Author Topic: பெண் என்பவள்!?  (Read 2486 times)

Offline ChuMMa

பெண் என்பவள்!?
« on: February 25, 2017, 02:44:04 PM »
💠பெண் என்பவள் வெறும் சதையா..???💠

🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!

🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!

🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,

👉 பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!

🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!

🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!

🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!

அப்போ எங்கு தான் பிரச்சனை..???

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!

சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???

ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!

பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!

இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...

*படியுங்கள்...  பகிருங்கள்...
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: பெண் என்பவள்!?
« Reply #1 on: May 08, 2017, 04:03:40 AM »
சும்மா சகோ வணக்கம்

இப்படி ஒரு மேன்மையான
சமுதாய பொக்கிசத்தை
அவதானிக்காமல்
வாழ்த்தாமல் போனது தவறு


இந்த பகுதியை அதிகம்
பார்வையிடுவது இல்லை


முழுமையாக உள்வாங்கி
கருத்திட காலம் தாருங்கள்
மீண்டும் வருகிறேன்


வாழ்த்துக்கள் சகோ
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பெண் என்பவள்!?
« Reply #2 on: June 12, 2017, 10:28:51 PM »
"இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்"

parpavarin kankali than iruku nanba