந்திர புறக்கணிப்பும்
காயம் கொண்ட பாதை  ரணங்களும்
நிலை மாறியும் நிறைவதாய்  இல்லை!

இரவுகளின் கனத்தை நீக்க
இந்த  தனிமையும் மூங்கில் துளை இசையும் 
ஒருபோதும் போதுமானதாயில்லை...!

« Last Edit: June 13, 2021, 05:07:45 PM by AgNi »

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
தனித்திருந்து விழித்திருந்து
பழகிப்போன எனக்கு இப்போது
தனித்திருப்பதும் விழித்திருப்பதும்
பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை. 💘

பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே💘
இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே💘
அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே💘
என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே💘

எத்திசையில் சென்றாலும் அத்திசை
வந்து என்னை வாரியனைத்து
கொள்கிறது தனிமை..!💘

ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை
இல்லாத போது தான் தெரியும்
அன்பின் அருமையும்
தனிமையின் கொடுமையும்...!💘

தனியாய் நின்று ஜெயிப்பவனை விட
அதிக சக்தி வாய்ந்தவன் உலகில்
எங்கும் கிடையாது...!💘

கனவில் வாழும் வாழ்க்கை,
விடிந்தவுடன் முடிந்து விடும்.💘 
 ஆனால்,
காலத்தால் கிடைக்கும் வாழ்க்கை
கடைசி வரை உன்னுடன் இருக்கும்.💘
எனக்கு காலத்தால் கிடைத்த வாழ்க்கை
தனிமை தான் எப்பொழுதும்...!💘

மனிதர்களால் தர முடியாத
ஆறுதலை கூட சில நேரம்
தனிமை தந்துவிடும்.💘

தனிமை தான் கற்றுக் கொடுக்கும்
வாழ்க்கையின் மறுபக்கத்தை.💘

சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும்.💘
நம்பி ஏமாந்த மனதுக்கு
ஆறுதல் தனிமை தான்...!💘

அதனால் எனக்கென யாரும் இல்லை என்று நினைத்திட வேண்டாம் ஏன் என்றால் தனிமையும் ஒரு துணைதான் சுகமும் கூடதான் 💘




« Last Edit: June 13, 2021, 05:44:08 PM by Mr Perfect »

Offline thamilan



இறைவன் படைத்த அற்புதங்களில்
இயற்கையும் ஒன்று
வர்ணங்கள் அவன் கையில்
வானவில் ஆகின
உலகம் எனும் வீதியிலே
இறைவன்  வரைந்திட்ட  கோலங்கள்
இயற்கை
அதை ரசிப்பதத்திற்கு
ஆயிரம் கண் போதாது மனிதனுக்கு

இரவின் மடியில்
துயிலும் உலகம்
அமைதியான தென்றல் தவழும் இரவு
தன் கணவன்  சூரியன்
கடலில் வீழ்ந்து மாண்டதால்
கருமை உடை உடுத்திய வானம்
அவள் நெற்றியிலே
வெண்ணிற பொட்டு
அதை மறைக்க துடித்து
தோல்வி கண்ட மேகங்கள்
இயற்கையை ரசிப்பவன் எவனுக்கும்
கவிதை எழுதத் தோன்றிடும்
இந்த இரவின் அழகு

யாருமற்ற தனிமையில்
ஏகாந்த இரவில்
மரத்தின் கிளையில் அமர்ந்து
முழுநிலவை ரசிக்கின்ற போது
மனம் நிறைந்த நிம்மதி எனக்கு

அந்த நிலவை பார்க்கும் போதெல்லாம்
என்னவள் முகம் தான் நினைவுக்கு வரும்
நிலவில் கூட களங்கம் இருக்கும்
என் அவள் முகம் பளிங்கு போலிருக்கும்
இந்த நேரம் அவளும்
நிலவின் மறுபக்கம் இருப்பாள்
எங்கள் மனவோட்டங்களை நிலவு
அமைதியாக ரசித்து
மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும்

சில பேர் எட்டாத நிலவு
என்றும் சொல்லுவார்
அத எட்டாத நிலவையும்
தொட்டுவிட்டான் இன்றய மனிதன்
ஒரு கவலை தான் எனக்கு
களங்கம் இல்லா  நிலவும்
மனிதன் காலடி பட்டதும்
களங்கமாகி விடுமே
உலகையே குப்பை குளமாக்கிய மனிதன்
நிலவை மட்டும் விட்டு வைப்பானா என்ன

Offline இணையத்தமிழன்

இருள் சூழ்ந்த காட்டிலே
இரவின்  வேளையிலே
வாழ்வின் எல்லையில் நின்றவனோ
நிலவையும் ரசித்தேனடி
அதிலும் உன்முகம் தெரிந்திட
வாடியமுகத்தோடு வானையும் நோக்கினேன்

வாடைக்காற்றும் வருடிச்சென்றது
வழிந்தோடிடும் எந்தன் கண்ணீரை

விழிகளோ உன்னையே நாடிட
மனமோ உன்னையே தேடிட

உறக்கமும் தொலைத்தேனடி
உந்தன் நினைவுகளில்
உறங்கவும் மறுக்கிறேன்
உன்னைத்தான் நினைத்திட

அன்றோ காரணமே இல்லாமல் கதைத்தாய்
இன்றோ காரணங்கள் தேடுகிறாய் கதைக்காமல் இருக்க
உச்சகட்டத்தனிமையும் உணர்ந்தேன்
அன்பே உந்தன் நிராகரிப்பில்



பெண்ணே மறந்துவிடாதே
நான் செல்லும் தூரமெல்லாம்
என்னைத்தொடர்வது இந்த நிலவு மட்டும்மல்ல
உந்தன் நினைவுகளும் தான்

                              -இணையத்தமிழன்
« Last Edit: June 13, 2021, 09:30:32 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
விடியலுக்கான தூரம்
விண்ணளவு இருந்தபோதும்
விழிப்புடன் முன்னேறும் வேளையில்
விசித்திரம் நிறைந்த உலகின்
விந்தை விளையாட்டில்
விரோதம் குரோதமாகி
விலைமகன் விஷக்கிருமியை பரப்பிவிட்டு
வினை விதைத்தான்..

வினையின் பலனாய்
விஞ்ஞாணமும் முடங்கியது
விமானமும்  முடங்கியது
விளையவைத்த விவசாயமும்
 முடங்கியது..
விலைவைக்கும் வியாபாரமும் முடங்கியது
வினோத சூழலைக் கண்டு
விமோட்சனமின்றி செய்வதறியாமல்
விசனபட்டு போனோம்

விபரீதம் பலவகையில் வந்துசேர
விடியல் கான காத்திருந்த நமக்கு
விலகியிரு, விழித்திரு
வீட்டிலிரு, தனித்திருவென்றதும்
விருப்பமில்லை எனினும்
விடிந்ததும் முடங்கி போகும்
விட்டில் பூச்சிகள் போல்
வீட்டில் அடைபட்டு போனோம்..

வினாவிற்கு
விடைதெரியாத குழந்தைகளாய்
விபரீதத்தை கண்டு தவித்தோம்..
விரைவில் இந்நிலை மாறி
விமோட்சனம் வரும் வேளையில்
விஜயனின் வில்லிலிருந்து
விரைவாக வரும் அம்புபோல்
விழிப்புடன் செயல்படுவோம்..

விடியல் தொட்டுவிடும் தூரமே
விசுவாசம் கொள்
விநாயகன் அருள் கிட்டி
விக்கணங்கள் களைந்து
விடியலில் முளைத்திடும்
விடிவெள்ளியைப் போல்
விடியலை எட்டி ஒருநாள்
விண்ணில் பிரகாசிப்போம்...!!


புதுமைக்கவிஞன்
சுந்தரசுதர்சன்
« Last Edit: June 13, 2021, 10:37:06 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline PreaM

எட்டாத உயரத்தில்
இரவின் ஒளியாய் இமைக்கா விழியாய்
ஒளி வீச வந்தவளே... அழகான வெண்ணிலாவே...

பூமியை சுற்றி வரும் விண்வெளியின் சித்திரமே...
சூரியன் மறைந்தவுடன் விளக்காக வந்த பெண் நிலாவே...

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உன் பெயர் பொருந்தும்...
நிலா என்பது பெண்ணாக  சந்திரன் என்பது ஆணாக...

காதலனின் கற்பனையில் காதலி நீ...
சிறுவர்களுக்கு விளையாட்டு நீ...
விஞ்ஞானிக்கு ஆராய்ச்சு நீ...

நிலவொளி துணை கொண்டு மேகம் செல்லும் ஊர்கோலம்...
மேற்கில் இருந்து கிழக்காக வளர்பிறையாய் வந்த உண் முழு வடிவம்  பௌர்ணமியே...

இரவோடு உறவாட இமைக்காமல் வந்தவளே...
பூமிக்கு நீ துணையாக
அந்த பூமியாக நானாக ...

என்னை சுற்ற வேண்டும் எப்போதும் எனக்கு ஒரு துணையாக ...

உன்னை சேரும் எண்ணத்தில் வந்துவிட்டேன் மர உச்சி வரை...
எப்போது இறங்கி வந்து என்னிடம் கை கோர்ப்ப வெண்ணிலாவே...

எட்டாத உயரத்தில் என்னுடைய வெண்ணிலா...
எப்போது எனைச் சேரும் பெண்ணிலா...




Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


அன்றோர் நாள்!
ஓர் அழகிய அமைதியான இரவு நேரம் ..
என்னை சுற்றி அடர்ந்த... கரும் காரிருள்..

அந்நேரம்!
என் கண்ணெதிரே.. மெல்ல.. மெல்ல.. 
சினிங்கி.. சிரிக்கும் வெள்ளி நிலா...

வெண்ணிலவே!
உன்னை பார்த்த அந்த நொடி பொழுதிலே...
என் சுய நினைவு என்னை விட்டோடியதே..

வெண்மதியே!
என் கருவிழிகள் அசைவின்றி.. உன்னை மட்டும் ரசிக்க...
என் நிலை நான் மறந்து.. .உன்னுள் உறைந்தேனே...

நிசாமணியே!
நான் கொண்ட மனையும்.... என் நினைவில் இல்லாது..
நான் மணந்த மனையாளும்... என் மனதினில் இல்லாது...

பேரொளியே!
நான் பெற்ற மக்களும்... என் சிந்தையில்  இல்லாது...
என் மதி மயங்கி.. கிறங்க.. எனை என்ன செய்தாயோ ..

பணிசுடரே!
சிலையென உன் முன்னே நானும் கல்லாகி நிற்க..
எனை விழுங்கும்.. உன் பார்வையாய்..  நிறுத்த மாட்டாயா?.

வான்மதியே!
இன்று ஓர் இரவு மட்டுமேனும்...  உன்னுடனே நான் கழிக்க..
எனக்கு அனுமதி அளிப்பாய்.. என் இனிய பொன்நிலாவே.. 



« Last Edit: June 15, 2021, 11:50:19 PM by TiNu »