Author Topic: 40 கீரை வகைகள் அதன் பயன்களும்  (Read 2096 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
40 கீரை வகைகள் அதன் பயன்களும்

அகத்திக்கீரை பயன்கள்
இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை பயன்கள் சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறு பசலைக் கீரை பயன்கள் சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை பயன்கள் தசைகளை பலமடைய செய்யும்.
கொடிப்பசலைக் கீரை பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும். மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும்.
மஞ்சள் கரிசலை கீரை பயன்கள்  கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும்.
குப்பைமேனி கீரை பயன்கள்  பசியை தூண்டும்.
அரைக்கீரை பயன்கள் ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை பயன்கள்  இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை சரியாக்கும்.
பிண்ணாக்கு கீரை பயன்கள் வெட்டை மற்றும் நீர்க்கடுப்பை குணப்படுத்தும்.
பட்டை கீரை பயன்கள் / keerai vagaigal பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தும்.
பொன்னாங்கண்ணி கீரை உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
வெள்ளை கரிசலைக் கீரை இரத்த சோகையை குணப்படுத்தும்.
சுக்கா கீரை பயன்கள் / keerai vagaigal இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை குணப்படுத்தும்.
முருங்கை கீரை பயன்கள் / keerai vagaigal நீரிழிவை குணப்படுத்தும். மேலும் உடல் மற்றும் கண்களுக்கு அதிக பலத்தை தரும்.
வல்லாரைக் கீரை நிஞாபக சக்தியை அதிகரிக்கும்.
முடக்கத்தான் கீரை  கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும், மேலும் வாயு விலகும்.
புண்ணக் கீரை சிரங்கு மற்றும் காயங்களில் வழியும் சீதளமும் குணமாகும்.
புதினா கீரை இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்.
நஞ்சுமுண்டான் கீரை விஷம் முறியும்.
தும்பை கீரை அசதி, சோம்பல் நீங்கும்.
முள்ளங்கி கீரை நீரடைப்பு நீங்கும்.
பருப்பு கீரை பித்தத்தை குறைக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்ச கீரை கல்லீரலை பலமடைய செய்யும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும், ஆண்மையை பெருக்கும்.
மணலிக் கீரை வாதத்தை குணப்படுத்தும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் தேமல் மறையும்.
முளைக்கீரை பசியை தூண்டும், நரம்பை பலமாக்கும்.
சக்கரவர்த்திக் கீரை தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும். வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும்.
தூதுவளை ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும் மற்றும் சளி தொல்லை குணமாகும்.
தவசி கீரை இருமல் குணமாகும்.
சாணக் கீரை காயங்களை ஆற்றும்.
வெள்ளைக் கீரை தாய் பாலை அதிகம் சுரக்க செய்யும்.
விழுத்திக் கீரை பசியை அதிகரிக்கும்.
கொடிகாசினிக் கீரை பித்தத்தை தணிக்கும்.
துயிளிக் கீரை வெள்ளை வெட்டை குணமாகும்.
துத்திக் கீரை  வாய் மற்றும் வயிற்று புண் குணமாகும்.வெள்ளை மூலம் விலகும்.
காரக்கொட்டிக் கீரை வகைகள் (keerai vagaigal) மூலநோயை குணப்படுத்தும், சீதபேதியை போக்கும்.
மூக்குத்தட்டை கீரை  சளியை குணப்படுத்தும்.
நருதாளி கீரை வகைகள் (keerai vagaigal) ஆண்மையை பெருக்கும், வாய்ப்புண் குணமாகும்.