Author Topic: அர்த்தமுள்ள இந்துமதம்  (Read 1512 times)

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 61
« Reply #60 on: January 06, 2022, 09:15:00 AM »

விடியற்காலை வாசலில் கோலமிடுவதற்கு முன் விளக்கேற்ற வேண்டுமா? அல்லது விளக்கேற்றிய பிறகு கோலமிடுவதா? கோலத்தில் மஞ்சள் குங்குமம் இடலாமா?

வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடாமல் விளக்கேற்றுவது போன்று எதுவுமே செய்யக்கூடாது. காபி கூட சாப்பிடக்கூடாது. அரிசி மாவினால் மட்டுமே கோலம் போட வேண்டும். கோலம் வீட்டிற்கு மங்களத்தைத் தருகிறது. அரிசி மாவை எறும்பு, காகம், குருவிகள் தின்பதால் ஜீவகாருண்யம் என்னும் புண்ணியம் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் அரிசி மாக்கோலமே யாரும் போடுவதில்லை. கலர் பொடிகளை வாங்கிப் போடுகிறார்கள். மஞ்சள் குங்குமம் போன்றவை பூஜைக்குகந்த பொருட்கள். இவற்றைக் காலில் படும்படி கோலத்தில் போடக்கூடாது. அழகுக்காகக் காவிப்பொடி இடுவது தான் தமிழர் மரபு. மார்கழிக் கோலமிடுவோர் அழகுக்காக கலர்ப்பொடி கோலமும், புண்ணியத்திற்காக அரிசிமாவு கோலமும் தனித்தனியாகப் போட வேண்டும்.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 62
« Reply #61 on: January 07, 2022, 08:05:00 AM »

ராகுகாலம் என்றால் என்ன? வெள்ளியன்று ராகுகாலத்தில் வழிபடுவதால் என்ன பயன்?


கிரகங்கள் ஒன்பதில் ஏழிற்கு ஏழு கிழமைகள் உள்ளன. ராகு, கேதுவுக்கு கிழமைகள் கிடையாது. இதனாலேயே ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என ராகுவிற்காகவும், எமகண்டம் என கேதுவிற்காகவும் அமைந்துள்ளது. ராகுவிற்கு அதிதேவதையாக துர்கையம்மன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கி திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 63
« Reply #62 on: January 08, 2022, 08:54:12 AM »


தனி மனிதப் பிரார்த்தனையை விட கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்கிறார்களே! அதன் மகத்துவத்தைச் சொல்லுங்கள்.

ஒருவரிடம் தனி மனிதனாகச் சென்று உதவி கேட்பதில் எனக்கு கொடு என்றால், கிடைப்பது கடினம், அதையே கூட்டமாகச் சென்று, ""எல்லாரும் கஷ்டப்படுகிறோம். தயவு செய்து கொடுங்கள்,'' என்றால் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இதுபோல, இறைவனிடம் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டும் வேண்டிக் கொள்ளாமல், பிறர் நலம் பேணுகின்ற முறையில் கூட்டுப்பிரார்த்தனையாகச் செய்தால் கண்டிப்பாக அவர் அருள்பாலிப்பார். இதனை "சங்கம வழிபாடு' என்று சாத்திரங்கள் கூறுகின்றன.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 64
« Reply #63 on: January 09, 2022, 09:10:55 AM »

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றலாமா? விளக்கு ஏற்றும் போது திரியை ஒற்றையாக இடலாமா?

தீபம் ஏற்றுவது என்பது காலம் காலமாக அகல் விளக்குகள் அல்லது வெண்கலம் போன்ற உலோக விளக்குகள் ஏற்றுவதே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். பின்நாளில் சில ஜோதிடர்கள் மற்றும் மாந்த்ரீகர்கள் துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கேற்றும் வழக்கத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். திருமணத் தடையை நீக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாக இன்றும் பல பெண்கள் நம்பிக்கையோடு எலுமிச்சம் பழ விளக்குகளை ஏற்றுகின்றனர். சில விஷயங்கள் நம்பிக்கை அடிப்படையில் நடந்து வருகிறது. திரியை ஒற்றையாக இட்டு விளக்கேற்றலாம்தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 65
« Reply #64 on: January 10, 2022, 08:44:13 AM »

வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு என்று தனி நடைமுறை எதுவும் உள்ளதா?

அதற்கென உயர்ந்த தொட்டியும் விளக்கேற்ற மாடமும் வைக்கவேண்டும். நல்ல மண் போட்டு அதில் துளசிச்செடியை நடவேண்டும். வீட்டு வாசலின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில் நடைபாதை விட்டு தள்ளி வைக்கவேண்டும். குளிக்காமல் தண்ணீர் விடுவது கூடாது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துளசி ஸ்தோத்தி ரங்களைப் பாராயணம் செய்வது நல்லது. மாலையில் துளசிமாடத்தில் தீபம் ஏற்றி வைப்பது லட்சுமி கடாட்சத்தை இல்லத்தில் உண்டாக்கும். சனிக்கிழமை, அமாவாசை, ஏகாதசி நாட்களில் துளசி இலையைப் பறிக்கக்கூடாது. துளசிமாடம் இருக்கும் இடத்தை விஷ ஜந்துக்களும் அண்டாதுதொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 66
« Reply #65 on: January 11, 2022, 08:00:16 AM »

நாயன்மார்களில் நந்தனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர், சண்டிகேஸ்வரர், சாக்கியர் போன்ற பல அடியார்கள் கடுமையான முறையில் சிவன் மீது பக்தி செலுத்தியது ஏன்? இறைவனை அடைய மென்முறை போதாதா?


மேற்கூறிய சிவனடியார்கள் இறைவனை அடையவேண்டும் என்ற குறிக்கோளோடு இப்படிக் கடுமையான வழிகளைக் கையாளவில்லை. இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இருந்தால் நீங்கள் கூறும் மென்முறையே போதுமானது. இந்நிலை ஒரு குறிக்கோளோடு செய்யப்படுவதாகும். ஆனால், மேற்கூறிய அடியவர்கள் இறைவன் வேறு, தான் வேறு என்று எண்ணவில்லை. நந்தனார் சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிப்பதையே பேரின்பமாகக் கருதினார். சிறுத்தொண்டர் அடியவர்களுக்கு உணவு அளிப்பதையும், கண்ணப்பர் இறைவனின் லிங்கத்திருமேனியைப் பாதுகாப்பதிலும், சண்டிகேஸ்வரர் இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்வதிலும் பேரின்பம் கொண்டனர். அதாவது, முக்தியின்பம் பெற்றனர். வேறு எந்த குறிக்கோளும் இல்லாத அவர்களின் அன்றாட வாழ்க்கையே பக்தியாகிவிட்டது. அதற்குச் சோதனைக்காலம் வந்தபோது, கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை
.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 67
« Reply #66 on: January 12, 2022, 08:39:06 AM »

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே! உடனே தெய்வம் தண்டிக்காதது ஏன்?

காலம் என்னும் நியதியின் அடிப்படையில் தான் வாழ்க்கை நிகழ்கிறது. நாம் அனுபவிப்பது நல்லதோ, கெட்டதோ அதற்கு மூலமுதற்காரணம் நாம் தான். வித்தில்லாமல் மரம் முளைப்பதில்லை. ஆனால், விதைத்தவுடன் பலன் கிடைப்பதில்லை. அதற்கான காலம் கனிந்தவுடன் மரம் பூக்கிறது. காய்க்கிறது. கனிகளைத் தருகிறது. அதுபோல, நாம் செய்த செயலுக்கான பலனை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இதையே ""தீதும் நன்றும் பிறர் தரவாரா'' என்று நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். காலதேவனின் கணக்கிற்கு எட்டாத விஷயம் எதுவுமில்லை. அவன் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது. இதையே "எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும்' என்று சொல்வார்கள்.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 68
« Reply #67 on: January 13, 2022, 08:48:46 AM »

ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, தமக்கு வேண்டிய விஷயங்களை மட்டுமே வேண்டுதலாக வைக்கிறார்களே. இது சுயநலமா?

மனிதனுக்குச் சுயநலம் கூடாது என்ற அடிப்படையில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். கடவுளுக்குத் துதிப்பவன், துதிக்காதவன் என்ற பேதமில்லை. நீங்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் அவன் இயல்பு அருள்செய்வது தான். சுயநலம் என்பது கூட பொதுநலத்தில் அடங்கிவிடக்கூடியது தான். தனித்தனியாக இருக்கும் குடும்பத்தில் அமைதி இருந்தால் அந்த சமுதாயமே அமைதியாகி விடும் தானே. குழந்தை ஆசைப்பட்ட பொருளை, அம்மாவிடம் கேட்பது போல, மன விருப்பங்களைக் கடவுளிடம் வேண்டிப் பெறுவதில் தவறேதும் இல்லை.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 69
« Reply #68 on: January 14, 2022, 09:07:55 AM »

ஆண்டிக்கோலத்தில் இருக்கும் பழநி முருகன் படத்தைப் பூஜையறையில் வைக்கக்கூடாது என்கிறார்களே! ஏன்?


பழநிமலை  தனித்திருந்து வாழும் தவமணி ஆவார். தியாகத்தின் உச்சநிலை தான் துறவு. வாழ்வில் பொருளை மட்டும் தேடினால் போதாது. அருளையும் தேடவேண்டும் என்பதைக் காட்டுவது தான் தண்டாயுதபாணி ஆண்டிக்கோலம். அரசகோலமானாலும், ஆண்டிக்கோலமானாலும் அவன் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளப்போவதில்லை. ஞானக்கனியான தண்டபாணியை எக்கோலத்தில் வணங்கினாலும் நம் அல்லல் தீர்வது சத்தியம். அருளைத் தருவது நிச்சயம்.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 70
« Reply #69 on: January 15, 2022, 08:51:09 AM »

லட்சுமி நரசிம்மர் வழிபாட்டில் ஈடுபாடு கொள்கிறது. வீட்டில் வைத்து அவரை வணங்குவது முறைதானா?

ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் ஆகிய மூன்றுமே மகாவிஷ்ணுவின் பூர்ணமான அவதாரங்களே. வீட்டில் தாராளமாக லட்சுமிநரசிம்மரை இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்து வரலாம். பானகத்தையோ, காய்ச்சிய பசும்பாலையோ வைத்து வழிபட்டு வரவும். கைமேல் பலன் கிடைக்கும்..தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 71
« Reply #70 on: January 16, 2022, 08:10:23 AM »

கோயிலுக்குச் சென்று வந்த உடன்வீட்டில் சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டு தான் கைகால்களை சுத்தம் செய்யவேண்டும் என்கிறார்களே ஏன்?

கோயில் என்பது ஒரு புனிதமான இடம். அதனை வலம் வந்த கால்களிலும், இறைவனைக் கூப்பி வணங்கியதால் கைகளிலும் தெய்வசக்தியானது பரவியிருக்கும். கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தவுடன் வீட்டில் உட்காரும் போது இல்லத்தில் தெய்வீகசக்தி நிறைகிறது. இதனால் தான் கோயிலுக்குச் சென்றுவந்தவுடன் அமர்ந்து சிறிது தண்ணீராவது பருகவேண்டும் என்று பெரியோர் சொல்வர்.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 410
 • Total likes: 1158
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 72
« Reply #71 on: January 17, 2022, 01:50:28 PM »

திருநீறை நெற்றியில் இடும்போது விபூதி கீழே சிந்தக் கூடாது என்கிறார்களே! வானத்தைப்பார்த்து தான் பூச வேண்டுமா?

விபூதியை கீழே சிந்தாமல் இட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக வானத்தையெல்லாம் பார்த்துக் கஷ்டப்பட தேவையில்லை. விபூதியை இடது கையில் வைத்து வலது கை விரல்களில் பூசி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். மீதம் உள்ள விபூதியை இரண்டு கைகளிலும் பூசி உடம்பு முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். கீழே சிந்தாது.தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்