Author Topic: தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள்  (Read 2853 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

தமிழில் தெலுங்கு, அரபு, பாரசீகம்,  பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள்

பல கலந்து தமிழ் சொற்களாகவே உலா வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகை சொற்களில் சில

மட்டும் தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது.


தெலுங்கு - தமிழ்

ஆஸ்தி - செல்வம்
எக்கச்சக்கம் - மிகுதி
கெட்டியாக - உறுதியாக
சந்தடி - இரைச்சல்
சாகுபடி - பயிரிடுதல்
சொகுசு - நேர்த்தி
சொந்தம் - உரிமை
தாராளம் - மிகுதி
நிம்மதி - கவலையின்மை
பண்டிகை - பெருநாள்


அரபு - தமிழ்


அசல் - முதல்
கஜானா - கருவூலம்
இனாம் - நன்கொடை
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
ஜாஸ்தி - மிகுதி
நகல் - போலி
பதில் - மறுமொழி
பாக்கி - நிலுவை
மாமூல் - வழக்கம்



பாரசீகம் - தமிழ்

அலாதி - தனி
கம்மி - குறைவு
சர்க்கார் - அரசு,அரசாங்கம்
சந்தா - கட்டணம்.
தயார் - ஆயத்தம்
கிஸ்தி -வரி, நிலவரி
குமாஸ்தா - எழுத்தர்
புகார் - குறை
ரஸ்தா - சாலை
வாபஸ் - திரும்பப் பெறுதல்


பிரெஞ்சு - தமிழ்

பீரோ - அலுவலகம்
ஒப்பித்தால் - மருத்துவமனை
எகோல் - பள்ளிக்கூடம்
கம்ராத் - தோழன்
கிஸ்தியோன் - கேள்வி
திரக்தர் - இயக்குநர்
கப்பிதோன் - தளபதி
சொல்தா - இராணுவ வீரர்
கொலேழ் - கல்லூரி
முசியே - அய்யா


ஆங்கிலம் - தமிழ்

சினிமா - திரைப்படம்

பஸ் - பேருந்து
டிபன் - சிற்றுண்டி
டாக்டர் - மருத்துவர்
ஃபேன் - மின் விசிறி
ரேடியோ - வானொலி
வாட்ச் - கடிகாரம்
சோப் - வழலைக் கட்டி
லைட் - விளக்கு
டிக்கெட் - சீட்டு


வடமொழிச்சொல் - தமிழ்ச்சொல்

அகம்பாவம் - தற்பெருமை.
அக்கிரமம் - முறைகேடு
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகம் - மிகுதி
அனுக்கிரகம் - அருள்
அபிவிருத்தி - வளர்ச்சி
அவசரம் - விரைவு
ஆகாரம் - உணவு
ஆசை - விருப்பம்
ஆதாரம் - அடிப்படை
ஆரம்பம் - தொடக்கம்
இந்திரியங்கள் - ஐம்பொறிகள்
இரசிகன் - சுவைஞன்
இருதயம் - உள்ளம்
இலட்சியம் - குறிக்கோள்
உஷ்ணம் - வெப்பம்
உதாரணம் - எடுத்துக்காட்டு
உபயோகம் - பயன்
ஏகாந்தம் - தனிமை
கருணை - இரக்கம்
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
கும்பம் - குடம்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கீதம் - இசை
சமாதானம் - அமைதி
சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்
சீக்கிரம் - விரைவு
சீலம் - ஒழுக்கம்
சுகந்தம் - நறுமணம்
சொப்பனம் - கனவு
ஞாபகம் - நினைவு
தருமம் - அறம்
தூரம் - தொலைவு
தேசம் - நாடு
நவீனம் - புதுமை/புதினம்
நாமம் - பெயர்
நிபந்தனை - கட்டுப்பாடு
பயம் - அச்சம்
பரம்பரை - தலைமுறை
பிரசுரம் - வெளியீடு
பிரபஞ்சம் - உலகம்
பிரயாணம் - பயணம்
பேதம் - வேற்றுமை
மகிமை - பெருமை
முத்தி/முக்தி - வீடுபேறு
வயோதிகம் - முதுமை
வாலிபம் - இளமை
விவசாயம் - வேளாண்மை
வேதம் - மறை.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்