Author Topic: பழமொழிகள்  (Read 17792 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #45 on: December 20, 2012, 03:00:48 AM »
626   மனம் போல வாழ்வு.   
627   மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி   
628   மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.   
629   மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.   
630   மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.   
631   மருந்தும் விருந்தும் மூன்று வேளை.   
632   மருந்தே யாயினும் விருந்தோடு உண்.   
633   மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப்பழகுவதே கோடிப் பெருமை   
634   மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.   
635   மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?   
636   மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.   
637   மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.   
638   மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.   
639   மவுனம் கலக நாசம்   
640   மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.   
641   மாடம் இடிந்தால் கூடம்.   
642   மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?   
643   மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?   
644   மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.   
645   மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.   
646   மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?   
647   மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.   
648   மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.   
649   மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.   
650   மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #46 on: December 20, 2012, 03:01:14 AM »
651   மாரடித்த கூலி மடி மேலே.   
652   மாரி யல்லது காரியம் இல்லை.   
653   மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.   
654   மாற்றானுக்கு இடங் கொடேல்.   
655   மாவுக்குத் தக்க பணியாரம்.   
656   மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.   
657   மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?   
658   மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.   
659   மீ தூண் விரும்பேல்.   
660   மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.   
661   மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா?   
662   முகத்துக்கு முகம் கண்ணாடி   
663   முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?   
664   முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்   
665   முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.   
666   முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு   
667   முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா   
668   முதல் கோணல் முற்றுங் கோணல்   
669   முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.   
670   முன் ஏர் போன வழிப் பின் ஏர்   
671   முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?   
672   முன்கை நீண்டால் முழங்கை நீளும்.   
673   முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?   
674   முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை   
675   முருங்கை பருத்தால் தூணாகுமா?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #47 on: December 20, 2012, 03:01:43 AM »
676   முருங்கைய ஒடிச்சு வளர்க்கணும்; புள்ளய அடிச்சு வளர்க்கணும்   
677   முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்   
678   முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?   
679   முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.   
680   மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.   
681   மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.   
682   மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.   
683   மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.   
684   மெளனம் மலையைச் சாதிக்கும்.   
685   மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்   
686   மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.   
687   மொழி தப்பினவன் வழி தப்பினவன்   
688   மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.   
689   வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.   
690   வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.   
691   வடக்கே கருத்தால் மழை வரும்.   
692   வட்டி ஆசை முதலுக்கு கேடு.   
693   வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு   
694   வணங்கின முள் பிழைக்கும்.   
695   வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.   
696   வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை   
697   வருந்தினால் வாராதது இல்லை.   
698   வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.   
699   வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.   
700   வளவனாயினும் அளவறிந் தளித்துண்   
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பழமொழிகள்
« Reply #48 on: December 20, 2012, 03:02:40 AM »

701   வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.   
702   வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்   
703   வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.   
704   வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.   
705   வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.   
706   வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.   
707   வாழ்வும் தாழ்வும் சில காலம்.   
708   விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.   
709   விதி எப்படியோ மதி அப்படி.   
710   வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்   
3
711   வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?   
712   விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?   
713   விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?   
714   வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.   
715   விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?   
716   விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.   
717   விளையும் பயிர் முளையிலே தெரியும்.