FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 21, 2021, 09:46:46 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: Forum on February 21, 2021, 09:46:46 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 257
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/257.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: JsB on February 22, 2021, 09:19:03 AM

என் உயிரின் உறவே...
என் அருகில் நீ இருந்தால்
நான் பேசும் மொழி கூட
மறந்து போகிறதே...


ஆயிரம் கதைகளை பேசுகின்றது
உன் அழகிய கண்கள்...
கண்களால் பேசும் மொழியைக்
கற்றுக் கொள்ள ஆசை...
உன்னுடன் ரகசியமாய்  பேசுவதற்காக...


உன் கண்களில் தொலைத்த என்னை
உன் இதயத்தில் தேடுகின்றேன்...
உன் அழகை ரசிக்க இந்த யுகம் போதாது
என் இதய திருடா...

என் அன்பே...
அன்பு என்ற வார்த்தைக்கு...
ஆயிரம் ...ஆயிரம் அர்த்தம் இருப்பினும்...
நான் கண்ட மெய் அர்த்தம் நீதானடா...


என் மனதில் நீ வந்த பின்பு ... எனக்குள்
ஏதேதோ மாற்றங்கள் ....
தூக்கம் மறந்தேன்...உணவையும் மறந்தேன்...
என்னை நானே மறந்தேன்...உன் நினைவால்...

நீ தொலைவில் இருக்கையில்
பார்க்க துடிக்கும் அதே இதயம் தான்...
நீ அருகில் வந்தால் பேச முடியாமல் தவிக்கின்றது...

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத
இதயம் வேண்டும் என்னுயிரே ...
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதிலும் நீயே வேண்டுமே...
என் உறவாக அல்ல...என் உயிராக


உனக்குள் என் நினைவுகளும்...
எனக்குள் உன் நினைவுகளும்...
இருக்கும் வரை நமக்குள் பிரிவுவென்பதே இல்லை
என்னுயிர்க் காதலனே...


என்றும் அன்புடன் ,
உன்னை இதயத்தில் சுமந்து செல்லும்
உன் அன்புக் காதலி
Jerusha JSB
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: thamilan on February 22, 2021, 09:24:15 PM
மனதை மயக்கும் அந்திமாலைப் பொழுது
பகலவன் களைப்பாறும் நேரம்
பறவைகள் தங்கள் கூடுகளைத் தேடித்
பறக்கும் தருணம்
சாரளத்தில் நின்றேன்
மாமன் மகள் அவள் நினைவுடனே
குனிந்த தலையும் நாணம் பொங்கும் முகமுமாய்
வந்து நின்றாள் என்முன்னே
 
அன்பே
உலகத்தில் பூக்கின்றன
ஓராயிரம் பூக்கள்
என்னை மலரவைத்த பூ
உன் சிரிப்பு தான்

பிற பூக்கள் எல்லாம்
காயாகி கனிகின்றன
உன் பூவோ
காயான என்னையே
கனிய வைக்கிறது

மற்ற பூக்களை பார்க்கும் போது
என் இதயம் மகிழ்ச்சியில் மலர்கிறது
உன்னை பார்க்கும் போது தான்
என் இதயமே பூவாய்மலர்கிறது

மாதவளே உன்னை அணிவதற்கு
மனதில் காதல் அணிந்துவந்தேன் கண்களில்
பொன்னை அணிகின்ற பூவே
மறுக்காமல் என்னை அணிவாயா இன்று

கண்நாடி போகுங்கால்
கண்ணாடி போலிருந்த
பெண்ணாய் வந்தாளே பேசத்தான்
பேச மறந்து
தள்ளாடி தலைகுனிந்து நின்றாளே
நாணத்தால்

போர்க்களத்தில் கூட புகுந்து வந்தேன்
எத்தனையோ நீர்குளத்தில் நீந்திவந்தேன்
ஆனால் உன்கண்ணுக்குள்
மூழ்கினேன் காண்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: BreeZe on February 25, 2021, 02:22:40 PM
Quote

ஹாய் எனும் என்னவனுக்கு
நான் எழுதும் முதல் கடிதம்
காதல் கடிதம்
இதற்கு முன்னே இவ்வளவு  தீவிரமாய்
நான் கடிதம் எழுதியதே இல்லை
இது எனது முதல் காதல் கடிதம்
எனது முதல் காதலன் நீ
எனக்கு வாய்த்த முதல்
அடிமையும் நீயே

கணவன் என்ற சொல்லே
புதிது எனக்கு ஹீ ஹீ
மனசுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்குது
தலைக்கு மேலே
பல வர்ணங்களில் பல்பு எரியுது
இருந்தாலும் நீயே எனது கணவன் ஹீ ஹீ

நானே மோர்னிங் காபி போடுவேன் என்று
எதிர் பார்க்காதே
நீயே எனக்கும் சேர்த்து போட்டாலும்
பரவா இல்ல
லைப்ல எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எனக்கு
நீ கிடைத்தது வரமே
நான் உனக்கு கிடைத்தது
பெரிய கிப்ட்டு
அதனாலே நீ தினமும் தாராய்
எனக்கு கிப்ட்டு
உனக்கு நான் வைக்க போறேன்
கட் அவுட்டு
இல்லனா நான் உனக்கு தருவேன்
கெட் வுட்டு

உண்மைல சொல்லனுமென்ன

 
என் பிறப்பின் ஒளியும் நீ
என் பிறப்பின் உயிரும் நீ
என் பிறப்பின் அர்த்தமே நீ
என்பிறப்பின் அந்தமும் நீயே
எத்தனை முறை நான் பிறந்தாலும்
நீ என்னுடைய என் அவனாகவே இருக்கணும்
[/font]

Copyright by
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: MysteRy on February 25, 2021, 04:12:36 PM
நீ இல்லையென்றால்
உண்மையான காதல் என்றால் என்னவென்று
நான் அறிந்திருக்கவே மாட்டேன்
அந்தக் காதல் எத்தனை இன்பமானது என
நான் அறிந்திருக்க மாட்டேன்

நீ இல்லையென்றால்
காதல் வெப்பமும் குளுமையையும்
ஒன்றான கலவையென
உணர்ந்திருக்க மாட்டேன்
நீ இல்லாத போது உடல்
ஏக்கத்தால் தகிக்கிறதே
நீ இருக்கும் போது
ஊட்டி குளிரை உடல் அனுபவிக்கிறதே

உன் உயிர் தொடும் தொடுகை
மனதை மயக்கும் குரல்
யாரிடமும் அனுபவிக்காத
இன்பத்தை தருகிறதே
என் உயிரே நீ தான்
உன்னைத்தவிர யாரும் இல்லை

நீ இல்லாவிட்டால்
மழையில்லா பயிர் நான்
காற்றில்லா பிரபஞ்சம் நான்
எனது பாதி நீ
நீ இல்லாமல் நான் இல்லை
இதை உணர்த்தியது உனது காதல்!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: AgNi on February 25, 2021, 06:31:40 PM


நிலவு பெண்ணே  ! நினைவுஇருக்கிறதா?
ஓர் நாள்  ...
கல்லூரி சாலையில் சந்தித்தோம் ! பின்பு
உள்ளூர் சோலையில் சிந்தித்தோம் !
காதல் என்ற கனவு வார்த்தை
வாழ்தல் என்ற பந்தம் ஆக துடித்தது !

எதிர்ப்புகள் இல்லா காதல் சாத்யமில்லையே !
எதிர்பார்ப்புகள் இல்லா வாழ்தலும் அப்படித்தானே ?

உனக்கு நினைவு இருக்கிறதா ?அன்று...
உன்னை பார்க்க துடித்து நெடுநேரம் ...
காத்து கொண்டு நின்றேன் ஆற்றங்கரையோரம் !
பால் நிலவு ஆறாக ஓடி கொண்டு இருக்க....
பெண் நிலவு நீ என் அருகே வந்தாய் !
கோடி நிலவுகள் குளிர்ச்சி அப்போது !

ஆனால்!  அனல் காற்று அல்லவே வீசிற்று !
ஏன் என்று உன் விழியை பார்த்த போது புரிந்தது !
விழிகள் மழையும் பொழிந்தது !
சுட்டு எரிக்கும் தணலையும் பொழிந்தது !
காரணம் எதோ சொன்னாய் !
ஏதுவாய் இருந்தால் என்ன ?

நான் இருக்கும் வரை உன் கண்களில்
கங்கையும் பார்க்க விழையவில்லை
காவேரியும் ஓட தேவை இல்லை !
ஒரு சொட்டு நீர் நீ சிந்தினாலும் ..
அது எனக்கு உயிர் வலி கொட்டும் !
அதில் மகிழ்வை தவிர வேறு ஒன்றும்
முகில கூடாது !நான் பார்க்கவும் கூடாது !

என்று நான் கூறிய வினாடிகளில் மீண்டும்
உன் கண்களில் ஆகாய கங்கை !
ஹே பெண்ணே !திரும்ப திரும்ப !
என்று நான் முறைக்க ..நீ சிரிக்க ..
எத்தனை இன்ப நினைவுகள் !

ஆம் ! அத்தனையும் இன்று நினைவுகள் தான் !
அன்று நீ அழக்கூடாது என்று பதறினேன் !..
இன்றோ...நீ எவர்கூடவோ மணமாகி சிரிக்கிறாய் !
என் மனம் தான் சிதறி போகின்கிறது !

பரவாயில்லை பெண்ணே !
என்  நினைவுகள் உன்னை சுடாதவரையில் !
என் கனவுகள் என்றும் ..
கடக்க முடியாத பாதைகளே!
என் பயணங்கள் என்றும் ...
இணையா  தண்டவாளத்தின் பயணங்களே !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 257
Post by: SweeTie on February 25, 2021, 08:05:34 PM
அவன்
அன்பே  முழு நிலவே 
அழகான  வெண்மதியே 
பெண்ணே   பேசும் ஓவியமே
கண்ணே   உன்  காதலிலே
கரைந்துபோகுதடி  என் இதயம்
 
அவள்
கண்ணா  என்  காதலனே
 கார்முகில்  வண்ணா  நீயே
கந்தர்வ  உலகின்  கதாநாயகனே
கண்டதும்  கொண்டேன் காதல்  உன்
கண்களின் மடல்களில் தஞ்சமும் ஆனேன்

அவன் 
மின்விளக்கில்   வீழ்ந்து மடியும்  விட்டில்போல்
 உன் கண்  இடுக்கில்   மயங்கி   துடிக்கிறேனடி   
அன்னம்போல்  நீ  அசைந்து நெளிந்து  வந்து   
 மன்னன்  என் மார்பிலே  இதமாக   படர்ந்து
இன்புற்றிருக்க  வேண்டுமடி   

அவள்
குயில்  என்றாய்  என் மதுரக்குரல் கேட்டு
மயில்  என்றாய்  என்  நடை கண்டு 
கொடி  என்றாய்  என் இடை  பார்த்து 
கிளி என்றாய்  கொஞ்சும்  மொழி கேட்டு
என்னை   ஆட்கொண்ட  மன்னவனே

அவன்
கட்டிலில்  புரண்டாலும் உந்தன் ஏக்கம்
காலையில் எழுந்தாலும்  உன் நினைவு 
நித்தமும் நீயே  என் குலதெய்வம்
சித்தம்  கலங்குதடி    என்னவளே   
சிந்தையில்  உன்னையன்றி  வேறு இல்லை 

அவள்
உன் நித்திரையில்   வந்திடுவேன் '
நிழலாகவும்    தொடர்வேன் 
எட்டி  என்னை பிடிக்க  எழும்போது 
தட்டிவிட்டு   ஓடிவந்து  படுத்திடுவேன்
என் வீட்டு கட்டிலின்  மேல்   

காதல்   
காதல் எனும்  செடியில்  புதிதாக  பூத்து 
சாதல் எனும்  பதம் அறியா  மலர்கள்  இவை
காலையில்  பூத்த மலர்  மாலையில்   வாடிவிடும்
காதல்வலை   மாயவலை  என்றறிந்தும்
சோதனையில்   சிக்கிய  பட்டாம்பூச்சிகள்