Author Topic: நா முத்துக்குமார் !  (Read 3259 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நா முத்துக்குமார் !
« on: July 12, 2018, 03:23:15 PM »
எனக்கொரு கவலை
இருந்தது கண்ணதாசன் வாழ்ந்த
நாட்களில் நானில்லயே என்று

இக்காலத்தில்
இயல்பான வரிகளில் இதயத்தை
தொடமுடிந்தவன் யார் என எண்ணுகையில்
ஓர் நாள் காதில் ஒலித்தது ஒரு பாடல்

"எனக்குப்பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே"
பிடித்து தான் போனது பாடல் வரிகள்

"நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்"

உன் பாடல்கள் கேட்டபின் என் மன நிலையும் இது தான்

"நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில்
வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் "

பல வருடங்களுக்கு என் தொலைபேசியை
அழைத்தால் இந்த பாடல் தான் ஒலித்தன
இதற்காகவே அழைத்தவர்களும் ஏராளம்

"அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்"
சொல்லிக்கொண்டு தான் இருக்கும் உன் புகழ்
காலம் உள்ளவரை நண்பா

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"

என்று கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைக்கும்
ஒரு பாடல் உண்டெனில் அது இது தான்
என் தந்தையின் தியாகம் கண்முன் நிழலாடும்

பெற்ற பிள்ளைக்காக "ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

என யோசிக்கவைத்த பாடல் வரிகள்

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

ஆம் உன் பாடல் வரிகள் ஒன்றுக்கொன்று சலித்ததுஇல்லை

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்"
தோற்று  தான் போனது
உன் உயிரை சீக்கிரம் எடுத்து

ஒரு வண்ணத்து பூச்சி என் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது

என் தந்தைக்கு கண்ணதாசன் பாடல்கள்
எனக்கு நா முத்துக்குமார் பாடல்கள்
என் பிள்ளைக்கு ?
விடைதெரியா கேள்வியில் நான்

அதுவரை உன் பாடல்கள் மட்டும்
எங்கள் நெஞ்சோடு
என்றும் துணை உண்டு

#HAPPY BIRTHDAY NA.MUTHUKUMAR
« Last Edit: July 12, 2018, 05:50:42 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: நா முத்துக்குமார் !
« Reply #1 on: July 12, 2018, 06:01:30 PM »
Muththu sotkalai azhagu paadal maalaiyaai korppadhil vallavar...

Isai ulagil endrum azhiyaa kavignar...

Avar udal azhindhaalum endrum vaazhga avar pugazh...


Kavidhai arumai Joker anna...vaazhthukkal

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: நா முத்துக்குமார் !
« Reply #2 on: July 31, 2018, 03:31:04 PM »
உண்மை தான் நண்பா
இன்னொரு கண்ணதாசன் என்றில்லை
ஆனால் முத்துக்குமாரின் வரிகளும் சளைத்தவை அல்ல

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நா முத்துக்குமார் !
« Reply #3 on: July 13, 2020, 03:15:24 PM »
 நா முத்துக்குமார் நீ எங்கே இருக்கிறாய் "?!!


உன்னை தொலைத்து
உன் வரிகளோடு நாங்கள்
வாழ்கிறோம்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: நா முத்துக்குமார் !
« Reply #4 on: July 16, 2020, 07:41:09 AM »


மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொருமுறை
எங்களிடம் கேட்டார்:
” படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க?”
முதல் பெஞ்ச்சை
யாருக்கும் விட்டுத்தராத
கவிதாவும் வனிதாவும்
“டாக்டர்” என்றார்கள் சத்தமாக.
இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்,
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போவது பார்க்க நேர்கிறது.

” இன்ஜீனியர் ஆகப்போறேன் ”
என்ற எல்.சுரேஷ் குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டு தறி நெய்யப் போய்விட்டான் .

” எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையை பார்த்துப்பேன்”
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண்உயிரியலை ஆராய்கிறான்.

” ப்பிளைட் ஓட்டுவேன் ”
என்று சொல்லி
ஆச்சர்யங்களில்
எங்களை தள்ளிய
ஜஸ்டின் செல்லபாபு,
டி.என்.பீ.எஸ்.சி எழுதி
கடைநிலை ஊழியன் ஆனான்.

“அணுசக்தி விஞ்ஞானியாவேன் ”
என்ற நான்
கவிதை எழுதிகொண்டிருக்கிறேன்.

வாழ்கையின் காற்று
எல்லோரையும்
திசை மாற்றி போட,
” வாத்தியாரவேன் ”
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்.
” நெனச்ச வேலையே செய்யறே,
எப்படியிருக்கு மாப்ளே ? ” என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையை பிடித்து
” படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க?” ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை என்றான்.
– நா.முத்துகுமார்
« Last Edit: July 27, 2020, 05:23:13 AM by Natchathira »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நா முத்துக்குமார் !
« Reply #5 on: August 14, 2020, 01:15:07 PM »
நா.முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று 14th Aug 

ஒருவர் தன் முதல் கவிதையை எழுதிய உடனேயே பாரதியாக தன்னை கருதிக்கொள்ள இடமளிக்கும். அதே கவிதைகள் எதார்த்த வாழ்விலிருந்து அவனை நாடு கடத்திவிடுகின்றன.
இதுதான் கவிதையின் ஆச்சர்யம். இதுதான் கவிதையின் அபாயமும்.

எந்த ஒரு நல்ல கவிதையும் வாசிப்பவனைப் பரவசப்படுத்துவதுபோலவே எழுதியவனை இம்சிக்காமல் இருப்பதில்லை. அதனால்தான், ஒரு கவிஞன் கவிதையின் நுட்பங்களை அறிந்து மேலெழுந்து வருகையில் அவன் மனதாலும் உடலாலும் சிதைந்து காணப்படுகிறான்.
 
உண்மையில், கவிதைகள் வெளிப்பார்வைக்குத்தான் ரம்மியமானவை.
அதை ஆக்கியளிக்கும் கவிஞனுக்கு அப்படியல்ல".

 *******யுகபாரதி*****.

நா.முத்துக்குமாரின் கவி உலகம்:   

விரும்பி செய்யும் வேலையில்,
நொடியில் இரவாகும் பகல்,
விரும்பாமல் செய்யும் வேலையில்
ஏங்குகிறது தேநீர் இடைவேளைக்கும்மதிய உணவுக்கும்!

***************************

நான் ஏன் நல்லவனில்லைஎன்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டுஅதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்றுஉங்களிடம் அதைப்படிக்கக் குடுக்கிறேன்

****************************************

போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

*******************************

உயில் 

மகன் பிறந்த பிறகுதான் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!

 ***************

இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்குகள்
ஞாபகங்கள் எரிகின்றன”

*****************

கடவுளிடம் பேசுகிறோம்
என்கிற பயமே இல்லாமல்
குழந்தைகளிடம் பேசுகிறார்கள்
வளர்ந்த மனிதர்கள்” 

**************************************
எல்லாக் காலத்திலும்
குழந்தைகளின் வானத்திலிருந்து
இசையுடன் உதிர்ந்துவிழுகிறது
ட்விங்கிள் ட்விங்கிள்
லிட்டில் ஸ்டார்”   

*****************************
கடைசிவரை
எல்லாப் பெண்களுக்கும்
பிடிபடுவதே இல்லை,
சமையலறைக் கட்டங்களைத்
தாண்டி மலையேற
என்றைக்குத் தாயம் விழும்?”

******************************

உனது பேரெழுதி பக்கத்தில எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்

********************************

கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே

*******

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....

என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா  *******


திரும்பி வா நண்பனே
 



« Last Edit: August 14, 2020, 07:18:02 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நா முத்துக்குமார் !
« Reply #6 on: July 12, 2021, 03:04:03 PM »
நா முத்துக்குமார் பிறந்தநாள் -12 ஜூலை

அவரின் கவிதைகள் சில

உன் கவிதையை நீ எழுது எழுது
உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது
உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது

*****************************************************

எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது. இதுதான் வாழக்கைபோலு

-***************************

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...

யாருக்கு பொருந்துகிறதோ இவருக்கு பொருந்தும் ..

நம்முடைய புன்னகையில், நம்முடைய கண்ணீர் துளியில்,
நம்முடைய கனத்த மெளனத்தில் என்றுமே நம்முடன் இசை இருக்கிறது’
இசையுடன் இவர் விட்டுச்சென்ற வார்த்தைகளும்
என்றும் நம்முடன்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "